Thursday 4 March 2021

நானும், காயத்ரியும் - எட்டாம் பாகம்

March 04, 2021 3


நானும் காயத்ரியும்... முதல் பாகம்


நானும், காயத்ரியும் - எட்டாம்  பாகம்



நான் காயத்ரியின் மொட்டைத் தலையை இரு கைகளால் மெதுவாகத் தடவி விட்டு, பின் மீதம் இருந்த சந்தனம் முழுவதும் இரு கைகளால் அள்ளிக் காயத்ரியின் தலை முழுவதும் தடவி விட்டேன்... பின் எல்லோரும் சாமி கும்பிட்டு விட்டு வர, அங்கேயே தடபுடலாக ஏற்பாடு செய்து இருந்த  விருந்து சாப்பாடு சாப்பிட்டு விட்டுக் காயத்ரியின் ஊருக்குக் கிளம்பினோம்...

வரும்போது காயத்ரியும் மீனாவும் ஒன்றாக உட்கார்ந்து ரகசியம் பேசிக் கொண்டு வர, அடிக்கடி இருவரும் என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே வந்தனர்... பின் காயத்ரியின் வீட்டில் இரண்டு நாட்கள் இருந்து விட்டு நானும், மீனாவும் சென்னை வந்து சேர்ந்தோம்...

நான் என் வேலையில் ஜாயின் பண்ணியதும் மீனாவும் ஏதாவது ஒரு வேலையில் சேர முடிவு செய்தாள். ஆனால் என் அம்மா மருமகள் வேலைக்கு போவதை விரும்பவில்லை. இப்படியே நாட்கள் செல்ல, கொரோனாவினால் லாக் டவுன் ஆனது. அதனால் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை. அப்போது தான் காயத்ரி எங்களை மீண்டும் பொள்ளாச்சிக்கு அழைக்க, நானும் மீனாவும் பொள்ளாச்சி சென்றோம். அங்கு காயத்ரி வீட்டிலும், தோப்பிலும் பொழுதை போக்கிக் கொண்டு கொஞ்சம் விவசாயமும் கற்றுக் கொண்டோம். 


சில சமயம் காயத்ரியின் கண்களில் காதலை பார்ப்பேன். பழைய நினைவுகள் எங்கள் இருவரையும் துரத்த, நானும் காயத்ரியும் சைட் அடித்துக் கொண்டோம். இதை என் மனைவி மீனாவும், அவள் கணவரும் பார்த்தாலும் கண்டு கொள்ளவில்லை. ஒரு நாள் நான், காயத்ரி, மீனா மூவரும் காயத்ரியின் வாழைத் தோப்பிற்க்கு போனோம். அங்கு இருந்த கிணற்றில் மூவரும் குளிக்க, மீனாவுக்கு அவள் அம்மா போன் செய்ததாக தகவல் வர, அவள் வீட்டுக்கு சென்று விட்டாள். காயத்ரியும் நானும் மட்டும் கிணற்றுக்குள் தனிமையில் இருந்தோம். அந்த சமயத்தில் எங்கள் இருவருக்கும் பழைய நினைவுகள் கிளர்ந்து எழ, நான் அவளைக் கட்டிபிடித்துக் கொண்டேன். அவளும் மறுக்கவில்லை. அவள் முகமெங்கும் முத்தமிட்டேன். ஒரு கட்டத்தில் காயத்ரியும் என்னை முத்தமிட்டாள்.

பின் கிணறு அருகில் இருந்த பம்ப் செட் ரூமில் அரை மணி நேரம் தனிமையில் இருந்தோம். காயத்ரி அன்று தான் என்னிடம் தன்னை முழுமையாக எனக்கு கொடுத்தாள். அவள் என்னை ஏமாற்றி விட்டாள் என்ற குற்றவுணர்ச்சி அவளுக்கு இருந்தது. இப்பொழுது அந்த மாதிரியான உணர்வு இப்போது தன் கணவரை நினைத்து இருப்பதாக சொன்னாள். நானும் காயத்ரியிடம் மன்னிப்பு கேட்டேன்.


மே இறுதியில் லாக் டவுன் கொஞ்சம் விடுபட நானும் மீனாவும் மீண்டும் சென்னை வந்தோம். வந்த சில நாட்கள் குவாரண்டைனில் இருந்தோம். பின் நான் ஆபிஸ் செல்ல, அடுத்த சில நாட்களில் எனக்குக் காய்ச்சல், சளி பிடிக்க, நான் ஹாஸ்பிடல் சென்றேன். டாக்டர் என் நெஞ்சில் சளி அதிகமாகக் கட்டி இருப்பதால் அட்மிட் ஆக வேண்டும் என்று சொல்ல, நான் அட்மிட் ஆனேன். மீனா என்னுடன் ஹாஸ்பிடலில் துணைக்கு இருந்தாள். அடுத்த இரு நாட்களில் எனக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருக்க, ICU வில் அனுமதிக்க பட்டேன்.

அதனால் மீனா ரொம்பவே பயந்துவிட்டாள். என் அம்மா, அப்பா, மீனாவின் அப்பா அம்மாவுக்கு அவள் தகவல் சொல்ல அனைவரும் பதறி அடித்துக் கொண்டு ஹாஸ்பிடல் வந்தார்கள். மீனா காயத்ரிக்கும் நான் ICU வில் இருப்பதை சொல்ல, அவளும் பொள்ளாச்சியிலிருந்து சென்னை வந்தாள். காயத்ரியும், மீனாவும் எனக்காக ரொம்பவே கண்ட ப் பட்டார் கள். வருந்தினார்கள்.

டாக்டர் என்ன மீனா சொன்னாங்க?

அவருக்கு நுரையீரல்ல நீர் கோர்த்து இருக்காம்.. அனேகமாக கொரோனா டெஸ்ட் எடுக்கணும்னு சொன்னாங்க காயத்ரி? எனக்கு ரொம்ப பயமா இருக்கு காயத்ரி?

ச்சீ எதுக்குடி பயப்படுற? அவனுக்கு ஒன்னும் ஆகாது.. நல்லபடியா வந்துடுவாண்டி.. அவன் நல்லா வரணும்னு சாமியை வேண்டிக்கோ.. மீனா...

சரி காயத்ரி... நான் இவரை ஆபீஸ் போக வேண்டாம், வீட்டில் இருந்தே வேலை பாருங்கன்னு சொன்னேன். அடுத்த தெருல தான் ஆபீஸ்னு போய் இப்படி ஆயிடுச்சு...



அன்றைய இரவு அப்படியே கழிய, என்னுடைய கொரோனா ரிசல்டுக்காக எல்லோரும் காத்துக் கொண்டு இருந்தனர். அன்று ஷஷ்டி என்பதால் காயத்ரி ஹாஸ்பிடல் அருகே இருந்த முருகன் கோவிலுக்கு சென்றாள். நான் குணமாகி வந்தால் பழனியில் வந்து தன் முடியை காணிக்கையாக கொடுப்பதாக வேண்டிக் கொண்டாள்.

காயத்ரி திருநீருடன் வந்து அதை மீனாவிடம் கொடுத்து எனக்கு பூசிவிட சொல்ல, எந்த கோவில் பிரசாதம் என்று மீனா கேட்டாள். பக்கத்தில் ஒரு முருகன் கோவிலுக்கு போய் வந்ததையும், அவனுக்காக தான் முடி காணிக்கை கொடுப்பதாக வேண்டிக் கொண்டதையும் காயத்ரி மீனாவிடம் சொல்ல, மீனா காயத்ரியின் பாசத்தை எண்ணி அவளை கட்டி அணைத்துக் கொண்டு அழுதாள்.

காயத்ரி.. இதுக்கு எனக்கு தோணவே இல்லையே... நான் எப்படி மறந்தேன்... முருகா, நீ தான் என் புருஷன் நல்ல படியா பிழைச்சு வர அருள் புரியணும் ஆண்டவா... அதுக்காக என் முடியை மொட்டை அடித்து உனக்கு காணிக்கை செலுத்துறேன் என்று வாய்விட்டு வேண்டிக் கொண்டாள். 


மீனா சிட்டியில் வளர்ந்தவள். தன் அழகை, முடியை கவனமாக பராமரிப்பவள். அவளுக்கு விதவிதமாக ஹேர் கட் பண்ணுவது தான் பிடிக்கும். இது காயத்ரீக்கும் தெரியும். மீனா இப்படி வேண்டிக் கொண்டதை நினைத்து அவள் தன் கணவன் மேல் எவ்வளவு காதல் கொண்டு இருக்கிறாள், அவளுக்கும் தான் துரோகம் செய்துவிட்டோம் என்று வருந்தினாள் காயத்ரி.

அன்று மாலை என்னுடைய கொரோனா ரிசல்ட் ரிப்போர்ட் நெகட்டிவ் என்று வந்ததும், என்னை ICU வில் இருந்து ரூமுக்கு மாற்றிவிட்டார்கள். அடுத்த இரண்டு நாட்கள் மேலும் ஹாஸ்பிடலில் இருந்து விட்டு வீடு திரும்பினேன்.

காயத்ரி மேலும் சில நாட்கள் என் வீட்டில் இருந்து என்னை பார்த்துக் கொண்டாள். மீனா இல்லாத வேலைகளில் நாங்கள் தனிமையில் இருந்த வேளைகளில் என்னை கொஞ்சம் அத்துமீற விட்டாள். பின் அவள் பொள்ளாச்சி கிளம்பி சென்றாள். 

அடுத்து மூன்று மாதங்கள் கழித்து நிலைமை ஓரளவு சீரானதும் காயத்ரி எனக்கு கால் செய்தாள்.

மதன் எப்படிடா இருக்க? 

நல்லா இருக்கேன் காயத்ரி.. அங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா?

ம்ம்ம்... அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்... மீனா பக்கதுல இருக்காளா?

ம்ம்ம்.. ஆமா இருக்கா? என்ன விஷயம் காயத்ரி?

ஒண்ணுமில்லை.. நீ ஹாஸ்பிடல் இருந்தப்போ நீ நல்லபடியா குணமாகி வந்தா நான் பழனி முருகன் கோவிலுக்கு வந்து மொட்டை அடித்து முடியை காணிக்கையா கொடுக்குறேன்னு வேண்டி இருக்கேன்... அதான் இதை இப்போ பண்ணிடலாம்னு இருக்கேன்... உனக்கு எப்போ லீவ் கிடைக்கும்?

என்ன காயத்ரி சொல்ற? எதுக்கு இந்த வேண்டுதல்... 

டேய் அதெல்லாம் பேசாத.. உனக்கு எப்போ லீவ்? நீ எப்போ பழனி வர முடியும்? அதை மட்டும் மீனாகிட்ட பேசிட்டு சொல்லு?

சரி காயத்ரி சொல்லிவிட்டு நான் போனை கட் பண்ணி, மீனாவை கேட்டேன்...


ஆமாங்க, காயத்ரி சொன்னா... நான் தான் மறந்துட்டேன்... உங்களுக்கு எப்போ லீவ் கிடைக்குமோ அப்போ பழனிக்கு போய்ட்டு வந்துடலாம் என்றாள் மீனா...

பின் நாங்கள் மூவரும் பேசி, ஒரு நல்ல நாளில் நான், மீனா, காயத்ரி மூவர் மட்டும் பழனிக்கு போவது என்று முடிவு செய்தோம். நானும், மீனாவும் சென்னையில் இருந்து காரிலேயே பொள்ளாச்சி வந்து மீனாவை பிக்கப் பண்ணிக் கொண்டு உடுமலை வழியாக பழனிக்கு சென்றோம். அன்று மாலை ஹோட்டலில் ரூம் ஒன்றை புக் செய்து தங்கிவிட்டு, அடுத்த நாள் அதிகாலையில் கோவிலுக்கு கிளம்பி சென்றோம். 

********************************************************************************


நீங்கள் ரொம்ப நாளாக எதிர்பார்த்த ஒரு கதை இப்போது உங்களுக்காக... வழக்கம் போல் என் வாழ்க்கையில் நடந்த ஒரு சில சம்பவங்களுடன் கற்பனை கலந்து எழுதி இருக்கிறேன். கருத்துக்களை பதிவு செய்யுங்கள். நன்றி.



Dhanya Rajesh shoulder length hair style

March 04, 2021 0

 Dhanya Rajesh shoulder-length curly  hair style 




























Telugu actress Surekha Vani's Daughter Subritha's Silky hair style

March 04, 2021 0

 

Telugu actress Surekha Vani's Daughter Subritha's Silky hair style 





































































Indian women's thigh bridal long hair

March 04, 2021 0

 

Indian women's thigh bridal long hair