Wednesday 5 July 2023

நிஷாவின் திக் திக் நிமிடங்கள்

July 05, 2023 6

நிஷா 19 வயதான அழகான பெண். கல்லூரியில் படிக்கிறாள். அவள் தன் வீட்டில் கண்ணாடி முன் நின்று, அவள் தலைமுடியை ஒருமுறை கோதிவிட்டு, மீண்டும் ஒருமுறை கண்ணாடியில் பார்த்தாள். நிஷாவின் முடி கருமையாகவும், கருப்பாகவும், அவளது இடுப்பை தொடும் நீளத்தில் நல்ல அடர்த்தியுடன் இருந்தது. அவளுடைய மொத்த கூந்தலையும் பிடித்து ஒன்றாக கட்டி போனி டெய்ல் போட்டுவிட்டாள்.

 

“போகலாம்” என்றாள் நிஷா உற்சாகமாக. நிஷா தன் பக்கத்து வீட்டு எட்டு வயது குட்டி பாப்பாவுடன் வீட்டிலிருந்து புறப்பட்டாள். தங்கள் வீட்டிலிருந்து நான்கு தெரு தள்ளி இருந்த ஒரு பார்பர் ஷாப்புக்கு இருவரும் சென்றனர். அந்த சலூனில்மூன்று முடிதிருத்தும் நாற்காலிகள் மற்றும் நிறைய வெயிட்டிங் சேர்ஸ் கொண்ட பழைய சலூன் கடை. ஆனால் அந்த ஏரியாவில் அது தான் பெரிய சலூன் கடை. மூன்று நாற்காலிகளும் ஆட்கள் உட்கார்ந்து இருக்க, நிஷா தன்னுடன் வந்த பாப்பாவை தன் மடியில் உட்கார வைத்து விட்டு இருவரும் ஒரே நாற்காலியில் அமர்ந்தனர்.


நிஷா இந்த ஆண்களுக்கான சலூன் கடைகளை விரும்புவதில்லை, உண்மையில் முடி வெட்டுவது தொடர்பான எந்த இடமும் நிஷாவிற்கு பிடிக்காது.  ஆனால் சலூன் கடை என்பது அவளுடைய மனதில் ஒரு பயங்கரமான நினைவுகளைப் கொடுக்கும் இடம். நிஷா தன் பக்கத்து வீட்டு அத்தைக்கு உதவவும், அவள் எவ்வளவு பொறுப்பானவள் என்பதைக் காட்டவும் மட்டுமே பாப்பாவை சலூனுக்கு கூட்டி சென்றாள். நிஷா தான் இன்னும் சின்ன பெண் இல்லை என்பதை எல்லோருக்கும் சொல்லவிரும்பினாள். அவளது அத்தை, சலூன் கடையில் பாப்பாவை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்தாள்.

இரண்டாவது நாற்காலியில் இருந்த ஒரு மனிதர் வேலை முடிந்து சேரை விட்டு எழ... அந்த பார்பர் நிஷாவை காய் காட்ட, நிஷா தன்னுடன் வந்த குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் சென்றாள்.

பாப்பா கொஞ்சம் வெயிட் பண்ணட்டும்... நீங்க உட்காருங்க அம்மா... என்று பார்பர் சொல்ல,

 

இல்லை,நான் முடி வெட்டலை... பாப்பாவுக்கு தான் முடி வெட்டணும்...

 

அப்போ நீங்க ஏன் இங்க உள்ள வந்து உட்காந்தீங்க,

 

இல்லை, நான் பாப்பாவுக்காக தான் உட்கார்ந்தேன்... என்று நிஷா கோபமாக சொல்ல...

 

நிஷா அக்கா, எனக்கு மட்டும் ஏன் முடி வெட்டணும்... என்னால முடியாது என்று அவளும் மறுக்க...

 

பாப்பா அடம்பிடிக்காதே... இன்னிக்கு உனக்காக தான் நான் இந்த மாதிரியான சலூனுக்கு வந்து இருக்கேன் என்று நிஷா பாப்பாவிடம் கோபமாக பேசினாள்.

 

ஆனால் பாப்பா அது புரியாமல் "இல்லை நீ முடி வெட்டல்லேன்னா நானும் என் முடியை வெட்ட மாட்டேன்" என்று அடம்பிடித்தாள். பாப்பாவை அந்த இடத்தில் வைத்து மிரட்டவும், அடிக்கவும் நிஷா விரும்பவில்லை. அதனால் எப்படியாவது பாப்பாவுக்கு முடி வெட்ட வேண்டும் என்று யோசித்தவள்.

 

சரி பாப்பா, நானும் உன் கூட முடி வெட்டிக்கிறேன்... முதல்ல பாப்பா சேர்ல உட்கார்ந்து முடி வெட்டிக்கோ... அப்புறம் நான் வெட்டிக்கிறேன் என்று நிஷா சொன்னாள்.


இதனால் சமாதானம் அடைந்த பாப்பா நாற்காலியில் உட்கார, பாப்பாவுக்கு பார்பர் கையால் கட்டிங் தொடங்கியது. அப்போது இன்னொரு சேரில் இருந்த முதியவர் வேலை முடிந்து எழவும், அதை பார்த்த பாப்பா நிஷாவை அந்த நாற்காலியில் உட்கார்ந்து முடி வெட்டிக் கொள்ள சொல்ல, நிஷா தன் கோபத்தை பாப்பாவிடம் காட்டமல் நாற்காலிக்கு சென்றாள். பெரிய நாற்காலியில் தன்னை சரிசெய்து கொண்டவள் தன் தலைமுடியை நாற்காலியின் பின்னால் தூக்கி எறிந்தாள்.

பார்ப்பார் தன்னுடைய கனத்த குரலில், “எப்படி வெட்ட வேணும் பாப்பா?” என்று நிஷாவை கண்ணாடி வழியாக பார்த்துக் கேட்டான்.  நிஷா அவனிடம் “நான் இன்னைக்கு எனக்காக வரலை, இதோ இவளுக்காக தான் வந்தேன், ஆனால் இவ என்னை கட்டாயப்படுத்துறா,நான் அவளுக்காக தான் பண்றேன், அதனால சும்மா ரெண்டு இஞ்ச் மட்டும் ட்ரிம் பண்ணி விடுங்க போதும்... என்று விளக்கினாள்,

 

“ரெண்டு இஞ்ச்  போதுமா? நீ சொல்வது சரியா?" அவள் சொன்னதை கேட்டு பார்பருக்கு ஆச்சரியமாக இருந்தது. அருகிலிருந்த இன்னொரு ஆளும் நிஷாவை பார்க்க ஆரம்பித்தான்.

நிஷா பார்பரிடம்  “எனக்கு என்ன பண்ணனும் தெரியல... அதனால அவளுக்காக கொஞ்சமா வெட்டுங்க... ரொம்ப நீளம் குறைக்க வேண்டாம்: என்று மீண்டும் விளக்க, பார்பர் இந்த முறை அதிகம் பேசாமல் நிஷாவிற்கு ஹேர் கட் பண்ண ஆயத்தம் ஆனான்.

 

நிஷா பெரிய நாற்காலியில் உட்கார்ந்து தன்னுடைய முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள், அவளுடைய குதிரை வால் இப்போது சேரை தாண்டி வெளியே கிடந்தது. பார்பர், திடீரென்று ஒரு பெரிய வெள்ளை துணியை நிஷாவின் மேல் போர்த்த அது அழகாக அவள் மீது படர்ந்தது. பின் பார்பரின் முரட்டு கையால் அவளது தலைமுடி அதிலிருந்து வெளியே இழுக்கப்படுவதையும், கழுத்தில் துணி இறுகுவதையும் அவளால் உணர முடிந்தது.

 

பார்பர் தன் விரல்களைப் பயன்படுத்தி அவளது முடியை அவிழ்த்தான். பார்பர் அவளுடைய தலைமுடியை சிக்கு இல்லாமல் நேராக இருக்க ஒரு முறை அழகாக சீவி சிக்குகளை எடுத்தான். கீழே நுனியில் இருந்த முடியை சீவி விடும் போது, அவன் தலைமுடியைப் பிடித்திருந்தபோது, பார்பரின் முரட்டுகை கழுத்தில் இருப்பதை நிஷாவால் உணர முடிந்தது. 

பார்பர் சீப்பை வைத்து, முடியை சமமாக விரித்து சீவி வைத்தான். அவளுடைய தலைமுடி நாற்காலிக்குப் பின்னால் தொங்கிக் கொண்டிருந்தது. பார்பர் அவளது தலைமுடியைப் பாராட்டினார், "உங்க முடியை நல்லா பராமரிக்கிற... நல்ல அடர்த்தியுடன், மென்மையா இருக்கு" என்று நிஷாவிடம் பார்பர் சொல்ல, இதற்கு நிஷா பதிலளிக்கவில்லை. பார்பர் ஒரு பெரிய கிளிப்பரை எடுத்து அதை ஆன் செய்ய, அதை பார்த்த நிஷா சேரில் இருந்து எழ பார்த்தாள்.

 

நிஷா, “கத்தரிக்கோல் இல்லையா?” என்று பதட்டத்துடன் பார்பரிடம் கேட்க, இந்த முறை  பார்பர் அதைக் காதில் வாங்காமல், நிஷாவின் தலையை அவள் மார்பைத் தொட்டபடி கீழே குனிய வைத்தான். நிஷா எதிர்க்கவில்லை. பார்பர் தனது இடது கையால் ஒரு அனைத்து முடிகளையும் பிடித்து பின்பக்கமாக இழுத்து பிடித்துக் கொண்டு, நிஷாவை கொஞ்சம் கூட அசையாமல் பிடித்துக் கொண்டான்.

 

பின் பார்பர், "என்னால் கத்தரிக்கோலால் சிறப்பாக செய்ய முடியும், ஆனால் நீங்கள் கேட்டதைச் செய்வதற்கு கத்தரியை விட, இன்னும் சிறப்பாக கிளிப்பர்களால் செய்ய முடியும்" என்று சொன்னாலும்,

நிஷா பதில் எதுவும் சொல்லவில்லை. அவள் கண்களை மூடினாள். பார்பர் அவளுடைய தலைமுடியை அவள் தலையின் மேல் இழுத்து, கிளிப்பரை பின்னால் வைத்தான். நிஷாவுக்கு அவன் என்ன செய்கிறான் என்று புரிந்து கொள்வதற்கு முன், பார்பர் பார்பர்  க்ளிப்பரை  அவள் தலையின் பின் கழுத்தில் வைத்து மேல் நோக்கி ஓட்டி, நிஷாவின் தலைமுடியை கட் பண்ணினான்.

நிஷா பேசாமல் இருந்தாள். அவள் முதுகில் எதையோ உணர முடிந்தது. பார்பர் மீண்டும் கிளிப்பரை முந்தைய இடத்திலிருந்து சிறிது பக்கமாக வைக்க, அதை உணர்ந்த நிஷா உடனடியாக நாற்காலியில் இருந்து எழுந்திருக்க முயன்றாள், ஆனால் பார்பர் அவள் தலைமுடியைப் பிடித்திருந்ததால் அவளால் சேரை விட்டு எழ முடியவில்லை. நிஷா தன் முடி வெட்டப்பட்ட பகுதியை வலது கையால் தொட்டாள். பார்பர் தனது பிடியை தளர்த்த சில நறுக்கப்பட்ட முடிகள் கொத்தாக தரையில் விழுந்தன.

நிஷா திகைத்தாள், "என்ன செய்தாய்?" என்று கோபமாக கத்த

 

பார்பர் குழப்பமடைந்து, "முடிந்தவரை நீளம் குறைக்க வேண்டும் என்று சொன்னாய்" என்று சொல்ல...

நிஷா முகம் வெளுத்து, “முடிந்தவரைநீளம் குறைக்க வேண்டாம் என்று சொன்னேன்" என்று கோபமாக கத்த பார்பர் எதுவும் பேசவில்லை. அவர் தவறுக்காக வருத்தத்துடன் தலை குனிந்து நின்றார். நிஷா தன்னுடைய  வெட்டப்பட்ட முடிகளைப் பார்த்தவள், கோபம் கொப்பளிக்க கத்த ஆரம்பித்தாள்,

“என்ன செய்தாய்? நீ… என்று அவள் கத்துவதை பார்த்த பாப்பா, நிஷாவின் முன் வந்து அழுவது போல நிற்க, அவளை பார்த்த நிஷா, தான் கோபமாக பேசுவதை பார்த்தால், பாப்பா அதை அப்படியே தன் அம்மாவிடம் சொல்லி விடுவாள் என்று யோசித்த நிஷா அமைதியாக நாற்காலியில் அமர்ந்து, “எதையாவது செய், அதைச் சரி செய்ய” என்றாள்.

பார்பர் கைகள் நடுங்க, "ஸாரிம்மா, நான் தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன்.  இதை சரி செய்ய உன் பின்பக்கம் முடியை ஓட்ட வெட்ட வேண்டும், ஆனால் முன்பக்கம் நீளமாக வைத்து ஸ்டைலிங்  பண்ணலாம்" என்று சொல்ல...

 

நிஷா “எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்?” என்று கேட்டாள். 

பார்பர் “உங்க முடியை நாலு அல்லது அஞ்சு இஞ்ச் இருக்கிற மாதிரி வெட்டினால் தான் நல்லா இருக்கும், ஆனால் நீங்க ரெண்டு பேருக்கும் பணம் கொடுக்க வேண்டாம்" என்று பார்பர் தயக்கத்துடன் சொல்ல, நிஷா பெருமூச்சுடன் முடிதிருத்துபவனுக்கு அடிபணிந்து தலையை குனிந்தாள்.

பார்பர் மீண்டும் அவளுடைய தலைமுடியை சீவி விட்டு சேகரித்தார், ஆனால் இந்த முறை பார்பர் கிளிப்பரை எடுக்கவில்லை, கத்தரிக்கோலை எடுத்தார். கழுத்தில் இருந்த முடியை கெட்டியாக பிடித்துக் கொண்டு அவளது தலையில்  கத்தரிக்கோலைச் செருகினார்,

 

ஸ்னிப், ஸ்னிப், ஸ்னிப், ஸ்னிப், என்று தன் கழுத்தில் கத்திகள் ஊசலாடுவதை நிஷாவால் உணர முடிந்தது. கூந்தல் வெட்டப்படுவதையும், அதன் சத்தத்தையும் நிஷாவால் உணர முடிந்தது. ஒவ்வொரு ஸ்னிப்பிலும் அவளது முடி நேர்த்தியாக வெட்டப்பட்டது.

பார்பர் வெட்டி முடித்துவிட்டு தன் பிடியை விட்டு அவள் தலையை அசைத்தான். நிஷாவின் போனி டெய்ல் வெட்டப்பட்டு  இப்போது கழுத்து வரை மட்டுமே நீளமாக இருந்தது. அவளுடைய அழகான போனி டெயில் தரையில் கிடந்தது. பார்பர் மீண்டும் கிளிப்பருக்கு மாறினார்.

அவள் தலையை பின்னால் சாய்த்து, கண்ணாடியில் தெரியும்படி, கிளிப்பரில் ஒரு கார்டை(guard) இணைத்தான். பார்பர் அவளது தலைமுடியை எல்லாம் கிளிப்பரில் ஓட்ட நறுக்கி சீவினான், பின்னர் கிளிப்பரை அவளது தலையின் முன் நடுவில் வைத்து மெதுவாக தலையின் உச்சிக்கு ஓட்டினான்.

பார்பர் க்ளிப்பரை இயக்கவும், நிஷாவின் நீண்ட முடி துண்டுகள் அவள் மடியில் விழுந்தன. பார்பர் மீண்டும் ஒரு முறை க்ளிப்பரை கொஞ்சம் பக்கவாட்டாக ஓட்டி முடியை வெட்ட, நிஷா தன் கண் முன்னே அவளின் உருமாற்றத்தைப் பார்த்தாள். அவளுடைய அழகான நீண்ட முடிகள் அனைத்தும் இப்போது அவள் தலையை கருப்பாகக் காட்டுவதற்குப் மட்டுமே போதுமானதாக இருந்தது.

 

அவள் மடியில்  முடி துண்டுகள் சிதறி கிடக்க, மேலும் சிறுசிறு முடி துண்டுகள் விழுந்து தரையில் சரிய பார்பர் நிஷாவின் பின்புறம் முடிந்ததும், க்ளிப்பரின் கார்டை அகற்றி விட்டு, அவளது நாற்காலியை தொண்ணூறு டிகிரி சுழற்றினார், அடுத்ததாக  கிளிப்பரை நிஷாவின் வலது பக்கத்திலிருந்து மேல் நோக்கி இயக்கினார். வலது பக்கத்தில் இருந்த அவளது தலைமுடி கொத்தாக தரையில் விழுந்தது.

 

நிஷாவின் இடது பக்கத்தில் மட்டும் அவளது நீண்ட முடி இருப்பதை உணர்ந்தாள். வலது பக்கத்தை போல இந்த முடியும் ஓட்ட வெட்டப்படும் என்று அவளுக்கு தெரியும்.  பார்பர் வலது  பக்கத்தை முடித்த பிறகு, அவளை வலதுபுறம் பார்க்குமாறு நாற்காலியை திருப்பினார். நிஷா சுழலும் போது அவளது வலது பக்கத்தில் எப்படி வெட்டி இருக்கிறது என்று ஒரு நொடி மட்டுமே பார்த்தாள். நிஷாவின் அடர்த்தியான முடி வலது பக்கம் முழுமையாக ஓட்ட நறுக்கப்பட்ட, கருப்புத் திட்டுகளுடன் வெள்ளைப் புள்ளியைப் போல அவளது மண்டை தெரிவதை பார்த்தாள்.


நிஷா இப்போது அவள் மீது கிளிப்பர் வேலை செய்வதை உணர, அவள் தலைமுடி மொத்தமாக தரையில் விழுந்தது. நிஷா இப்போது கிளிப்பரின் அதிர்வுகளை விரும்ப ஆரம்பித்தாள்.

எல்லாம் சரியாக முடிந்ததும், பார்பர் மீண்டும் நாற்காலியை சுழற்றினார், நிஷா நேராக கண்ணாடியை பார்க்குமாறு நாற்காலி இருக்க,  நிஷாவால் தான் பார்த்ததை நம்ப முடியவில்லை. அவளுடைய இரு பக்கங்களும்  கிட்டத்தட்ட மொட்டை அடிக்கப்பட்டது போல இருக்க, அவளுடைய உச்சந்தலையில் மண்டை தெரியும் அளவுக்கு வெட்டி இருந்தது.  அவள் அதை சரியாகக் பார்ப்பததற்கு முன், பார்பரின் கை தன் தலையைத் தள்ளுவதை உணர்ந்தாள். நிஷா பார்பர் செய்வதை போல  தலையை குனிந்தாள்.

பார்பர் நிஷாவின் பின் கழுத்தில் இருந்த முடியை இன்னும் ஓட்ட வெட்ட, ஒவ்வொரு  வெட்டின் போதும் அவளது முடி நுண்ணிய கூந்தல் மழை போல பெய்தது. எல்லாம் முழுமையடைந்த பிறகு நிஷா தலையை உயர்த்தினாள். பார்பர் நிஷாவின் தலையை பின்புறம் மற்றும் பக்கங்களில் அழகாக மசாஜ் செய்ய ஆரம்பித்தார்.

 

அடுத்து பார்பர் ஒரு ரேசரை எடுத்து அதில் பிளேடை சொருக, நிஷா திகைத்து, “என்னை மொட்டை அடிக்காதே” என்று கத்தினாள். 

அதற்கு பார்பர், "இது கழுத்து மற்றும் பக்கங்களில் இருக்கும் சிறு முடிகளை ஷேவ் செய்ய மட்டுமே" என்று பதிலளித்து, நிஷாவின் பின் கழுத்தில் தண்ணீர் தெளித்தார். பின் பார்பர்  ரேசரை அவள் பின் கழுத்தில் வைத்துவிட்டு, “அசையாதே” என்று சொல்லி, அவள் காது ஓரங்களில் இருந்து பின் கழுத்து முடியும் வரை அவள் தலைமுடியை மெதுவாக ஷேவிங் செய்ய, நிஷாவிற்கு அது ஒரு புதிய உணர்வை தந்தது. அவள் மனதிற்குள் ஏதோ குறுகுறுப்பாக இருக்க, அவள் அதை கண் மூடி அனுபவித்தாள்.

பார்பர் எல்லா பக்கங்களில் ஷேவ் செய்து விட்டு, "முடிந்தது" என்று சொல்லி விட்டு, பின்னர் அவளை மேல் இருந்த முடிகளை தூசித் தட்டி, நிஷாவின் மேல் போர்த்தி இருந்த துணியை அவிழ்த்தார். நிஷா எழுந்ததும் அறுந்திருந்த தலைமுடியை மிதித்தாள்.

 

ஆனால் நிஷா தன்னுடைய தலைமுடியை சரிபார்க்க மிகவும் கவலைப்பட்டாள். நிஷா தன் இரு பக்கங்களிலும், பின் கழுத்திலும் தொட்டு தடவி சரி பார்த்தாள். முதல் முறை இந்த மாதிரி ஹேர்கட் பண்ணி இருந்ததால் நிஷா தன்னை சரிபார்க்க அதிக நேரம் எடுத்துக் கொண்டாள். அவள் ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வில் இருந்தாள். மகிழ்ச்சியாக இருக்கிறாளா அல்லது சோகமாக இருக்கிறாளா என்பதை அவளாலேயே தீர்மானிக்க முடியவில்லை.

பிறகு பாப்பாவுக்கு முடி வெட்டியதும் இருவரும் கடையை விட்டு வெளியேறினார்கள். பாப்பாவின் அம்மா நிஷாவை பாய் கட் ஹேர்ஸ்டைலில்  பார்த்ததில் அவள் வியந்து போனாள். அவள் சிரித்தாள்,

 

"உங்கிட்ட தெளிவா சொன்னேன்ல... ஜாக்கிரதையா இருன்னு"

நிஷா பதில் சொல்லவில்லை.

 

 "ஆனா ஹேர்ஸ்டைலிலும் பார்க்க அழகா இருக்க, போய் குளிச்சிட்டு வா" என்று அவள் நிஷாவை உற்சாக படுத்த...

 

நிஷா மெதுவாக பதிலளித்தாள், "எனக்கு ஷார்ட் ஹேர்கட், ஆனால் இப்போ தான் முதல் முறை முயற்சி செய்து இருக்கிறேன்" என்று சமாளித்தாள்.

 

அதற்கு அவளின் அத்தை, "என்னை நம்பு, நீ இந்த ஹேர்கட்டில் கூட ரொம்ப க்யூட்டா, அழகா இருக்க" என்று சொல்ல, நிஷா சின்ன வெட்க சிரிப்புடன் தன் வீட்டிற்கு சென்றாள்.

 

 

 

 

Mallu Actress short Bob cut makeover photoshoot

July 05, 2023 0
Mallu Actress short Bob cut makeover photoshootTelugu village women's silky long hair bun | Traditional kondai hair style

July 05, 2023 0
Telugu village women's silky long hair bun | Traditional kondai hair style


Foreigner's long to short pixie boy cut makeover

July 05, 2023 0
Foreigner's long to short pixie boy cut makeoverNorth Indian girl's mid back length hair cut makeover

July 05, 2023 0
North Indian girl's mid back length hair cut makeover

North Indian girl's mid back length hair cut makeover

July 05, 2023 0
North Indian girl's mid back length hair cut makeoverNorth Indian girl's mid back length hair cut makeover

July 05, 2023 0
North Indian girl's mid back length hair cut makeover


North Indian girl's mid back length hair cut makeover

July 05, 2023 0
North Indian girl's mid back length hair cut makeover