Monday 1 March 2021

பிரகதியின் மாற்றம் - ஏழாம் பாகம்

March 01, 2021 4

   பிரகதியின் மாற்றம் - முதல் பாகம் 

பிரகதியின் மாற்றம் - இரண்டாம் பாகம் 

பிரகதியின் மாற்றம் - மூன்றாம் பாகம் 

பிரகதியின் மாற்றம் -  நான்காம் பாகம் 

பிரகதியின் மாற்றம் - ஐந்தாம் பாகம் 

பிரகதியின் மாற்றம் - ஆறாம் பாகம் 



பூசாரியிடம் சென்று பூஜைக்குரிய பொருட்களை அம்மா கொடுக்க, சரிம்மா நீங்க போய் வேண்டுதலை சாமிக்கு செலுத்திட்டு வாங்க.. நான் பூஜைக்கு ஏற்பாடு பண்றேன் என்றார். பின் அம்மா என்னைக் கூட்டிக் கொண்டு கோவிலுக்கு வெளியே வர, நான் எதுவும் புரியாமல் அம்மாவுடன் நடந்து வந்தேன்.


அம்மா கோவிலின் பின்னால் இருந்த ஒரு சின்ன குடிசைக்கு அழைத்து சென்றாள். அது இந்த திருவிழா சமயத்தில் மொட்டை அடிக்க போடப்படும் குடிசை.. அதை பார்த்ததும் என் வயிற்றில் ஒரு இனம் புரியாத உணர்வு. அம்மா தன் நீளமான அடர்த்தியான முடியை மொட்டை அடிக்க போகிறாளோ, அதை நான் மிக அருகில் இருந்து பார்க்க போகிறேன் என்று நான் நினைக்கும் போதே எனக்குள் மிகப்பெரிய மகிழ்ச்சி அடைந்தேன்..


நானும் அம்மாவும், அந்த குடிசைக்குள் நுழைய அங்கு மூன்று நாவிதர்கள் மட்டுமே திருவிழாவுக்கு வந்த பக்தர்களுக்கு மொட்டை அடித்து கொண்டு இருந்தனர். அவர்கள் மூவருமே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். அப்பா, அம்மா, அவர்களின் பையன் மட்டுமே. எங்கள் ஊர் திருவிழாவில் அவர்கள் மட்டுமே மொட்டை அடிப்பார்கள். 


அப்போது அந்த அம்மா ஒருவருக்கு மொட்டை அடித்து முடிக்க, அடுத்து அம்மா தான் தன் முடியை மொட்டை அடிக்க அந்த அம்மாவின் முன் உட்கார போகிறாள் என்று நான் என் அம்மாவை பார்க்க, அவள் தன் முடியை அவிழ்க்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள். 

அம்மா, முடி காணிக்கையா?

இல்லம்மா, மொட்டை அடிக்கணும்.

வாங்கம்மா, உட்காருங்க... 

மொட்டை எனக்கு இல்ல.. என் பையன் மதனுக்கு... 

சரிங்க அம்மா.. வாங்க தம்பி உட்காருங்க... என்றாள் அந்தம்மா...

நான் அதிர்ச்சியுடன் என் அம்மாவை பார்க்க, அவள் என்னை சட்டையை கழட்டி விட்டு மொட்டை அடிக்க உட்கார சொன்னாள். நான் என் அம்மா சொல்வதை தட்ட முடியாமல் என் சட்டையை கழட்டி கொண்டு அந்தம்மாவின் இருந்த ஒரு பலகையில் உட்கார, என் தலையில் தண்ணீரை தெளித்து சொட்ட சொட்ட நனைய வைத்து என் முடியை மொட்டை அடிக்க ஆரம்பித்தாள்.



நான் நினைத்தது ஒன்று.. ஆனால் நடப்பது வேறு... அது சரிதான்.. என் அம்மா தன் நீளமான முடியை கொஞ்சம் ட்ரிம் பண்ணக்கூட மறுத்து விடுவாள். அவள் மொட்டை அடித்து கொள்வாள் என்று ஆசையாக எதிர்பார்த்தது என்னுடைய தவறு தானே.. 

சில நிமிடங்களில் என் முடியை முழுமையாக மொட்டை அடித்து விட்டாள். பின் என் முகத்தில் இருந்த அடர்த்தியான தாடியையும் தண்ணீர் தடவி வழித்துவிட்டாள். என் அம்மா அருகில் நின்று இரு கைகளையும் குவித்து சாமி கும்பிட்டுக் கொண்டு இருந்தாள். தாடியை வழித்து முடித்ததும் அந்தம்மா என் கையை தூக்க சொல்ல, நான் தயங்கினேன். ஆனால் அந்தம்மா கொஞ்சமும் கூச்சப்படாமல் என் கையை தூக்கி அங்கு வளர்ந்து இருந்த முடியை ஷேவிங் செய்து விட்டாள். எல்லாம் முடிந்ததும் என் அம்மா பணம் கொடுக்க, நான் போய் குளித்து விட்டு, புதிய ஆடையை அணிந்து கொண்டு கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து கொண்டு வீட்டிற்க்கு வந்தோம்.. அதன் பின் எங்கள் ஊரில் சில வாரங்கள் இருக்க, எனக்கு என்னுடைய மொட்டை தோற்றம் பிடித்து விட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து ஒரு சலூன் கடையில் மீண்டும் நான் மொட்டை அடித்து கொண்டேன்.. ஆனால் இந்த முறை தலை முடி மட்டும் மொட்டை அடித்து கொண்டு தாடி, மீசையை அப்படியே விட்டு விட்டு புது கெட்டப்பில் என் வீட்டுக்கு வந்தேன்.. 

அதை பார்த்த என் அம்மா, கோபமடைந்தாள். உடனடியாக தாடி மீசையையும் ஷேவ் செய்ய சொன்னாள். என்னுடைய இந்த தோற்றம் அம்மாவுக்கு ஏன் பிடிக்கவில்லை என்று தெரியவில்லை. ஆனால் நான் ஷேவ் செய்ய முடியாது என்று மறுக்க அம்மா என்னை பிடித்து ஒரு சேரில் உட்கார வைத்தாள். 



இப்படியே உட்காரு.. இதோ இப்போ வர்றேன்.... என்று சொல்லிவிட்டு என் ரூமுக்குள் சென்றாள். அம்மா என்ன செய்ய போகிறாள் என்று நான் பார்த்துக் கொண்டு இருக்க, என் ரூமில் இருந்து வந்தவள் நேராக கிச்சன் சென்று ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்தாள். அதை பக்கத்தில் இன்னொரு சேரில் வைத்து விட்டு தண்ணீரை என் தாடியில் தெளித்து விட்டு, என் தாடியை ஷேவ் செய்ய நான் யூஸ் பண்ணும் ரேசரை எடுத்தாள். 

அம்மா, என்ன பண்ண போற?

ம்ம்ம்ம்.. பார்த்தா தெரியல, உன் தாடி எனக்கு பிடிக்கல... அதனால அதை எடுக்க போறேன்.. 



அம்மா, ப்ளீஸ் ம்மா... இது தான் இப்போ பேஷன்... கொஞ்ச நாளைக்கு இருக்கட்டும்...

நோ... அதெல்லாம் முடியாது... நான் சொன்னா சொன்னது தான்... சொல்லி விட்டு ஒரு பக்க கன்னத்தில் இருந்த என் தாடியை வழித்து எடுக்க ட்ரை பண்ண, அது அம்மாவுக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.. ஏனென்றால் என் தாடி கொஞ்சம் அடர்த்தியாக இருக்கும்...

ஆனாலும் அம்மா விடாமல் என் முடியைக் கொஞ்சம் கொஞ்சமாக வழித்து எடுக்க, ரேசரில் முடி நிறைய சிக்கிக் கொண்டது. அதை அம்மா க்ளீன் பண்ண, நான் என் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தேன். அம்மாவால் என் அடர்த்தியான தாடியை சரியாக வழித்து எடுக்க முடியாமல் அங்கங்கே பிசிறு பிசிறாக இருந்தது. அம்மா முடியை க்ளீன் செய்து விட்டு, மீண்டும் ஷேவ் செய்ய வர, நான் தடுத்தேன்..



ரேசரை கொடுங்க நானே பண்ணிக்கிறேன்... 

வாங்கிக் கொண்டு,  அம்மாவைக் கண்ணாடியைப் பிடிக்கச் சொல்லி விட்டு, நானே ஷேவ் செய்ய ஆரம்பித்தேன். என் தாடியை எனக்கு ஷேவ் செய்து பழக்கம் இருந்ததால் நான் சுலபமாக எடுத்துவிட்டேன். அம்மா கண்ணாடியைப் பிடித்துக் கொண்டு நான் ஷேவ் செய்வதையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

பின் வழித்து முடித்ததும் என்னுடைய முகத்தில் கொஞ்சம் தண்ணீர் தடவி ஒட்டிக் கொண்டு இருந்த முடியைக் கழுவி விட்டு, அம்மாவின் முந்தானையை இழுத்து என் முகத்தைத் துடைத்து விட்டு இப்பொழுது கண்ணாடியைப் பார்க்க, நான் மொழு மொழு முகம், மற்றும் மொட்டைத் தலையோடு இருந்தேன். அம்மா என்னைக் கட்டி பிடித்துக் கன்னத்தில் முத்தமிட்டாள்.



மதன் இனிமேல் நீ முடி எடுக்காதே.. அதே சமயம் தாடி வைக்கவே கூடாது.. சரியா? 

சரிம்மா!

அடுத்த சில நாட்களில் சென்னையில் வேலையில் சேர சொல்லி ஆர்டர் வர, நாங்கள் எங்கள் உறவினர்கள், மற்றும் ஊர்க்காரர்கள் எல்லோரிடமும் சொல்லி விட்டுச் சென்னை கிளம்பி வந்தோம். நான் பார்த்து வைத்து இருந்த வீடு அம்மாவுக்கு ரொம்பவே பிடித்து இருந்தது. நான் அடுத்த நாள் வேலையில் சேர, அம்மா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள்.



*****************************************************************************









Stunning Telugu actress the latest photoshoot

March 01, 2021 0

 

Stunning Telugu actress the latest photoshoot