Thursday 9 May 2024
இந்த கதை நண்பர் விக்னேஷ் தமிழ் அவர்களுடையது. நண்பர் விக்னேஷ் அவர்களின் ஒப்புதலுடன் நம்முடைய தளத்தில் பதிவு செய்கிறேன்.
எக்ஸாம் ஹாலில் மாணவர்கள் அனைவரும் அமைதியாக எழுதிக்கொண்டிருந்தனர். வைஷ்ணவி மெதுவாக தன்னுடைய ஜடையை முன்புறம் எடுத்துபோட்டாள். மிருதுவாக தன்னுடையஜடையை தடவிக் கொண்டே ஜடையின் கீழ் உள்ள ரப்பர் பாண்டை பிடித்தாள். தன் ஜடையில் ரப்பர் பாண்டால் முடித்து வைத்திருந்த பேப்பேர் பிட்-ஐ எடுத்தாள். யாருக்கும் தெரியாமல் தன் விடைத்தாளின் அடியில் வைத்து எழுத ஆரம்பித்தாள்.
அனைத்தையும் ரகு ஓரக்கண்ணால் ரசித்தான். தன் காதலியின் தலைமுடியையும் அதை வைத்து அவள் பிட் அடிக்கும் அழகையும் ஒருசேர ரசித்தான். வைஷ்ணவியின் அழகே அவளுடைய அடர்த்தியான, நீளமான தலை முடிதான். அவள் எப்பொழுதும் தன்னுடைய முடியை இறுக்கமான ஜடையாக பின்னியிருப்பாள். பின்னிய அவள் ஜடை தொடை வரை இருக்கும். அவன் ஒவ்வொரு முறை அவள் ஜடையை பிடிக்கும் போதும், அவளது ஜடை ஒரு கைக்குள் அடங்காது.
தேர்வு அறையை சுற்றிப் பார்த்தான். மேற்பார்வை செய்துகொண்டிருந்த ப்ரொஃபெஸர் சுதா அவளை கவனிக்கவில்லை. நிம்மதியுடன் தன் தேர்வை தொடர்ந்து எழுதினான். சிறிது நேரத்தில் வைஷ்ணவி பதில் எழுதி முடித்திருந்தாள். மறுபடியும் பேப்பேர் பிட்-ஐ ஜடையின் உள்ளே வைக்க ஆயுத்தமானாள்.
மறுபடி தன்னுடைய ஜடையை தடவிக்கொண்டே ஜடையின் கீழ் உள்ள ரப்பர் பாண்டை பிடித்தாள். தூரத்தில் இருந்த ப்ரொஃபெஸர் சுதா வைஷ்ணவி-யை கவனித்தாள். வைஷ்ணவி மெதுவாக தன்னுடைய ஜடையில் ஒரு பேப்பேர்-ஐ சொருகினாள். மீண்டும் ரப்பர் பாண்டை சரி செய்துவிட்டு தன் ஜடையை முத்தமிட்டாள். ப்ரொஃபெஸர் சுதா வைஷ்ணவியின் ஜடையில் பிட் இருப்பதை உணர்ந்தாள். வைஷ்ணவி-யை கையும் களவுமாக பிடித்து ஒப்படைத்தால், தன்னுடைய பணி நிரந்தரம் உறுதியாகி விடும் என்று எண்ணிக் கொண்டே வைஷ்ணவியை நோக்கி நடந்தாள்.
வைஷ்ணவி மீண்டும் தேர்வு எழுத தொடங்கினாள். அருகில் யாரோ நிற்பது போல் உணர்ந்து திரும்பி பார்த்தாள். ப்ரொஃபெஸர் சுதா நின்றுகொண்டிருந்தாள். வைஷ்ணவியின் மனத்தில் ஒரு பயம் வந்தது. ப்ரொஃபெஸர் சுதா வைஷ்ணவியின் விடைத் தாள்களை எடுத்துக் கொண்டு கல்லூரி முதல்வர் அறையை நோக்கி நடந்தாள். வைஷ்ணவி என்ன செய்வதென்று தெரியாமல் ப்ரொஃபெஸர் சுதாவின் பின் நடந்தாள். கல்லூரி முதல்வர் அறைக்குள் சென்ற ப்ரொஃபெஸர் சுதா, வைஷ்ணவி எக்ஸாமில் காப்பி அடித்ததாக கூறினாள்.
ப்ரொஃபெஸர் சுதா: ஸார், இந்த பொண்ணு எக்ஸாமில் காப்பி அடிக்கிறாள்.
கல்லூரி முதல்வர்: என்ன மேடம், ஏதவச்சு இந்த பொண்ணு காப்பி அடிச்சா-னு சொல்றீங்க?
ப்ரொஃபெஸர் சுதா: இந்த பொண்ணு வைஷ்ணவி காப்பி அடிச்சத நான் பார்த்தேன் ஸார்.
கல்லூரி முதல்வர்: என்னம்மா வைஷ்ணவி, ப்ரொஃபெஸர் சுதா சொல்றது உண்மையா?
வைஷ்ணவி: இல்ல ஸார். மேடம் என்ன தப்பா நினைச்சுடாங்க. நான் காப்பி அடிக்கல ஸார்.
கல்லூரி முதல்வர்: வைஷ்ணவி, உண்மையை சொல்லுமா. உண்மையை சொன்னா சின்ன தண்டனையா இருக்கும்.
வைஷ்ணவி: இல்ல ஸார். நான் காப்பி அடிக்கல ஸார்.
கல்லூரி முதல்வர்: சுதா மேடம், வைஷ்ணவி காப்பி அடிச்சத நீங்க பார்த்தீங்களா?
ப்ரொஃபெஸர் சுதா: பின்னாடி இருந்து பார்த்தேன் ஸார். கைல ஒரு பேப்பேர் பிட் வச்சிருந்தாள்.
வைஷ்ணவி மெல்ல நிம்மதி அடைந்தாள். பேப்பேர் பிட் எங்க இருக்குனு ப்ரொஃபெஸர் சுதா-க்கு தெரியாது. அதனால கண்டுபிக்க முடியாதுன்னு நினைத்தாள்.
கல்லூரி முதல்வர்: வைஷ்ணவி, நான் உன்னை சோதனை செய்ய விரும்பல. நீயாகவே அந்த பேப்பேர் பிட்-ஐ கொடுத்திரு.
வைஷ்ணவி: ஸார், என்கிட்ட எந்த பேப்பேர் பிட்டும் இல்ல. நீங்க வேணும்னா என்னை செக் பண்ணிக்கோங்க.
ப்ரொஃபெஸர் சுதா: வைஷ்ணவி, உனக்கு இது கடைசி வார்னிங். நீயா அந்த பேப்பேர் பிட்-ஐ கொடுத்திரு.
வைஷ்ணவி: சாரி மேடம், என்கிட்ட எதுவும் இல்ல.
கல்லூரி முதல்வர்: சுதா மேடம், நீங்க இன்னொரு மேடம்-ஐ கூப்பிட்டு இந்த பொண்ண செக் பண்ண சொலுங்க. பேப்பேர் பிட் இருந்தா இந்த பொண்ணு மேல சீரியஸ் ஆக்ஸன் எடுப்போம். இல்லைனா உங்க பணி நிரந்தரம் இன்னும் லேட் ஆகும்.
ப்ரொஃபெஸர் சுதா: இன்னொரு மேடம் வேணாம் ஸார். உங்க கண் முன்னாடி அந்த பேப்பேர் பிட்-ஐ எடுக்கிறேன்.
சுதா வைஷ்ணவியின் அருகில் வந்து அவளுடைய ஜடையை பிடித்தாள். வைஷ்ணவியின் மனத்தில் ஒரு பயம் வந்தது.
வைஷ்ணவியின் ஜடையின் கீழ் உள்ள ரப்பர் பாண்டைஅவிழ்த்தாள். வைஷ்ணவியின் ஜடையில் இருந்து பேப்பேர் பிட் கீழே விழுந்தது.
கல்லூரி முதல்வர் அதிர்ச்சியுடன் வைஷ்ணவி-யை பார்த்தார். ப்ரொஃபெஸர் சுதா வைஷ்ணவியின் கன்னத்தில் ஒரு அரை விட்டாள்
கல்லூரி முதல்வர்: வைஷ்ணவி, நீ ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட. உனக்கு பெரிய தண்டனை உண்டு.
சுதா: எல்லா பொண்ணுங்களுக்கும் இவ்ளோ நீளமா தலைமுடி இருக்காது. ஆனா நீ இப்படி உன்னோட ஜடையை பிட் அடிக்கிறதுக்கு யூஸ் பண்ற. எனக்கு இருக்கிற கோவத்துக்கு ஒரு கத்தரிகோல் எடுத்து உன்னோட ஜடையை வெட்டி எடுத்திருப்பேன், இல்லைனா உனக்கு மொட்டை அடிச்சிருப்பேன். காலேஜ்-ங்கிரதால விடுரேன்.
கல்லூரி முதல்வர்: மேடம், நீங்க இந்த பொண்ணோட பேரெண்ட்ஸ் கூப்பிடுங்க. என்ன செய்யலாம்னு கேப்போம்.
சுதா: இந்த ஜடையை வச்சு தான இவ பிட் அடிச்சா. பேசாம இவ தலைமுடியை கட் பண்ணிரலாம் ஸார். முடியை ஒட்ட வெட்டி விட்டாதான் இவளுக்கு அறிவு வரும்.
இதை கேட்டவுடன் பயத்தில் வைஷ்ணவி தன்னுடைய ஜடையை இருக பிடித்துக் கொண்டாள். தண்டனையாக தன்னுடைய முடியை வெட்டி விடுவார்களோ என பயந்தாள். தலைமுடி இல்லாமல் தன்னை நினைத்துப் பார்க்கும் போது அழுகை பீறிட்டு வந்தது.
இவை அனைத்தையும் ரகு ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருந்தான். வைஷ்ணவி அழுவதை ரகுவால் புரிந்து கொள்ள முடிந்தது. ப்ரொஃபெஸர் சுதா மீது ஆத்திரம் வந்தது. ப்ரொஃபெஸர் சுதாவின் முடியை வெட்ட வேண்டும் என்று மனதில் சபதம் எடுத்தான்.
வைஷ்ணவி ஜடையில் வைத்து பிட் அடித்ததை கல்லூரி நிர்வாகம் அவளது பெற்றோரிடம் கூறியது. மேலும் மூன்று ஆண்டுகள் வைஷ்ணவி தேர்வு எழுத முடியாமல் தடை விதித்தது. ப்ரொஃபெஸர் சுதாவிற்கு பணி நிரந்தரம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.
அன்று மாலை வைஷ்ணவியின் வீட்டில் அழுது கொண்டு இருந்தாள். வைஷ்ணவியின் அம்மா அவளை நன்றாக அடித்து இருந்தாள். அப்போது ரகு அங்கு வந்தான். ரகுவும் வைஷ்ணவியும் குடும்ப நண்பர்கள். கல்லூரி படிப்பு முடிந்ததும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும் எண்ணம் அவர்களுடைய பெற்றோர்க்கு இருந்தது. அதனால் ரகு வைஷ்ணவியின் வீட்டிற்கு வருவதை பெற்றோர்கள் கண்டுகொள்வதில்லை.
வைஷ்ணவியின் அம்மா: வா ரகு. வைஷ்ணவி என்ன பண்ணியிருக்கா பார்த்தியா?
ரகு: விடுங்க அத்தை. தெரியாம பண்ணிட்டா. இதை பெரிசு படுத்தாதிங்க.
வைஷ்ணவியின் அம்மா: இல்லப்பா... இவளால இந்த குடும்ப மானமே போச்சு.
ரகு: இனிமேல் வைஷ்ணவி இப்படி பண்ணமாட்டாள். அதுக்கு நான் பொறுப்பு.
வைஷ்ணவியின் அம்மா: இந்த வருஷம் படிப்பு முடிஞ்சதும் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணலாம்-னு நினச்சேன். இந்த பாவி அதை கெடுத்துட்டாள். இவ மறுபடி மூணு வருஷத்துக்கு எக்ஸாம் எழுதமுடியாது. ரொம்ப கஸ்டமா இருக்கு பா. இவளை நினைச்சா எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வருதுப்பா.
வைஷ்ணவி: அம்மா, நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடுமா
வைஷ்ணவியின் அம்மா: எல்லாத்துக்கும் காரணம் உன்னோட முடி நீளமா இருக்கிறது தான். நாளைக்கு உன்னோட முடியை மொத்தமா வெட்டி விடனும், அப்போதான் அடுத்து எக்ஸாம் எழுதுற வரைக்கும் நீ ஒழுங்கா இருப்ப.
வைஷ்ணவி: பிலீஸ் மா. நான் ஒழுங்கா இருப்பேன். என்னோட முடியை மட்டும் வெட்டிடாத.
ரகு: அத்தை, இப்போ வைஷ்ணவியோட முடியை வெட்றதால, எதுவும் மாறப் போறது இல்ல. நீங்க ரொம்ப கோவப்படாதீங்க. நான் என்னோட அப்பா அம்மாகிட்ட பேசுறேன். என்னோட எக்ஸாம் முடிஞ்சதும் கொஞ்சநாள்-ல கல்யாணம் வச்சுக்கலாம்.
வைஷ்ணவியின் அம்மா: அதுக்கு இல்லப்பா. இவ காலேஜ்-ல இவங்க ப்ரொஃபெஸர், வைஷ்ணவி பிட் அடிக்கிறதுக்காக தான் இவ்ளோ நீளமா ஜடையை வளர்த்து வச்சிருக்கா-னு சொல்லும் போது ரொம்ப அவமானமா போச்சு. அது மட்டுமில்ல, இந்த ஜடைக்குள்ள பிட் வச்சுதான் இத்தன எக்ஸாம்-ல பாஸ் பண்ணியிருப்பானு சொல்றாங்க. இவ்ளோ நாளா என்னோட பொண்ணுக்கு அழகான, நீளமான தலைமுடி இருக்குனு எனக்கு பெருமையா இருந்துச்சு. ஆனா, இப்போ எனக்கு அவளோட முடியை பார்த்தாலே எரிச்சலா இருக்கு. பேசாம பக்கத்துல இருக்கிற கோவில்ல அவளுக்கு மொட்டை அடிச்சு விட்றலாம்-னு தோனுது.
வைஷ்ணவி: அம்மா, எனக்கு மொட்டை அடிக்கணும்-னு மட்டும் சொல்லாத. வேற என்ன வேணும்னாலும் சொல்லு செய்யிறேன். (வைஷ்ணவி: அழுது கொண்டே சொன்னாள்)
ரகு: ஆமா அத்தை. வைஷ்ணவி பாவம். ஏற்கனவே மூணு வருஷம் அவளை எக்ஸாம் எழுத கூடாதுனு சொல்லிட்டாங்க. நாமளும் அவளை கஷ்டப்படுத்தக்கூடாது.
வைஷ்ணவியின் அம்மா: சரி மொட்டை அடிக்க வேண்டாம். ஆனால் கொஞ்ச நாளைக்கு உனக்கு இவ்ளோ நீளமான முடி வேண்டாம். உன்னோட ஜடையை பார்க்கும்போதெல்லாம் உன்னோட காலேஜ்-ல நடந்த அவமானம்தான் ஞாபகம் வருது. ரகுவுக்கு எக்ஸாம் முடிச்சத்தும் நீயும் ரகுவும்சேர்ந்து முடிவு பண்ணி ஏதாவது ஒரு பார்லர்-ல போய் உன்னோட முடியை வெட்டிக்கணும். மறுபடியும் நீ எக்ஸாம் எழுதி முடிச்சதும் முடியை வளர்த்துக்கோ. இதுல எந்த மாற்றமும் இல்ல.
வைஷ்ணவியின் அம்மா கோவமாக தன் முடிவை சொல்லி விட்டு அங்கு இருந்து சென்றாள். வைஷ்ணவியும் ரகுவும் மாடியில் உள்ள அறைக்கு சென்றனர்.வைஷ்ணவி ரகுவின் தோளில் சாய்ந்து கொண்டு அழுதாள். ரகுவும் சோகமாக இருந்தான். வைஷ்ணவியின் கூந்தலை மெல்ல கோதிவிட்டான்.
ரகுவிற்கு வைஷ்ணவியின் கூந்தல் ரொம்ப பிடிக்கும். வைஷ்ணவியின் ஜடையை அவிழ்த்துவிட்டு விளையாடுவான். மறுபடியும் அவளுக்கு கொண்டை போட்டு விட்டு அவளது முடியை நுகர்ந்து பார்ப்பான். மீண்டும் அவளது கொண்டையை அவிழ்த்து விட்டு ஜடை பின்னி விடுவான். பின்னிய ஜடையை மொத்தமாக கையில் எடுத்து முத்தம் கொடுப்பான். இவை அனைத்தையும் வைஷ்ணவி சிரித்துக் கொண்டே ரசிப்பாள்.
வைஷ்ணவி: என்னை மன்னிச்சிரு ரகு. நான் பிட் அடிச்சது இவ்ளோ சீரியஸ் ஆகும்னு நினைக்கல.
ரகு: இல்ல வைஷூ.. காலேஜ்-ல இந்த மாதிரி பிட் அடிக்கிறது ரொம்ப சின்ன விஷயம். ஆனா அந்த ப்ரொஃபெஸர் சுதா இதை ரொம்ப பெரிய விஷயமா மாத்திட்டா.
வைஷ்ணவி: அவளை விடு ரகு. இப்போ என்ன பண்றது. அம்மா என்னோட முடியை வெட்ட சொல்ராங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.
ரகு: எனக்கும் கஷ்டமாதான் இருக்கு. ஆனா அத்தைய எப்படி சமாதானப்படுத்துறது-னு எனக்கு தெரியல. நாம பார்லர் போய் கொஞ்சமா மட்டும் முடியை வெட்டி அத்தையை சமாதானப்படுத்தலாம்.
வைஷ்ணவி: எனக்கு பயமா இருக்கு ரகு. பார்லர் போனா எப்படியும் ஒரு அடிக்கு மேல என்னோட முடியை வெட்டி விடுவாங்க. அப்புறம் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.
ரகு: கவலைப்படாத வைஷூ. நான் உன் கூட தான் இருப்பேன். உன்னோட முடியை ரொம்ப வெட்டாம பார்த்துக்குறேன்.
வைஷ்ணவி: இல்ல ரகு எனக்கு பயமா இருக்கு. நீயே என்னோட முடியை கட் பண்ணி விடுறியா?
ரகு: சரி வைஷூ. நானே உனக்கு முடி வெட்டி விடுறேன். ஆனா யார்கிட்டயும் சொல்லாத. அத்தை கேட்டால் பார்லர்-ல வெட்டினோம்-னு சொல்லிடு. எனக்கு எக்ஸாம் முடிஞ்சதும் எங்க வீட்ல வைச்சு முடியை கட் பண்ணி விடுறேன். ஆனா இவ்ளோ பிரச்சனைக்கும் காரணமான அந்த ப்ரொஃபெஸர் சுதாவை சும்மா விடக்கூடாது.
வைஷ்ணவி: என்ன பண்ண போற ரகு?
ரகு: எப்போ அவ உன்னோட முடியில கைய வச்சாலோ அப்போவே அவளோட முடியை வெட்டணும்னு நினைச்சேன். அவளுக்கும் முடி நீளமா இருந்தாலும், உன்னோட முடி மாதிரி நீளமா இல்லைனு அவளுக்கு உன்மேல பொறாமை. அதனால தான் இன்னைக்கு அவ உன்னோட முடியை ஒட்ட வெட்டனும், இல்லைனா மொட்டை அடிக்கணும்னு சொன்னாள். அவளோட வார்த்தைகள் என்னை ரொம்ப வெறி ஏத்திறுச்சு. எவ்ளோ திமிரு, பொறாமை இருந்தா, அவ உன்னோட முடியை வெட்டனும்னு நினைச்சிருப்பா. அவளோட திமிரு குறையனும்னா அவளுக்கு மொட்டை அடிச்சு, வெளியவே தலை காட்ட முடியாதமாதிரி பண்ணனும்.
வைஷ்ணவி:கரெக்ட் ரகு. என்னோட முடி மேல பொறாமை பட்ட அந்த சுதாவோட முடியை வெட்டனும். அவளுக்கு மொட்டை அடிக்கிற சந்தர்ப்பம் வந்தால், என் கையாலே உனக்கு கத்தி எடுத்து தரேன். சந்தோசமா அவ தலையை மொட்டை அடிச்சு விடு.
எக்ஸாம் முடிந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. ரகு ஒரு வாரமாக ப்ரொஃபெஸர் சுதாவை பின் தொடர்ந்து சென்று கொண்டு இருந்தான்.சுதா தன்னை அடையாளம் கண்டு கொள்ளாதவாறு இடைவெளி விட்டு பின் தொடர்ந்தான்.