Tuesday 29 October 2019

ஷாக் ட்ரீட்மெண்ட்

October 29, 2019 0
ஷாக் ட்ரீட்மெண்ட்
தீபாவளி லீவ் இந்த முறை கொஞ்சம் அதிகமாக கிடைக்க சொந்த ஊரில் தங்கி விட்டு சென்னை வந்து சேர்ந்தேன். சொந்த ஊர் திருநெல்வேலி பக்கம் ஒரு கிராமம். வரும் போதே என்னுடன் வேலை செய்யும் நண்பர் ஒருவருக்கு இருட்டு கடை அல்வா வாங்கி வந்திருக்க, அதைக் கொடுக்க அவர் வீட்டுக்கு சென்றேன்.

நண்பர் என்னை விட வயது அதிகம். அவரும், அவர் மனைவியும் வேலைக்கு செல்ல, அவரின் இரு பெண்கள் கல்லூரி செல்கிறார்கள். நான் நண்பரின் வீட்டுக்கு சென்று காலிங்க் பெல் அடிக்க, அவர் தான் கதவை தட்டினார். என்னை உரிமையாக வாடா போடா என்று தான் அழைப்பார்..



வாடா மணி, என்ன தீபாவளி முடிஞ்சுதா... ஊர்ல எல்லாம் சவுக்கியமா....

ம்ம்ம், எல்லாம் நல்லா இருக்காங்க... உங்களை அப்பா ரொம்ப விசாரிச்சார்... ஆமா என்ன மொட்டை அடிச்சு இருக்கீங்க...

ஆமாடா, எல்லாரும் திருப்பதி போய்ட்டு வேண்டுதல் முடி இறக்கிட்டு வந்தாச்சு...

அப்போ தான் உள்ளே இருந்து அவரின் மனைவியும் மொட்டை தலையுடன் வந்தார்.

என்ன அக்கா, நீங்களுமா மொட்டை.. 

ஆமா, தம்பி நான் மட்டும் இல்லை, எங்க பொண்ணுங்க ரெண்டு பேரும் மொட்டை அடிச்சுட்டாங்க... இவருதான்  ஏதோ வேண்டுதல் இருப்பதால் முடி இறக்கியே ஆகணும்னு சொல்லிட்டார்..

நீங்க பரவால்லை.. பொண்ணுங்க பாவம் காலேஜ் போறவங்க... அவங்களை போய் மொட்டை போட வச்சிட்டிங்களே.... அப்படி என்ன வேண்டுதல் அண்ணா...

அதை அப்புறம் சொல்றேன்...

சரிண்ணா, இந்தாங்க, நீங்க ரொம்ப நாளா கேட்ட இருட்டு கடை அல்வா.... எல்லாருக்கும் கூடுங்க....

டேய் ஸ்வாதி, இங்க வா, உனக்காக அல்வா வாங்கிட்டு வந்து இருக்கான் பாரு, வந்து எடுததுக்க... 

வாங்க அண்ணா, ஊருக்கு போய்ட்டு வந்தாச்சா, எல்லாம் நல்லா இருக்காங்களா என்றபடியே ஸ்வாதி வெளியே வந்தாள். 

நான் அவளுக்கு பதில் சொல்லிக் கொண்டே அவளுடைய மொட்டை தலையை பார்த்தேன். நல்ல மொழு மொழுவென்று மழிக்கப்பட்டு இருநதது.

கொஞ்ச நேரத்தில் நான் என் வீடு வந்ததும் அவர் வாட்ஸப்பில் மெசெஜ் அனுப்பி இருந்தார். 

" என்ன வேண்டுதல்ன்னு கேட்டில்ல, அதான் மெசெஜ் பண்ணேன்... தம்பி, என் பொண்டாடியும், பெண்களும்,  அவங்க முடியை ஜடை, இல்லன்னா கொண்டை போடாம ஸ்டைல், பேஷன்கிற பேர்ல தலையை விரிச்சு போட்டு சுத்திட்டு இருந்தாங்க... காலைல டிபன், மதியம் சாப்பாடு எத கொடுத்தாலும் அதில முடி கிடைக்கும், அவ்வளவு ஏன், குடிக்க தண்ணி கொடுத்தா கூட அதுல ஒரு முடி வரும், சொல்லி சொல்லி பார்த்தேன், கேட்ட மாதிரி இல்ல... 

பத்தாதுக்கு சாப்பாட்டுல முடி இருந்தா உறவு விட்டு போகாதுன்னு வசனம் பேசிட்டு இருந்தா, என் பொண்டாட்டி, அதான் வேண்டுதல்ன்னு சொல்லி திருப்பதி கூட்டி போய் மொட்டை போட வச்சு கூட்டி வந்தேன்... ஒரு ரெண்டு வருஷத்துக்கு பிரச்சனை இல்ல பாரு, இது அவங்களுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட்ன்னு தெரியாது... அதான் அவங்க முன்னாடி உங்கிட்ட உண்மையை சொல்ல முடியல, இந்த மெசெஜ் படிச்சுட்டு டெலிட் பண்ணிடு 
என்று அனுப்பி இருந்தார்..



நான் மெசெஜ் படிதது விட்டு நிமிர என் மனைவி தலைவிரி கோலமாக என் முன்னால் நின்று கொண்டு இருந்தாள்.

இந்தாம்மா, இந்த மெசெஜ் படி என்று கொடுத்தேன்... அவளும் வாங்கி ஆர்வமாக படிததாள்... படிதது விட்டு வேகமாக என்னிடம் போனை கொடுத்தவள் விரித்து போட்டு இருந்த முடியை கொண்டை போட்டாள்.

ஷாக் ட்ரீட்மெண்ட் நன்றாகவே வேலை செய்தது..