Tuesday 12 November 2019

மொட்டை அடித்துக் கொண்ட சென்னை மாணவிகள்!!

November 12, 2019 0
மொட்டை அடித்துக் கொண்ட சென்னை மாணவிகள்!!
புற்றுநோயாளிகளுக்கு விக் வழங்குவதற்கான தலை முடி தான  இயக்கம், சென்னை கிறிஸ்த்துவ மகளிர்  தொடங்கியது. இதற்காக தங்கள் முடியை மொட்டை அடித்துக் கொண்ட மாணவிகளை அனைவரும் பாராட்டினர்.

கேன்சர் சிகிச்சையின் போது ஏற்படும்  கடுமையான பக்க விளைவுகளில் ஒன்று தலைமுடி இழப்பு. புற்றுநோய் வலியை விடவும் தலைமுடி இழப்பு என்பது மோசமானது. இதனால் நோயாளிகளுக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் புற்றுநோயாளிகளுக்கு விக் வழங்குவதற்கான                  "டேங்கில்ட் " என்ற விழுப்புணர்வு மற்றும் தலைமுடி தான இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரி மற்றும் க்ரீன் ட்ரெண்ட்ஸ் யுனிசெக்ஸ்  சலூன் இணைந்து இந்த இயக்கத்தை நடத்துகின்றன.



இந்த முடி தான இயக்கத்தில் 50க்கும் மேற்பட்ட சென்னை கிறிஸ்த்துவ கல்லூரி மாணவியர் பங்கேற்று தங்கள் தலை முடியை மொட்டை அடித்துக் கொண்டு புற்றுநோயாளிகளுக்கு விக் தயாரிப்பதற்காக தானமாக அளித்தனர்.

இதில் கல்லூரியின் ரோட்ராக்ட் க்ளப் தலைவரான மாணவி ரென்னி சாரதா மற்றவர்களுக்கு முன் மாதிரியாக தன்னுடைய தலைமுடியை தானமாக அளித்தார். அவரை தொடர்ந்து பல மாணவிகள் மொட்டை அடித்து தங்கள் தலை முடியை கேன்சர் நோயாளிக்கு தானமாக அளித்தனர்.

தமிழகம் முழுவதும் தலைமுடி தான இயக்கம் செயல்படுகிறது. தங்கள் முடியை தானமாக தர விரும்புபவர்கள் 1800 420 2020  என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது தங்கள் பகுதியில் இருக்கும் க்ரீன் ட்ரெண்ட்ஸ் யுனிசெக்ஸ்  சலூன் சென்று தலை முடியை மொட்டை அடித்து தானமாக கொடுக்கலாம்.








ஸ்ட்ரெயிட்டனிங் செய்யப் போறீங்களா? அப்போ இதெல்லாம் கவனம்!!

November 12, 2019 0
ஸ்ட்ரெயிட்டனிங்  செய்யப் போறீங்களா? அப்போ இதெல்லாம் கவனம்!!

இது ஸ்ட்ரெயிட்டனிங் சீசன். ஸ்ட்ரெயிட்டனிங் செய்வதற்கு முன்னும், அதன் பின்னும் சில விஷயங்களில்  நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

ஸ்ட்ரெயிட்டனிங் செய்யும் போது உங்கள் தலையில் பொடுகு இருக்க கூடாது. அப்படி இருந்தால் பொடுகால் பாதிக்கப்பட்ட முடியின் வேர்க்கால்கள் பலமாக இருக்காது. அதனால் ஸ்ட்ரெயிட்டனிங் செய்ய பயன்படுத்தும் கெமிக்கல்களை தாங்கும் அளவுக்கு உங்களில் முடியில் வலு இருக்காது. அதனால் ஸ்ட்ரெயிட்டனிங் செய்தால் முடி உதிர்வு அதிகமாக இருக்கும்.

உங்கள் கூந்தலின் நுனிகள் பிளவுபட்டு இருந்தால், அல்லது பாதிபாதியாக உடைந்து இருந்தாலோ, அந்த நிலையிலும் ஸ்ட்ரெயிட்டனிங் செய்யக் கூடாது.



உங்கள் முடிக்கு ஹென்னா போட்டு இருந்தால் ஸ்ட்ரெயிட்டனிங் செய்யும் முன் அதை முழுவதுமாக நீக்கி விடவேண்டும்.

உங்கள் கூந்தலின் அடர்த்தி அதிகமாக இருந்தால் மட்டுமே ஸ்ட்ரெயிட்டனிங் செய்ய வேண்டும். அடர்த்தி குறைவாக இருந்தால் ஸ்ட்ரெயிட்டனிங் செய்யக்கூடாது.

உங்கள் கூந்தலின் தன்மையை பொறுத்து தான், எந்த அளவு க்ரீம் பயன்படுத்த வேண்டும், அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று ஸ்டைலிஸ்ட்  முடிவு செய்வார்கள்.

ஸ்ட்ரெயிட்டனிங் செய்யும் போது பயன்படுத்தும் கெமிக்கல்கள் முடியின் வேர்க்கால்களில் படாமல் சிறிது இடைவெளி விட்டு பயன்படுத்த வேண்டும்.


ஸ்ட்ரெயிட்டனிங் செய்த பின்பும் முறையான கூந்தல் பராமரிப்பு அவசியம். ஸ்ட்ரெயிட்டனிங் செய்த பலன் அதிக நாட்கள் இருக்க, ஸ்டைலிஸ் ட் பரிந்துரைக்கும் ஷாம்பு,  மற்றும் கண்டிஷனரை தான் பயன்படுத்த வேண்டும்.

ஸ்ட்ரெயிட்டனிங் செய்த பின்பு கூந்தலை கையாள்வதில் கவனமாக  இருக்க வேண்டும். அதையும் ஸ்டைலிஸ்டிடம் கேட்டு தெரிந்து கொண்டு பின்பற்றுவது அவசியம்.!!