Tuesday 19 May 2020

Manasa Radhakrishnan Cut her long hair

May 19, 2020 0
Manasa Radhakrishnan cut her long hair little by little...




இந்த முதல் புகைப்படத்தில் மானசாவின் முடி அவரது இடுப்புக்கு கீழ் வரை நீண்டு வளர்ந்து அழகு தருகிறது.. அதன்‌ பின் கொஞ்சம் கொஞ்சமாக முடியின் நீளம் குறைந்து வருகிறது.





கீழே இருக்கும்‌ புகைப்படத்தில் மானசா தன் முடியை ஒரு அடிக்கும் குறைவாகவே நீளம் குறைத்து வெட்டிவிட்டார். போக போக இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக முடியின் நீளம்‌ குறைந்து வருகிறது





கடைசி இரு புகைப்படங்களில் மானசாவின் முடி அவரது மார்புக்கு மேலேயே முடிந்துவிட்டது. மானசாவின் அழகே அவரது அழகான நீளம்‌ அதிகமான முடி தான். முடியின் நீளம் முக்கியமல்ல... பெண்கள் தங்கள் விருப்பம்‌ போல பல விதமாக ஹேர் ஸ்டைல் பண்ணி கொள்ள நீளம் அதிகமாக இருந்தால் நல்லதா? குறைவாக இருந்தால் நல்லதா? கமெண்ட் செய்யுங்களேன்...








ராசுக்குட்டி

May 19, 2020 0
நான் ராஜா. 27 வயசு. பொள்ளாச்சி பக்கம் ராசாக்காபாளையம்‌ தான் என் சொந்த ஊர். எங்க குடும்பம் தான் ஊர்ல பெரிய குடும்பம். அப்பாவுக்கு ஏக மரியாதை இருக்கு சுத்து பத்து ஊர்ல... நில,புலம், தோப்பு துரவு, விவசாயம்ன்னு சொத்து நிறைய இருக்கு.. நான் ஒரே வாரிசு என்பதால் என்‌ அம்மா என்னை ரொம்ப செல்லமா வளர்த்தாங்க... படிப்பு ஏறல.. சும்மா ஊருக்குள்ள வெட்டியா சுத்திட்டு, வயலுக்கு வேலைக்கு வர புள்ளைகள சைட் அடிக்கிறது, வீண் சண்டை இதான் என்‌ வழக்கம்... 



அம்மாகிட்ட கெஞ்சி வாங்குன புல்லட்ல ஒரு அல்லக்கை உட்கார வச்சுட்டு ஊர் சுத்துறது தான் என் வழக்கம்..பாக்யராஜ் ராசுக்குட்டி படத்துல புல்லட்ல குடை பிடிக்க ஒரு அல்லக்கை வச்சுட்டு வருவாரே அதே மாதிரி தான் என் கேரக்டர்...

இப்படி நிம்மதியா போய்ட்டு இருந்த என் வாழ்க்கையை, என் அம்மா எனக்கு கல்யாணம் பண்ணியே ஆகணும்னு சொல்லி, சென்னைல படிச்சுட்டு இருந்த தன் தம்பி பொண்ணு பிரியாவை தான் கட்டிக்கணும்னு சொல்லி கல்யாணமும்‌ பண்ணி வச்சுச்சு...


என் தாய்மாமன் எங்க அந்தஸ்துக்கு கொஞ்சமும்‌ குறைஞ்சவர் இல்ல... ரொம்ப சாதுவான மனுஷன்.. என்னை சின்ன வயசுல தூக்கி விளையாடி கொஞ்சி நல்லா பார்த்துக்கிட்டவர். எங்க அத்தை லட்சுமி மகராசி... என் மாமன் மனசுல என்ன நினைக்குறார்னு அவர் முகத்தை பார்த்தே கண்டுபிடிக்கும்... அவர் மனசு கோணாமல் நடக்குறதுல எங்க அத்தைக்கு போட்டி யாரும் இல்லை...

இப்படிப்பட்ட நல்லவங்களுக்கு பொறந்தவதான் இந்த பிரியா. சரியான திமிர் பிடிச்சவ.. சின்ன வயசுல இருந்தே நல்லா படிப்பாளி.. எனக்கு அவளை ரொம்பவும் பிடிக்கும். ஆனா அவளுக்கு என்னை கண்டாவே ஆகாது... ரொம்ப வருஷம்‌ கழிச்சு என் மாமன் பொண்ணை பாக்க போறோம்னு சந்தோஷமா இருந்தேன்.

ஒரு நல்ல நாளில் எனக்கும், ப்ரியாவுக்கும் கல்யாணம் முடிந்தது. கல்யாணம் முடிந்த சில நாட்கள் இருவரும் எங்கள் வீட்டில் தான்‌ இருந்தோம். நல்ல நாள் இல்லாமல் எங்கள் சாந்திமுகூர்த்தம் தள்ளி வைக்கப்பட்டது. அடுத்த சில நாள் கழித்து எங்கள் குல தெய்வம் கோவில் விழா என்பதால் நான் கையில் காப்பு கட்ட வேண்டிய சூழ்நிலை வந்தது. 


அதனால்‌ நானும் என் நண்பர்களுடன்‌ கோவிலில் தங்கிக்‌ கொண்டேன். கோவில் திருவிழாவில் நண்பர்களுடன்‌ சேர்ந்து எல்லா வேலைகளும்‌ செய்து வந்தேன். அதில் என் பங்காளிகளுடன்‌ சிறு பிரச்சனை ஏற்பட்டு கைகலப்பு வரை சென்றது. பிரச்சனை போலீஸ் ஸ்டேஷன்‌ வரை செல்ல, நான் அதற்காக அலைய வேண்டி வந்தது. அந்த என் மேல் தான் தப்பு என்று ப்ரியா என் தம்பிக்கு ஆதரவாக போலீஸ் ஸ்டேஷனில் பேச, எல்லோர் முன்னிலையில் நான் ப்ரியாவை அடித்துவிட்டேன். 

உண்மையில்‌ பிரச்சனைக்கு காரணம் என் தம்பியும், சித்தப்பாவும் தான்‌ காரணம். அவர்கள் குடும்பத்துக்கு கோவிலில் சரியான மரியாதை இல்லை என்று சூழ்ச்சி செய்தனர். அதை புரிந்து கொள்ளாமல் ப்ரியாவும் அவர்களுக்கு சப்போர்ட்டாக பேச, நான் அவளை அடித்துவிட்டேன். அதனால் ப்ரியா கோபித்துக் கொண்டு அவள் வீட்டுக்கு செல்ல, மாமா என் மேல் தவறு இல்லை என்று புரிந்து கொண்டாலும், தன் ஒரே மகளை அடித்த கோபத்தில் அவரும்‌ சென்றுவிட்டார். 

அங்கிருந்து கிளம்பிய மாமா, ப்ரியாவின் வற்புறுத்தலால் சென்னைக்கே அவளை கூட்டிச் சென்றுவிட்டார். நான் அதை கண்டு அதிர்ச்சி அடைந்தாலும், ப்ரியா என்னை புரிந்து கொண்டு வருவாள் என்று காத்திருக்க, அவள் வரவில்லை. சரி நான் அவளை அடித்தது தவறு என்று நானும் சென்னை சென்று சமாதானம்‌ செய்து கூட்டி வர போனேன்.

ஆனால் ப்ரியா என் முகத்தை கூட பார்க்க வரவில்லை. நானும், என் மாமன், அத்தையிடம் என்‌ தரப்பு நியாயத்தை எடுத்து சொல்லி, ப்ரியாவுக்கும் புரிய வைக்க சொல்லிவிட்டு வந்தேன்.ஆனால் ப்ரியா அதற்கு முன்பே எனக்கு டைவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிவிட்டாள். என் தம்பியும், சித்தப்பாவும் ப்ரியாவுடன் போனில் பேசி அவளை‌ என்னுடன் சேர விடாமல் தடுத்தனர்.

ஆனால் அதற்க்குள் ராசுக்குட்டியை ப்ரியா டைவோர்ஸ் பண்றா, அதுக்கு காரணம் ராசுக்குட்டி ரெண்டு, மூணு பொண்ணுகளை வச்சு இருக்கான்னு ஊர் பூராவும் செய்தி பரப்பி ஊர் மக்களும் அதை நம்பினர். அதனால் ஊருக்குள்‌ எனக்கு கெட்ட பெயர் ஆனது..


ஒரு சில மாதங்கள் இதே நிலை தொடர, சில வாய்தாக்களும் போனது. ஒரு கட்டத்தில் நான் என் நண்பர்களுடன் என்‌ சித்தப்பா வீட்டுக்கு போய் பிரச்சனை செய்து, அவர்கள் வாயாலேயே அவர்கள் செய்த தவறுகளை சொல்ல வைத்து, எனக்கு எதிராக ப்ரியாவை எப்படி‌ பிரைன் வாஷ் செய்தனர் என்பதையும்‌ திமிராக என்னிடமே சொல்லிக் காட்டினர். இதை என் நண்பன் ஒருவன் ரகசிய கேமராவால் வீடியோ எடுத்து ப்ரியாவின் வாட்ஸ் அப்புக்கு அனுப்பினான்.

அப்போது தான் ப்ரியா தான் செய்த தவறை உணர்ந்து கொண்டாள். என் தரப்பில்‌ எந்த தவறும்‌ இல்லை என்று அவளுடைய அப்பாவும், அம்மாவும் சொல்லியும் கேட்காமல் தவறு செய்தவள் இப்போது தான்‌ என் பங்காளிகளின் உண்மையான முகத்தை புரிந்து கொண்டாள்.

அப்போதே ப்ரியா என்னை தேடி என் வீட்டுக்கு ஓடி வந்தாள். எல்லோர் முன்னிலையில் என்னை மன்னித்து விடு மாமா என்று கெஞ்சினாள். ஆனால் நான் அவள் பேசுவதை நம்பவில்லை. என் அப்பா அம்மா என்னை மீறி என் வீட்டில் பிரியாவை இருக்க சொன்னார்கள். அவளும் என் வீட்டிலேயே இருக்க நான் அவளை கண்டு கொள்ளாமல் இருந்தேன். 

அந்த சமயத்தில் தான் மீண்டும் எங்கள் குல தெய்வம் கோவில் விழா வந்தது. இதை பயன்படுத்தி பிரியாவுக்கு கொஞ்சம் பாடம்‌ கற்றுக் கொடுக்க நினைத்தேன். என் அம்மாவிடம் சென்று நல்ல பிள்ளையாக சில விஷயங்கள் பேசினேன்..



அம்மா, என்கூட பிரியா ஒண்ணா சேர்ந்தா கோவிலுக்கு நேர்த்திக்கடன் பண்றேன்னு வேண்டி இருக்கேன்.. அதனால் நான் அதை விரதம்‌ இருந்து பண்ணனும்.. அதனால்‌ நம்ம வீட்டை சுத்தம் பண்ணிட்டு, கவுச்சி இல்லாம‌ பார்த்துக்கம்மா...

சரிடா, நான் வேணா  பிரியாவை உனக்கு உதவியா இருக்க சொல்லவா... 

இல்லம்மா வேண்டாம்... விடுங்க...

என்னடா, அவ  உன்கூட சேரணும்னு தானே சாமிகிட்ட வேண்டி இருக்க.. அவளும் உன் கூட அந்த விரதத்தை பண்ணட்டும்...

சரிம்மா... நானும் அவளும் ரெண்டு நாள் முன்னாடியே நம்ம கோவிலுக்கு போறோம்.. எல்லா வேண்டுதலையும் பண்ணிட்டு இருக்கோம்.. அப்புறம்‌ நீங்க எல்லாம் கடைசி நாள் பூஜைக்கு வந்துடுங்க...

சரிடா, நான் பிரியாகிட்ட சொல்லி இன்னிக்கு சாயந்திரம்‌ கோவிலுக்கு போக ரெடி ஆக சொல்றேன்...

அன்று மாலை நானும், பிரியாவும் கோவிலுக்கு போய் சேர, அங்கு என் நண்பர்கள் எல்லோரும் எங்களுக்கு வரவேற்பு கொடுத்தனர். அதை பார்த்து பிரியா ஆச்சர்யப்பட்டாள். 

அன்று இரவே நான் பூச்சட்டி எடுக்க  ப்ரியாவை கூட்டி போனேன். அவள் என்ன என்று புரியாமல் என்னுடன் வர, மண் சட்டியில் நெருப்பு துண்டுகளை போட்டு அவள் கையில்‌ கொடுக்க, பிரியா அதை மிகுந்த வலியுடன் கோவிலை சுற்றி எடுத்து வந்தாள். 

மாமா, என்ன மாமா இது.. பூ சட்டினு சொல்லிட்டு இப்படி நெருப்பு துண்டுகளை போட்டு சூடு கொடுக்குறீங்க... 

இதான் நம்ம ஊர் வழக்கம் பிரியா, இதை தப்பா பேசுனா சாமி குத்தம் ஆயிடும்... 

சரி மாமா, நான் பேசல..

பிரியா கண்ணு, இது முடிஞ்சதும் இன்னொரு மூணு நேர்த்திக்கடன் இருக்கு.. அதெல்லாம் மறுக்காம பண்ணிடனும்.. அப்போ தான் நாம ஒண்ணு சேர்ந்தது நீடிக்கும்...

சரி மாமா, நீ சொல்றது எல்லாம் பண்ணிடுறேன்...

அடுத்து ஆணி பாதம்‌ அணிந்து நடந்த வர சொல்ல, பிரியா ரொம்பவே கஷ்டப்பட்டு என்னை பிடித்து கொண்டு நடந்து வந்தாள். அது முடித்ததும் அன்று இரவு சாப்பிட்டு விட்டு போய் கோவில் மண்டபத்தில் படுத்து தூங்கினோம். 


காலையில் தான் குல தெய்வ கோவிலில் குண்டம்‌ திருவிழா... அதில் முதல் ஆளாக பிரியா தான் குண்டம்‌ இறங்க வேண்டும். காலையில் எழுந்து பச்சை தண்ணீரில் குளித்து விட்டு, மஞ்சள் சேலை உடுத்தி பிரியா வந்து குண்டத்தின் முன் நின்றாள். 

இங்க என்ன மாமா பண்ணனும்...

பிரியா, சாமிய கும்பிட்டுட்டு குண்டத்துல இறங்கி நடக்கணும்.. அந்த கடைசி வரை போய் இறங்கணும்.. நம்ம வீட்டு பொண்ணுக தான்‌ முதல்ல இறங்கணும்... அம்மாக்கு வயசாச்சு.. அதனால் நீ தான் முதல்ல இறங்கி  குண்டத்தை ஆரம்பிக்கனும்...

சரி மாமா... பண்ணிடுறேன்‌ என்று பிரியா ரொம்ப கவலையாக சொன்னாள்.

அவள்‌ சொன்னபடி முதல் ஆளாக குண்டத்தில் இறங்கி நடந்தாள். ஆனால் சூடு தாங்காமல் குண்டத்தை விட்டு வெளியே வந்ததும் விழுந்து புரண்டு அழுதாள்.. நான் பிரியா அருகில் எதுவும் பேசாமல் நின்று கொண்டு இருந்தேன்..

பிரியா என்‌ முகத்தில் எந்த கவலையும் இல்லாமல்  இருப்பதை பார்த்தாள். நான் அவளை எந்த அளவு முதலில் விரும்பினேன் என்று அவளுக்கு தெரியும். அப்போது எல்லாம் அவள் என்னை உதாசீன படுத்தியது பிரியாவின் நினைவுக்கு வர எதுவும் பேசவில்லை..

மாமா வேற என்ன நேர்த்திக்கடன் இருக்கு மாமா... சொல்லுங்க... உங்க மனசு புரிஞ்சுக்காம தப்பு பண்ணினதுக்கு நீங்க என்ன சொன்னாலும் கேக்குறேன்..

ஒண்ணே ஒண்ணு தான் பிரியா... இந்த நேர்த்திக்கடன் நானும் உன்னோட சேர்ந்து பண்ண போறேன்... வா என்னோட என்று சொல்லி விட்டு கோவிலின் பின்பக்கம் இருந்த மரங்கள் அடர்ந்த பகுதிக்கு கூட்டி சென்றேன். அங்கு ஒரு சிறு பந்தல் போட்டு ஊர் மக்கள் முடி  காணிக்கை கொடுத்து கொண்டு இருந்தனர். 

நான் அங்கு சென்று என் சட்டையை கழட்டி விட்டு ஒரு நாசுவன் முன்பு உட்கார அவன் என்  முடியை மொட்டை அடித்து விட்டான். அதன்‌ பின் தாடி மீசை எடுத்து விட்டு, என்னை கையை தூக்க சொல்ல அவன் என் அக்குள் முடியை எடுத்து விட்டான். சில நிமிடங்களில் எல்லாமே முடிந்தது. அங்கு சில ஆண்களும், சிறுவர்களும்  மொட்டை அடித்து கொண்டு இருந்தனர். சிறுவர்களுடன் அம்மாக்கள்‌ நின்று கொண்டு இருந்தனர். ஆனால் பெண்கள் யாரும் மொட்டை அடிக்கவில்லை.


அதனால் பிரியா என்னுடன் துணைக்கு அங்கு வந்து இருந்ததாக அவர்கள் நினைத்தனர். நான் மொட்டை அடித்து விட்டு வெளியே வர, பிரியாவும் என் பின்னால் வந்தாள். 

என்ன பிரியா, பின்னாடியே வர... நீயும் மொட்டை அடிச்சுக்கோ... இதான் கடைசி வேண்டுதல்...

சும்மா விளையாடாதீங்க மாமா... நான் எப்படி மொட்டை அடிப்பேன்... போங்க மாமா...

பிரியா, நான் ஒண்ணும் உன்னோட விளையாடல்ல... நிஜமா தான் சொல்றேன்... நீ  மொட்டை அடிச்சா தான் நான் உன்னோட வாழ்வேன்.. இல்லன்னா நீ ஆரம்பிச்ச டிவோர்ஸ் கேஸ்ல கையெழுத்து போட்டுட்டு போய்ட்டே இருப்பேன்... உன் மேல உயிரையே வச்சு இருந்த ராசுக்குட்டி இப்போ இல்ல... எப்போ நீ டிவோர்ஸ் நோட்டீஸ்  கொடுத்தீயோ அப்போவே என் மனசு உடைஞ்சு போச்சு...

என்ன மாமா சொல்றீங்க... அப்போ என் மேல உங்களுக்கு காதல், விருப்பம் இல்லையா... நம்ம வீட்ல் எல்லாரும் சொல்றாங்கன்னு என் கூட வாழ சம்மதம் சொன்னீங்களா...

இல்ல பிரியா.. நான் உன் மேல வச்ச காதல் எப்பவும் அழியாது... ஆனா அந்த காதலுக்கு முன்னாடி நான் பட்ட அவமானம் குறுக்க வந்து நிக்குது... 

அவ்ளோ தானே மாமா... நான் உங்களை விரும்பியதை விட, நீங்க என்‌ மேல வச்ச அன்புல குறை இருக்காதுன்னு நம்புறேன்... உங்க அன்பு, காதல் எனக்கு கிடைக்கணும்னா இப்போ நான் என்ன வேணாலும் செய்வேன்... உங்களுக்காக என் முடியை கொடுக்க மாட்டேனா...


சொல்லி விட்டு விறுவிறுவென பிரியா பந்தலுக்குள் வேகமாக சென்றாள். பிரியா வேகமாக பந்தலுக்குள் நுழைவதை ஊர் மக்கள் எல்லோரும் பார்க்க, பிரியா தன் ஜடை பின்னி இருந்த முடியை தன்‌ கையாலேயே பிரித்து விட்டு கொண்டு ஒரு நாசுவனின் முன் போடப்பட்டு இருந்த தென்னங்கீற்றில் உட்கார்ந்தாள்.

அண்ணா, மொட்டை அடிக்கணும் அண்ணா...

என்னம்மா, நீங்க மொட்டை அடிக்கிறீங்களா...

ஆமாண்ணா... மொட்டை அடிங்க.. இது எங்க மாமா கூட நான் நல்லபடியா சேர்ந்ததற்காக நான் கொடுக்கிற காணிக்கை....

சரிம்மா.. உங்க மனசுக்கு எல்லாம் இனிமேல் நல்லதாவே நடக்கும்...

பார்பர் பிரியாவின் தலையை நனைத்து விட்டு, தான் வைத்து இருந்த ஒரு பழைய ரேசரை எடுத்து தன் துண்டில் துடைத்து விட்டு ஒரு ப்ளேடு ஒன்றை போட்டு, பிரியாவின் தலையை குனிய வைத்து, முடியை நெற்றியில் இருந்து பின்னோக்கி சவரம் செய்தான். 

பிரியாவின் சிவந்த நிற மேனிக்கு தகுந்த நிறத்தில் அவளது சிரைக்கப்பட்ட தலையும் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பிரியாவின் தலை முடி மொட்டை அடித்தான் நாசுவன். பிரியா தன் தலையை குனிந்து உட்கார்ந்து இருக்க, முடி அவள் மடியிலும், தோளிலும்‌ விழுந்தது. சில நிமிடங்களில் பிரியாவின் தலை முடி முழுவதும் மொட்டை அடித்து பளபளப்பாக மின்னியது. 

அம்மா, முடிஞ்சதுமா... 

அதுகுள்ளயா.. நல்லா பாருங்க, பிசிறு பிசிறா இருக்க போவுது...

இல்லம்மா, நல்லா இருக்கு....

மாமா,  பிரியா  என்னை கூப்பிட நான் அவள் அருகே போனேன்.

என்ன பிரியா,

மாமா... முடி எங்காவது மிச்சம் மீதி இருக்கான்னு பாருங்க... இந்த கிழவனுக்கு கண்ணு தெரியாம நல்லா  மொட்டை அடிக்காம விட்டா எல்லாரும் என்னை கிண்டல் பண்ணுவாங்க...

இல்ல பிரியா நல்லா தான் இருக்கு...

நல்லா கை வச்சு தடவி பாரு மாமா....

நானும் பிரியாவின் மொட்டை தலையை இரு கைகளால் தடவி பார்க்க, கொஞ்சம் சொரசொரப்பாக தான் இருந்தது.

அண்ணா, என்ன பழைய கத்தியா போட்டீங்க...

ஆமாங்க ஐயா, எல்லாருக்கும் போட்டதை போடாம, பழசுதான் கொஞ்சம் சுத்தமா இருந்தது.. அதான் அதை போட்டேன்...

சரி பரவாயில்லை... இப்போ என்ன பண்ணுங்க... கொஞ்சமா தண்ணி விட்டு தடவிட்டு ஒரு புது ப்ளேடு போட்டு மழுமழுன்னு பண்ணி விடுங்க....

சரிங்க ஐயா...அப்படியே பண்ணிடுறேன்...

போய் உட்காரு பிரியா...

பிரியா போய் உட்கார, நாசுவன் தன் இரு கைகளால் தண்ணீரை, பிரியாவின் தலை முழுவதும் தடவி விட்டு, புது சவர கத்தியால் மெதுவாக, அதே சமயம் கொஞ்சமாக அழுத்தம் கொடுத்து சிரைத்து விட்டான். பிரியாவின் உச்சியில், இரு காது ஓரங்கள், பின்பக்கம் என சுத்தி சுத்தி மழுமழுவென சிரைத்து விட்டான்.. இப்போது பிரியாவின் தலை மொட்டையில் மிக அழகாக இருந்தது.


ஐயா.. இப்ப சரியா இருக்கான்னு பாருங்க...

நானும் பார்த்து விட்டு சரி என்று சொன்னேன்.

நல்லா மொழுமொழு மொட்டையா இருக்க பிரியா... சூப்பரா இருக்கு...

எல்லாம் உனக்காக தான் மாமா... நான்  உன்னை தப்பா நினைச்சதுக்கு தண்டனையாவும், இனிமேல் நான் உனக்கு பிடிச்ச மாதிரி தான் இருப்பேன்னு உனக்கு உணர்த்தவும் தான் மாமா இந்த மொட்டை... ப்ளீஸ் மாமா, என்னை மன்னிச்சு ஏத்துக்க மாமா... என் ஆயுள் முழுக்க நான் உன்னோட இருக்கணும் மாமா...
என்று பிரியா குரல் தழுதழுக்க சொல்ல, நானும் உடைந்து போய் அவளை கட்டி பிடித்து கொண்டு அழுதேன்..

இனிமே உன் மேல கோவபட மாட்டேன்டி என் செல்லம்... உன் மேல வந்த இந்த கோவத்துக்காக என்னை மன்னிச்சுடு பிரியா... ஐ லவ் யூடி என்று சொல்லி அவள் முகம் எங்கும் முத்தம் கொடுத்தேன்.. பின் நாங்கள் இருவரும் குளித்து விட்டு ரெடியாகி சாமி தரிசனம் செய்ய போக, எங்கள் இருவரின் பெற்றோரும் வர, அவர்கள் பிரியாவின் மொட்டையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.



என்னடா பண்ணி வச்சு இருக்க என் மருமகளை என்று என் அம்மா என்னிடம் சண்டைக்கு வர,

அத்தே... இருங்க, எதுக்கு மாமா மேல கோவபடறீங்க... நான் தான் நாங்க ரெண்டு பேரும்  நல்லபடியா ஒண்ணா சேர்ந்தா மொட்டை அடிக்கிறதா வேண்டிகிட்டேன்...


அப்படின்னு அவன் சொல்ல சொன்னானா என்று சொல்லி விட்டு என்னை என் அம்மா அடிக்க, 

என்ன அத்தே, என் மாமனை என் முன்னாடியே அடிக்குறீங்க... இனிமே அவர் உங்க புள்ளை இல்ல...என் மாமன்.. தெரிஞ்சுகோங்க... என்று விளையாட்டாக பிரியா என் அம்மாவிடம் சண்டையிட, 

எப்படியோ நீங்க ரெண்டு பேரும் நல்லா இருந்தா எங்க எல்லாருக்கும் அது தாண்டி தங்கம் சந்தோஷம்... 

எல்லாம் இனிமேல் நல்லதே நடக்கும் அத்தே... வாங்க எல்லோரும் சாமி கும்பிட போகலாம் என்று என் கையை பிடித்து இழுத்து கொண்டு பிரியா முன்னால் செல்ல நான் அவள் பின்னாலேயே சென்றேன்...

அடுத்த கோவில் திருவிழா என் முதல் குழந்தையுடன் நான் உன்னை தரிசனம் செய்ய வேண்டும் ஆத்தா என்று சொல்லி சாமிகிட்ட வேண்டினேன்...