Friday 13 January 2023

லேடீஸ் ஹாஸ்ட்டல்

January 13, 2023 0

"ஏய்.. இந்த கட்டுரையை  பார்த்தீர்களா?" என்று உற்சாகமாக கேட்டாள் ஷில்பா...

தீபா, ஸ்வப்னா, ஸ்மிதா, லீலா யாரும் அந்த கட்டுரையை படித்து பார்க்காதது போல் தலையை ஆட்டினார்கள். ஐவரும் ஒர்க்கிங் வுமன்ஸ். ஹாஸ்டலில் ரூம் மேட்கள். அத்தனை பேரும் சாஃப்ட்வேர் ஊழியர்கள். பெரும் பணக்காரர்கள். அவர்களின் வாழ்க்கை மிக வேகமானவை.

ஷில்பா புத்தகத்தை எடுத்துக்கொண்டு அவர்கள் நடுவே வந்தாள். எல்லோரும் ஆர்வமாக புத்தகத்தை பார்த்தனர். ஷில்பா ஒரு கட்டுரையை காட்டினாள்.





அதுதான்..."BALD IS BEAUTIFUL" கட்டுரை. இன்றைய இளைஞர்களின் மிகவும் பிரபலமான ஒரு ஹேர் ஸ்டைலிஸ்ட் ஒரு பெரிய கட்டுரையை எழுதி இருந்தார்.

அதில் பெரு நகரங்களில் உள்ள இன்றைய நவ நாகரிக இளம் பெண்கள் தங்களின் தலையை சுத்தமாக ஷேவ் செய்து பார்க்க விரும்புகிறார்கள் என புகைப்படங்களுடன் விளக்கப்பட்டு இருந்தது. அண்மையில் ஒரு பிரபலமான தமிழ் நடிகை தன்னுடைய கதாபாத்திரத்திற்காக துணிச்சலாக மொட்டை அடித்து க்ளீன் ஷேவனுடன் திரையில் தோன்றியதில் இருந்து இந்த டிரெண்ட் அதிகரித்துள்ளதாக அந்த கட்டுரையில் விளக்கப்பட்து இருந்தது.

அறையில் இருந்த ஐந்து பெண்களும் அந்தக் கட்டுரையை முழுவதுமாகப் படித்தார்கள். பிறகு அதைப் பற்றி நீண்ட நேரம் விவாதித்தனர். படுக்கைக்குச் செல்வதற்கு முன்பும் பெண்கள் மொட்டை தலையுடன்  இருக்கும் புகைப்படங்களைப் பற்றிப் பேசினார்கள்.

அடுத்த நாள் ஞாயிறு..அனைவருக்கும் விடுமுறை. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆலிவ் ஆயிலால் தலை மசாஜ் செய்து கொள்வார்கள். அன்றும் ஐவரும் ஆலிவ் ஆயில் மசாஜ் செய்து  ஷாம்பு போட்டு குளித்தனர். மதிய உணவுக்கு பிறகு அவர்களின் வார்த்தைகள் ஹேர் ஸ்டைல்களை பற்றி விவாதித்தனர். மீண்டும் அனைவரும் மொட்டை அடிப்பது பற்றி பேசினர்.

“என்னைப் பொறுத்தவரை... மொட்டை அடிப்பது எனக்கு பிடித்து இருக்கிறது... அதனால்  நான் இன்று மாலை சலூனுக்கு சென்று என் தலையை மொட்டை அடிக்க போகிறேன் என்றாள் ஷில்பா.

"ஏய்... நீ கிண்டல் செய்கிறாயா?" லீலா கேட்டாள்..



"இல்லை, நான் ரொம்ப சீரியஸ் ஆக சொல்கிறே... மொட்டை அடிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்.." என்று உறுதியாக கூறினாள் ஷில்பா.



மாலை ஐந்து மணிக்கு "என்னுடன் சலூனுக்கு ஷேவ் செய்ய யாராவது வர்றீங்களா?"...முடியை சீவிக்கொண்டே ஷில்பா கேட்க யாரும் பேசவில்லை. ஆனால் மொட்டை அடிப்பது  அனைவருக்கும் பிடித்திருந்தது. ஆனால் மொட்டை அடித்த பின் தங்களின் தோற்றம் எப்படி இருக்கும் என்று நினைத்து தயங்கினர். இறுதியாக லீலா சொன்னாள். .''நான் உன்னுடன் வரேன்...ஆனால் முடி மொட்டை அடிக்க அல்ல, உன்னுடன் துணைக்கு மட்டும்'' என்று லீலா சொன்னாள். ஷில்பாவும் லீலாவும் ஸ்கூட்டியில் சலூனுக்கு சென்றனர். அது ஒரு மிகவும் பிரபலமான சலூன்.

ஷில்பா ரிசப்ஷனில் "கிளீன் ஷேவ்" என்று சொன்னாள். அவளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு ரசீதை கொடுத்தாள் ரிசப்ஷனிஸ்ட்.

"தயவுசெய்து பத்து நிமிடங்கள் காத்திருக்கவும்," ரிசப்ஷனிஸ்ட் அவர்களிடம் சொன்னாள். இருவரும் அங்கிருந்த சோபாவில் அமர்ந்திருக்க, கண்ணாடி கதவுகள் வழியே சலூனின் உட்புறம் தெரிய, வரிசையாக ஐந்து நாற்காலிகள். அனைத்திலும் ஆட்கள் அமர்ந்திருக்கிறார்கள். விதவிதமாக ஹேர் ஸ்டைல் செய்து வருகிறார்கள். பத்து நிமிடம் கழித்து ஷில்பாவிற்கு அழைப்பு வந்தது.

ஷில்பா சென்று நாற்காலியில் அமர்ந்தாள்.

"உங்களுக்கு மொட்டை அடிக்க வேண்டுமா?" கேப்பால்  மூடிக்கொண்டு ஸ்டைலிஸ்ட்  கேட்டாள். ஷில்பா தலையை ஆட்டினாள்....

"கிளிப்பர் ஷேவ் வேண்டுமா அல்லது ரேஸர் ஷேவ் செய்ய வேண்டுமா?" ஷில்பா அணிந்திருந்த ஹேர் பேண்டைக் கழற்றி கொண்டே சொன்னாள்.

"ஸ்ட்ரைட் ரேஸர் ஷேவ்". ஷில்பா உடனே சொன்னாள். ஷில்பா திருப்பதிக்கு போகும் போதெல்லாம் கல்யாணகட்டாவில் மொட்டை அடிப்பதை பார்ப்பாள்... அப்படி மொட்டை அடிக்க அவளுக்குப் பிடிக்கும்.


ஸ்டைலிஸ்ட் அவளது தலைமுடியை நன்றாக சீவி விட்டு பின் ஸ்பிரேயரால் அவள் தலைமுடியில் தண்ணீரை தெளித்து கைகளால் நன்கு ஈரமாக்கினாள்.



ஒரு ரேஸரை எடுத்து அதில் பிளேட்டை மாற்றி, ஷில்பாவின் தலையை மேல் நோக்கி தூக்கி பிடித்து நெற்றிக்கு மேல் ஷேவ் செய்ய ஆரம்பித்தாள். ஷில்பா அவளைப் பார்க்காமல் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாக ஷில்பாவின் தலைமுடி உதிர்கிறது. லீலாவும் ஷில்பாவின் தலைமுடியை மொட்டையடிப்பதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள். பத்து நிமிடத்தில் ஷில்பாவின் தலையை ஷேவ் செய்து விட்டாள் ஸ்டைலிஸ்ட். பின் ஸ்டைலிஸ்ட் ஷேவிங் கிரீம் எடுத்து ஷில்பாவின் தலையில் நுரை போங்க பூசி விட்டாள். பின் ரேஸரால் மீண்டும் மொட்டை அடித்தாள். இப்போது ஷில்பாவின் தலை மழுங்க சிரைக்கப்பட்டு பளபளவென மின்னியது.

"ஷில்பா நீ சூப்பர்!!" ஷில்பாவின் கன்னத்தில் முத்தமிட்டாள்  லீலா...

ஷில்பாவும் லீலாவும் சலூனை விட்டு ஹாஸ்டலுக்கு சென்றனர்.

"ஆஹா...என்ன அழகு!!" ஷில்பாவை பார்த்ததும் அவளது ரூம் மேட்ஸ் சத்தம் போட்டு அலறினார்கள். டியூப் லைட்டின் வெளிச்சத்தில் ஷில்பாவின் உச்சந்தலை பளபளத்தது.. தீபா வந்து ஷில்பாவின் உச்சந்தலையில் முத்தம் கொடுத்தாள். மற்ற மூவரும் அதே போல முத்தம் கொடுத்தனர்.

அடுத்த ஞாயிறு லீலா ஷில்பாவிடம் "நானும் மொட்டை அடிக்க விரும்புகிறேன்" என்றாள்.


உடனே ஷில்பா..."உனக்கு வேணும்னா சொல்லு... நானே உனக்கு  இப்பவே மொட்டை அடிக்கிறேன்" என்றாள்.

"நீயா...  இங்கேயா!!" என்றாள் லீலா ஆச்சரியத்துடன்...

ஆமாம்...இப்பவே..உன் தலையை இங்கேயே மொட்டை அடிக்கிறேன் நம்பிக்கையுடன் சொன்னாள் ஷில்பா.

"உன்னால மொட்டை அடிக்க முடியுமா?" ஸ்மிதா கேட்டாள்

"அது என்ன பெரிய அணுகுண்டு செய்யுற வேலையா" என்று ஷில்பா கூறினாள்.

"ஆனா நம்மகிட்ட அந்த சவர கத்தி இல்லையே" என்றாள் ஸ்வப்னா...

"லீலா சம்மதித்தால் பத்து நிமிடத்தில் சவர கத்தி கொண்டு வந்து தருகிறேன்..' என்று ஷில்பா கூற... லீலா சிறிது நேரம் யோசித்தாள்.

"நான் கண்டிப்பாக மொட்டை அடிப்பேன்" என்றாள்... ஷில்பா உடனே சென்று ரேஸரை வாங்கி வந்தாள்.

லீலாவின் தலைமுடி இடுப்பு வரை உள்ளது. நல்ல அடர்த்தியாக இருக்கிறது. ஷில்பா பால்கனியில் ஸ்டூலை வைத்துவிட்டு லீலாவை அங்கேயே உட்கார சொல்ல லீலா வந்து அமர்ந்தாள். மற்ற மூவரும் நின்று பார்த்துக்கொண்டிருக்க... ஷில்பா தண்ணீர் கொண்டு வந்து  லீலாவின் தலைமுடியை நன்றாக நனைத்தாள். பின் ஷில்பா லீலாவின் தலையில் ரேசரை உச்சந்தலையில் வைத்து ஷேவ் செய்ய ஆரம்பித்தாள்.


லீலாவின் தலைமுடி துண்டு துண்டாக கீழே விழ,

ஷில்பா லீலாவின்  இடது பக்கத்தை முழுவதுமாக ஷேவ் செய்தாள். இப்போது லீலாவின் இடது பக்கம் மொட்டை தலை, வலது பக்கம் சுருட்டை முடி. தீபா லீலாவின் அருகில் வந்து ஷேவ் செய்த பக்கத்தில் கையை வைத்து தடவி பார்த்தாள். அடுத்த ஐந்து நிமிடங்களில் வலது பக்கம் முழுவதுமாக லீலா மொட்டையடிக்கப்பட்டாள். அவளுடைய அடர்த்தியான போய்விட்டது...

லீலா எழுந்ததும் தீபா வந்து ஸ்டூலில் அமர்ந்து “ஷில்பா ப்ளீஸ்...எனக்கும் மொட்டை அடிக்கணும்?” என்றாள்...



ஷில்பா மகிழ்ச்சியுடன் தீபாவின் தோள்பட்டை நீள பாப் கட் செய்து இருந்த முடியை தன் கைகளால் வருடி பார்த்தாள். பின் ஷில்பா தீபாவின் தலைமுடியை அழகாக மொட்டை முடித்துவிட்டாள். ஷில்பாவிற்கு அது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது.



சிறிது நேரம் கழித்து... ஷில்பா, தீபா, லீலா மூவரும் மொட்டை அடித்த முடியை தட்டி விட்டு, மூவரும் மொட்டை தலையுடன் அறைக்குள் சென்றனர்.

 

Green dressed girl's mid back length layer hair cut with coloring combination

January 13, 2023 0
Green dressed girl's mid back length layer hair cut with coloring combination


















Young girl's long layer hair style makeover

January 13, 2023 0
Young girl's long layer hair style makeover





















Indian actress goes to short pixie hair style makeover

January 13, 2023 0
Indian actress goes to short pixie hair style makeover




















Mumbai model's mid back length layer hair cut with coloring transformation

January 13, 2023 0
Mumbai model's mid back length layer hair cut with coloring transformation














Indian women's mid back length hair style makeover

January 13, 2023 0
Indian women's mid back length hair style makeover








New trend mehendi design for Indian bridal makeover

January 13, 2023 0
New trend mehendi design for Indian bridal makeover