Thursday 27 October 2022

சித்ரா- முதல் பாகம்

October 27, 2022 3

சித்ரா மலையாள பொண்ணு(ஹவுஸ் வைப்) அவள் புருஷன் வெளிநாட்டில் வேலை செய்கிறான். அவன் 5 வருஷத்திற்கு ஒரு முறை மட்டும் வீட்டுக்கு வருவான். இவங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கு.  9வது படிக்கிறாள். அவளுக்கு லாங் ஹேர் என்றால் ரொம்ப பிடிக்கும்.  தன்னுடைய நீளமான முடியை ரொம்ப பொறுமையாக, அதற்கென்று நேரம் ஒதுக்கி மெயின்டைன் செய்வாள். நுனி முடியை டிரிம் கூட பண்ண மாட்டாள். அந்த அளவிற்கு நேசிப்பாள் தன்னுடைய நீளமான முடியை.

இரண்டு நாள் கழித்து சித்ராவுக்கு அவளுடைய கணவனின் அலுவலகத்தில் இருந்து ஒரு சோகமான செய்தி வந்தது. சித்ராவின் கணவன் வேலை  செய்யும் இடத்தில் ஒரு விபத்தில் அவளுடைய கணவன் இறந்துவிட்டான் என்று செய்தி வர, அதிர்ந்து போனாள் சித்ரா. 


அதிலிருந்து மீண்டு தன் கணவன் உடலை அங்கிருந்து வரை வைத்து இறுதி காரியங்களை செய்தால். சில மாதங்கள் கழிய, அப்போது தான் பிரச்சனைகள் ஒவ்வொன்றாக உருவானது.  அவர்கள் இருக்கும் வீடு வங்கியில் லோன் வாங்கி கட்டியது. அதனை சரியாக தொடர்ந்து கட்ட முடியவில்லை சித்ராவால். பின் தன் கணவன் இல்லாத ஊரில் இருக்க வேண்டாம் என்று நினைத்து எல்லாவற்றையும் விற்று விட்டு, கடனையும் அடைத்து விட்டு சென்னைக்கு தன் மகளோடு வந்துவிட்டால் சித்ரா.

சென்னையில் வீடு தேடி அலைய, ஒரு வீடும் கிடைக்கவில்லை.  கடைசியாக ஒரு வீடு கிடைக்க அந்த வீட்டில் ஒரு ஆன்ட்டி மட்டும் தான் இருந்தார்கள். அவள் பெயர் லட்சுமி ஆன்ட்டி. லட்சுமி ஒரு வித்தியாசமான வேலையை செய்து வந்தாள். தெருத்தெருவாக டூவீலரில் சென்று பெண்களின் சிக்கு முடியை வாங்கி விற்பவள். பெண்களின் சிக்கு முடியை குறைந்த அளவில் பணம் கொடுத்து வாங்கி அதை கொஞ்சம் வேலை பார்த்து நல்ல விலைக்கு விற்று வந்தாள். ஆனாலும் லட்சுமிக்கு அந்த வருமானம் போதவில்லை.

அப்போது தான் லட்சுமி பணம் கொடுக்காமல் நல்ல நீளமான முடியை எப்படியாவது ரெடி பண்ணிவிட்டால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று நினைத்தல். அந்த ஐடியாவில் தான் லட்சுமி தானே பியூட்டிஷியன் கோர்ஸ் படித்து விட்டு லேடீஸ் பார்லர் சொந்தமாக நடத்த ஆரம்பித்தாள்.

லட்சுமி தன்  பார்லருக்கு வரும் கஸ்டமர்களின் முடியை கவனித்து யாருக்கு நல்ல அடர்த்தியான, நீளமான முடி இருக்கோ அவர்களை மட்டும் நல்ல விதமாக பேசி உபசரிப்பாள். அவர்களுக்கு சந்தேகம் வராத அளவிற்கு பேசி அவர்களின் நீளமான முடியை வெட்டி, நல்ல விலைக்கு விற்றுவிடுவாள் லட்சுமி. அதே ஸ்கூல் அல்லது காலேஜ் படிக்கும் பெண்கள் வந்தால், அவர்களை தன் பேச்சிலேயே மயக்கி, அந்த பெண்களின் முடியை மொட்டை கூட அடித்துவிடுவாள்.

அது ஒரு தனிக்கதை. இப்படி இருக்கும் லட்சுமியின் வீட்டிற்கு, சித்ராவும் அவளுடைய பெண்ணும் வாடகைக்கு வருகிறார்கள். 

சித்ரா அவளுடைய பெண்ணை கூட்டிக் கொண்டு  லட்சுமியின் வீட்டுக்கு போக, அங்க பார்த்தால் இரண்டு போர்டுகள் இருக்க, ஒன்று லட்சுமி இல்லம், இன்னொன்று லட்சுமி சலூன் என்று இருக்க, சித்ரா புரோக்கர் சொன்ன வீடு இது இல்லை என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்ப, அப்போ லட்சுமி  "யாரும்மா? என்ன வேண்டும்?"  என்று கேட்டுக் கொண்டே வெளியே வர, அதற்கு சித்ரா "நான் அட்ரஸ் மாறி வந்துட்டேன், சாரி" என்றாள்.

நீங்க கரெக்ட்டான அட்ரஸ்க்கு தான் வந்து இருக்கீங்க... நான் தான் நீங்க தேடி வந்த லேடி ஹவுஸ் ஓனர்... வாங்க உள்ளே" என்று அழைக்க...


ஏப்பா, நல்லவேளை, நீங்க எங்களை பார்த்தீங்க... இல்லை என்றால் இன்னும் அலைய வேண்டி இருந்து இருக்கும்... அப்புறம் இந்த சலூன் யாருது? என்று சித்ரா கேட்க...

லட்சுமி "வாங்க உள்ளே போய் மற்றதெல்லாம் பேசிக்கலாம்" என்று சொல்ல, சித்ராவும், அவள் மகளும் முதலில் வீட்டுக்குள் சென்றார்கள். பின்னால் சென்ற லட்சுமி திரும்பி இருவரின் முடியையும் பார்க்கிறாள். சித்ராவின் மகள் லூஸ் ஹேர் விட்டு நடுவில் ஒரு பிங் கிளிப் போட்டு அதில் ஒரு ரோஜாப்பூவை வைத்து இருந்தாள். அவளை போலவே சித்ராவுக்கு நல்ல நீளமான முடி இருக்க, லட்சுமியின் மைண்ட் வாய்ஸ் "கண்ணா லட்டு தின்ன ஆசையா" என்று கேட்டது. சித்ரா அப்போது அவளுடைய முடியை கொண்டை போட்டு இருக்க, லட்சுமி அவளுக்கும் நல்ல நீளமான முடியாகத்தான் இருக்கும் என்று நினைத்தாள். 

நாங்க ரெண்டு பேரு தான், எவ்ளோ வாடகை? எக்ஸ்டரா அமவுண்ட் எதாவது குடுக்கணுமா என்று லட்சுமியை கேட்டாள் சித்ரா.

லட்சுமி இதையெல்லாம் கவனிக்காமல் சித்ராவின் மகளையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

உங்க பொண்ணு அழகா இருக்கா... உன்னோட பேரு என்னம்மா என்று சிரித்துக் கொண்டே கேட்க... அவளும் என் பேரு திவ்யா... நான் இங்க காலேஜ் 2இயர் போக போறேன்... அடுத்த மாசம் காலேஜ் ஓபன் ஆன்ட்டி...

திவ்யா... நல்ல பெயர் உன் லாங்ஹேர் கூட நல்லா இருக்கும்மா என்று லட்சுமி சொல்லிவிட்டு அவளுடைய முடியையே பார்க்க,

வாடகை எல்லாம் இப்பவே பேசிட்டா, அட்வான்ஸ் ரெடி பண்ண எங்களுக்கு ஈஸியா இருக்கும்... என்று சித்ரா கேட்க, அதெல்லாம் மெதுவா குடும்மா...எல்லா விவரமும் நாளைக்கு பேசிக்கலாம் என்றாள் லட்சுமி.

முன்னாடி இருக்க பியூட்டி பார்லர் யாருது? வாடகைக்கு விட்டு இருக்கீங்களா? 

அது என்னோட பார்லர் தான் சித்ரா... நான் தான் அதை நடத்துறேன்... உங்களுக்கு கூட ஏதாவது பண்ணனும்னா சொல்லு கம்மியா பண்ணிக்கலாம்... 

ஐயோ ஆன்ட்டி, அது தேவையில்லை, எனக்கும், திவ்யாவுக்கும் லாங் ஹேர் தான் பிடிக்கும்... என்று சொல்ல, லட்சுமியின் முகம் வாடிப்போனது. லட்சுமி தான் நினைத்தபடி அம்மா மகள் இருவரின் முடியையும் மொட்டை அடிப்பாளா? இல்லையா?இனி என்ன நடக்கும்? 

Telugu college girl's mid back length layer hair style

October 27, 2022 0
Telugu college girl's mid back length layer hair style


Chennai girl's new trend short pixie boy cut makeover

October 27, 2022 0
Chennai girl's new trend short pixie boy cut makeoverYoung Indian house wife's mid back length hair cut makeover

October 27, 2022 0
Young Indian house wife's mid back length hair cut makeoverHollywood Actress long hair shaved off | Bald is beautiful

October 27, 2022 0
Hollywood Actress long hair shaved off | Bald is beautiful


Indian women's mid back length hair cut with coloring transformation

October 27, 2022 0
Indian women's mid back length hair cut with coloring transformation

North Indian girl's long to short hair cut makeover

October 27, 2022 0
North Indian girl's long to short hair cut makeover