Sunday 20 January 2019

புவனா அக்கா

January 20, 2019 0
புவனா அக்கா
நான் மதன். வயது 24. ஒரு தனியார் கம்பெனியில்  மார்க்கெட்டிங் வேலை செய்கிறேன். என் வீட்டில் நான் ஒரே பையன். என் அம்மாவுக்கு ஒரு பெண் பிள்ளை இல்லையே என்ற கவலை இப்போதும் உண்டு. அந்த கவலையை போக்குபவள் என் பெரியம்மா பெண் என் அக்கா புவனா. எங்கள் இரு வீட்டிற்க்கும் செல்லம் அவள் தான். எந்த ஒரு பண்டிகைக்கும் அவளுக்கு இரண்டு புத்தாடைகள் கிடைக்கும்.
அன்று ஞாயிறு காலை. நான் வழக்கம் போல காலையில் தாமதமாக தான் எழுந்தேன். எழுந்ததும் செல்லில் மணியை பார்த்தேன். மணி 9. என் ரூமிலிருந்து ஹாலுக்கு வந்ததும் தான் நினைவு வந்தது என் அம்மாவும், அப்பாவும் அக்கா குடும்பத்துடன் வெளியூர் சென்றது. அவர்கள் சென்று விட்டால் நான் புவனா அக்காவிடம் தான் சாப்பிட வேண்டும். அவள் தான் இன்று முழுவதும் எனக்கு சாப்பாடு கொடுப்பவள்.
காலை கடன்களை அவசரமாக முடித்து விட்டு புவனா அக்கா வீட்டிற்கு சென்றேன்.


என்னடா மதன் லேட்டா வர..
ஆமா அக்கா, நைட் லேட்டா தான் வந்தேன். அதான் அசந்து தூங்கிட்டேன்.
சரிடா, சாப்பிட தோசை ஹாட் பாக் ல வச்சு இருக்கேன்.. எடுத்து போட்டு சாப்பிடு...
ம்ம்ம். ஒகே அக்கா
நான் கிச்சன் சென்று ஹாட் பாக்கில் இருந்த தோசை நான்கு எடுத்து தட்டில் போட்டு சாம்பார் ஊற்றி ஹாலுக்கு வந்து டிவியை போட்டுவிட்டு உட்கார்ந்தேன். இமான் அண்ணாச்சி சொல்லுங்கண்ணே.. சொல்லுங்க என்று பேசிக்கொண்டு இருந்தார்.
நான் சுவராசியமில்லாமல் பார்த்து கொண்டே சாப்பிட்டேன். புவனா அக்கா துணிகளை துவைத்து, தலைக்கு குளித்து விட்டு துணிகளை காய வைக்க மாடிக்கு சென்றாள். சிறிது நேரத்தில் புவனா மாடியில் இருந்து வந்தாள். நான் ரெஸ்லிங் பார்த்துக் கொண்டு இருந்தேன். ரோமனும், ரோலின்சூம் அடித்துக் கொண்டு இருந்தார்கள்.
புவனா அக்கா மதனின் அருகில் சோபாவில் உட்கார்ந்து அவளது முடியை அவிழ்த்து தடவி விட்டு கொண்டு இருந்தாள். மதன் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
என்னடா மதன், என்னையே பார்த்துட்டு இருக்கே.. டிவியை பாரு...
ஆமா அக்கா..அதை எவ்ளோ நேரம் பார்ப்பது.. போரடிக்குது...
அப்போ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு மதன்.. நான் சொல்வதை முடியாதுனு சொல்லாம செய்ய வேண்டும் ஒகே வா?
என்ன ஹெல்ப் அக்கா?
உனக்கு என் தலை முடியை பிடிக்குமாடா மதன்?
ம்ம்ம் பிடிக்கும் புவனா அக்கா,
ஏன் என் தலைமுடியை உனக்கு பிடிக்கும் மதன்...
ரொம்ப நல்லா ஷைன்னா லாங் ஹேர் ஆ இருக்கு அக்கா... அதனால பிடிக்கும் அக்கா...
அப்படின்னா இப்ப நீ என் தலைமுடியை சிக்கு எடுத்து விடுறியா... மதன்..
நானா... அதெல்லாம் எனக்கு பழக்கம் இல்ல புவனா அக்கா...
இதுல என்ன பழக்கம் வேண்டி இருக்கு மதன்.. நான் சொல்லி தரேன்.. எனக்கும்  ஒரு ஹெல்ப் ஆ இருக்கும்... உனக்கும் ஒரு எக்ஸ்பிரியன்ஸ் ஆ இருக்கும் மதன்...
சரி ஒகே அக்கா... எப்படி பண்றதுன்னு சொல்லு... நான் பண்றேன்...
புவனா அக்காவின் இடுப்பின் கீழ் வரை தொங்கும் அடர்த்தியான சற்று சுருண்டு கிடந்த முடியை பார்த்தான் மதன். புவனா அருகில் இருந்த கண்ணாடியில் இருவரும் தெரியுமாறு அமர்ந்தாள். 
மதனை பொறுத்தவரை புவனாவின் நீண்ட அடர்த்தியான முடியை அவனுக்கு  மிகவும் பிடித்து இருந்தது. ஆனால் அவன் அதை புவனாவிடம் எப்போதும் வெளிப்படுத்தியதில்லை. இன்று நடப்பது அனைத்தும் புதுமையாக இருந்தது. மதன் ஒருவிதமான கூச்சத்துடன் புவனாவின் முடியை தொட்டுக் கொண்டு இருந்தான்.
மதன் முடியை தொட ஏண்டா இவ்ளோ யோசிக்கிற... சும்மா நார்மலா தொடுடா...
இல்லை அக்கா... எனக்கு ஒரு மாதிரி இருக்கு...
மதன் உனக்கு என்ன தோணுதோ அதை பண்ணு... எனக்கும் ஒரு மாதிரி போரடிக்குது... சும்மா ஜாலியா எஞ்சாய் பண்ணுடா... ஆனா எனக்கு இதுல ஒரு இன்ட்ரெஸ்ட் இருக்குடா..
என்ன அக்கா சொல்ற...
ஆமா மதன்... போன வாரம் நம்ம தனா அக்கா பையன் பாபு இருக்கான்ல.. அவனை முடி வெட்ட சலூன் கூட்டி போனேன்.. அங்க பாபு முடி வெட்ட விடாம ரொம்ப அடம்பிடிச்சான்..
அப்புறம் என்னாச்சு அக்கா...
வேற வழியில்லாம என் மடியில் பாபுவை உட்கார வச்சு எனக்கும் சேர்த்து துணி போர்த்து அவனுக்கு முடி வெட்டினாங்க..
அய்யய்யோ... அப்புறம்..
அப்படி முடி வெட்டின பிறகு என் மேல் விழுந்த முடியை பார்த்தப்ப.. எனக்கே முடி வெட்டின மாதிரி இருந்தது. அதான் இன்னைக்கு அதை ட்ரை பண்ணி பார்க்கலாம்னு பார்த்தேன்.
அப்படின்னா உனக்கு நான் முடி வெட்டி விடணுமா அக்கா..
நான் சொல்ற மாதிரி பண்ணினா போதும்.. போன வாரம் நான் எப்பிடி ஃபீல் பண்ணனோ அதே மாதிரி இப்பவும் ஃபீல் பண்ணனும்..
சரிக்கா...
நீ போய் அப்பாவோட வெள்ளை வேஷ்டி அவர் ரூம்ல இருக்கு.. அதை எடுத்துட்டு அப்புறம் அவரோட ஷேவிங் கிட் எடுத்துட்டு வா...
புவனா சேரில் உட்கார்ந்து தன்னை  கண்ணாடியில் பார்த்துக் கொண்டு இருந்தாள். அதற்க்குள் மதன் வேஷ்டியும், அப்பாவின் ஷேவிங் கிட்டையும் எடுத்து வந்தான்..
எடுத்து வந்தியா மதன்.. இந்த வேஷ்டியை சலூன்ல போர்த்த மாதிரி என் மேல போர்த்து..
மதன் வேஷ்டியை உதறி புவனாவின் மேல் போர்த்தி, அவள் முடியை முன்புறம் எடுத்து விட்டு, அவளின் பின் கழுத்தில் வேஷ்டியை முடி போட்டான். அதன் பிறகு முடியை பின்புறம் எடுத்து போட்டான்.
மதன் இப்போ இது சலூன்.. சோ தலை வாரிகிட்டே என்ன பண்ணனும்னு எங்கிட்ட கேக்கணும்..
மதன் புவனாவின் முடியை சீப்பினால் சீவி.. இரண்டாக பிரித்து சீவினான். புவனா அன்று காலையில் தான் தலைக்கு குளித்து இருந்தாள். அவளது முடி மென்மையாகவும்.. அடர்த்தி சற்று அதிகமாகவும் இருந்தது. புவனாவும் தன் தம்பி தலைவாருவதை ரசித்தாள்.


என்ன மதன், என் முடியை பத்தி எதுவும் சொல்ல மாட்டேங்கற..
என்னக்கா சொல்ல..
போடா லூசு.. என் முடியை பத்தி எப்படி இருக்குன்னு சொல்லு.. லைக் நீ ஒரு பார்பர் மாதிரி...
மதன் புவனாவின் முடியை கோதிக் கொண்டே  உங்க முடி நல்லா அடர்த்தியாவும்... சாப்ட்டாவும் இருக்கு.. நல்லா மெயின்டெயின் பண்றிங்க..
ம்ம்ம்ம் தேங்க்ஸ் மதன்...
அக்கா உனக்கு நான் இப்ப என்ன பண்ணனும்..
நீ ஜஸ்ட் முடி வெட்டுற மாதிரி ஆக்ட் பண்ணனும்..
ஒகே அக்கா...
மதன் என் முடியை ஜடை பின்னுற மாதிரி மூணா பிரிச்சு அதுல ரெண்டு பார்ட்டை என் முன்னால போடு...
மதன் புவனாவின் முடியை மூன்றாக பிரித்து அவள் சொன்ன மாதிரியே முன்னாலும், பின்னாலும் போட்டான்.
இப்ப பின்னாடி இருக்கிற முடியை எடுத்து கத்திரி வச்சு கட் பண்ற மாதிரி பண்ணு.. கத்தரி சவுண்ட் மட்டும் வந்தா போதும் டா... நிஜமாலுமே கட் பண்ணிடாதே...
மதன் புவனா சொன்னது போல சிஸர் வைத்து அவளின் முடியை கட் பண்னுவது போல பண்ணினான். புவனாவின் கண்ணில் தெரியுமாறு சிசரை க்ரிச், க்ரிச், என்று சத்தம் வருமாறு செய்தான்...புவனா அதை கண் முடி ரசித்தாள்.
சூப்பர்டா மதன்... நல்லா இருக்கு  நீ பண்றது...
மதன் மேலும் சிறிது நேரம் அவ்வாறு செய்ய புவனாவின் ஆசை அதிகம் ஆனது..
மதன்.. என் முடியை ஒரு இஞ்ச் கட் பண்றியா...
என்னக்கா சொல்ற..
ஏண்டா ஷாக் ஆகுற...
இல்லக்கா எனக்கு பழக்கம் இல்ல...
சரி ஒகே.. இவ்ளோ நேரம் என்ன பண்ணியோ அதையே இன்னும் கொஞ்ச நேரம் பண்ணு...
சரி அக்கா...
புவனா கண்முடி ரசித்தாள். புவனா தீடிரென்று மதனை அவளின் செல்போனை எடுத்து வர சொன்னாள்.
எதுக்கு அக்கா...
நான் இப்ப சலூன்ல இருக்கேன்.சோ சிலபல செல்பி எடுத்துக்கலாம் டா.. மதன்..
புவனா சொன்னது போல அவளின் செல்போனை எடுத்து வந்த மதன் புவனாவின் முன்புறமும் பின்புறமும் நின்று போட்டோ எடுத்தான்.. புவனா ஒவ்வொரு போட்டோவுக்கும் ரசித்து போஸ் கொடுத்தாள்.
புவனாவின் தலைமுடியை கத்தரிப்பது போலவும்.. அதற்க்கு புவனா கூச்சத்தில் சிணுங்குவது போலவும் போஸ் கொடுக்க மதன் செல்போனில் போட்டோ எடுத்து கொண்டு இருந்தான்.
அதன்பின் புவனா தன்முடியை உதறி கொண்டை போட்டுக் கொண்டாள்.
மதன் என் கொண்டை எப்பிடிடா இருக்கு...
ம்ம்ம் நல்லா இருக்கு அக்கா...
அப்போ என் கொண்டையை தடவி கொடு..
அட போ புவனா அக்கா... நீ ஒரு மார்க்கமா தான் போய்ட்டு இருக்க..
ப்ளீஸ் டா மதன்..
ஒகே அக்கா.. ஆனா நீ என்ன இன்னிக்கு இப்படி புதுசா பண்ற..
ஏண்டா மதன் இப்படி பண்றது தப்பா.. எனக்கு என் முடியை வச்சு என்னவெல்லாமோ பண்ணனும்னு ஆசை  பட் பண்ணது இல்ல... போன வாரம் சலூன் போனதுல இருந்து அந்த ஆசை அதிகம் ஆயிடுச்சு... என்று சொல்லிவிட்டு மதனிடம் தன் கொண்டையை காட்டினாள். மதன் மறுக்க முடியாமல் அக்காவின் கொண்டையை தடவி கொடுத்தான்..
புவனாவும் அதை ரசித்தாள்.
மதன் அந்த சீப்பையும், சீஸரையும் என் கொண்டையில் சொருகுடா...
ஒகே அக்கா...
மதன் சீப்பையும், சிஸரையும் அந்த கொண்டையில் சொருக, மதன் சிரித்துக் கொண்டே போஸ் கொடுத்தாள். அதன் பின் புவனா தயங்கி கொண்டே மதனிடம் சொன்னாள்.
மதன் நீ உன் தாடியை சலூன்ல ஷேவ் பண்ணுவியா இல்ல வீட்லயா..
நான் வீட்ல தாங்க்கா ஷேவ் பண்ணிக்குவேன்..
ஒகே.. அப்போ உன்னால நான் சொல்றதை பண்ணமுடியும்...
இனி என்னக்கா பண்ண சொல்ற...
இப்ப நான் கொண்டை போட்டு இருக்கேன்ல... பின் கழுத்துல பொடனியில இருக்க முடியை ஷேவ் பண்ணி அழகா இருக்க மாதிரி பண்ணு... இதுக்கு பேரு இங்கிலிஷ்ல நேப் ஷேவ் (Nape Shaving )  அப்படின்னு சொல்வாங்க...
ஒகே அக்கா அது பண்ணிடலாம்..
மதன் பெரியப்பாவின் ஷேவிங் கிட்டில் இருந்து ஒரு ரேசரை எடுத்து புது பிளேடு போட்டு ரேசரை ரெடி செய்தான். புவனா அவன் செய்வதையே பார்த்துக் கொண்டு இருந்தாள். பின் மதன் புவனாவின் பின்புறம் வந்து அவள் தலையை குனிய வைத்து விட்டு அவளின் கீழ் பகுதி கொண்டைய தடவினான்.
அக்கா ஷேவ் பண்ண தண்ணி போட்டுக்கவா.. இல்ல வேண்டாமா...
தண்ணி போட வேண்டாண்டா மதன்.. அப்போதான் அந்த ஃபீல் எனக்கு கிடைக்கும்.
சரிக்கா.. அதே மாதிரி பண்ணிடறேன்..
மதன் ரேசர் மூலம் புவனாவின் காது மடலின் பின்புறத்தில் இருந்து கீழ் நோக்கி ஷேவ் செய்தான்.. அவன் செய்யும் போது வந்த அந்த ரேசரின் சத்தம் அமைதியாக இருந்த அந்த வீட்டில் இருவருக்கும் ஒருவித உணர்ச்சியை கொடுத்தது... ஷேவ் செய்த இடம் மட்டும் வேறு கலரில் தனியாக தெரிந்தது. அதே போல இருபக்கமும் மதன் செய்தான்..
பின்பு புவனாவின் செல்போனில் அதை படமெடுத்து காட்டினான். அந்த போட்டோக்களை பார்த்து புவனா ரசித்தாள். பின்பு அவள் மேல் போர்த்தியிருந்த வேஷ்டியை அவிழ்க்குமாறு சொன்னாள் புவனா..


சேரில் இருந்து எழுந்த புவனா மதன் நீதான் இனி என்னுடைய பெர்சனல் பார்பர்... இனிமேல் நான் அப்பப்போ உன் சலூனுக்கு அடிக்கடி வருவேன்..
சரிங்க மேடம்... நீங்க எப்ப வேணாலும் வரலாம் என்று புவனாவை கிண்டல் அடித்தான் மதன்...
ஒகே மதன்... இந்த விளையாட்டு இன்னிக்கு இதோட முடிச்சுக்குவோம்... நேரம் கிடைக்கும் போது நாம மறுபடியும் சின்ன விளையாட்டு விளையாடலாம்.. ஒகேவா...
ஒகே அக்கா. என்ற மதன் அவன் வீட்டிற்க்கு சென்றான்..!