Saturday 9 January 2021
சுபா தன் மாணவிகள் ஸ்டெல்லா, ஆயிஷா இருவருக்கும் மிக தீவிரமாக கபடியில் உள்ள மிக சிறந்த நுணுக்கங்களை கற்றுக் கொடுத்து கொண்டு இருந்தாள். ஒரு நாள் நாங்கள் இருவரும் மாலை வேலையில் ஓய்வாக இருக்கும் போது எங்கள் வீட்டுக்கு வந்தார்.
வாங்க வில்லி, என்ன தீடீர்ன்னு வந்து இருக்கீங்க? ஸ்டாப் ரூம்ல மீட் பண்ணும் போது கூட ஒண்ணும் சொல்லலயே?
இல்ல சுரேஷ், நான் பாக்க வந்தது உங்களை இல்ல, உங்க மிஸஸ் சுபாவை!
ஓ, அப்படியா, சுபா கிச்சன்ல இருந்தா, இருங்க வர சொல்றேன்... தென் என்ன சாப்பிடறீங்க? டீ ஆர் காபி?
டீ ஒகே..!
சூப்பர் ஜஸ்ட் அ மினிட், வெயிட் பண்ணுங்க, வில்லியை உட்கார சொல்லி விட்டு நான் சுபாவை போய் கூட்டிக் கொண்டு மூவருக்கும், டீ மற்றும் ஸ்னாக்ஸ் எடுத்துக் கொண்டு வந்தோம் நானும் சுபாவும்..
என்ன சுபா மேம்.. எப்படி இருக்கீங்க?
ரொம்ப நல்லா இருக்கேன் வில்லி சார்...
அப்புறம் உங்க கேர்ள்ஸ் கபடி டீம் எப்படி போய்ட்டு இருக்கு?
ரொம்ப நல்லா டெவெலப் பண்ணி இருக்கேன்.. செமயா ட்ரெயின் ஆகி இருக்காங்க... நீங்க சொன்ன ஒரு மாசம் முடிய இன்னும் 5 நாள் இருக்கு... பட் எப்போ வேணாலும் என் கேர்ள்ஸ் டீம் மேட்ச்சுக்கு ரெடி!!
ஓ... ரொம்ப நல்லதா போச்சு... இந்த வீக் எண்ட் அண்ட் இந்த இயரோட லாஸ்ட் டே வர்ற சாட்டர் டே வருது... அப்போ மேட்ச் வச்சுக்கலாமா?
ஓ வச்சுக்கலாம் சார்?
எதுக்கும் உங்க கேர்ள்ஸ்க்கு ஓகே வான்னு கேட்டுட்டு சொல்லுங்க?
என் கேர்ள்ஸ் எப்பவும் ரெடி சார்... பிட்னஸ் உள்பட எல்லாமே பக்காவ சொல்லிக் கொடுத்து இருக்கேன்... நீங்க என்ன சாதாரணமா நினைச்சுட்டீங்க... பட் கண்டிப்பா மேட்ச் முடியும் போது என்னோட ஒர்க் எப்படின்னு உங்களுக்கு புரியும்!!
ஓகே... அப்போ நியூ இயர் ஸ்பெஷல் நம்ம கபடி மேட்ச் தான்... என்ன இது நமக்குள்ள சீக்ரெட்டா நடக்க போகுது... இருந்தாலும் பசங்களுக்காக சின்னதா ஒரு ஷீல்ட் வாங்கி ஜெயிக்கற டீம்க்கு கொடுக்கலாம்னு இருக்கேன்... நீங்க என்ன சொல்றீங்க சுபா?
ரொம்ப நல்ல ஐடியா சார்... அவங்க ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க... சோ பண்ணலாம்...
ஓகே.. இன்னும் 5 நாள்ல மேட்ச்... ரெடியா இருங்க சுபா!!
ஓகே வில்லி சார்... உங்க பாய்ஸ்க்கு நல்லா ட்ரெயினிங் கொடுங்க... இன்னும் நிறைய விஷயத்தில் முன்னேற்றம் வேணும்.. என்று சுபா என்னை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டு சொல்ல, வில்லி என்னை முறைத்தார்..
என்ன சுரேஷ்... உங்க மிஸஸ்க்கிட்ட நம்ம டீம் சீக்ரெட்டை லீக் பண்ணிடுறீங்களா....
அய்யோ, அப்படி எல்லாம் இல்ல வில்லி...
ஆமா ஆமா அப்படி அவரு லீக் பண்ணிட்டாலும்... நாங்க உங்க சீக்ரெட்டை தெரிஞ்சுக்கறதை விட எங்க ட்ரெயினிங் ரொம்ப அட்வான்ஸ்டா போய்ட்டு இருக்கு...
இட்ஸ் ஓகே.. சுபா... இன்னும் மேட்ச் ஆரம்பிக்கவே இல்ல... ஆனா நீங்க தான் வின் பண்ணிட்டா மாதிரி இருக்கீங்க...
அதான் நடக்க போகுது வில்லி...
சரி மேட்ச் முடியும் போது நீங்க தோத்துட்டா...
அப்படி நடக்கவே நடக்காது...
ஒருவேளை நடந்துட்டா என்ன பண்ணலாம் சுபா...?
என்ன பண்றது..? அதான் ஷீல்ட் உங்களுக்கு கிடைக்குமே?
ஷீல்ட்க்காகவா இந்த மேட்ச்...? உங்க கெத்து அவ்ளோ தானா சுபா?
நீங்க என்ன சொல்ல வர்றீங்க?
இல்ல, கொஞ்சம் கூட நிலைமை தெரியாம இவ்ளோ ஈகோவா இருக்கீங்க? ஒரு வேளை நீங்க தோத்துட்டா உங்க ஈகோ இல்லாம போகணும்... அதுக்கு?
அதுக்கு என்ன?
அதுக்கு மேட்ச்ல உங்க டீம் தோத்துட்டா நீங்க உங்க தலையை மொட்டை அடிச்சுக்கணும்...?
என்ன சொல்றீங்க?
யெஸ்.. அதான் இந்த கேமோட ஹைலைட்டே...! உங்களால ஜெயிக்க முடிஞ்சா ஓகே? இல்லன்னா நீங்க உங்க தலையை மொட்டை அடிக்க வேணும்...?
சுபா சிறிது நேரம் யோசித்தாள்.. தான் இது வரை ஆசையாக வளர்த்த முடியை இழக்க சுபா விரும்ப வில்லை. அதே போல போட்டியில் இருந்து விலகவும் சுபாவின் ஈகோ விட்டுக் கொடுக்கவில்லை.. தான் கொடுத்து இருந்த ட்ரெயினிங் மீதும், டீமில் தானும் ஒருத்தியாக விளையாட போகும் நம்பிக்கையிலும் சுபா அந்த வீபரீதமான முடிவை எடுத்தாள்...
ஓகே வில்லி சார், மேட்ச்ல நாங்க தோத்துட்டா கேர்ள்ஸ் டீம் சார்பா நான் மட்டும் என் தலையை மொட்டை அடிச்சுக்கிறேன்... ஆனா என் டீம் கேர்ள்ஸ்க்கு இதுல எந்த சம்பந்தமும் இல்லை.. ஓகேவா வில்லி சார்?
ஓகே சுபா மேம்!!!
தாங்கள் நினைத்தது நடந்ததில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர் வில்லியும், சுரேஷூம்... ஆனால் இவர்கள் செய்யும் சூழ்ச்சி தெரியாமல் காலி டீ கப்களை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள் சுபா.. ஹாலில் இருந்த ட்ரஸ்ஸிங் டேபிளில் தன்னுடைய நீளமான அடர்த்தியான ஜடை பின்னி இருந்த கூந்தலை சில நொடிகள் நின்று ரசித்தாள் சுபா!!!