Thursday 1 February 2024

இரு அண்ணிகள் - முதலாம் பாகம்

February 01, 2024 1

நான் மாலதி. எங்கள் வீட்டில் நான் தான் கடைக்குட்டி. காலேஜ் படிக்கிறேன். நல்ல சிவந்த நிறம். எனது அழகினால் கவரப்பட்டு காலேஜில் என் பின்னால் சுற்றும் வாலிபர்கள் நிறைய பேர். ஆனால் நீங்கள் நினைப்பது போல இந்த கதையின் நாயகி நான் அல்ல. அதனால் கதையை கொஞ்சம் பொறுமையாக தொடர்ந்து படியுங்கள்இந்த கதையில் உங்களுக்காக முடியை மொட்டை அடிக்க போவது நான் அல்ல. இந்த கதையை எனது பார்வையில் இருந்து சொல்வது மட்டுமே என் வேலை.எனக்கு இரண்டு அண்ணன்கள். இருவரும் திருமணமானவர்கள். என் அண்ணண்கள் இருவருமே நல்ல அழகு. பெரிய அண்ணன் சரவணன் அவனுடன் வேலை செய்த ஜோதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டான். என் அப்பாவுக்கு அதில் விருப்பம் இல்லை என்றாலும், அண்ணனின் ஆசைக்கு குறுக்கே நிற்காமல் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். என் அண்ணி ஜோதி அவ்ளோ அழகு. என் அண்ணன் அவளை விரும்புவதற்கு முக்கியமான காரணம் அவளது முட்டி வரை நீண்டு தொங்கிய அடர்ந்த கூந்தல். ஜோதி அண்ணி உயரம் 5'3, ஆனால் என் அண்ணன் அவளைவிட சற்று உயரம் குறைவு. அண்ணியின் உயரத்திற்கு அவளது அவளது நேரான நீண்ட கூந்தல், அது பின்னப்பட்டாலும் அவள் இடுப்பைக் கடந்து செல்லும்மெல்லிய அழகான பழுப்பு நிற  முடியுடன் அழகான முகம்... பெரிய அண்ணி  மிகவும் அழகாக இருக்கிறாள்

 


திருமணத்திற்குப் பிறகும், ஜோதி அண்ணி அவளது நீண்ட கூந்தலை சிறப்பு கவனம் எடுத்து பரமாரித்தாள். ஜோதி அண்ணி அவளது முடியை விரித்து நடந்து வந்தால் மிகவும் அழகாக இருந்தாள். அவளது இந்த அழகை கண்டு என் பெரிய அண்ணன் சரவணன் பெருமைப்பட்டான்.

 

சில ஆண்டுகளுக்குப் பிறகு சின்ன அண்ணன்  என் அப்பா பார்த்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டான். சின்ன அண்ணி வந்தாலும் பெரிய அண்ணியின் பெருமையும், அவளது அழகுக்கும் எந்த குறையும் இல்லை. அதே போல என்னுடைய இரு அண்ணிகளுக்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை, எல்லோரும் ஒரே குடும்பமாக மகிழ்ச்சியாக இருந்தோம். என் இரு அண்ணிகளும் என்னை பாசமுடன் பார்த்துக் கொண்டனர்.

 

ஆனால் பெரிய அண்ணி தினமு யாரவது ஒருவர் அவளது முடியை அழகை ஒரு முறையாவது பாராட்ட வேண்டும் என்று விரும்பினாள். ஜோதி அண்ணி வேலை இல்லாமல் இருக்கும் போது, ​​​​மாடியில் இருக்கும் தனது அறைக்குச் சென்று, தலைமுடியைத் திறந்து, அவளுடைய தலைமுடியின் நீளத்தை மீண்டும் மீண்டும் வெவ்வேறு கோணங்களில் போட்டோ எடுப்பதை வழக்கமாக வைத்து இருந்தாள். சில சமயங்களில் சின்ன அண்ணியை போட்டோ எடுக்க சொல்லி அவளிடம் தற்பெருமை பேச, இருவருக்குள்ளும் சில சங்கடங்கள் வந்தது.

 

அதுவரை இருவரும் எந்த ஈகோவும் இல்லாமல் இருந்தவர்கள், பெரிய அண்ணி ஜோதியின் இந்த பழக்கத்தால் இருவருக்குள்ளும் சிறு விரிசல் வந்தது.

 

அந்த சமயத்தில் ஜோதி அண்ணி பல நாட்கள் கழித்து தன்னுடைய வேலை விஷயமாக வெளியூருக்கு சென்று சில நாட்கள் தங்கிவிட்டு வந்தாள். அங்கு அவள் தங்கி இருந்த இடத்தில் நல்ல தண்ணீரில் குளிக்காததால் அவளது முடி உதிர தொடங்கியது. அதன் பின் ஜோதி அண்ணியின் நீளமான முடி நாளுக்கு நாள் அதிகமாக உதிர, அவளது அழகிய கூந்தலின் வடிவம் சிறியதாகி, அதிகமாக உதிரத் தொடங்கியது.

 

ஒரு நாள் நான் அவளது அறைக்கு சென்றபோது, ஜோதி அண்ணியின் ​​படுக்கையிலும், தரையிலும் நீளமான 30-40 முடிகளைக் கண்டேன். மின்விசிறி ஓடிக்கொண்டிருந்தால், அறை முழுதும் உதிர்ந்த முடி நிறைய பரவி கிடந்ததுமின்விசிறியின் வேகத்தில் உதிர்ந்த முடிகள் மூக்கிலும், முகத்திலும் சிக்கிக் கொள்ளும், அதனால் முடியை சீவுவதற்குக் கூட ஜோதி அண்ணி பயந்தாள். என் அண்ணன் சரவணன் இப்போதெல்லாம் அவளது முடியின் மேல் வெறுப்பை கண்டான். அவன் பெரும்பாலும் அவனது அறைக்கு செல்வதையே தவிர்த்தான். 

ஜோதி அண்ணியின் அந்த முடி உதிர்வை சரி செய்ய சில மருந்துகள் வாங்கி வந்தாள். ஆனாலும் மெல்ல மெல்ல ஜோதி அண்ணியின் முடி நீளம் குறைய ஆரம்பித்தது, மறுபுறம், சின்ன அண்ணியின் முடியின் நீளம் அவளது பிட்டத்தைத் தாண்டி, முழங்கால் வரை எட்டியது. ஆனால் ஜோதி அண்ணிக்கு  5-6 மாதங்களாக ட்ரைக்காலஜிஸ்ட்டிடம் சிகிச்சை அளித்தும் பலனில்லை.

 

ஒரு நாள் நாங்கள் அனைவரும் குடும்பமாக டூர் போய் விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தோம். அன்று இரவு வெகுநேரமாகியதால் இரண்டு கார்களில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தோம். நான் இரண்டு என் இரு அண்ணிகளுடனும் ஒரு காரில் இருந்தேன், என் பெரிய அண்ணன் சரவணன் காரை ஓட்டிக் கொண்டு இருந்தான். அந்த காரில் ஆட்கள் அதிகமாக இருந்ததால் பெரிய அண்ணி ஜோதி சின்ன அண்ணியின் மடியில் உட்கார்ந்து இருந்தாள். ஏனென்றால் ஜோதி அண்ணி தான் எடை குறைவாக இருப்பாள்.

 

ஜோதி அண்ணியின் முடி சின்ன அண்ணியின் முகத்திற்கு முன்னால் இருக்க, அவள் திடீரென ஜோதி அண்ணியின் பின்னலை அவிழ்த்துவிட்டு, அவளது முடியின் நிலையை கைகளால் தடவி சோதனை செய்ய, அந்த மெல்லிய வருடலுக்கே சில முடிகள் அவள் கையோடு வந்தது.

 

என்ன அக்கா, உங்க முடியோட நிலைமை ரொம்ப மோசமா இருக்கே? இப்படியே விட்டா இனிமேல் சரி பண்ண முடியாத நிலைமைக்கு வந்துடும்?

 

என்னடி பண்ண? நானும் எல்லா வைத்தியமும் செய்து பார்த்துவிட்டேன்?

 

ஆனால் அக்கா, ஒரு வழி இருக்கு...

 

என்னடி சொல்லு? அதையும் செஞ்சு பார்த்துடலாம்...

 

உங்களால அதை செய்ய முடியாது... அந்த வைத்தியத்துக்கு நீங்க ஒத்துக்க மாட்டீங்க...

 

என்னன்னு சொல்லுடி... அப்புறம் பாக்கலாம்?

 

இனிமே உங்க முடியை மொட்டை அடிக்கிறதை தவிர வேற வழியில்லை அக்கா...

 

என்னடி.. எனக்கு மொட்டை போட்டுட்டு நீ கெத்து காமிக்கலாம்னு பிளான் பண்றியா?

 

ஐயோ அக்கா, அப்படி எல்லாம் இல்லை. உங்க நல்லதுக்கு தான் சொன்னேன்...

 

புரியுதுடி... ஆனா எப்படிடி... மொட்டை போட்டுட்டு வெளியே போறது... என்னால நினைச்சு கூட பார்க்க முடியல...

 

நான் சொல்றதை சொல்லிட்டேன்... இனி உங்க இஷ்டம் அக்கா...

 

என்னால வெளியே பார்லர், கோவில்ல எல்லாம் மொட்டை போட்டுக்க முடியாது... அதுக்கு ஒரு வழி சொல்லு?

 

நிஜமாவா அக்கா? நான் சொல்றதால மொட்டை அடிச்சுக்க போறீங்களா? இல்ல நிலைமையை புரிஞ்சுக்கிட்டா? 

நானும் ரொம்ப நாளா அந்த ஐடியாவையும் யோசிச்சேன்... ஆனா தைரியம் வரலடி...

 

என்ன அண்ணி இருவரும் பேசுவதை நானும், என் அண்ணன் சரவணனும் கேட்டுக் கொண்டு இருந்தோம்.

 

 

அக்கா, உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருந்தா, நானே உங்களுக்கு பண்ணி விடுறேன்,

 

 நீ எப்படிடி? உன்னால முடியுமா?

 

முடியும் அக்கா, நான் தான் பியூட்டிஷியன் கோர்ஸ் பண்ணி இருக்கேனே? அதுல இதெல்லாம் சொல்லி தருவாங்க?

 

அப்படியா? சரிடி.. அப்போ வீட்லயே பண்ணிக்கலாமா?

 

உங்களுக்கு சம்மதம்னா பண்ணிக்கலாம் அக்கா, என்ன சரவணன் மாமா, உங்களுக்கு சம்மதமா?

 

என்னமோ பண்ணுங்க? எனக்கு எதுன்னாலும் ஓகே?

 

என் அண்ணனும் சம்மதம் சொல்ல, என் பெரிய அண்ணி ஜோதி மொட்டை தலையில் எப்படி இருப்பாள் என்று நான் கற்பனை செய்து பார்த்தேன்.

 

அடுத்த நாள் என் அண்ணன் மகன் பள்ளிக்கு கிளம்பியதும், சின்ன அண்ணி பெரிய அண்ணி ஜோதியின் அறைக்கு செல்ல, ஆவலுடன் நானும் அவளது அறைக்கு சென்றேன்.

 

சின்ன அண்ணி ஜோதி அண்ணியை  அழைத்துச் சென்று நாற்காலியில் அமரவைத்து கொண்டை போட்டு இருந்த தலைமுடியை பிரித்து விட, அவளது தலை முடி சாதரணமாகவே உதிர தொடங்கியது. ஆனால் சின்ன அண்ணி, அவளது தலை முடியை சீப்பால் வாரி விட்டு, மொத்தமாக ஒரு ரப்பர் பேண்ட் போட்டு விட்டு, கழுத்தின் அருகில் நெருக்கி பிடித்து கொண்டு ஜோதி அண்ணியை கண்ணாடியில் பார்க்க, அவள் முகம் சோகத்தில் வாடி இருந்தது. ஆனாலும் சின்ன அண்ணி அதை பற்றி கவலைப்படாமல் ஜோதி அண்ணியின் முடியை கத்தரியை வைத்து வெட்ட தொடங்கினாள்.

 

சில நொடிகளில் அவளது மொத்த முடியும் சின்ன அண்ணியின் கைகளில் இருந்தது. பின்னர் எஞ்சி இருந்த அவளது முடியில் தண்ணீர் விட்டு தலையை நன்றாகக் கழுவி மசாஜ் செய்தாள். ஜோதி அண்ணியின் தலையில் மண்டை ஓட்டில் இருந்த அழுக்குகள் எல்லாம் போகுமாறு நன்றாக கழிவு விட்டாள் சின்ன அண்ணி.

 

நான் அதே அறையில் டிவி பார்ப்பது போல் நடந்து கொண்டிருக்கும் காட்சி முழுவதையும் கண்கூடாகப் பார்த்தேன். அப்போது சின்ன அண்ணியின் கொண்டை போட்டு இருந்த தலை முடி அவிழ்ந்து விழ,சின்ன அண்ணியின் தலைமுடி பெரிய அண்ணியின் முடியை விட அழகாக இருந்தது, ஏனென்றால் சின்ன அண்ணியின் தலைமுடி இப்போது அவளது முழங்கால்களை எட்டி இருந்தது.

 

சின்ன அண்ணி தான்  நீண்ட காலத்திற்கு முன்பு கற்றுக்கொண்ட பியூட்டிஷியன் கோர்ஸின் திறமையை இப்போது பெரிய அண்ணி ஜோதியின் மேல் அழகாக பயன்படுத்துவதை நான் பார்த்தேன். மேலும் பார்லர் என்றால் என்னவென்று தெரியாத ஒரு சின்ன கிராமத்தில் இருந்து வந்த சின்ன அண்ணி, மாடர்னாக வளர்ந்த பெரிய அண்ணியின் முடியை ஷேவ் செய்வதை இன்னும் சிறிது நேரத்தில் பார்க்க போகிறேன் என்பதே எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

 

பெரிய அண்ணி ஜோதி இப்போது வேறு வழியில்லாமல் சின்ன அண்ணியின் முன் அமர்ந்திருக்க, சில நொடிகளில் அவள் உட்கார்ந்து இருந்த  நாற்காலியின் அடியில் முடி நிறைந்து கிடந்தது. பெரிய அண்ணி ஜோதியின் நீண்ட முடியை வெட்டிய பிறகு, அவளது முடி இப்போது கழுத்து வரை மட்டுமே இருந்தது. பெரிய அண்ணி ஜோதியின் ஹேர் ஸ்டைல் இனிமேல் இப்படித்தான் இருக்கும் என்று நான் நினைத்துக் கொண்டேன். அப்படி இருந்த இனிமேல் ஜோதி அண்ணி முன்பு போல் முடி உதிர்தல் பிரச்சனையால் அவதிப்பட வேண்டியதில்லை.இதோடு சின்ன அண்ணி தனது வேலையை முடித்துக் கொள்வாள் என்று நான் நினைத்தேன், ஆனால் சின்ன அண்ணி

தனது மேக்கப் பாக்சில் இருந்து ஒரு சிறு சவர கத்தியை எடுத்தாள். அதை எடுத்து விரித்து, அந்த பாக்சில் இருந்து ஒரு சிறு பிளேடை எடுத்து உடைத்து அந்த சவர கத்தியில் பொருத்தி விட்டு, பொறுமையாக கண்ணாடி வழியாக பெரிய அண்ணி ஜோதியை பார்க்க, அவளும் எதற்கும் சம்மதம் என்பது போல தீர்க்கமாக சம்மதம் சொன்னாள்.

 

சின்ன அண்ணி, திரும்பி என்னை பார்த்து என்ன மாலதி டிவி பார்ப்பது போல இனிமேலும் உன்னால் நடிக்க முடியாது, வா என் அருகில் வந்து மொட்டை அடிப்பதை பார்த்து அனுபவி? என்றாள்.


நான் கொஞ்சம் பதட்டத்துடன் சின்ன அண்ணியின் அருகில் சென்று நிற்க, சின்ன அண்ணி தான் ஏற்கனவே எடுத்து வைத்து இருந்த வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து ஜோதி அண்ணியின் தலை முடியில் தெளித்து விட்டு, மெதுவாக மசாஜ் செய்து விட்டாள். பின்னர் ரேசரை எடுத்து ஜோதி அண்ணியின் நெற்றியில் இருந்து மேல் நோக்கி ரேசரை இழுக்க முதல் ஸ்ட்ரோக் விழுந்ததும், ஜோதி அண்ணியின் வெள்ளை தோல் தெரிந்தது. 


சின்ன அண்ணி நிறுத்தாமல் மெதுவாக ஜோதி அண்ணியின் முடியை மழிக்க தொடங்கினாள். ஒவ்வொரு ஸ்ட்ரோக் விழும் போதும் வரும் சத்தம் என் காதில் விழும் போது எனக்கு புல்லரித்தது. எனக்கு இது ஒரு புது அனுபவமாக இருந்தது. 

மெல்ல மெல்ல ஜோதி அண்ணியின் தலை முடி மழிக்கப்பட ஜோதி அண்ணி முற்றிலும் புதிய தோற்றத்தில் அழகாக இருந்தாள். ஜோதி அண்ணியின் தலை முடி சில நிமிடங்களில் முழுமையாக சிரைக்கப்பட்டு முழு மொட்டை தலையுடன் அழகாக இருந்தாள். ஜோதி அண்ணி தன் மொட்டை  தலையை தன் இரு கைகளால் தடவி பார்க்க, அது கொஞ்சம் சொரசொரப்பாக இருந்தது.


என்னடி இது... ரொம்ப சொரசொரன்னு இருக்கு...


இருங்க அக்கா, இன்னும் வேலை முடியல... இன்னொரு முறை உங்க தலையை ஷேவ் பண்ணனும்...

இன்னொரு முறையா..

ஆமாக்கா... மாலதி நீ போய் பாத்ரூம்ல ஷேவிங் போம் இருந்தா எடுத்துட்டு வா... என்று சின்ன அண்ணி என்னை பார்த்து சொல்ல, நான் பாத்ரூம் சென்று அண்ணன் வைத்து இருந்த ஷேவிங் கிட்டில் இருந்து போம் எடுத்து வந்து அண்ணியிடம் கொடுக்க, சின்ன அண்ணி அதை ஜோதி அண்ணியின் தலையில் பிதுக்கி விட்டு, அவளது தலை முழுவதும் தன் கைகளால் பரப்பி விட, பின் மீண்டும் ஒரு முறை பிளேடு மாற்றி விட்டு, ஜோதி அண்ணியின் தலையை சிரைக்க, இப்போது இன்னும் அதிகமாக அந்த ஸ்ட்ரோக் விழும் சத்தம் கேட்டது.

ஜோதி அண்ணியின் முன் தலை, சைடு பக்கங்களில் இருந்த போம் அப்படியே வழிந்து அவளது முகங்களில் வழிய சின்ன அண்ணி தலை முழுவதும் மழித்து விட்டு, அப்படியே ஜோதி அண்ணியின் நெற்றி, இரு கன்னங்களில் இருந்த போமை ரேசரை வைத்து மழித்து எடுத்தாள். பின் மீண்டும் ஒரு முறை ஜோதி அண்ணியின் கன்னங்கள், தாடை முழுவதும் க்ரீம் போட்டு விட்டு, மீண்டும் ஒரு முறை ரேசர் வைத்து மழித்து எடுத்தாள் சின்ன அண்ணி.

இப்போது ஜோதி அண்ணி மொட்டை தலையில் மிகவும் அழகாக இருந்தாள்.