Sunday 24 March 2019

மொட்டை அடிச்சுக்கோ

March 24, 2019 0
மொட்டை அடிச்சுக்கோ
ஏங்க நான் என் முடியை வெட்டிக்கவா?
ஓகே, வெட்டிக்கோ...
வெட்டினா மறுபடியும் இவ்ளோ நீளமா வளர ரொம்ப நாள் ஆகும்ல..
சரி வெட்டிக்காத..
ஆனால் இப்ப முடியை கம்மிய வச்சிகிறது தான் பேஷன்...


ஓகே.. வெட்டிக்கோ..

வெட்டிகிட்டால் என்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்ணுவாங்க...
சரி... வெட்டிக்காதே...
வெட்டிக்கிட்டா என் சின்ன முகத்துக்கு நல்லா இருக்கும் நு எங்கக்கா சொன்னா....
சலூன்ல கேவலமா வெட்டிட்டா என்ன செய்யிறது...
சரி வெட்டிக்காத..
பரவாயில்லை... முடி வெட்டிக்கிறது தான் சரின்னு நான் நினைக்கிறேன்..
ம்ம்ம்.. வெட்டிக்கோ...
முடி வெட்டுனதுக்கு அப்புறம் நல்லா இல்லைன்னா நீங்க தான் பொறுப்பு..
சரி வெட்டிக்காத..
முடி கம்மியா இருந்தா பராமரிக்க ரொம்ப ஈஸியா இருக்கும்...
ம்ம்ம்.. வெட்டிக்கோ...
அசிங்கமா போயிடுமோன்னு பயமாவும் இருக்குங்க...



சரி வெட்டிக்காத..
என்ன வந்தாலும் சரி நான் முடி வெட்டிக்கிறதா முடிவு பண்ணிட்டேன்...
ம்ம்ம் வெட்டிக்கோ...
உங்களுக்கு பிடிக்குமா.. இல்லையான்னு தெரியல...
சரி வெட்டிக்காத..
எனக்கு ஒரே குழப்பமா இருக்கு... நீங்க ஒரு ஐடியா சொல்லுங்க...
மொட்டை அடிச்சுக்கோ..