Sunday 7 April 2019

மொட்டை - கவிதை

April 07, 2019 0
மொட்டை - கவிதை
மொட்டை அடித்து பார்!
ஷவரின் வேகம் தெரியும்..
உச்சி வெயிலின் சூடு தெரியும்...
நிழலின் குளிர் தெரியும்...
தொப்பியின் தேவை தெரியும்.



மொட்டை அடித்து பார்!
உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும்..
ஷேவிங் க்ரீமின் அர்த்தம் வெளிப்படும்.
மேக்கப்பின் நீளம் தெரியும்...
உனக்கும் அழகு வரும்..

மொட்டை அடித்து பார்!
குளிக்கும் நேரம் குறையும்.
கைக்குட்டையின் அளவு பெரிதாகும்..
ஷாம்புவின் மேல் நாட்டம் குறையும்.
காதலி முத்தமிடும் இடம் அதிகமாகும்.

மொட்டை அடித்து பார்!
மற்றவர்கள் உன் தலையில் முகம் பார்ப்பார்கள்.
மங்கையர்கள் உன் வயது தெரியாமல் தவிப்பார்கள்.
அது உன் அடையாளம் என்பார்கள்.

மொட்டை அடித்து பார்!
இளநரைக்கு தீர்வு.
முடி உதிர்வுக்கு தீர்வு.
பொடுகு தொல்லைக்கு முற்று.
இதற்கு எல்லாம் மொட்டையே தீர்வு.

மொட்டை அடித்து பார்!
நெற்றி வேறு, தலை வேறு என்று எண்ணமிருக்காது.
உன்னை புகைப்படம் எடுக்கும் போது
ப்ளாஷ் தேவை இருக்காது.
பாக்கெட் சீப்பின் தேவை இருக்காது.
ஹேர் ஸ்டைல் கலையும் என்ற எண்ணம் இருக்காது.

மொட்டை அடித்து பார்!
இளமை ஏறும்.
வயது குறையும்.
முதுமை மறையும்.
தலைக்கனம் குறையும்.

மொட்டை அடித்து பார்!
தென்றலை தலையிலும் உணர்வாய்.
மீசை முளைத்த குழந்தையின் முகம் பெறுவாய்.
சிவாஜி மொட்டை பாஸ் ஆவாய்.
உன் நிர்வாண மண்டையிலும்
அழகாய் தெரிவாய்.

மொட்டை அடித்து பார்!
மற்ற ஆண்களிடமிருந்து வேறுபடுவாய்.
சலூன் கடைகாரன் முறைப்பான்.
ஷாம்பு விளம்பரம் பிடிக்காது.
வழுக்கை தலைக்கு நண்பனாவாய்..



மொட்டை அடித்து பார்!
மொட்ட சிவா கெட்ட சிவா என்று பஞ்ச் பேசலாம்.
ஒருமுறை அடித்தால் மறுபடியும் எப்போது என்று ஏங்க வைக்கும்.
மொட்டை அடித்து பார்!