Friday 19 April 2019

செல்வியின் மொட்டை

April 19, 2019 0
செல்வியின் மொட்டை
செல்வி நடுத்தர குடும்பத்தில் பிறந்தவள். 21 வயது... சென்னையின் புகழ்பெற்ற கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவி. அந்த கல்லூரியில் செல்வி என்று அவளை பற்றி கேட்டால் யாருக்கும் தெரியாது. அவளை கூந்தல் அழகி என்று சொன்னால் தான் தெரியும்..

செல்வியின் மூன்று அடி நீண்ட அடர்த்தியான முடியை எல்லா பெண்களும் பொறாமையோடு பார்ப்பார்கள். செல்விக்கு தன் முடியின் மீது எப்போதும் ஒரு கர்வம் உண்டு. அந்த நீளமான முடியை பார்த்து அவள் பின்னால் அழைந்த மாணவர்கள் ஏராளம். சீனியர் மாணவர்கள் மட்டுமில்லாமல் ஜூனியர் மாணவர்களும் செல்வியின் பின்னால் சுற்றினார்கள்.
அன்றுடன் கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகள் முடிந்து வீட்டுக்கு வந்தாள் செல்வி. அவளின் அப்பா அன்று வேலை முடிந்து சீக்கிரமே வந்துவிட்டார். உள்ளே சென்ற செல்வி உடை மாற்றி பிரஷ் ஆகி வந்தாள். அவளின் பாட்டி ( அப்பாவின் அம்மா ) வந்து செல்வியின் அருகில் அமர்ந்தாள்.



செல்வி... காலேஜ் முடிஞ்சதடா...
முடிஞ்சது பாட்டி.. இனிமேல் ஜாலியா கொஞ்ச நாள் வீட்டுல இருக்கலாம்.
ம்ம்ம். சரிடா.. செல்வி.. நாம ஒரு டூர் போலாமா...
ம்ம் போலாம்... பாட்டி... எங்க போக போறோம்..
ம்ம்... நான் ரொம்ப நாளா திருப்பதி போகலான்னு நினைச்சுட்டு இருக்கேன்.. போலாமா.. அப்பிடியே அந்த ஏழுமலையானுக்கு ரெண்டு வேண்டுதல் இருக்கு அதை முடிச்சுட்டு வந்துடலா.
என்ன வேண்டுதல் பாட்டி...
உங்க அப்பாவுக்கு அடிப்பட்டப்போ அவன் அதுல இருந்து மீண்டு வந்துட்டா என் முடியை காணிக்கையா தர்றேன்னு வேண்டிக்கிட்டேன். அது ஒண்ணு..
இன்னொன்னு பாட்டி...
அது உனக்கு தாண்டி செல்வி கண்ணு... நீ பத்தாவது படிக்கும் போது டைபாய்டு காய்ச்சல்ல பரீட்சை எழுத முடியாம போய்டுமுன்னு பயந்து போய் என் பேத்தி சீக்கிரமா குணமாகி பரீட்சை எழுத போகணுன்னு வேண்டிக்கிட்டேன்.
என்ன பாட்டி சொல்ற..
ஆமாண்டி செல்வி.. வேணுன்னா உன் அம்மாவையும் கேளு... அப்படி வேண்டியதால தான் உன் முடிய வெட்ட விடாம இவ்ளோ நீளமா வளர விட்டு இருக்கேன். அதுவுமில்லாம படிக்கிற புள்ள மொட்டை தலையோட எப்பிடி வெளியே போய் வருவ.. அது தான் இப்போ உனக்கு படிப்பு முடிஞ்சதும் சொல்றேன்...
அதுக்காக என் முடியை மொட்டை அடிக்கணுமா...
சாமிக்கு வேண்டுதலை சரியா செஞ்சுடணும் கண்ணு.. அதனால கண்டிப்பா நாம குடும்பமா போய் மொட்டை போட்டு வேண்டுதலை நிறைவேற்றி வர்றோம்...
இவ்ளோ நாளாக ஆசைப்பட்டு வளர்த்த முடியை, ஆண், பெண் பேதமின்றி என் முடியை பார்த்து பொறாமை பட்ட முடியை எப்படி ஒரே நிமிடத்தில் மொட்டை போட்டு இழப்பது என்று நினைத்து வருந்தினாள் செல்வி. ஆனாலும் பாட்டியை எதிர்த்து யாரும் பேசமுடியாது. சில சமயம் அப்பாவே பாட்டியை எதிர்த்து பேச மாட்டார்.
எனவே செல்வியும் பாட்டியும் மொட்டை அடிப்பது என முடிவு ஆனது. அனைவரும் குடும்பமாக திருப்பதி சென்றனர். காலை 8 மணிக்கு நாங்கள் கோவிலை அடைந்தோம். எனக்கு கோவிலுக்கு வந்ததும் ஒரு இனம் புரியாத பயம் மனதிற்க்குள் உருவானது.
நம் முடியை பார்த்து எத்தனை பேர் என் முன் சுற்றுகிறார்கள்.. இனி அது நடக்குமா? நம்மை யாரும் இனி பார்த்து சைட் அடிக்க மாட்டார்கள். என் முடியை பார்த்து பொறாமை பட்டவர்கள் என்னை பார்த்து கை கொட்டி சிரிப்பார்கள். என்ன செய்வது என்று நினைத்து தவித்துக் கொண்டு இருந்தேன்.
நாங்கள் எல்லோரும் ரூம் போட்டு குளித்து விட்டு மொட்டை போட ரெடி ஆனோம். நான் எப்போதும் மாடர்ன் டிரஸ் தான் அணிவேன். ஆனால் இன்று கோவிலில் இருப்பதால் ஒரு மஞ்சள் கலர் சுடிதார் அணிந்து கொண்டேன்.
நான், அம்மா, அப்பா, பாட்டி என நான்கு பேரும் மொட்டை அடிக்க கோவிலுக்கு சென்றோம். 

அம்மா எனக்கு மல்லிகை பூ வாங்கி வைத்து விட்டாள். இன்னும் சிறிது நேரத்தில் அதற்க்கு தேவையே இருக்காது.
நாங்கள் மூவரும் மொட்டை அடிக்கும் இடத்திற்க்கு செல்ல என் அப்பா மொட்டை அடிக்க டோக்கன் வாங்கி வந்தார். நாங்கள் மொட்டை அடிக்கும் இடத்திற்கு செல்ல அங்கு என்னை விட வயதில் சிறிய பெண்களும், கல்யாணம் ஆன சிறு வயது ஆண்டிகளும் மொட்டை தலையுடன் இருந்தனர். அவர்களின் தலை நல்ல வழுவழுப்பாக இருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் என் தலையும் முடியின்றி இப்படி தான் ஆகும் என்று நினைத்தேன். எனக்கு அழுகையே வந்தது. இருந்தாலும் நான் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் அமைதியாக இருந்தேன்.
அங்கு ஒரு ஆள் மொட்டை அடித்து முடித்து எழுந்ததும் என் அப்பா அந்த பார்பரிடம் டோக்கனை கொடுத்து விட்டு என்னை பார்த்து சைகை செய்தார். பார்பர் இந்த பலகையில் உர்காருமா என்றார். நானும் போய் உட்கார்ந்தேன். என்னமா பூ முடியா என்றார் பார்பர். பாட்டி வேகமாக மொட்டை அடிப்பா என்றாள்.
அதன் பின் பார்பர் என் முடியை இரண்டாக பிரித்தார். பிரித்து என் தலையின் இருபக்கமும் முடிச்சிட்டு கட்டினார். பின் அருகில் வைத்து இருந்த பாத்திரத்தில் இருந்து தண்ணீரை எடுத்து என் முடியை நன்றாக நனைத்து விட்டார். அந்த நீர் தலையில் இருந்து வழிந்து என் முகத்திலும், கன்னங்களிலும் வழிந்தது. அதன் பின்
சவர கத்தியை எடுத்து புதிய பிளேடு ஒன்றை பொருத்தி என்னை குனிய சொல்லி என் முடியை மொட்டை அடிக்க ஆரம்பித்தார்.
என் தலையில் கத்தியை வைத்து சிரைக்க ஆரம்பித்தார். என் நீளமான முடி முழுவதும் என் மடியிலேயே விழுந்தது. நான் என் தலையை குனிந்து கொண்டே இருந்தேன். தலையில் விழுந்த முடியின் அளவு அதிகமாகி கொண்டே இருந்தது.
ஐந்து நிமிடத்தில் என் நீளமான தலை முடியை அழகாக சிரமமே இல்லாமல் மொட்டை அடித்து முடித்து விட்டார். அவர் முழுவதும் சிரைத்து முடித்துவிட்டு எழுந்திருமா என்றார். நான் எழவும் என் சுடிதாரில் இருந்த முடிகள் அனைத்தும் இரண்டு முடிச்சாக கீழே விழுந்தது. நான் என் தலையை தடவி பார்த்தேன். அது வழக்கம் போல் இல்லாமல் மொட்டை தலை மொழுமொழுவென்று இருந்தது.
நான் என் முகத்தை கண்ணாடியில் பார்க்க நினைத்து கண்ணாடியை அங்கு தேடினேன். எதுவுமில்லை. உடனே என் மொபைலை எடுத்து ஒரு செல்பி எடுத்து பார்த்தேன். எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை. அப்படி என் முகம் மாறி போய் இருந்தது. 



பின் பாட்டியும் மொட்டை அடித்து விட்டு வர இருவரும் குளித்து விட்டு சாமி தரிசனம் செய்ய சென்றோம். அதன்பின் நான் என் பாட்டியுடன் நிறைய போட்டோக்கள் எடுத்துக் கொண்டேன்.
நாங்கள் இருவரும் மொட்டை தலையில் அழகாகவே இருந்தோம். அதுவும் என் பாட்டி எனக்கு அம்மா போன்று இளமையாக தெரிந்தாள். அதன்பின் நாங்கள் எங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.
அடுத்த நாளே நான் என் கல்லூரி தோழிகளுக்கு என் மொட்டை போட்டோவை வாட்ஸ் அப்பில் அனுப்பினேன். அவர்கள் எல்லோரும் ஆச்சர்யத்துடன் பார்த்து விட்டு கால் செய்து பேசினர்
அதன் பின் முடி வளர வளர நான் விதவிதமான ஹேர் ஸ்டைல்களை வைத்து கொண்டு இருந்தேன்.