Saturday 21 March 2020

சத்யாவின் நீளமான கூந்தல்

March 21, 2020 0

இது என்னோட பிரண்டுக்கு நடந்த உண்மைச் சம்பவம். என்னோட பிரெண்ட் விக்ரம் மூன்று வருடத்திற்கு முன்பு பெங்களூரில் ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான். அவன் டீமில் இரண்டு பெண்களும் ஒரு பையனும் இருந்தனர். அதில் ஒரு பெண் இடுப்பை தாண்டிய முடியுடன் மிக அழகாக இருந்தாள். விக்ரம் இருக்கு அவளை மிகவும் பிடித்தது. அதனால் பெண்ணுடன் விக்ரம் அதிக நேரம் செலவழித்தான். அந்த பெண்ணுடைய பெயர் சத்தியா. இருவரும் சில நாள்களில் நன்றாக பழகினர்.

சத்யா கடந்த ஐந்து வருடங்களாக அவளுடைய முடியை பராமரிப்பு செய்து வருகிறாள். சத்யா வழக்கமாக எப்போதும் நீண்ட ஜடையுடன் வருவாள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் தலைக்கு குளித்து அழகாக விரித்து விட்டு பிரீ ஹேர் ஸ்டைலில் வருவாள். அவள் அப்படி வரும் போது சத்யா அழகாக இருப்பாள். விக்ரமும் அதை பார்த்து ரசிப்பான். ஒரு நாள் அவளது நீண்ட முடியை சில அங்குலங்கள் ட்ரிம் செய்து வந்து இருந்தாள். அதுவும் ரொம்பவே அழகாக இருந்தது.

விக்ரம் சத்யாவை காதலிப்பதை விட அவன் ஆசை சத்யாவின் முடியின் மேல் காதலாக இருந்தான். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். விக்ரமும் சத்யாவும் தங்களது குடும்ப விஷயங்களையும் பரிமாறிக்கொண்டனர். ஆனால் அடுத்த மாதங்களில் சத்யா வேறு அலுவலகத்திற்கு சென்று விட்டாள். விக்ரம் அவளை பிரிந்ததால் மிகவும் வருத்தப்பட்டான்.

ஆனால் இருவரும் வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை போனில் பேசிக் கொண்டு இருந்தனர். அப்படியே அடுத்த ஆறு மாதங்கள் செல்ல விக்ரம் சத்யாவை சந்திக்க வேண்டும் என்று விரும்பினான். அதை விக்ரம் சத்யாவும் அவளது ஆபிஸிற்கு மதிய உணவு வேளையில் வர சொன்னாள். அதன் பின் விக்ரம் சத்யா சொன்ன நேரத்திற்கு அவளது ஆபிஸிற்கு சென்று விட்டு அவளுக்கு கால் செய்தான். சத்யா ரிஷப்ஷனில் வெய்ட் செய்ய சொல்லிவிட்டு இன்னும் பத்து நிமிடங்களில் வந்து விடுவேன் என்று சொல்ல விக்ரம் சத்யாவுக்காக காத்து இருந்தான்.

ஐந்து நிமிடங்கள் கழித்து சத்யா வெளியில் வந்தாள். சத்யாவின் நீளமான முடி இப்போது அவளது நாடு முதுகிற்கு மேலே நின்றுவிட்டது. அலைபாயும் அந்த கூந்தலை தான் விக்ரம் முதலில் பார்த்தான். விக்ரம் தன் திருமண அழைப்பிதழ் சத்யாவிற்கு கொடுக்க, அவளும் அதை சந்தோஷமாக வாங்கி பார்த்தாள். அதன் பின் இருவரும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டு இருக்க சத்யா விக்ரமை லஞ்ச சாப்பிட அழைக்க, இருவரும் புட் கோர்ட் நோக்கி சென்றனர்.


 விக்ரமும் சத்யாவும் தங்களுக்கு தேவையான உணவுகளை ஆர்டர் செய்து வாங்கிக்கொண்டு காலியான டேபிளில் அமர்ந்தனர். விக்ரம் உன்னுடைய கல்யாணத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள். அப்புறம் எப்படி இருக்கு உன்னுடைய லைஃப் அண்ட் நம்முடைய ஓல்ட் ஆபீஸ். எல்லாம் நல்லா போய்கிட்டு இருக்கு சத்யா. அப்புறம் நீ என்ன உன்னுடைய நீளமான முடியை கட் செய்து விட்டே. ஆமா விக்ரம் என் ஆளு இந்த மூடிய பராமரிக்க முடியல. அதுவும் இல்லாமல் முடி உதிர்வு அதிகமாக இருந்தது அதனால கட் பண்ணிவிட்டேன். ஆமா எப்போ முடிய கட் பண்ண

லாஸ்ட் வீக் தான் பண்ணேன். நான் நினைச்சது இன்னமும் ஷார்ட் ஹேர் ஸ்டைல் வைக்கணும் நினைச்சேன். ஆனால் ஆறு வருஷம் கழிச்சு கட் பண்ணுவதால் இந்த அளவு இருந்தா போதும் என்று விட்டுட்டேன். கட் செய்யும் போதும் கொஞ்சம் பதட்டமாக தான் இருந்தது. அதனால் நடு முதுகு வரை கட் செய்ய சொன்னேன். ஆனால் இந்த மாதம் இன்னும் ஷார்ட் ஹேர் வைக்கணும் என்று பிளான் பண்ணி உள்ளேன்.

 விக்ரம் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தான். என்ன சத்யா உன்னுடைய நீளமான முடிய கட் பண்ணும் போது உனக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்லையா

வருத்தமாகத்தான் இருக்கு விக்ரம். ஆனால் என்ன செய்வது நான் ஆபீஸில் 12 மணி நேரம் வேலை செய்துவிட்டு, இந்த நீளமான முடியை பராமரிப்பது ரொம்பவும் சிரமமாக இருக்கிறது. அதனால் இன்னும் கொஞ்சம் முடியைக் குறைத்து வெட்டிக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். அதன்பின் இருவரும் பல விஷயங்களை பேசிக்கொண்டு இருந்தனர் அதன்பின் விக்ரம் புறப்பட்டுச் சென்றான்.

 அடுத்த மாதம் விக்ரம் ஒரு நாளில் தன் கல்யாணத்திற்கு தேவையான பொருட்களை பர்ச்சேஸ் செய்துகொண்டு இருந்தான். அப்போது ஒரு பெண் அவன் பின்புறம் இருந்து அவனைக் கூப்பிட்டாள். விக்ரம் யார் என்று பார்க்க அது சத்யா தான். விக்ரம் அவளைப் பார்த்ததும் சந்தோசமும், ஆச்சர்யமும் அடைந்தான். ஏன் என்றால் சத்யாவின் முடி அவளின் தோல்பட்டை வரை மட்டுமே இருந்தது.
                  எப்படி இருக்க விக்ரம்... உன்னுடைய கல்யாண வேலைகள் எப்படி போயிட்டு இருக்கு..

நல்லாவே போய்கிட்டு இருக்கு... அது விஷயமாகத்தான் சில பொருட்கள் வாங்க வந்தேன். பைனலில் நீ செஞ்சிட்ட இல்ல..

சத்யா சிரித்துக்கொண்டே என்ன சொல்ற விக்ரம் எனக்கு புரியல....

உன்னுடைய ஹேர் ஸ்டைல் பத்தி சொன்னேன்.. இன்னும் ஷார்ட் ஹேர் வைக்கிற மாதிரி ஐடியா இருக்கா..

நோ வே விக்ரம்.. இந்த லெவல் மெயின்டெயின் பண்ணலாம்னு... என்னுடைய நியூ லுக் எப்படி இருக்கு...

இதுவும் நல்லாவே இருக்கு... ஆனா எனக்கு ரொம்ப பிடிச்சது உன்னுடைய நீளமான கூந்தல் தான்... இருந்தாலும் நீ பழைய மாதிரி நீளமான முடியை கொண்டுவருவேன் நான் நம்புறேன்....

ஆமா விக்ரம்... இது ஒன்னும் நான் விருப்பப்பட்டு வெட்டவில்லை.. நீ சொன்னது மறுபடியும் நான் ட்ரை பண்ணுவேன்
ஏன்னா என்னுடைய நீளமான முடி எனக்கும் ரொம்ப பிடிக்கும்... எங்கேயாவது நீளமான முடி உள்ள பெண்களைப் பார்த்தால் எனக்கும் ஆசையாக இருக்கும்.. என்ன பண்ணுவது அதான் கட் பண்ணி விட்டேனே.. ஓகே விக்ரம்... நாம மறுபடியும் உன்னுடைய கல்யாணத்தில் சந்திக்கலாம்...

இருவரும் அங்கிருந்து சென்றனர்

அதன்பின் சத்யா விக்ரமை அவனுடைய திருமணத்தில் தான் சந்தித்தாள். அப்போது அவள் தோள்பட்டை வரையான முடியுடன் தான் இருந்தாள். விக்ரமம் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.... திருமணத்திற்குப் பின் ஆறு மாதங்கள் கடந்த பின் விக்ரமம் அவன் மனைவியும் ஒரு இடத்தில் சத்யாவை பார்த்தனர். அப்போது சத்யாவின் முடி அவளது இடுப்பை தாண்டி வளர்ந்து இருந்தது. ஒரு சிறு புன்னகையுடன் விக்ரம் எனக்கு அது பிடித்திருக்கிறது என்று சத்யாவுக்கு உணர்த்தினான். அதன்பின் விக்ரம் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டு இரண்டு வருடங்கள் கழித்துதான் சென்னை வந்தான்

விக்ரம் சென்னை அலுவலகத்திற்கு வரும்போது சத்யா விக்ரமின் அலுவலகத்தில் ஜாயின் பண்ணி இருந்தாள். சத்யாவிற்கு திருமணமும் முடிந்து விட்டு இருந்தது. விக்ரம் சத்யாவை இரண்டு வருடங்கள் கழித்துப் பார்க்கும்போது சத்யா விக்ரமிற்கு பிடித்தது போல நீளமான முடியுடன் இருந்தாள். ஆனால் இந்த முறை சத்யாவின் முடி அவளது முட்டிங்கால் தாண்டியும் கீழே வளர்ந்து இருந்தது.

விக்ரம் சத்யாவின் முன் வந்து நின்று அவளை கேள்வியாக பார்க்க.. சத்யா விக்ரமின் கண்களை பார்த்துக்கொண்டே பின்பக்கம் போட்டு இருந்த ஜடையை எடுத்து முன்பக்கம் அவளின் மார்பின் மேல் போட்டாள். அவள் சடையின் நுனி அவள் தொடையை தாண்டியும் கீழே இருந்தது.

Beautiful new trend under cut hair style

March 21, 2020 0

Beautiful new trend under cut hair style

                                                


Mallu Actress Honey Rose Long hair trim

March 21, 2020 0
Mallu Actress Honey Rose Long hair trim

Photo credit: Actress hair cut FB page

Perolafaria actress Shave her head 2020 for new character

March 21, 2020 0

Perolafaria actress Shave her head 2020 for new character
Young girl Head shaving Photos

March 21, 2020 0


Young girl Head shaving Photos 
Goregeous Actress Meena Red sari Hair Style

March 21, 2020 0

Goregeous Actress Meena Red sari Hair Style


Tamil New reader Panimalar beautiful look in Short hair style

March 21, 2020 0
Tamil New reader Panimalar beautiful look in Short hair style