Tuesday 3 September 2024
வசந்த்: ஓ.. அப்படியா.
நந்தினி: நீங்க என்னோட தலைமுடியை மட்டும் ரசிக்கிறது எனக்கு தெரிஞ்சதுக்கு அப்புறமா தான் நான் என்னோட தலை முடியை உங்ககிட்ட கொடுத்து என்னோட வீட்டுக்காரருக்கு வேலை கேட்கலாம்னு தோணுச்சு.
வசந்த்: உன்னோட தலைமுடியை வைச்சு என்கிட்ட பேரம் பேசுற… உனக்கு இது தப்பா தெரியலையா?
நந்தினி: என்னோட நிலைமைல இருந்து பாருங்க… இப்போதைக்கு உங்ககிட்ட எனக்கு இருக்கிற ஒரே பணயப் பொருள் என்னோட தலைமுடி தான்… என்ன பண்றது… உதவாக்கரை புருசனை வச்சுக்கிட்டு நான் படுற கஷ்டம் எனக்கு மட்டும் தான் தெரியும்.
வசந்த்: சரி… எனக்கு கொஞ்சம் டைம் கொடு… ஒரு ரெண்டு வாரத்துல சொல்லுறேன்.
நந்தினி: சரிங்க ஸார். ரொம்ப தாங்க்ஸ்
வசந்த் சற்று குழப்பத்தில் இருந்தான். நந்தினி எப்படி இவனுடைய தலைமுடி ஆசையை கண்டு பிடித்தாள் என்று. மேலும் அவலாகவே வந்து அவளுடைய தலைமுடியையும் அவனுக்கு கொடுப்பதாக கூறியது வினோதமாக இருந்தது. நந்தினியின் இந்த நடவடிக்கையை அவன் எதிர்பார்க்கவில்லை. அவளுடைய நீளமான தலைமுடியை அனுபவிக்க ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என அவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இப்போது தானாகவே வந்து வலையில் விழும் நந்தினியை அவன் ஒதுக்கி விட நினைக்கவில்லை. ஆயினும், அவளுடைய தைரியமும் தானாகவே முன் வந்த விதமும் கொஞ்சம் தயக்கமாக இருந்தது.
இதன் பின்னணியை சற்று ஆராய்ந்து அவளுடைய நிலைமை உண்மையிலேயே மோசமாக இருந்தால், அவள் கணவனுக்கு ஒரு வேலையை கொடுத்து விட்டு அவள் தலைமுடியை எடுத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தான். அவ்வப்போது எதிரில் இருந்த நந்தினியை கவனித்தான். அவள் எப்பொழுதும் போல வேலை செய்து கொண்டிருந்தாள். அவனும் தன்னுடைய வேலையில் மூழ்கினான்.
உணவு இடைவேளையின் போது ரம்யாவை கவனித்தான். ஊருக்கு சென்று வந்ததில் இருந்து கொஞ்சம் சோகமாக இருந்தாள். முதலில் பயணக் களைப்பாக இருக்கும் என நினைத்தான். ஆனால் அவளுடைய சோர்வடைந்த நடவடிக்கைகளை கவனித்ததும் வேறு ஏதோ என்று உறுதிப்படுத்திக் கொண்டான். காலை முதல் அவனை பார்த்தாலும் எதுவும் வந்து பேசவில்லை என்பது அவனுக்கு சற்று உறுத்தலாக இருந்தது. ஒருவேளை ஷைலஜாவின் தலைமுடியை அவன் தொட்டுப் பார்த்து விளையாடியதை அவள் ரம்யாவிடம் சொல்லியிருப்பாளோ, அதனால் கோவமாக இருக்கிறாளோ என யோசித்தான். அப்படி கோபித்துக் கொள்ள ரம்யாவும் தானும் காதலர்கள் இல்லையே எனவும் மனது கூறியது. வசந்த் தனக்கு ரம்யாமேல் உள்ள ஈர்ப்பை காதல் என உருவகப்படுத்திக் கொண்டாலும், அவளிடம் நேரடியாக கூறியதில்லை.
மற்ற நேரங்களில் வெளிப்படையாகவும், தைரியமாகவும் அவளிடம் எதையும் இலகுவாக பேசிவிடும் வசந்த், இந்த காதல் ஆசையை மட்டும் சொல்வதற்கு தயங்கினான். அவள் அதை ஏற்க மறுத்து விடுவாளோ என ஒரு பயம் அவன் மனதில் இருந்தது. அவன் கண் முன்னாடி நிறைய விஷயங்கள் இருந்தது. தன்னுடைய தலைமுடியை தயங்காமல் அவனிடம் கொடுத்த ஷைலஜாவின் புதிய நட்பை எப்படி கையாள்வது என்பது ஒரு விசயம். தானாக தேடி வந்து தன்னுடைய தலை முடியை கொடுக்கும் நந்தினி ஒரு பக்கம். மனதில் ஆசையுடம் பார்த்துக் கொண்டிருக்கும் ரம்யா சற்று விலகி செல்வது போல தோன்றும் இந்த நிலைமை ஒரு பக்கம் என குழப்பத்தில் இருந்தான்.