Saturday 26 January 2019

நடிகை பியாபாஜ் பாய் மொட்டை அடித்தார்..

January 26, 2019 0
நடிகை பியாபாஜ் பாய் மொட்டை அடித்தார்..
அபியும் நானும் என்ற மலையாள படத்திற்காக நடிகை பியாபாஜ் பாய் நிஜமாகவே மொட்டை அடித்து நடித்துள்ளார். பியாபாஜ்பாய் நடிகர் அஜித்தின் ஏகன், ஜீவா நடித்த கோ போன்ற படங்களில் நடித்தவர்.


அபியும் நானும் மலையாள படம் என் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இருக்கும். இந்த படத்தில் எனது கதாபாத்திரத்துக்காக  துணிந்து மொட்டை அடித்து நடித்துள்ளேன். படத்தின் இயக்குனர் விஜயலட்சுமி என்னிடம் கதையை சொன்ன போது அது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. எந்த தயக்கமும் இல்லாமல் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டேன்.



எனக்கு மட்டுமின்றி வேறு எந்த நாயகிக்கும் இது போன்ற படம் இனி கிடைக்காது. அதனாலேயே நான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். இந்த கதையின்  ஒரு பகுதிக்காக நான் மொட்டை அடிக்க வேண்டி வந்தது. அதற்கேற்ப நானும் இயக்குனர் விஜயலட்சுமி சொன்னபடி மொட்டை அடித்து நடித்தேன். கதையின் அழகிற்க்கு அந்த மொட்டை காட்சி மிக முக்கியமானதாக இருக்கும். மேலும் தோற்றத்தை மீறி திறமையான நடிப்பின் மூலமும் மக்களை கவர முடியும் என்று நினைப்பவள் நான். அதனாலேயே நான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.


இந்த படத்தில் நடித்த அனுபவம் மிக அருமையானது. இந்த படத்தில் எனக்கு ஜோடியாக நடித்தவர் டோவினோ தாமஸ். இது அவருடன் எனக்கு முதல் படம். அவர் மிக திறமையான நடிகர். அவரது நடிப்பு இந்த அபியும் நானும் படத்திற்க்கு மேலும் பலத்தை கூட்டி உள்ளது. என் ரசிகர்கள் நல்ல படத்திற்க்கு என்றும் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன் என்று கூறினார் பியா பாஜ்பாய்.