பர்ஸில் இருந்த பணத்தை பார்த்த அபிதா தான் எவ்வளவு பெரிய தப்பு செய்து விட்டோம் என்று நினைத்துப் பார்த்தாள். ஜெகன் அவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவனை எல்லோர் முன்பும் அடித்துக் கேவலமாகப் பேசி அவமானப் படுத்தியதை எண்ணி வருந்தினாள்.
அபிதா, அவன் தான் அன்னிக்கு அடி வாங்குனதுல இருந்தே க்ளாஸ் வரலையே?
உடனே அவளுடன் போனான் ஜெகன். இருவரும் நன்றாகச் சாப்பிட்டனர். ஜெகன் பசியோடு இருக்கிறான் என்று தெரிந்து கொண்டு அவனுக்கு நிறைய வாங்கி தந்தாள் அபிதா. பின் டாக்டரைப் பார்த்து விட்டுக் காலேஜ் வந்தனர். காலேஜில் அபிதா சொன்னதை போலவே நடந்ததை சொல்லி எல்லோர் முன்பும் ஜெகனிடம் மன்னிப்பு கேட்டாள். அவன் தன் பணத்தை திருடவில்லை என்றும், தான் தவறாக நினைத்து விட்டதையும் கூறி அவனை யாரும் தவறாக நினைக்க வேண்டாம் என்றும் கூறினாள்.

























































