Saturday 10 July 2021

கொரோனா வைரஸ் - மூன்றாம் பாகம்

July 10, 2021 4

 அதுக்கு என்னடி, நம்ம மூணு பேருக்கும் ப்ரீயாவே பண்ண சொல்லலாம்... என்று மூவரும் சிரித்தோம்....என் புருஷனும் லாக் டவுன் முடிந்ததும் சலூனை பார்லராக மாற்றும் முடிவுக்கு வந்தார்.

லாக் டவுன் முடிந்ததும் பார்க்கலாம்இனி மூன்றாம் பாகம் 
2020 ல் லாக்டவுன் முடிந்து சலூன் திறந்தாலும், எதிர்பார்த்த வருமானம் இல்லை. நிறைய நாட்கள் சலூனில் வெட்டியாக தான் இருந்தேன். அந்த சமயங்களில் யூ ட்யூப் மூலம் பெண்களுக்கு முடி வெட்டுவது, பேசியல், பெடிக்யூர், ஐப்ரோ எடுப்பது, வாக்ஸிங் என எல்லாவற்றையும் பார்த்து கற்றுக் கொண்டேன். என்னுடைய சலூனை லேடீஸ் பியூட்டி பார்லராக மாற்றலாம் என்று யோசித்தேன். என் மனைவி கல்பனாவின் நகைகள் அடமானம் வைத்தும், இன்னும் சில இடங்களில் பணம் புரட்டியும் ஒரு மாடர்ன் லுக்கில் சலூனை லேடீஸ் பியூட்டி பார்லராக மாற்றினேன்.


எங்கள் காம்பவுண்டில் இருந்த சில பெண்கள் மட்டும் வந்து, ஹேர் கட் செய்து கொண்டனர். கல்பனா அக்கா, கோமதி எல்லோரும் வந்தனர். அவர்கள் தங்கள் தோழிகளுக்கு என்னுடைய பியூட்டி பார்லரை பற்றி சொன்னாலும், யாரும் வர ஆர்வம் காட்டவில்லை. 

என்னுடைய ஆண்களுக்கான சலூன் ஒரு பக்கம் இருக்க, அதில் சில ஆண்கள் ஹேர் கட், ஷேவிங் செய்ய வந்தனர். பார்லர் வைத்தும் பெரிய வருமானம் இல்லை. கடனையும் கட்ட முடியவில்லை. என்னுடைய பியூட்டி பார்லருக்கு பெண்களை நம்பி, வர வைக்க என்ன செய்வது என்றும் புரியவில்லை. 


ஒரு நாள் நான் காலையில் வாக்கிங் போய் வரும்போது ஒரு ஒதுக்கு புறமான இடத்தில் ஒரு குறவர் கூட்டம் டெண்ட் போட்டு, தங்கி இருந்தனர். அங்கு ஒரு இளம் வயது பெண் தன் குடும்பத்தில் இருந்த சிறுவர்களுக்கு, பாடம் நடத்திக் கொண்டு இருந்தாள். நான் சிறிது நேரம் ஓய்வுக்காக மர நிழலில் நின்று கொண்டு, அந்த பெண் படம் எடுப்பதை பார்த்துக் கொண்டு இருந்தேன். அடுத்த சில நாட்கள் வாடிக்கையாக இது நடக்க, அந்த கூட்டத்தைச் சேர்ந்த ஒருவனிடம் நான் பேச்சுக் கொடுத்தேன்.

அந்த இளம்பெண் தான் அவர்கள் கூட்டத்திலேயே கல்லூரி இறுதி ஆண்டு வரை படித்து இருக்கிறாள், என்றும், அவர்கள் ஊர் ஊராக சுற்றுவதால் அவர்கள் கூட்டத்தில் யாரும் பெரிதாக படித்தது இல்லை என்றும், அந்த இளம்பெண் தான் விடாப்பிடியாக படித்தே தீர வேண்டும் என்று கல்லூரி வரை படித்து விட்டு ஒரு கம்பெனியில் வேலை செய்கிறாள் என்றும் சொன்னான். 

எனக்கு அந்த பெண்ணின் மன உறுதியை நினைத்து ஆச்சர்யமாக இருந்தது. தான் படித்தது மட்டும் அல்லாமல், தன் அடுத்த தலை முறையும் கல்வியறிவு பெற வேண்டும் என்று நினைப்பதை எண்ணி வியந்தேன். அவள் பெயர் கவுசல்யா. கவுசி என்று அவர்கள் எல்லோரும் கூப்பிடுகிறார்கள். அவர்கள் கூட்டத்தில் அவள் தான் ராணி. அவள் சொல்வதை தான் வயதான பெரியவர்களும் கேட்பார்கள்.
கவுசி மாநிறத்துக்கும் கூடுதலான கருப்பு நிறம். நீள் வட்ட முகம். கூந்தல் இடுப்பை தாண்டி வளர்ந்து இருந்தது. அளவான அடர்த்தி. மெல்லிய உடம்பு. கொஞ்சம் மேக்கப் செய்தால் நல்ல அழகியாக அவள் இருப்பாள் என்று என் அறிவுக்கு தோன்றியது.    

கவுசியின் அப்பாவிடம் ஒருநாள் கவுசியை கூப்பிட்டுக் கொண்டு என் வீட்டிற்கு வர சொன்னேன். நான் கவுசியிடமும் பேசினேன். நான் ஒரு பியூட்டி பார்லர் வைத்து இருப்பதாகவும், அதில் உனக்கு ஹேர் கட், மேக்கப் செய்து விடுவதாகவும் சொன்னேன். உன்னுடைய தோற்றத்தை இன்னும் அழகுபடுத்திக் காட்ட முடியும் என்று அவளிடம் பேசினேன். 


கவுசல்யாவிடம் என்னுடைய பியூட்டி பார்லருக்கு ஒரு விளம்பர மாடலாக வேண்டும் என்று சொன்னேன். அவளும் சரி என்று ஒப்புக் கொண்டாள். ஒரு நாள் அவளுடைய கல்லூரி தோழி ஒருத்தியை கூட்டிக் கொண்டு வந்தாள். கவுசல்யா ஒரு சாதாரண சுடியில் வந்து இருந்தாள். என்னுடன் என் மனைவி கடையில் இருந்தாள். 

என்னங்க, இந்த பொண்ணு தான் நீங்க சொன்ன கவுசல்யாவா?

ஆமா... இது தான்... இந்த பொண்ணு யாருன்னு தெரியலயே?

இவ  என்னோட காலேஜ்ல படிக்கிறா அண்ணா, இவ சொந்த ஊர் கம்பத்து பக்கம் ஒரு கிராமம்... 

ஒ, கம்பத்து பொண்ணு ஆ?

ஆமாங்க... 

அண்ணா, இவ  ஒரு வருஷம் முன்னாடியே இவளோட முடியை மொட்டை அடிச்சு கேன்சர்னால பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு விக் ரெடி பண்ண கொடுத்து இருக்கா... 

அப்படியா... ரொம்ப நல்லது... இந்த சின்ன வயசுல ரொம்ப பெரிய மனசும்மா... 

தேங்க்ஸ் அண்ணா...

சரி வாம்மா, கவுசல்யா... நீ இந்த சேர்ல உட்காரு... 

அண்ணா... நான் சேர்ல உட்காரும் முன்ன எனக்கு என்ன பண்ண போறீங்கன்னு சொல்லுங்க... அப்புறம் இவளுக்கு பண்ண மாதிரி எனக்கும் மொட்டை அடிச்சிடக் கூடாதுல்ல...

அதெல்லாம் இல்ல கவுசல்யா... லைட்டா ஹேர் கட்... அப்புறம் கொஞ்சம் மேக்கப்.. பேசியல், பெடிக்யூர், மேனிக்யூர்...

அப்போ இன்னும் என்னை அழகா காட்ட போறீங்க...

ஆமா கவுசி... நான் உன்னை எந்த அளவுக்கு மாத்த போறேன்னு என் மனைவி வீடியோ எடுப்பா... அப்போ தான் என் வேலையோட ரிசல்ட் தெரியும்...

சரின்னா... பண்ணுங்க... கவுசி சேரில் ஏறி உட்கார்ந்து கொண்டாள்.

நான் கவுசியை சுற்றி ஒரு ஒன் யூஸ்ட் க்ளாத்தை பூசி விட்டு, அவள் ஜடை பின்னி இருந்த முடியை பிரித்தேன். பின் அதை சீப்பால் சீவி, நுனியை ஒன்று சேர்த்து, 2 இஞ்ச் மேலே ரப்பர் பேண்ட் போட்டு, சீசர் எடுத்து கட் பண்ணினேன். ஒரு சின்ன முடிக் கொத்தாக கீழே விழ அதை எடுத்து கவுசியிடம் கொடுத்தேன். அவள் அதை வெட்கத்துடன் பார்க்க, நான் கவுசியின் முடியை கொஞ்சம் கொஞ்சமாக ட்ரிம் செய்து "U" ஷேப்பில் கட் பண்ணினேன்.கவுசி தலையை குனிந்து இருக்க, என் மனைவி நான் ஹேர் கட் பண்ணுவதை வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தாள். அவளது தோழி கவுசியின் ஹேர் கட்டை பார்த்துக் கொண்டு இருந்தாள். நான் மெதுவாக அவள் முடியை கட் பண்ணி விட்டு, மீண்டும் ஒரு முறை சீவி விட்டேன். 

ஏன்மா கவுசி, உனக்கு அண்டர் கட் ஹேர் கட் பண்ணலாமா? 

அப்படின்னா என்ன அண்ணா?

இதோ பாரும்மா, இந்த மாதிரி பின் கழுத்து முடியை நெருக்கமா கட் பண்ணி அதில ஏதாவது டிசைன் பண்ணலாம்.. அது வெளியே தெரியாது.. ஆனா நீ உன் பிரண்ட்ஸ்கிட்ட மட்டும் காமிக்கலாம்...

அங்க கட் பண்ணினா நல்லா இருக்குமா அண்ணா?

ம்ம்ம்ம்... இந்த வெயில் காலத்துக்கு உனக்கு ரொம்ப நல்லா இருக்கும்...

சரிண்ணா பண்ணுங்க... 

அதுக்கு முன்னாடி உன் முடியை கொஞ்சம் வாஷ் பண்ணிக்கலாம்  அந்த வாஷ் பேசினுக்கு வா... நான் கவுசியை வாஷ் பேசினுக்கு கூட்டிச் சென்று, அவள் முடியை தண்ணீரில் அலசி விட்டு, ஈரம் போக துடைத்து விட்டு, அளவான ஈரத்துடன் மீண்டும் பார்பர் சேருக்கு கூட்டி வந்தேன்.பின் கவுசியின் தலையை குனிய வைத்து, அவள் பின் கழுத்தில் இருந்த முடியை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து விட்டு, எலக்ட்ரிக் ட்ரிம்மர் கொண்டு மிக நெருக்கமாக முடியை எடுத்து விட்டு, பின் கத்தரி மூலம் இன்னும் குறுகிய அளவு வெட்டினேன். அதன் பின் ரேசர் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக சிரைத்து விட்டு, ஒரு அண்டர் கட் டிசைன் செய்து விட்டேன். 

கவுசியின் தோழியும் நான் செய்வதை பார்த்துக் கொண்டு இருந்தாள். பின் அவள் முடியை இன்னும் கொஞ்சம் ட்ரிம் மட்டும் செய்து விட்டு, தலை முடியை சீவி விட்டு கண்ணாடியில் பின் பக்கம் அண்டர் கட் ஹேர் ஸ்டைலை கவுசிக்கு தெரிவது போல காட்டினேன்.


அண்ணா, இது போல எங்க காலேஜ்ல எந்த பொண்ணும் ஹேர் கட் பண்ணி இருக்க மாட்டாங்க...

சரிம்மா, அடுத்து ஐப்ரோ எடுத்துட்டு, பேசியல், பெடிக்யூர், மேனிக்யூர் பண்ணலாமா?

சரி அண்ணா... ஆனா இதுக்கு எல்லாம் எங்கிட்ட காசு வாங்க மாட்டீங்கலே... 

இல்ல கவுசி... இது விளம்பரம் பண்றதுக்காக மட்டும்... அதனால நான் தான் உனக்கு காசு கொடுக்கணும்...

அதெல்லாம் வேண்டாம் அண்ணா...

நான் மீண்டும் ஒரு முறை கவுசியின் முடியை வாஷ் பண்ணி விட்டு, ஐப்ரோ த்ரெட்டிங் மூலம் பண்ணி விட்டேன். என் மனைவி வீடியோ எடுத்துக் கொண்டே என்னிடம் கேட்டாள்.

என்னங்க, பார்லர்ல பண்ற மாதிரியே பண்றீங்க... இப்போ தானே முதல் முறை த்ரெட்டிங் பண்றீங்க...

ஆமா, சும்மா யூ ட்யூப்ல பார்த்தேன்... கண்ணு பார்த்தா கை வேலை செய்யணும், அதான் திறமை...

சூப்பர்ங்க... என்றாள். 

நான் கவுசல்யாவுக்கு ஐப்ரோ எடுத்ததும், அவள் தோழி கவுசிக்கு வாக்சிங் பண்ணலாமே என்று சொல்ல, நானும் கவுசிக்கு கை, மற்றும் கால்களில் இருந்த மெல்லிய முடிகளை வாக்சிங் மூலம் எடுத்து விட்டேன். 


அதன் பின்  மற்ற வேலைகள் விரைவாக முடிய, கவுசல்யா இப்போது அல்ட்ரா மாடர்ன் கேர்ளாக ஜொலித்தாள். அவளின் அழகைக் கண்டு எல்லோரும் ஆச்சர்ய பட்டார்கள். கவுசல்யா தன்னை மறந்து கண்ணாடியில் தெரியும் தன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.பின் அவள் காலேஜ், அவள் குடும்பம் என எல்லோரும் அவள் அழகை பார்த்து அதிசயித்தனர். நான் எடுத்த வீடியோ, போட்டோக்களை எடிட் செய்து, லோக்கல் சேனல்களில் போட என்னுடைய பியூட்டி பார்லர் இளம்பெண்கள் மத்தியில் பிரபலமானது. என்னுடைய திறமையும் பெண்கள் மத்தியில் பிரபலமாக, நான் நிறைய சம்பாதித்தேன். இதற்க்கு காரணமாக இருந்த கவுசல்யாவுக்கு எப்போதும் என் பார்லரில் ப்ரீயாக ஹேர் கட் செய்து வந்தேன். 

ஆனால் இந்த 2021ல் மீண்டும் கொரோனாவின் இரண்டாம் அலையால் மீண்டும் லாக் டவுன் வர, மீண்டும் எங்கள் வாழ்க்கை கேள்விக் குறியானது.Telugu young women's traditional natural hair style

July 10, 2021 0
Telugu young women's traditional natural hair style

Girl's like a new look | After lock down hair cut

July 10, 2021 0
Girl's like a new look | After lock down hair cut 
Indian Young mom new hair cut and coloring | Salon Ayesha

July 10, 2021 0
Indian Young mom new hair cut and coloring | Salon Ayesha


Indian ladies with bald head | Bald is beautiful | Temple head shaving

July 10, 2021 0
Indian ladies with bald head | Bald is beautiful | Temple head shaving


Hair coloring transformation | Burgaungy Brown hair coloring

July 10, 2021 0
Hair coloring transformation | Burgaungy Brown hair coloring


Long to mid back straight cut hair style images

July 10, 2021 0
Long to mid back straight cut hair style images
Young girl's new trend hair style

July 10, 2021 0
Young girl's new trend hair style
Curling hair is a New trend | Salon Makeover

July 10, 2021 0
Curling hair is a New trend | Plush hair salon | Salon Makeover