Thursday 20 August 2020

ரெட்டை ரோஜா - இரண்டாம் பாகம்

August 20, 2020 3


பத்து நாப்பதுக்கு பார்லருக்குச் சென்று ஹாசினி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு விஷயத்தை சொல்ல, அவளை ரிஷப்ஷனில் காத்து இருக்க சொன்னார்கள். அங்கு இருந்த சோபாவில் இருவரும் உட்கார, அங்கு இருந்த போட்டோக்களை பார்த்துக் கொண்டு இருந்தாள் ஹரிணி. அவளை விட சிறு வயது பெண்கள் கூட தங்கள் முடியை மொட்டை அடித்து கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருந்தனர். சில நிமிடங்கள் கழித்து ஹாசினியை உள்ளே கூப்பிட, அவளுடன் கூடவே ஹரிணியும் சென்றாள். 

ஹாய், ரெண்டு பேர்ல யாரு ஹாசினி..?

நான் தான் ஹாசினி... நான் தான் என் ஹேரை டொனேட் பண்ண போறேன்.. இவ  என் தங்கை ஹரிணி...



ஓ... சோ க்யூட்... ரெண்டு பேரும் ஒரே மாதிரி அழகா இருக்கீங்க.. முதல் முறை  ட்வின்ஸ்ஸை இப்போ தான் பாக்குறேன்..   

ஓ.. இட்ஸ் ஒகே....

சரி வாங்க இந்த சேர்ல உட்காருங்க...! எந்த அளவுக்கு முடியை கட் பண்ணணும்னு சொன்னா பண்ணிடலாம்...!

இல்ல, கட் பண்ண வேண்டாம்... மொட்டை அடிச்சிடுங்க.... 

நிஜமாவா சொல்றீங்க... மொட்டை அடிக்கலாமா...

ம்ம்ம்... ஆமாங்க... அதுக்காக தான் நான் வந்தேன்...

ஓகே... சரி.. அப்போ கொஞ்சம் உங்களை மொட்டை முன்னாடி நீளமான முடியோட போட்டோ எடுத்துட்டு, அப்புறம் மொட்டை அடிக்கலாம்... அப்படியே நீங்க வீடியோல எதுக்காக உங்க முடியை மொட்டை அடிக்கீறீங்கன்னு சொன்னா மத்த பொண்ணுகளுக்கு ஒரு மோட்டிவ்வா இருக்கும்...!



ஒகே... அப்படியே பண்ணுங்க... என்று ஹாசினி சொல்ல, அந்த பியூட்டிஷியன் வீடியோ எடுக்கும் போது ஹரிணியையும், ஹாசினியுடன் நிற்க சொல்ல அவளும் போய் நின்றாள். பின் ஹாசினி பேச ஆரம்பித்து இடையில், வார்த்தைகள் வராமல் திணற ஹரிணி சில வார்த்தைகள் பேச, அதுவும் வீடியோ எடுக்கப்பட்டது.
பின் வீடியோ எடுத்ததும் அதை, இருவரிடமும் போட்டுக் காட்டினாள் அந்த பியூட்டிஷியன். அதன் பின் ஹாசினியை ஒரு ரோலிங் சேரில் உட்கார சொல்லி விட்டு, அவளை சுற்றி ஒரு கருப்பு துணியை போர்த்தி விட்டாள் பியூட்டிஷியன்.  


மேடம், இப்போ நாங்க ஒரு சின்ன கேம் வச்சு இருக்கோம்.. அதை ட்வின்ஸ் சிஸ்டர்ஸ் நீங்க ரெண்டு பேரும் ப்ளே பண்ணா சூப்பரா இருக்கும்... பண்ணலாமா?

ஓகே... என்ன கேம்? - ஹாசினி...

பர்ஸ்ட் உங்க லெப்ட் சைட் ஹேர் மட்டும் ஷேவ் பண்ணிட்டு, அதுக்கப்புறம் உங்க சிஸ்டருக்கு அவங்களோட ஹாப் ஹெட் ஷேவ் பண்ணுவோம்... அது வரை நீங்க பாதி மொட்டை அடித்த தலையோட வெயிட் பண்ணனும்... அதே மாதிரி அவங்களும் வெயிட் பண்ணனும்.. இதான் கேம்?

ஓ... ஸாரி... என்னோட சிஸ்டர் ஹேர் டொனேட் பண்ண வரல... ஜஸ்ட் என்னை ட்ராப் பண்ண தான் வந்தா... நீங்க தப்பா புரிஞ்சிட்டீங்க..

ஓ...ரியல்லி ஸாரி மேடம்.. நீங்களும் ஹேர் டொனேட் பண்ண போறீங்கன்னு நினைச்சுட்டேன்.. என்னோட தப்பு தான்.. வெரி ஸாரி...

இல்லங்க.. பரவாயில்லை... நானும் ஹேர் டொனேட் பண்ணனும்னு தான் இருக்கேன்... நானும் என் ஸிஸ்டர் கூட ஹேர் டொனேட் பண்ண ரெடி... நீங்க சொன்ன மாதிரி இந்த கேம் நாங்க விளையாடுறோம்... 

என்று ஹரிணி சொல்லவும், ஹாசினி அதிர்ச்சியும், ஆச்சர்யமும் கலந்து அவளை பார்த்தாள். 



நிஜமாவா சொல்றீங்க மேடம்?

யெஸ், ஐம் ரெடி டூ ஷேவ் மை ஹெட்..!

பியூட்டிஷியன் ஒரு மேல் ஹேர் ஸ்டைலிஸ்ட்டை வர சொல்லி, ஹாசினிக்கு அவளின் பாதி தலை முடியை மட்டும் மொட்டை அடிக்க சொன்னாள். ஸ்டைலிஸ்ட் தனக்கு தேவையான பொருட்களை ஒரு சர்ஜரிக்கு ரெடி பண்ணுவது போல எடுத்து வைத்தான். அதை கண் கொட்டாமல் ஹாசினி பார்த்துக் கொண்டு இருந்தாள். பின் ஸ்டைலிஸ்ட் ஹாசினியின் இடது பக்கம் மட்டும் வாட்டர் ஸ்ப்ரே செய்து விட்டு, ஒரு ரேசரை எடுத்து, சுத்தப்படுத்தி விட்டு ஸ்டைலாக அதில் ப்ளேடு போட்டு விட்டு ஹாசினியின் அருகில் வந்து நின்றான்.

மேடம், ரெடியா? 

ம்ம்ம் யெஸ்.. ரெடி!


ஸ்டைலிஸ்ட் ஹாசினியின் தலையை கொஞ்சமாக தன் பக்கம் சாய்த்துக் கொண்டு ஹாசினியின் ஈரமான முடியை ஷேவ் செய்ய, அங்கு இருந்த ஒரு ஹெல்ப்பர் ஒரு அதிநவீன DSLR கேமராவில் வீடியோ எடுத்து கொண்டு இருந்தாள்.ஹாசினியின் முடி கொஞ்சம் கொஞ்சமாக சிரைக்கப்பட, அவளது மொட்டை தலை சந்தன நிறத்தில் அழகாக இருந்தது. 

ஹரிணியும் பின்னால் இருந்து ஒரு சேரில் உட்கார்ந்து கொண்டு ஹாசினியின் தலை முடி ஷேவ் செய்யப்படுவதை பார்த்துக் கொண்டு இருந்தாள். திமிராக தானும் மொட்டை அடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு கொஞ்சம் பதட்டமாக இருந்தாள் ஹரிணி.சில நிமிடங்களில் ஹாசினியின் ஒரு பக்க தலை முடி ஷேவ் செய்து, ஒரு பக்கம் நீண்ட முடியுடன் இருந்தாள்.

அது ஒரு யுனிசெக்ஸ் பார்லர் என்றாலும், பெண்களுக்கு என்று தனியாக இருந்த பகுதியில் தான் ஹாசினிக்கு மொட்டை அடிக்கப்பட்டது. ஆனாலும் அங்கு இருந்த எல்லோரும் ஒரு பெண் தன் நீண்ட முடியை மொட்டை அடிக்கிறாள் என்று தெரிந்ததும்  மென்ஸ் பார்லர் பகுதியில் இருந்த எல்லோரும் ஆர்வமாக எட்டி பார்த்தனர். 

ஸ்டைலிஸ்ட் ஹாசினியின் ஒரு பக்க தலை முடியை மொட்டை அடித்து முடிந்ததும், இப்படியே ஹரிணிக்கு மொட்டை அடிக்கும் வரை பாதி மொட்டை தலையுடன் இருக்கும்  சவாலுக்கு தயாரா என கேட்க, ஹாசினியும் சரி என்று சொல்ல, ஸ்டைலிஸ்ட் ஹாசினியை சேரை விட்டு இறங்க சொல்ல, ஹாசினி தன் மேல் போர்த்தி இருந்த துணியை கழட்டி விட்டு சேரில் இருந்து இறங்க, ஸ்டைலிஸ்ட் இப்போது ஹரிணியை சேரில் ஏறி உட்கார சொல்ல, அவள் ஏறி உட்கார, ஸ்டைலிஸ்ட் அதே துணியை ஹரிணிக்கு போர்த்தி விட்டான். 


அப்போது இன்னும் சில பெண்கள் பார்லருக்கு வர, பாதி மொட்டை அடித்த தலையுடன் உட்கார்ந்து இருந்த ஹாசினியை எல்லோரும் பார்க்க, அவளுக்கு ஒரே வெட்கமாக இருந்தது. ஆனால் முதலில் எல்லோரும் ஹாசினியின் பாதி மொட்டை தலையை பார்த்து சிரிக்க, பின் அங்கு இருந்த ஒரு பெண் ஹாசினி ஹேர் டொனேட் பண்ணுவதையும், இப்படி ஒரு சேலஞ்ச் தாங்கள் அவர்களுக்கு கொடுத்தும் அதை தைரியமாக கேன்சர் நோயாளிகளுக்காக செய்கிறார்கள் என்று சொல்ல, எல்லோரும் ஹாசினியை கட்டி பிடித்து ஆறுதல் சொல்லி, அவளது தியாகத்தை பாராட்டினார்கள்.

அதற்க்குள் ஸ்டைலிஸ்ட் ஹரிணியின் பாதி தலை முடியை மொட்டை அடித்து இருந்தான். அதையும் கேமராவில் வீடியோ எடுத்து கொண்டு இருந்தாள் ஒரு பெண். பாதி மொட்டை தலையுடன் ஹரிணி இறங்கி வர, இப்போது ஹாசினி மீதம் இருந்த முடியை மொட்டை அடிக்க சேரில் ஏறி உட்கார, ஸ்டைலிஸ்ட் ஹாசினியின் தலை முடியை மீண்டும் வாட்டர் ஸ்ப்ரேயர் அடித்து விட்டு, சிரைக்க ஆரம்பித்தான். அங்கு இருந்த பெண்கள் ஹாசினியும், ஹரிணியும் ட்வின்ஸ் என்பதை அறிந்து இன்னும் ஆச்சர்யப்பட்டனர். பின் இருவரும் ஒரே மாதிரி ஹேர் டொனேட் பண்ணனும்னு நினைத்ததை எல்லோரும் பாராட்டினார்கள். பார்லருக்கு வந்து இருந்த ஒரு பெண் ஹாசினி, ஹரிணியின் ஹேர் டொனேட்டை பார்த்து விட்டு தானும் தன் முடியை டொனேட் பண்ண ஆசைப்படுவதாக சொன்னாள். சில நிமிடங்களில் ஹாசினியின் தலை முடி முழுவதும் மொட்டை அடிக்கப்பட்டது.

எல்லோரும் பார்க்க, ஹாசினியின் மொட்டை தலையில் க்ரீம் எடுத்து ப்ரெஷ் போட்டு நுரை பொங்க விட்டு, ரேசரால் மீண்டும் ஒரு முறை மழித்துவிட்டான். இப்போது ஹாசினியின் தலை மொழு மொழுவென இருந்தது.



பின் ஹாசினி இறங்கி வர, ஹரிணி ரோலிங் சேரில் ஏறி உட்கார, ஸ்டைலிஸ்ட் கொஞ்சம் டயர்டாக இருந்தான். ஹரிணி சேரில் உட்கார வைத்து விட்டு சில நிமிடங்களில் வருகிறேன் என்று சொல்லி விட்டு சென்றான். ஹரிணி பாதி மொட்டை அடித்த தலையுடன் சேரில் உட்கார்ந்து இருக்க, பெண்கள் எல்லோரும் ஜாலியாக அரட்டை அடித்தனர். சில நிமிடங்கள் கழித்து ஸ்டைலிஸ்ட் வந்தான். அதன் பின் ஹரிணியின் பாதி முடிக்கு வாட்டர் ஸ்ப்ரேயர் அடித்து விட்டு, புதிய ரேசரில் முடியை மழித்து விட, காத்து இருந்த எல்லா பெண்களும் ஹரிணிக்கு மொட்டை அடிப்பதை ஆர்வமுடன் பார்த்தனர். ஒரு பெண் எழுந்து பார்பர் அருகில் வந்து நின்று கொண்டு ஹரிணியின் முடியை சிரைப்பதை ஆசையோடு பார்க்க, அதன் பின் ஒவ்வொருவராக எழுந்து வந்து பார்பர் அருகில் ஹரிணியை சுற்றி நின்று கொண்டு, ஹரிணியின் மொட்டையை ரசித்தனர். கூட்டத்தில் ஹாசினியும் நின்று கொண்டு ஹரிணியின் தலை முடியை மொட்டை அடிக்கப்படுவதை ரசித்தாள்.

ஹரிணியின் தலை முடி, ஹாசினியின்  விட அடர்த்தி அதிகமாக இருந்ததால் சவரம் செய்ய கொஞ்சம் கடினமாக இருந்தது ஸ்டைலிஸ்ட்க்கு. அதனால் அடிக்கடி தண்ணீரை தடவி விட்டு கொண்டே ஹரிணியின் தலை முடியை மொட்டை அடித்தான் ஸ்டைலிஸ்ட். சில நிமிடங்களில் ஹரிணியின் தலையும் மொட்டை தலை ஆனது. ஸ்டைலிஸ்ட் ஹரிணியின் தலையை தன் கையால் தடவி பார்க்க, ரொம்பவும் சொரசொரவென இருக்க, அவன் மீண்டும் மீண்டும் தலை முழுவதும் தடவிக் கொண்டே இருந்தான்.


ஏங்க, உங்க ஸிஸ்டர்க்கு பண்ண மாதிரி போம் போட்டு ஷேவ் பண்ணா தான் நல்ல ஷைனிங் கிடைக்கும்... என்ன பண்ணலாம்?

ஹரிணி என்ன சொல்வது என்று தெரியாமல் வெட்கப்பட, ஹாசினி தான் ஸ்டைலிஸ்ட்க்கு பதில் சொன்னாள்.

ஆமாங்க, ரொம்ப ரஃப்பா இருக்கு... நீங்க சொன்ன மாதிரி பண்ணுங்க... எனக்கு இருக்க மாதிரி ஷைன்னா இல்லைன்னா, வீட்ல போய் என்னோட சண்டை பிடிப்பா..!!

ஓ.. அப்படியா!! அப்போ நீங்க சண்டை எல்லாம் போடுவீங்களா?

இது என்ன கேள்வி? அக்கா, தங்கச்சிக்குள்ள சண்டை வராம இருக்குமா?

அது இல்லங்க... நீங்க மத்தவங்க மாதிரி இல்லையே.. ட்வின்ஸ்ல அதான் ரெண்டு பேரும் ரொம்ப பாசமா இருப்பீங்கன்னு நினைச்சேன்...

ம்ம்ம்.. கரெக்ட் தான்.. ரொம்ப பாசமா இருப்போம்.. அதே சமயம் ரொம்ப டெர்ராவும் இருப்போம்... 

இதை கேட்டு எல்லோரும் சிரிக்க, ஸ்டைலிஸ்ட்ம் சிரித்துக் கொண்டே, ஹரிணியின் மொட்டை தலையில் க்ரீம் எடுத்து தடவி விட்டு, ப்ரெஷ்ஷால் நுரை பொங்க தலை முழுவதும் போம் தடவி விட்டு, ரேசரில் புதிய ப்ளேடு போட்டு விட்டு ஹரிணியின் சிறு சிறு முடியை சிரைத்தான். க்ரீம்மால் ரேசர் அந்த சிறு சிறு முடியை மொத்தமாக மழிக்க  ஆரம்பிக்க, ஹரிணியின் தலை ஷைனிங்காக மின்ன, கொஞ்சம் கொஞ்சமாக ஹரிணியின் தலை மொழு மொழுவென ஆனது.
எல்லாம் முடிந்ததும் மீண்டும் ஒரு முறை தண்ணீர் மட்டும் தடவி விட்டு ரிவர்ஸ் ஷேவ் செய்து விட்டு, ஹரிணியை அவள் தலையை தடவி பார்க்க சொல்ல, ஹரிணியும் கொஞ்சம் எக்ஸைட்டாக தன் கையால் மொட்டை தலையை தடவி 
பார்க்க முடி இருந்த அடையாளமே இல்லாமல் மொழு மொழுவென இருந்தது.


பின் ஹரிணி சேரில் இருந்து இறங்கி சுற்றி நின்ற எல்லோரும் ஹரிணிக்கு வாழ்த்து சொல்ல, ஹாசினி அழுகையுடன் தன் சகோதரியை கட்டிக் கொண்டாள். தனக்காக தான் விரும்பிய காரணத்துகாக எதுவுமே சொல்லாமல் தன்னுடன் தன் அழகை தியாகம் செய்த தன் தங்கையை கட்டி பிடித்து கொண்டு அழுதாள் ஹாசினி. அதனால் ஹரிணியும் உணர்ச்சிவசப்பட்டு அழ, சுற்றி இருந்த எல்லோரும் அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்கள்.

ஏன்மா அழறீங்க? ரெண்டு பேரும் சுய நலம் இல்லாமல் யாரோ தெரியாத ஒருத்தர்க்கு உதவி பண்ணி இருக்கீங்க... அவங்க கஷ்டத்துல நீங்களும் பங்கெடுத்துட்டு இருக்கீங்க.. இது சாதாரண விஷயம் இல்லை.. அதுவும் இந்த சின்ன வயசுல இப்படி உதவ நல்ல மனசு வேணும்.. அழாதீங்கம்மா!

இல்லங்க.. எங்க முடியை இழந்துட்டோம்னு நான் அழலை.. நான் மட்டும் தான் ஹேர் டொனேட் பண்ண இங்க வந்தேன்.. ஆனா என் ஹரிணி நான் எதுவும் சொல்லாமயே எனக்காக அவளும் ஹேர் டொனேட் பண்ணா... ஏன்னா நாங்க ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்து எப்பவும் ஒரே மாதிரி இருக்கணும்னு எங்கம்மா சொல்வாங்க... ஆனா நான் ஹேர் டொனேட் பண்ண நினைச்சப்ப ஹரிணியை பத்தி யோசிக்கவே இல்லை... ஆனா அவ என் விருப்பத்துக்காக அவளும் மொட்டை அடிச்சி என் மேல எவ்ளோ அன்பு வச்சு இருக்கான்னு காட்டிட்டா...



ஆமாடா ஹாசினி... எப்பவும் நீங்க ரெண்டு பேரும் இதே மாதிரி ஒற்றுமையா, பாசமா இருக்கணும்... என்று சொல்ல, சரி என்று சொன்னார்கள் இருவரும். பின் பார்லரில் இருந்த ஒரு பெண் ஹாசினி, ஹரிணி இருவரிம் ஹேர் டொனேட் பண்ணியதை வீடியோவாகவும், போட்டோவாகவும் எடுத்து இருந்ததை காட்ட, எல்லோரும் பார்த்து ரசித்தார்கள்.

கேர்ள்ஸ்.. நீங்க ரெண்டு பேரும் எங்க NGO அமைப்புக்கு இன்னொரு உதவி பண்ணனும்...

சொல்லுங்க மேடம்.. என்ன பண்ணனும்?

இல்ல.. நாங்க உங்க போட்டோவை, வீடியோவை ப்ரோமோட் பண்ண பர்மிஷன் தரணும்.. ஏன்னா உங்க போட்டோ, வீடியோவை கேன்சர் அவர்னெஸ்க்காக ஷேர் பண்ணா இன்னும் நிறைய பேர் ஹேர் டொனேட் பண்ணுவாங்க... நிறைய பேஷண்ட்ஸ் இதனால பயன் அடைவாங்க... ப்ளீஸ்ப்பா... யோசிச்சு சொல்லுங்க...


இதுல யோசிக்க என்ன இருக்கு மேடம்? நல்லது நடக்கும்னா தாராளமாக எங்க போட்டோஸ் யூஸ் பண்ணிக்கோங்க.. என்று ஹரிணியே சொல்ல ஹாசினி அவளை ஆச்சர்யமாக பார்த்தாள்.

என்னடி அப்படி பாக்குற?

இல்ல.. வீட்ல அம்மாட்ட நீ முடியை கட் பண்ணக்கூட மாட்டேன்னு சொன்ன... ஆனா இங்க வந்ததும் மொட்டை அடிச்சிக்கிட்ட... இப்போ போட்டோவும் ஷேர் பண்ண சொல்ற... எனக்கு புரியல..

ஒண்ணும் இல்லடி... நீ பண்ற எதுவும் தப்பா இருக்காது.. எல்லாம் சரியா தான் இருக்கும்.. என் அக்கா செய்ற எந்தவொரு விஷயமும் நல்லது தான்னு உன் மேல நான்  நம்பிக்கை வச்சு இருக்கேன்.. என்று ஹரிணி சொல்ல... ஹாசினி அவளை செல்லமாக மொட்டை தலையில் கொட்டி விட்டு சிரித்தாள். பின் அங்கிருந்து இருவரும் கிளம்பினார்கள்.