Thursday 13 April 2023

ஹரியின் ஆசை - ஐந்தாம் பாகம்

April 13, 2023 0

அடுத்த நாள் காலை எழுந்ததும் ஹரி மதுவுக்கு மெசெஜ் அனுப்பினான்.  ஹாய் மது குட் மார்னிங்...

குட் மார்னிங் ஹரி...

என்ன மது இப்போ தான் எழுந்தியா...

இல்லடா... நான் ஆறு மணிக்கே எழுந்து ரெடி ஆயிட்டு இருக்கேன்... நீ...

நான் இப்போ தான் எழுந்த... ஒரு சூப்பர் கனவு மது...

என்னடா கனவு...

சொன்னா நீ ஷாக் ஆகிடுவ...அப்படியா... அப்படி என்ன கனவு கண்ட...

நீயும் நானும் திருப்பதி போறோம்... அங்க மொட்டை போட்டுட்டு என் முன்னாடி வந்து மொட்டை தலையோட நீ நிக்குற... உன் மொட்டை தலை நல்லா அழகா பளபளன்னு இருந்துச்சு...

அடப்பாவி... நிஜமாவா...?

சத்தியமா மது... 

சரி... நான் மொட்டை தலையில எப்படி இருந்தேன்...

ரொம்ப அழகா இருந்த மது...

நான் முடி இருந்தாலும் அழகா இருப்பேன்... முடி இல்லன்னாலும் அழகா இருப்பேன்...


அப்போ எதுக்கு முடி... மொட்டை போட்டுடலாம்...

உனக்கு அதான் ஆசைன்னா... கல்யாணம் முடியட்டும்... அப்புறமா மொட்டை போட்டுக்குறேன்... 

நிஜமாவா சொல்ற மது? 

நிஜமா உனக்காக தான்... மது சொல்ல ஹரி ரொம்ப சந்தோஷப்பட்டான். தன் கையாலேயே மதுவுக்கு மொட்டை போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். இருவருக்கும் நல்லபடியாக திருமணம் முடிய... ஹனிமூன் எல்லாம் முடிந்து சில மாதங்கள் கழித்து இருவர் மட்டும் திருப்பதி சென்றனர். காட்டேஜில் தனியாக ரூம் புக் செய்து வைத்து இருந்தான் ஹரி.

என்ன ஹரி... உன்னோட ரொம்ப நாள் ஆசை இன்னிக்கு நிறைவேற போகுது...

ஆமா மது... எல்லாம் உன்னால தான்... என்னை புரிஞ்சுகிட்ட நீ எனக்கு மனைவியா வந்தது என்னோட அதிர்ஷடம்...

சரி... எப்போ மொட்டை போட போலாம்...

நாம போக வேண்டாம்... இங்கேயே வர சொல்லி இருக்கேன்...

இங்க ரூமுக்கே வருவாங்களா...

ஆமா... நாம சொன்னா வருவாங்க... அப்புறம் பார்பர் வந்ததும் நான் மட்டும் முதல்ல மொட்டை போட்டுட்டு அப்புறமா நான் உனக்கு மொட்டை போட்டு விடுவேன்...

நீ எனக்கு மொட்டை அடிக்க போறியா...

ஆமா மது... நான் தான் உனக்கு மொட்டை போட போறேன்...

டேய்... உன்னால முடியுமா?

அதெல்லாம் முடியும்... எவ்ளோ வருஷ ஆசை... ஏக்கம் தெரியுமா... ப்ளீஸ் மது...

சரிடா... ஓகே... என்னமோ பண்ணு... மது சொல்ல... அப்போது காலிங் பெல் அடிக்க, ஹரி போய் கதவை திறக்க... பார்பர் ஒருவர் வந்து இருந்தார்.

சார்... மொட்டை போட வர சொன்னாங்க...

ஆமாங்க... எனக்கு தான்... என்று ஹரி சொல்ல...


சரி... வாங்க... இப்படி உட்காருங்க... அப்புறம் ஒரு மக்குல தண்ணி மட்டும் கொடுங்க என்று சொன்ன பார்பர்... சவர கத்தி எடுத்து துடைத்துவிட்டு... ஒரு பிளேடை எடுத்து பாதியை உடைத்து அதில் சொருகினான்.

அதற்குள் மது தண்ணீர் கொண்டு வர... அதை வாங்கிய பார்பர் ஹரியின் தலையில் தண்ணீர் விட்டு மசாஜ் செய்து விட்டு, ஹரியின் தலையை மொட்டை அடிக்க வாகாக குனிய வைத்து அவனது உச்சியில் இருந்து முடியை சிரைக்க ஆரம்பத்தான். பார்பர் ஹரியின் தலையை மொட்டை அடிப்பதை கவனமாக பார்த்துக் கொண்டு இருந்த மது, தனக்கும் சில நிமிடங்களில் ஹரி இப்படி தான் மொட்டை அடிக்க போகிறான் என்று நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்தாள்.

பின் மது தன்னுடைய செல்போனில் ஹரியின் மொட்டையை வீடியோ எடுக்க, ஹரி தலையை குனிந்து இருந்ததால் அதை அவன் கவனிக்கவில்லை. ஐந்து நிமிடங்களில் ஹரியின் தலையை மொட்டை போட்டு முடித்து விட்டான். பின் பார்பர் பணம் வாங்கிக் கொண்டு செல்ல... ஹரி தன் மொட்டை தலையை தடவி பார்த்தான்.

சூப்பரா இருக்குடா... என்றாள் மது...

 அடுத்து உனக்கு தான்... என்று சொன்ன ஹரி... தன்னுடைய பேக்கில் மறைத்து வைத்து இருந்த ஒரு கவரை எடுத்து பிரிக்க... அதில் ஒரு புத்தம் புதிய சவரகத்தி, பிளேடு ஒரு பாக்கெட்... ஷேவிங் க்ரீம் எல்லாம் இருக்க... அதை பார்த்த மது வாயை பிளந்தாள்.


பக்கவா பிளான் பண்ணி என் தலையை மொட்டை அடிக்க தான் நீ திருப்பதி வந்தயா?

ஆமா மது... இது என்னோட சின்ன வயசு ஆசை... எனக்கு எப்படி இந்த ஆசை வந்ததுன்னு தெரியல... ஆனா இதை போய் யார்கிட்டயும் கேட்க முடியாது... என்ன மாதிரி நிறைய பேர் ஒரு பொண்ணுக்கு மொட்டை அடிக்கிற ஆசையோட இருக்காங்க... ஆனா உன்னை மாதிரி புருஷனோட மனசு புரிஞ்ச பொண்டாட்டியால மட்டும் தான் இந்த ஆசையை நிறைவேத்த முடியும்...

அது சரி... என்னமோ பேசி என்னை மயக்கிடு...


                            

Want to Buy Please Click the Link : Sanfe 2 Steps Spotlite Kit + Free Hair Removal Cream


சரி மது... வா வந்து உகாரு.


ஹரி கேமரா ஆன் பண்ணி ஆட்டோ ரெக்கார்டிங்ல போட்டு சரியாக போகஸ் பண்ணி விட்டு வந்தான்.


மது ஹரியின் முன் உட்கார அவளுடைய தலை ஃபுல்லா தண்ணி விட்டு மசாஜ் பண்ணினான்.. சீப்பு வைத்து மெதுவா எல்லா முடியும் பின்னால் தூக்கி சீவினான்..ஒரு ரப்பர் பேண்ட் எடுத்து போனிடெயில் போட்டான்..


என்னடா இப்படி சீவி இருக்க? நடுவுல இருந்து முடியை ஷேவ் பண்ண மாட்டியா?


அதெல்லாம் அந்த பார்பர் தான் பண்ணுவாங்க... அது அவங்களால மட்டும் தான் முடியும்... எனக்கு இது தான் தெரியும்...


சொல்லிவிட்டு ஹரி கத்தி எடுத்து மதுவின் நெற்றியில் இருந்து பின்னால்  சிரைக்க ஸ்டார்ட் பண்ணினான்.. கொஞ்சம் கொஞ்சமா முடி எல்லாம் கீழே விழுந்தது.5 நிமிடத்தில் மதுவின் மொத்த முடியையும் மழித்து விட்டான் ஹரி. அப்புறம் ஷேவிங் க்ரீம் எடுத்து தலை முழுவதும் அப்ளை பண்ணினான்... மறுபடியும் ரேஸர் வைத்து ஷேவிங் க்ரீம் பூசிய தலையை மழிக்க... மதுவின் தலை மொழுமொழுவென அழகாக இருந்தது. மொத்தமாக மழித்து விட்டு, கொஞ்சம் தண்ணீரை அள்ளி கைகளில் தடவி விட்டு, அவளுடைய தலையை சுத்தம் செய்தான்.


மொட்டை தலையில் மது ரொம்ப அழகா இருந்தாள். ஹரி தன் காதல் மனைவி மதுவின் மொட்டை தலையை ஆசையாக தடவி பார்த்தான். பின் வீடியோ கம்ப்ளீட்டாக ரெக்கார்டு ஆனதும் க்ளோஸ் பண்ணி வைத்து விட்டு, தங்கள் இருவரின் முடியையும் சேர்த்து மொத்தமாக ஒரு கவரில் போட்டான்.


அதன் பின் இருவரும் குளித்து விட்டு கோவில் போய் காணிக்கையை செலுத்தினார்கள். பின் சாமி கும்பிட்டு விட்டு ஊருக்கு கிளம்பினார்கள்.  


மொட்டைச்சி... முடியில்லாத உன் மொட்டை தலை எப்படி இருக்கு... 


சூப்பர் பீலிங் டா... நல்லா ஜில்லுன்னு இருக்குடா...


ஆமா... இன்னும் கொஞ்ச நாளுக்கு அப்படி தான் இருக்கும்...


என் லைஃப்ல, 3வது வகுப்பு படிக்கும் போது மொட்டை போட்டது... அதுக்கு அப்புறம் ட்ரிம் மட்டும் தான்... எனக்கு நினைவு தெரிஞ்சு இப்போ தான் மொட்டை போடறேன்... அதுவும் என் புருஷன் கையால...  ரொம்ப சந்தோஷமா இருக்கு... இது ஒரு  புது எக்ஸ்பிரியன்ஸ் ஹரி...


ஆனா  நீ மொட்டை தலையில ரொம்ப அழகா இருக்க... இனிமே அடிக்கடி நம்ம ரெண்டு பேரும் மொட்டை போடலாம்.அடிக்கடி வேணாம்... நமக்கு நல்ல படியா குழந்தை பிறந்ததும் நம்ம மூணு பேரும் குல தெய்வ கோவில்ல மொட்டை போடலாம்... 


சரிடி மொட்டைச்சி...


ஹரி ஆசையாக மதுவின் மொட்டை மண்டையை தடவி முத்தம் கொடுத்தான்... 2 பேரும் சந்தோஷமாக ஊருக்கு போனார்கள்.


அதன் பின் மதுவிடம் அடிக்கடி மொட்டை பத்தி பேசியும், வீடியோ மற்றும் கதைகளை படித்து காட்டியும் அவளுக்கு 2 வருடம் ஒரு முறை மொட்டை அடித்து பார்த்து சந்தோஷமாக இருந்தான்...


ஹரியின் மொட்டை ஆசை அவனுடைய மனைவியால் நல்லபடியாக நிறைவேறியது.--- முற்றும் ---


Young girl's mid back length very thigh jadai hair style

April 13, 2023 0
Young girl's mid back length very thigh jadai hair style


Want to Buy Please Click the Link : Sanfe 2 Steps Spotlite Kit + Free Hair Removal Cream
Red dressed girl's low back length free hair style

April 13, 2023 0

Black dressed girl's low back length free hair style

April 13, 2023 0

Telugu village women's traditional oiled jadai hair style

April 13, 2023 0
Telugu village women's traditional oiled jadai hair style
Want to Buy Please Click the Link : Sanfe 2 Steps Spotlite Kit + Free Hair Removal CreamBlue dressed girl's one clipped low back length free hair style

April 13, 2023 0