Sunday 15 January 2023

ப்ரியாவின் பெதர் கட்

கிரண் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறான். கிரணுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. அவனுடைய புத்தம் புதிய மனைவி பிரியா. ரொம்ப அழகு. Bsc கம்ப்யூட்டர் சைன்ஸ் படித்தவர். கிரணின் தாய் மாமன் மகள். கிரணுக்கும் பிரியாவை மிகவும் பிடிக்கும். இருவரும் சிறு வயதில் இருந்தே நன்றாக பழகியவர்கள்.



கிரண், பிரியா இருவரும் கல்யாணம் முடிந்து இரண்டு மாதம் இந்தியாவில் இருந்தனர். தங்களின் ஹனிமூன் எல்லாம் சிறப்பாக முடிந்ததும் கிரண் அமேரிக்கா சென்றான். பின் இரு மாதங்கள் கழித்து பிரியாவை அமெரிக்கா அழைத்து வந்தான்.



புது ஜோடிகளின் ஒரு முழு நாள் ஒரு நிமிடம் போல கடந்து போகிறது. கிரணுக்கு ப்ரியாவை எல்லா வகையிலும் பிடிக்கும். அவளின் அடர்த்தியான பின்னலை தவிர. அவள் பின்னல் அவளுடைய இடுப்பை தாண்டி மிகவும் அடர்த்தியாக வளர்ந்து இருந்தது. அமெரிக்காவில் எல்லாரும் அவளின் பின்னலை ரசிக்கிறார்கள். ஆனால் அந்த நீளமான பின்னல் கிரணுக்கு மட்டும் பிடிக்காது.

ஏனென்றால்...அவ்வளவு நீளமாக இருந்தால், பிரியா எப்பொழுதும் ஒரே ஹேர் ஸ்டைல் தான் போடுவாள். எப்போதும் ஜடை. இன்னொரு ஹேர் ஸ்டைல் பிரியாவால் முயற்சிக்க முடியாது. ஆனால் அவளுடைய முடியின் நீளம் குறைவாக இருந்தால் விதவிதமாக அவள் முடியை வெட்டலாம். ஒரு முறை யு ஷேப்பில், ஒரு முறை வி ஷேப்பில், ஒரு முறை பெதர் கட்.  ஒரு முறை ஸ்டெப் கட். ஒஒரு முறை பாப் கட் என விதவிதமான ஹேர் ஸ்டைலில் பிரியாவை ரசிக்க கிரணுக்கு மிகவும் பிடிக்கும்.

ஆனால் ப்ரியாவுக்கு நீளமான கூந்தல் இருப்பதால் எப்போதும் பின்னல். சடை,சடை. பிரியா தன்னுடைய தலைமுடியை வெட்டவே விடுவதில்லை. ஆரம்பத்தில் நீளமான கூந்தல் நன்றாக இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் அவள் தன முடியை ஜடை பின்னி கொள்வதற்குள் கிரண் அலுத்துக் கொள்கிறான்.



ஒரு நாள் கிரண் அவளிடம் உங்கள் தலைமுடியைக் குட்டையாக வெட்டலாம் என்று சொல்ல ப்ரியா தனக்கு அருகில் வெடிகுண்டு விழுந்தது போல அதிர்ந்து போனாள். அவள் ஒன்றும் சொல்லவில்லை. அதனால் கிரணும் அந்த பேச்சை அப்படியே விட்டுவிடுகிறான். ஆனால் எப்படியாவது ப்ரியாவை வரவழைத்து முடியை குட்டையாக வெட்ட வேண்டும் என்று நினைக்கிறான்.

எதிர்பாராதவிதமாக அவனது ஆசை ஒருநாள் நிறைவேறுகிறது. ஒரு நாள் கிரணும் ப்ரியாவும் நியூயார்க்கில் உள்ள பிரியாவின் உறவினர் வீட்டிற்கு சென்றனர்.

நியூயார்க்கில் ஸ்வப்னா, ஸ்வப்னாவின் கணவர் ரவி இருவரும் இருக்கிறார்கள். ஸ்வப்னா பிரியாவின் பெரியம்மா மகள். ஸ்வப்னாவின் அழகே அவளது பின்னழகை தாண்டி வளர்ந்து இருக்கும் அவளது பின்னல் தான். ஆனால் அன்று ஸ்வப்னாவின் தலை முடியை கண்டு அதிர்ந்தாள்  ப்ரியா. ஸ்வப்னாவின் பின்னழகை தாண்டி வளர்ந்து  இருந்த தலைமுடி இப்போது அவள் தோள்களில் தவழ்ந்து கொண்டு இருந்தது. ஸ்வப்னாதன் தலைமுடியை நேர்த்தியாக தோள் வரை பாப் கட் போல வெட்டி இருந்தாள். அந்த ஸ்டைலில் ஸ்வப்னா ப்ரியாவிற்கு மிகவும் அழகாக தெரிந்தாள்.



பிறகு எல்லோரும் மதிய உணவு சாப்பிட்டதும் ப்ரியாவும் ஸ்வப்னாவும் தங்கள் படுக்கையறையில் அமர்ந்து அரட்டை அடிக்க ஆரம்பித்தனர். கிரண் மற்றும் ஸ்வப்னாவின் கணவர் ரவி வெளியே சென்றனர்.

என்ன ப்ரியா... நீ இன்னும் நீளமான ஜடை போட்டுக்கிட்டு இருக்கியா...?' ஆச்சரியத்துடன் கேட்டாள் ஸ்வப்னா. பிரியா ஆமாம் என்று தலையை ஆட்டினாள்.

ஸ்வப்னா அந்த நீளமான கூந்தல் போரடிக்குது டி... அதான் போன வருஷம் நான் என் முடியை குட்டையா வெட்டிவிட்டேன். இப்போ ரொம்ப வசதியா இருக்கு. தெரியுமா?"என்றாள் ஸ்வப்னா.

ப்ரியா யோசித்து தலையை ஆட்டினாள். அப்போது ஸ்வப்னா அவர்களின் ஆல்பத்தை காட்டினாள். அந்த போட்டோக்களில் விதவிதமான ஹேர்ஸ்டைல்களில் மிகவும் அழகாக இருந்தாள் ஸ்வப்னா. ஸ்வப்னாவின் விதவிதமான ஹேர்ஸ்டைல்களை  பார்க்கும் போது ப்ரியாவிற்கு தானும் அதுபோல வெட்டிக் கொண்டால் இன்னும் அழகாக இருப்போம் என்று தோன்றியது.


அன்று மாலை ப்ரியா கிரண் இருவரும் தங்கள் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அன்று இரவு அவர்கள் இரவு உணவு சாப்பிடதும், சில வேலைகளை முடித்து விட்டு கிரணிடம் வந்தாள் ப்ரியா.

"கிரண், நானும் ஸ்வப்னா மாதிரி என் முடியை ஷார்ட் கட் பண்ணிக்கவா?"

அந்த வார்த்தைகளை கேட்டு கிரண் மிகவும் சந்தோஷப்பட்டான்.



சரி ப்ரியா... நாளைக்கே நாம சலூனுக்கு போலாம் என்றான் கிரண்.

மறுநாள் சலூனுக்கு போனார்கள். பிரியாவின் முடி நல்ல அடர்த்தியாக இருந்ததால் சின்னதாக ஒரு அண்டர்கட் செய்து கொண்டு அவளது தோள் வரை தன்னுடைய முடியை ஷார்ட் கட் பண்ணிக்க கொண்டாள் ப்ரியா. ப்ரியாவின் புதிய தோற்றத்தை பார்த்து கிரண் ஆச்சரியப்பட்டான்.


ஷார்ட் ஹேர் ஸ்டைலில் அவன் நினைத்ததை விட இன்னும் அழகாக இருந்தாள் பிரியா. தன்னுடைய  நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய பிரியாவிற்கு அவன் மிகப்பெரிய பரிசை அன்று இரவு முழுவதும் திகட்ட திகட்ட கொடுத்தான் கிரண்.



Pink dressed girl's mid back length hair style with coloring combination

Pink dressed girl's mid back length hair style with coloring combination



















Indian girl's donated their long hair for cancer patients

 Indian girl's donated their long hair for cancer patients













Indian girl's donated their long hair for cancer patients

 Indian girl's donated their long hair for cancer patients


















Blue dressed girl's long layer hair cut with coloring combination

Blue dressed girl's long layer hair cut with coloring combination












Indian college girl's long to shoulder length Bob cut makeover

Indian college girl's long to shoulder length Bob cut makeover











Hollywood model goes to short hair style makeover

Hollywood model goes to short hair style makeover













Foreigner's long to short pixie boy cut with coloring combination

Foreigner's long to short pixie boy cut with coloring combination














Mumbai techies long layer hair cut with coloring transformation

Mumbai techies long layer hair cut with coloring transformation