Wednesday 29 September 2021
நந்தினி மெல்ல மெல்ல திவ்யாவின் முடியை மழிக்க, அவளுடைய முடி எல்லாம் அவளுடைய கன்னத்தைத் தடவிக் கொண்டு கீழே விழுந்தது. திவ்யா அவள் முகத்தில் ஒட்டிக் கொண்டு இருந்த முடியை ரசித்துக் கொண்டு இருந்தாள். திவ்யாவின் இடது பக்கம் முழுவதும் முழுமையாக மொட்டை அடித்து இருக்க, இப்போது வலது பக்கம் முடி மட்டும் மீதம் இருந்தது. நந்தினி மீண்டும் ஒரு முறை பிளேடு மாற்ற, திவ்யா இடது பக்க மொட்டைத் தலையைத் தடவி பார்த்து ரசித்தாள்.
திவ்யாவின் அக்கா, ஏய் இனிமேல் அந்த மொட்டை உன் கூடவே தான் இருக்கும்... அப்புறம் தடவிக்கலாம், உன் கையை வச்சுட்டு சும்மா இருடி என்று சொல்ல, திவ்யா கூச்சத்துடன் கையை எடுத்தாள்.நந்தினி இடது பக்கம் கை வைத்து வலது பக்கம் தெரியுமாறு திவ்யாவின் தலையைத் திருப்பி விட்டு, கொஞ்சம் மெதுவாகவே மழிக்க, எல்லா முடிகளும் கீழே கொத்தாக விழ, திவ்யாவின் மொட்டைக் கடைசிக் கட்டத்தில் இருந்தது.
நந்தினி திவ்யாவின் மண்டையில் அழுத்திப் பிடித்துக் கொண்டு, சிரைத்து விட, அவள் தலையில் இருந்த கடைசி முடியும் விழுந்தது. திவ்யா முழுமையாக மொட்டைத் தலையுடன் இருந்தது. திவ்யா தலையைத் தடவி கொண்டே எழ, நந்தினி அவள் கையைப் பிடித்து இழுத்து உட்கார சொன்னாள்.
என்னடி, அதான் முடிஞ்சுதே?
நீ பேசாம உட்காரு! என்று நந்தினி சொல்ல, திவ்யா குழப்பதுடன் உட்கார்ந்தாள்.நந்தினி திவ்யாவின் மொட்டைத் தலையில் தண்ணீரை தடவி விட்டு மசாஜ் செய்தாள். பின் சவர கத்தியை வைத்துத் திவ்யாவின் மொட்டைத் தலையை மீண்டும் சிரைக்க, திவ்யா அமைதியாக ரசித்தாள். திவ்யாவின் உச்சியிலிருந்து புருவம்வரை சிரைத்து விட்டு, கிருதா பக்கம் காது ஒரங்கள் என்று எல்லா இடமும் சிரைத்தாள். அதே போல மூன்று முறை சிரைக்க, திவ்யா இப்போது முழுமையாக மொட்டச்சி ஆனாள். குமார் கூட இந்த அளவுக்கு ஸ்மூத்தாக மழித்தது இல்லை. திவ்யாவின் அக்கா அருகில் வந்து அவளுடைய மொட்டைத் தலையை தடவி பார்த்தாள்.
பின் திவ்யா எழ, அவள் மடியில் இருந்த முடி எல்லாம் கீழே விழுந்தது. திவ்யா அப்படியே தன் தங்கை நந்தினியை கட்டி பிடித்துக் கொண்டாள். நந்தினியின் நெற்றியில் முத்தம் கொடுத்தாள் திவ்யா.
நந்து, தேங்க்ஸ்டி... வேற யாரு மொட்டை அடிச்சி இருந்தாலும், கொடுக்கிற காசுக்குத் தான் வேலை பார்த்து இருப்பாங்க... ஆனா நீ எனக்கு ரொம்ப கவனமா சூப்பரா மொட்டை அடிச்சிருக்க என்றாள் திவ்யா.
நந்தினியும் திவ்யாவை குனிய வைத்து அவளுடைய மொட்டைத் தலையில் ஒரு முத்தம் கொடுத்தாள். திவ்யாவின் மொட்டைத் தலையில் இருந்த சிறு சிறு முடிகள் நந்தினியின் உதட்டில் ஒட்டிக் கொள்ள நந்தினி திவ்யாவின் உடையில் அவள் வாயைத் துடைத்தாள்.பின் திவ்யா தன் புத்தம் புதிய மொட்டைத் தலையைத் தடவிக் கொண்டே குளிக்கப் போனாள். திவ்ய குளித்து விட்டு (அதெல்லாம் சென்சார் பண்ணியாச்சு) துண்டால் மொட்டைத் தலையைத் துடைக்கத் துண்டு மொட்டைத் தலையில் சொர சொரவென்று இழுத்தது. திவ்யா இப்போது பட்டுப் பாவாடை சட்டை போட்டு வரத் திவ்யாவின் அக்கா அவள் அழகை ஆச்சர்யமாகப் பார்த்தாள். அழகு தேவதையாக இருந்த திவ்யா இப்போது மொட்டைத் தேவதை ஆகிவிட்டாள். நந்தினி தயாராக வைத்து இருந்த குழைத்த சந்தனத்தை தடவ, சந்தனம் அவளுடைய மொட்டைத் தலையில் பட்டதும் ஜில்லென்று இருக்க, திவ்யாவின் உடல் முழுவதும் சிலிர்த்தது.
கிராமத்து தென்றல் காற்றும், சந்தனமும் திவ்யாவின் மொட்டைத் தலையில் இருக்கும்போது திவ்யாவிற்க்கு அவள் தலையில் யாரோ மிகப்பெரிய ஐஸ் கட்டியை வைத்தது போல இருக்க, திவ்யாவின் அக்கா பொங்கல், மற்றும் பூஜை பொருட்களை எடுத்து வர, மூவரும் சாமி கும்பிட்டனர். பின் சாப்பிட்டு விட்டுக் குமாரின் வீட்டுக்குப் போய்ச் சவரக் கத்தியைக் கொடுத்து விட்டு வந்தனர்.
கிராமத்தில் அத்தனை பேரும் திவ்யாவின் மொட்டைத் தலையை ஆச்சர்யமாகப் பார்த்தனர். வயது வந்த ஒரு இளம்பெண் தன்னுடைய முடியை மொட்டை அடித்துக் கூச்சம் இல்லாமல் வரும் அழகை அந்த கிராமத்தின் இளவட்டங்கள் ரசித்தனர். திவ்யா அவர்கள் பார்க்க வேண்டும் என்றே சில இடங்களில் நின்று செல்பி எடுத்துக் கொண்டு இருந்தாள். இருவரும் திரும்பிக் கோவிலுக்கு வர, திவ்யா பாத்ரூம் போவதாகச் சொல்லி விட்டு, மொட்டை அடித்த இடத்திற்க்கு வந்தாள். அங்குக் கிடந்த அவளுடைய முடியை மொத்தமாகக் கையில் அள்ளிப் பார்த்தாள். அந்த அளவுக்கு முடி மீண்டும் வளர இன்னும் ஐந்து வருடம் ஆகும் என்று நினைத்தாள் திவ்யா.
மூவரும் கிராமத்திலிருந்து கிளம்பினர்.இடையில் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு அதிகாலையில் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். திவ்யாவின் அம்மாவும், அப்பாவும் அவளுடைய மொட்டைத் தலையை பார்த்து ஆச்சர்யப்பட்டனர். திவ்யா கிராமத்தில் நடந்த விஷயங்களைச் சொல்லி, தன் தங்கை நந்தினி தான் தனக்கு மொட்டை அடித்தாள் என்றும் சொன்னாள் திவ்யா... நந்தினியும் அங்கேயே அன்று தங்கிக் கொள்ள, இரவு முழுவதும் பயணம் செய்த களைப்பால் அன்று லீவ் போட்டுவிட்டு திவ்யாவும், நந்தினியும் ரெஸ்ட் எடுத்தனர்.
திவ்யாவின் பெற்றோர் இருவரும் அவர்களுக்கும் சமைத்து வைத்து விட்டு வேலைக்குக் கிளம்பினர். திவ்யாவின் அக்கா அவள் வீட்டுக்குச் சென்று விட, திவ்யாவும் நந்தினியும் நன்றாகத் தூங்கினர். தூங்கும் போதும் திவ்யா தன் மொட்டைத் தலையை தடவிக் கொண்டே தூங்கினாள்.
பதினொரு மணிக்கு அவள் வீட்டு வழியாகச் சென்ற மினி பஸ்ஸின் ஹார்ன் சத்தம் கேட்டு இருவரும் எழுந்தனர். திவ்யா நந்தினியை எழுப்பி விட்டு ப்ரெஷ் அப் ஆகி வந்தாள். நந்தினி பாத்ரூம் சென்று ப்ரெஷ் அப் ஆகி, ஒரு ஸ்லீவ்லெஸ் பனியனும் ஒரு குட்டை பாவாடையும் அணிந்து கொண்டு வந்தாள். திவ்யா அதே பாவாடை சட்டையோடு இருக்க, இருவரும் சாப்பிட்டனர். பின் சன் மியூசிக்கில் பாட்டு போட்டுக் கொண்டு ஜாலியாகப் பேசிக் கொண்டு இருந்தனர்.
திவ்யா சோபாவில் உட்கார்ந்து இருக்க, அவள் அருகில் வந்து உட்கார்ந்த நந்தினி திவ்யாவின் மொட்டைத் தலையை தடவி பார்த்தாள். ஒரு நாள் ஆகி விட்டதால் அந்த வழுக்கை கொஞ்சம் குறைந்து, சொரசொரப்பாக இருக்க, நந்தினிக்கு அவள் தலையை ரொம்பவே ரசித்துத் தடவினாள்.
என்னடி பண்ற?
இல்லக்கா, உன் மொட்டைத் தலை தடவ ரொம்ப நல்லா இருக்கு... அதான்...
அக்காங்கற பயம் உனக்கு விட்டுப் போச்சுல...
அப்படி இல்லக்கா... இப்போ நாம ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் ஆயிட்டோம்ல... அதான் பயமில்லை...
ம்ம்ம்ம்... உனக்கு மொட்டைத் தலையைத் தடவணும்னு ஆசை இருந்தா நீயும் உன் முடியை மொட்டை அடிச்சுக்கோ...
அதெல்லாம் வேண்டாம்க்கா...
ஏய், நான் வேணா உனக்கு மொட்டை அடிச்சு விடுறேன்...
அய்யோ... போ அக்கா... உன்னால எல்லாம் முடியாது...
உன் தலையைக் கொடுத்துப் பாரு... எப்படி மொட்டை அடிக்கிறேன்னு...
வேண்டாம்க்கா... எனக்குப் பயமா இருக்கு...
ஏண்டி... நான் மட்டும் உன்னை நம்பி என் தலையைக் கொடுத்தேன்ல...
அது... உனக்கு அப்போ வேற வழி இல்லை... அதான் எங்கிட்ட வந்த...
அப்படி எல்லாம் இல்லை... நீ தான் உன் ஆசையைத் தீர்த்துக்க... என் தலையைப் பிளான் பண்ணி மொட்டை அடிச்சிட்ட...
நான் என்னக்கா பிளான் பண்ணேன்...
ஏண்டி... குமார் அம்மாகிட்ட நான் பேசிட்டு இருக்கும்போது போனை பிடுங்கி பேசியது யாரு?
அது... அது...
நீ தானே கத்தி மட்டும் கிடைச்சா போதும்னு சொல்லி என்னைப் பேச விடாம கூட்டி வந்த... அப்பவே என் முடியை மொட்டை அடிக்கப் பிளான் பண்ணிட்ட...
அய்யோ... அக்கா அப்படி எல்லாம் இல்லக்கா...
உண்மைய ஒத்துக்கோ... நீ தான் பிளான் பண்ணி மொட்டை அடிச்சிட்ட்ட...
சரி, ஆமா... நான் தான் பிளான் பண்ணி உன் முடியை மொட்டை அடிச்சி என் ஆசையைத் தீர்த்துட்டேன்... அதுக்கு என்ன பண்ண...?
இப்போ நீ உன் முடியை மொட்டை அடிக்கணும்... அதுவும் நான் தான் உன் முடியை மொட்டை அடிக்கணும்... அதுவும் இப்போவே...!
அக்கா... ப்ளீஸ் அக்கா... நீ என்ன கேட்டாலும் நான் பண்றேன்... ஆனா மொட்டை மட்டும் வேணாம்...
அதெல்லாம் முடியாது... வா என்று திவ்யா நந்தினியை அவளுடைய ரூமுக்கு கூட்டி சென்றாள். திவ்யா நந்தினியை ட்ரஸ்ஸிங் டேபிள் முன் உட்கார வைத்து அவள் தலை முடியைத் தன் கையால் சீவி விட்டாள். நந்தினிக்கு எப்படி திவ்யாவிடமிருந்து தப்பிப்பது என்று தெரியவில்லை. ஆனால் அவள் திவ்யாவுக்கு மொட்டை அடிக்கும்போது கிடைத்த ஒரு இனம் புரியாத ஒரு உணர்வைப் பற்றி யோசித்தாள். அந்த உணர்வைத் தானும் அனுபவித்தால் எப்படி இருக்கும் என்று நினைக்க, நந்தினி தானும் மொட்டை அடிப்பது என்று அந்த கணத்தில் முடிவு செய்தாள்.