Monday, 5 May 2025

என் அத்தை விஜயலக்ஷ்மி - ஒன்பதாம் பாகம்

May 05, 2025 1
“அதெல்லாம் இருக்கட்டும். இப்போ நீ மொட்டை போட ரெடியா?”

“எனக்கென்ன டா, நான் எப்போவுமே ரெடிதான். எனக்கு மொட்டை போட நீ ரெடியா?”

“உனக்கு மொட்டை போட என்ன புதுசா எதுவும் வேணுமா? சித்திக்கும், அத்தைக்கும் மொட்டை அடிச்ச அதே கத்திதான்”

“சரி வா, வந்து எனக்கு மொட்டை போட்டு விடு”


“ஆனா அம்மா, உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்”

“என்ன ராம்?”

“நான் Ladies saloon Open பண்ணும் போது, என் கடைக்கு வந்து ஒரே ஒரு தடவை உன்னோட முடியை கொஞ்சம் என் கையாள ட்ரிம் பண்ணிக்கோன்னு சொன்னேன். நீ முடியாதுன்னு சொல்லிட்ட.. இப்போ பாரு என்னோட கையால தான் உனக்கு மொட்டையே அடிக்கப் போறேன்”

“அடப் பைத்தியக்காரா… உன்னோட கையாள மொட்டை அடிச்சுக்கிறது எனக்கு சந்தோஷம் தான்டா”

“என்னம்மா சொல்ற”



“டேய், நீ உன்னோட வந்து என்னோட முடியை ட்ரிம் பண்ணிக்க சொல்லும் போது நான் எதுக்கு வேணாம்ன்னு சொன்னேன்னா, அப்போவே எனக்கு மொட்டை அடிக்க வேண்டுதல் இருந்தது டா. அதுனால தான் மொட்டை அடிக்கிறதுக்கு முன்னாடி முடியை வெட்ட வேணாம்னு சொன்னேன்”

“அப்போவே வேண்டுதல் இருந்ததா.. சொல்லவே இல்ல”

“என்னோட வேண்டுதலே நீ நல்லபடியா கடையை திறந்து முன்னுக்கு வரணும்ன்னு தான்”

“அப்போ இந்த மொட்டை?”

“ராம், உனக்காக வேண்டிக்கிட்டு தான் நான் என்னோட தலை முடியை கொடுக்கிறேன்.”

“சாரிம்மா.. நான் தெரியாம உன்னை கிண்டல் பண்ணிட்டேன்”

“பரவாயில்ல ராம். ஆனா கடவுளோட செயலை பார்த்தியா. உனக்காக மொட்டை போட்டு என்னோட தலை முடியை காணிக்கையா கொடுக்கிறேன்னு வேண்டிக்கிட்டேன். இப்போ உன்னோட கையாளயே எனக்கு மொட்டை அடிச்சு என்னோட தலை முடியை காணிக்கையா கொடுக்கிற மாதிரி அமைஞ்சு இருக்கு”


“சரிம்மா.. இப்போ மொட்டை அடிக்கலாமா?”

“சரி டா. வா. நீ ஆசைப்பட்ட மாதிரி என்னோட முடியை உன் கையில கொடுக்கிறேன். ஆனா ட்ரிம் பண்ண இல்ல. மொட்டை அடிக்க”

“அம்மா, அப்பிடியே இருந்தா எப்படி, ஜடையை அவிழ்த்து விடு”

“ராம், இது உனக்காக வேண்டிக்கிட்டு கொடுக்கிற தலைமுடி. நீயே என்னோட ஜடையை அவிழ்த்து விட்டு மொட்டை போட்டு விடுடா”

“சரிம்மா”

Bathroom-ல் அம்மா உட்கார ஒரு சிறிய Stool எடுத்து வந்து போட்டேன். என் அம்மா வந்து உட்கார்ந்து விட்டு அவள் ஜடையை எடுத்து பின்னால் போட்டாள். என் அம்மாவை நினைத்து எனக்கு பெருமையாக இருந்தது. எனக்காக வேண்டிக் கொண்டு அவளுடைய தலை முடியை காணிக்கையாக கொடுக்கிறாள். நான் அவள் ஜடையை என் கையில் எடுத்து தடவிப் பார்த்தேன். என் அம்மாவின் அடர்த்தியான முடியை என் கையால் எடுத்து விளையாட எனக்கு நீண்ட நாட்களாக ஆசை உள்ளது. இப்போது என் மனதின் ஆசை நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

அம்மாவின் பின்னால் நின்று கொண்டு நான் அவளுடைய ஜடையை அவிழ்த்து விட ஆரம்பித்தேன். அம்மாவின் அடர்த்தியான முடி அவள் ஜடையை அவிழ்க்க ஆரம்பித்ததும் வெளிய வர ஆரம்பித்தது.

நான் அவளுடைய ஜடையை அவிழ்த்துக் கொண்டிருக்க, அம்மா அவள் முடியில் மாட்டியிருந்த க்லிப்பை அவிழ்த்தாள். நான் அவள் ஜடைப் பின்னல்களை முழுவதுமாக பிரித்த பின், அவள் முடியை மொத்தமாக விரித்து விட்டேன். என் அம்மாவின் விரித்து விட்ட தலைமுடியை அப்போது தான் முதல் முறையாக தடவிப் பார்க்கிறேன்.

என் அக்கா ராஜலக்ஷ்மிக்கு எப்படி இவ்வளவு, நீளமான அடர்த்தியான தலைமுடி வளர்கிறது என என் அம்மாவின் தலைமுடியை பார்த்தாலே புரியும். என் அம்மாவின் தலைமுடியும், அக்காவின் தலைமுடியும் ஒரு மாதிரி தான் இருக்கிறது. நான் அக்காவின் தலை முடியை தொட்டு, அனுபவித்தது எல்லாம் என் அம்மாவிற்கு தெரியாது. அம்மா முடியை என்னிடம் கொடுத்து விட்டு அமைதியாக இருந்தாள்.

“என்னம்மா, எதுவும் பேசாம அமைதியா இருக்க?”

“என்ன சொல்ல ராம். நீதான் அம்மாவோட முடியை நல்லா தடவிப் பார்த்து ரசிச்சுட்டு இருக்கியே”

“அம்மா, உங்க முடி சூப்பரா இருக்கும்மா”


“தெரியும் ராம். உனக்கு அம்மாவோட தலைமுடி பிடிச்சிருக்கா?”

“ரொம்ப பிடிச்சிருக்கும்மா”

“அதுனால தான் எதுவுமே சொல்லலை.. நீ பொறுமையா உனக்கு பிடிச்ச மாதிரி என்னோட முடியை தடவிப் பார்த்துக்கோ. அப்புறமா மொட்டை அடிச்சு விடு. எனக்கு ஒண்ணும் அவசரம் இல்ல”

“சரிம்மா”

“ஏன்னா, உனக்கு என்னோட முடி பிடிச்சிருக்குன்னு சொல்ற. மொட்டை போட்டதுக்கு அப்புறம் உன்னோட என்னோட முடியை இது மாதிரி தடவிப் பார்க்க முடியாதுல”

“அதுவும் சரிதான்”

“ராம், நீ விஜி, செல்வி ரெண்டு பேருக்கும் மொட்டை அடிச்சு விட்டேல.. யாருக்கு மொட்டை அடிக்க பிடிச்சு இருந்தது”

“ஏன்மா?”

“சும்மா சொல்லு ராம்”

“எனக்கு விஜி அத்தை முடியை மொட்டை அடிக்க பிடிச்சு இருந்தது”


“எதுனால டா?”

“அத்தையோட முடி நல்ல நீளமா, அடர்த்தியா இருந்தது. அதுனால தான்”

“எனக்கும் அதுபோல நீளமான முடி இருந்தது. இப்போ அந்த அளவு நீளம் இல்ல”

“என்ன ஆச்சும்மா?”

“ஒண்ணும் இல்லடா.. வயசு ஏறிட்டே போகுதுல. நிறைய முடியை Maitain பண்ண முடியல டா”

“சரிம்மா… கொஞ்சம் திரும்பி உட்காரு”

“சரி டா”



அம்மா திரும்பி உட்கார்ந்ததும் அவள் முடியை மீண்டும் கையில் எடுத்து விளையாடிக் கொண்டே மசாஜ் செய்தேன். நான் அவளுடைய தலை முடியை எடுத்து தடவிப் பார்த்து விளையாடுவது நன்றாக இருக்கிறது என அம்மா கூறினாள். இது போல என்னுடைய அம்மாவின் முடியை நான் கியாயில் எடுத்து விளையாடியதே இல்லை. என் ஆசை தீர அவள் முடியை தடவிப் பார்த்த பின்னர் அவளுக்கு மொட்டை அடிக்க ஆரம்பிக்க நினைத்தேன். மெல்ல அவள் முடியை முன் பக்கமாக எடுத்து போட்டு இரண்டு பக்கமும் அவள் முடி இருப்பது போல பிரித்து விட்டேன்.


உச்சந்தலையில் இருந்து எல்லாப் பக்கமும் அம்மாவின் முடியை தொட்டு ரசித்து முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தேன். அம்மா அவளுடைய தலை முடியை நான் முத்தம் கொடுத்து கொஞ்சுவதை ரசித்துக் கொண்டிருந்தாள். இவ்வளவு அழகான தலை முடியை இவ்வளவு நாள் இப்படி முத்தம் கொடுத்து கொஞ்சி விளையாடாமல் விட்டது ஏன் என என்னையே திட்டிக் கொண்டேன். அம்மாவின் தலைமுடி இன்று மொட்டை அடிக்கப்பட்டாலும், மீண்டும் நன்றாக வளர்ந்ததும் இது போல என் மனதில் உள்ள ஆசை தீர அவள் முடியை கொஞ்ச வேண்டும் என தோன்றியது.

“என்ன ராம், என்னோட முடியை ஆசைதீர பிடிச்சு விளையாடியாச்சா?”

“ஆமா அம்மா. “

“அப்போ எனக்கு மொட்டை அடிக்க ஆரம்பிக்கலாமா?”

“சரிம்மா… “

“சரி, அப்போ என்னோட தலையில தண்ணி ஊத்தி, நல்லா நனைச்சுக்கோ”

“எனக்குத் தெரியும் அம்மா. இப்போதான ரெண்டு பெருக்கு மொட்டை போட்டு முடிச்சேன்”



“அது என்னமோ தெரியல ராம். இன்னும் சின்ன பையன் மாதிரி உன்கிட்ட எப்படி பண்ணனும்ன்னு சொல்லிட்டே இருக்கேன்”

“உன்னோட பார்வையில நான் இன்னும் சின்ன பையன் தான”

அம்மா அவள் தலையை குனிந்து கொள்ள, நாள் அவளுடைய தலை முடியில் மெல்ல தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தேன். அம்மாவின் அடர்த்தியான தலைமுடியை தண்ணீர் விட்டு என் விரல்கள் கொண்டு மெல்ல மசாஜ் செய்தேன். 

தண்ணீர் எடுத்து அவளுடைய தலைமுடிமீது தெளிக்க ஆரம்பித்தேன். நன்றாக தலை முடியை ஈரமாக்கிய பின் அவள் முடியை எடுத்து இரண்டு பக்கமும் கொண்டை போட்டு விட்டேன். அம்மா அவள் முடியை எடுத்து முன்னால் போட்டு தன்னுடைய நீளமான தலை முடியை கடைசியாக ஒரு முறை தடவிப் பார்த்துக் கொண்டாள். இப்போது மொட்டை அடிக்க சரியாக இருக்கும் என முடிவு செய்து என் பாக்கட்டில் இருந்து சவரக் கத்தியை எடுத்தேன். 


அதை அவள் கண் முன்னால் விரித்து ஒரு பிளேடை உள்ளே சொருகினேன். நான் சவரக் கத்தியை எடுத்து தயார் செய்வதை பார்த்த அவளுக்கு மொட்டை அடிக்கப்போகும் கத்தியை பார்த்துவிட்டு தலையை மெல்ல குனிந்து கொண்டாள். அம்மா மொட்டை அடிக்க தயாராகி, கண்களை மூடி கடவுளை வேண்டிக்கொண்டாள்.

நான் அம்மாவின் முடியை தடவிப் பார்த்துவிட்டு மொட்டை அடிக்க தயாரானேன். அவளுடைய உச்சி முடியில் இருந்து மழிக்கலாமா இல்லை நெற்றி வகிடில் வைத்து மழிக்கலாமா என யோசித்தேன். இடது கையால் அவள் தலையை பிடித்து குனிய வைத்து அவள் உச்சந் தலையில் கத்தியை வைத்து மெதுவாக மழிக்க ஆரம்பித்தேன். உச்சியில் இருந்து ஒரு கற்றை முடியை மழித்தேன்.

மொட்டை அடிக்க ஆரம்பித்ததும் அவள் தலையில் இருந்த வெள்ளைத்தோல் தெரிய ஆரம்பித்தது.கருகருவென அடர்ந்த அவளுடைய தலைமுடியை கொஞ்சம் கொஞ்சமாக மழிக்க ஆரம்பித்தேன். நிசப்தமான அந்த அறையில், சவரக்கத்தி அம்மாவின் முடியை மழிக்கும் சத்தம் மட்டுமே எதிரொலித்தது. அம்மா மீண்டும் சவரக்கத்தியின் ஸ்பரிசத்தை தன் தலைமுடியின் வேர்கால்களில் உணர ஆரம்பித்தாள்.

அவளுடைய தலைமுடியின் வேர்கால்களில் வைத்து மழிக்க, அவளுடைய முடி மெல்ல வழிந்து அவள் மடியில் விழ ஆரம்பித்தது. அடர்ந்த தலை முடியுடன் இருந்த அவளுடைய தலையில் இப்போது வெள்ளை சருமம் பெரிதாகவெளியே எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. அடர்த்தியான அவளுடைய தலைமுடி கற்றைகள் அவள் மடியில் வந்து விழுவதை அம்மா அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள். 


கருகருவென அடர்த்தியான அவளுடைய தலைமுடி இப்போது கற்றை கற்றையாக வழிந்து அவளுடைய தோள்பட்டை மேல் விழுவதை பார்க்க எனக்குள் பரவசம் அதிகரித்தது. அவளுடைய இரண்டு பக்கமும் மொட்டை அடித்து மழித்த முடியெல்லாம் இப்போது இரண்டு பக்கமும் தொங்கிக் கொண்டிருந்தது. நான் தொடர்ந்து அவளுடைய பின்னந்தலையை மழிக்க ஆரம்பித்தேன்.


அவள் தலையை பிடித்து குனிய வைத்து தொடர்ந்து மொட்டை அடித்தேன். சில நிமிடங்களில் அவளுடைய மொத்த முடியையும் மழித்த போது அவளுடைய அடர்ந்த கொண்டை அப்படியே வழிந்து தரையில் விழுந்தது. என் கையில் இருந்த சவரக்கத்தியை மடக்கி வைத்து விட்டு கீழ இருந்த அம்மாவின் தலை முடியை கையில் எடுத்தேன். கனமான, அடர்த்தியான அந்த முடியை தடவிப் பார்த்து விட்டு அருகில் இருந்த பலகை மேல் வைத்தேன்.

அம்மாவின் தலையை முழுவதுமாக மொட்டை அடித்து முடித்தேன். அவளுடைய தலை இப்போது முடியே இல்லாமல் வழுவழுவென இருந்தது.


அம்மா தன்னுடைய மொட்டைத்தலையை தடவிப் பார்த்துக் கொண்டே எழுந்தாள். தன்னுடைய தலையில் குளிர்ந்த காற்று படுவது போல இருந்தாலும், சவரக்கத்தி வைத்து முடியை மழித்து எடுத்ததால், கொஞ்சம் எரிச்சலும் சேர்ந்து இருந்தது. நான் அம்மாவிடம் அவளுடைய முடியை எடுத்து காட்டினேன். அவள் தன்னுடைய மொட்டை அடிக்கப்பட்ட முடியை கையில் வாங்கிப் பார்த்தாள். நான் அம்மாவின் மொட்டைத் தலையை நன்றாக தடவிப் பார்த்து,அவளுடைய மொட்டைத் தலையில் முத்தம் கொடுத்தேன். நான் அம்மாவின் தலையில் முத்தம் கொடுப்பேன் என அம்மா நினைக்கவேயில்லை. ஆனாலும் என்னை எதுவும் சொல்லவில்லை.


அதன் பின் அம்மா குளித்து விட்டு கோவிலுக்கு கிளம்ப தயாரானாள். நானும் குளித்து விட்டு வெளியே வர, என்னுடைய அம்மா மாலினி, சித்தி கலைசெல்வி மற்றும் அத்தை விஜயலக்ஷ்மி மூவரும் அவர்களுடைய மொட்டைத் தலையை காட்டிக் கொண்டு புது ஆடையில் சிரித்துக் கொண்டு இருந்தனர். என்னைப் பார்த்ததும் அம்மா கையில் சந்தனத்தை கொண்டு வந்து மூவரின் தலையிலும் தடவி விட சொன்னாள். வெயில் பட்டு மொட்டைத் தலையில் எரிச்சல் இல்லாமல் இருக்க அவள் சொன்ன யோசானையும் சரிதான்.


நான் சந்தனத்தை வாங்கி முதலில் சித்தியின் தலையில் தடவினேன். சித்தி அமைதியாக தலையை குனிந்து சந்தனத்தை தடவிக் கொண்டாள். அவளுக்கு அடுத்து விஜி அத்தை என் முன்னால் வந்து நின்றாள். அவளையும் குனிய வைத்து அவள் தலையில் சந்தனத்தை தடவினேன்.

விஜி அத்தை சென்றதும் என்னுடைய அம்மா வந்து நின்றாள். நான் முதலில் என் அம்மாவின் தலையை பிடித்து நன்றாக தடவிப் பார்த்தேன். அம்மாவின் தலை மொழு மொழுவென இருந்தது. அம்மாவின் மொட்டைத் தலையில் முத்தம் கொடுத்து விட்டு பின்னர் அவள் தலையிலும் சந்தனத்தை தடவினேன். எனக்காக வேண்டுதல் வைத்து அவளுடைய தலை முடியை மொட்டை அடித்துக் கொண்டதால் அம்மாவின் மொட்டைத் தலைக்கு Special முத்தம் என கூறியதும் சித்தியும், அத்தையும் சிரித்தார்கள். பின்னர் அனைவரும் கிளம்பி கோவிலுக்கு சென்றோம்.


முற்றும்.







Telugu young girl's low back length hair style

May 05, 2025 0
Telugu young girl's low back length hair style






















Telugu young girl's low back length hair style

May 05, 2025 0
Telugu young girl's low back length hair style





















Telugu young girl's low back length hair style

May 05, 2025 0
Telugu young girl's low back length hair style






















Telugu young girl's low back length hair style

May 05, 2025 0
Telugu young girl's low back length hair style