Tuesday 22 September 2020

நானும், காயத்ரியும் - ஐந்தாம் பாகம்

September 22, 2020 3



காயத்ரியின் கல்யாணத்திற்க்கு பிறகு நான் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இல்லாமல் தான் இருந்தேன். நானே என் புரொஜக்ட்க்கு டீம் லீட் ஆனேன். சில பெரிய புரொஜக்ட்கள் வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தேன். என் வீட்டிலும் என்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்த நான் அதை தட்டிக் கழித்து வந்தேன்.

இப்படியே ஆறு மாதங்கள் போக, என் டீமில் இருந்த ஒரு பெண் அவள் பெயர் ஸ்ருதி. அவளுடைய அண்ணனுக்கு கல்யாணம் என்று பத்திரிக்கை கொடுத்தாள். என் ஆபிஸில் வயதில் அவள் தான் சின்னவள். அதனால் அவள் எல்லோருக்கும் ரொம்பவே பெட்.. அதனால் அவள் எல்லோரிடமும் ரொம்ப உரிமையாக பழகுவாள்.

அதனால் அவள் அண்ணன் திருமணத்திற்க்கு எல்லோரையும் உரிமையுடன் அழைக்க, எல்லோரும் போகலாம் என்று முடிவு செய்தார்கள். அது மட்டுமில்லாமல் அவள் சொந்த ஊர் பொள்ளாச்சி பக்கம் கிராமம். கல்யாணத்தை முடித்து விட்டு அப்படியே வால்பாறை, டாப்ஸ்லிப் சுற்றி பார்த்து விட்டு வரலாம் என்று பிளான் செய்தோம்...


ஒரு வெள்ளிக்கிழமை மாலை ஆபிஸில் எல்லோரும் மீட் பண்ணி, ஏற்பாடு செய்து இருந்த பஸ்ஸில் பொள்ளாச்சி கிளம்பினோம்.. அடுத்த நாள் காலையில் பொள்ளாச்சியில் ஒரு ஹோட்டலில் தங்கி பிரெஷ் அப் ஆகி விட்டு கல்யாணத்திற்கு கிளம்பினோம். ஸ்ருதியின் கிராமம் பொள்ளாச்சியில் இருந்து ஆழியாறு செல்லும் வழியில் இருந்தது.

வழியெங்கும் பசுமை படர்ந்து இருக்க, அதை பார்க்க மனதுக்கு ரொம்பவே இதமாக இருந்தது. நான் என்னை மறந்து இயற்கை அழகை பார்த்துக் கொண்டே வந்தவன் கண்கள் அசந்து தூங்கிவிட்டேன்.. 
நாங்கள் போன பஸ் ஒரு பெரிய மண்டபத்தின் முன் நிற்க, எல்லோரும் இறங்கி மண்டபத்தினுள் செல்ல, நான் கடைசியாக இறங்கி போனேன்...

என்னுடன் வந்த எல்லோரும் ரிஷப்ஷனில் நின்று இருந்தவர்களிடம் பேசிக் கொண்டு இருக்க, நான் மெதுவாக அவர்களை நோக்கி செல்ல, அங்கு இருந்த ஒரு நண்பண் கூட்டத்தில் இருந்து என்னை பார்த்து கூப்பிட்டான்...

மதன்... சீக்கிரம் இங்க வாடா...உனக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் இங்க இருக்கு... வா சீக்கிரம்...

நான் என்னவென்று புரியாமல் நடக்க, அங்கு ஸ்ருதி நின்று கொண்டு சிரித்து பேசிக் கொண்டு இருப்பது தெரிய, நான் புரியாமல் பார்க்க.. அப்போது தான் அது நடந்தது.  ஒரு பெண் எனக்கு முதுகை காண்பித்து நின்று கொண்டு என் ப்ரெண்டிடம் பேசியவள் சிரித்த முகத்துடன் என்னை பார்த்து திரும்பினாள்... அது... அது...

காயத்ரி...

என் உதடுகள் என்னை மீறி அந்த பெயரை சொல்லியது.. என் கால்கள் என்னை மீறி அவளை நோக்கி வேகமாக சென்றது...


ஹாய்...மதன் எப்படிடா இருக்கே... ரொம்ப வருஷமாச்சு... பார்த்து...

யா.. நீ நல்லா இருக்கியா... 

ம்ம்ம்... ரொம்ப நல்லா இருக்கேண்டா... ஆமா எப்போ யுஎஸ்ல இருந்து வந்த... 

நான் வந்து எட்டு மாசம் ஆக போகுது... ஆமா நீ எப்படி இங்க....

இது என் வீட்டு கல்யாணம் மதன்... என் வீட்டுக்காரரோட தங்கச்சி தான் ஸ்ருதி அண்ணனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்குறோம்... 

அப்படியா.. ஓகே... 

நாங்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே.. ஒரு குண்டான பாப் கட் பண்ணி இருந்த ஒரு பெண் வந்து என்னிடம் பேசினாள்...

டேய்...மதன் எப்படி இருக்க... ஆள் மாறாம அப்படியே இருக்க... என்று என்னை கேட்க... நான் அவளை முன்பே பார்த்தது போல இருந்தாலும் யார் என்று சரியாக அடையாளம் தெரியாமல் விழிக்க... 

மதன்.. இவை யாருன்னு தெரியலயா...

இல்ல... பார்த்த மாதிரி இருக்கு... 

டேய்... இவ  என் அக்கா திவ்யா டா... 

இரண்டு வருடங்களில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்க்கு குண்டாக மாறி இருந்தாள் திவ்யா... ஆனால் காயத்ரி கொஞ்சமும் மாறாமல் அப்படியே இருந்தாள்... என்ன சென்னையில் இருந்த போது ரொம்பவே மாடர்னாக இருப்பாள். ஆனால் இப்போது ஒரு பெரிய குடும்பத்தின் மருமகளாக கண்ணியமாக இருந்தாள் காயத்ரி.. இருவரும் தங்கள் கணவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். காயத்ரியின் அம்மாவும் என்னுடன் வந்து என்னை நலம் விசாரிக்க, சிறிது நேரம் பேசிவிட்டு... முகூர்த்தம் முடிந்து சாப்பிட்டு விட்டு எல்லோரும் கிளம்பினோம்...

காயத்ரி என்ன என்று கேட்க, நாங்கள் வால்பாறை போவதை சொல்ல.. அவளே எங்களுக்கு துணையாக அவள் கணவனை அனுப்பினாள்... பின் தனியாக என்னை கூப்பிட்டு என்னிடம் பேசினாள்..


மதன்... என்னால உன்னை புரிஞ்சுக்க முடியும்.. உனக்கு என் மேல கோபமிருக்கும்... எதுவும் நினைக்காம நீ வால்பாறை போய்ட்டு வா.. கல்யாணம் முடிஞ்சதும் நீ என் வீட்ல ஒரு ரெண்டு நாள் இரு... உன் கூட நான் மனசு விட்டு பேசணும்... என்றாள்....

சரி என்று சொல்லி விட்டு நான் வால்பாறை சென்று சுற்றி பார்த்து விட்டு எல்லோரும் சென்னை கிளம்ப, நான் கோவை சென்று வேறு ஒரு வேலையை முடித்து விட்டு சென்னை வருவதாக சொல்லி அவர்களிடம் இருந்து கழண்டு கொண்டேன்.. அதன் பின் நான் பொள்ளாச்சி வர, திவ்யா தான் வந்து என்னை அவர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றாள்...

வீட்டில் காயத்ரி எனக்காக காத்துக் கொண்டு இருந்தாள்.. காயத்ரியின் கணவரும், திவ்யாவின் கணவரும் அவர்கள் வேலையை பற்றி பேசிக் கொண்டு இருந்தனர். நாங்கள் போனதும் எல்லோரும் எங்களை வரவேற்க, குளித்து சாப்பிட்டு விட்டு, பொள்ளாச்சி டவுனில் இருந்து காயத்ரியின் கிராமத்திற்க்கு அவள் கணவன் அழைக்கவும், காரில் மூவரும் கிளம்பினோம். 



கிராமத்து வீடு ஒரு பெரிய தோட்டத்திற்க்குள் இருந்தது. அவர்கள் பண்ணையில் நிறைய ஆட்கள் வேலை செய்து கொண்டு இருக்க, பண்ணை ஆளை கூப்பிட்டு இளநீர் வெட்டி வர சொல்ல, மூவரும் குடித்தோம்... பின் காயத்ரியின் கணவன் பண்ணைக்கு கிளம்ப நான் ரெஸ்ட் எடுக்க, மாடியில் இருக்கும் ஒரு ரூமை காட்டினாள் காயத்ரி. குளித்து விட்டு வர, காயத்ரியும் ப்ரெஷ் அப் ஆகி இருந்தாள்.

என்ன, மதன் இந்த ஏரியா பிடிச்சு இருக்கா? 

ம்ம்ம். ரொம்ப பசுமையா இருக்கு... நம்ம சென்னை டென்ஷன்ல இங்க இருக்கிறது ரொம்ப ப்ரீயா இருக்கு..!


ம்ம்ம்..சரி மதன்... நான் சொல்றது என்னோட நிலைமையில் இருந்து புரிஞ்சுக்க ட்ரை பண்ணு... என் பாட்டி என்னையும் என் அக்காவையும் வளர்த்தாங்க... அப்போ அப்பாவுக்கு ரொம்ப கஷ்டம்... அதான் பாட்டி எங்களை எங்க கூடவே வச்சுட்டு படிக்க வச்சு எங்களுக்கு என்ன வேணுமோ எல்லாம் பண்ணாங்க... அதனால அவங்க கேட்டதை என்னால மட்டும் இல்ல, உன்னை பத்தி தெரிஞ்ச, நம்ம காதலை பத்தி தெரிஞ்ச என் அப்பா, அம்மா யாருமே பாட்டிக்கு எதிரா பேச முடியல... உங்கிட்ட  இதை சொன்னா, தனியா யுஎஸ்ல இருக்க நீ ஏதாவது பண்ணிட்டா என்ன பண்றதுன்னு தான் உங்கிட்ட சொல்ல முடியல மதன்... 

பரவாயில்லை காயத்ரி... எல்லாம் நடந்து முடிஞ்சு இப்போ பேசி என்ன பிரயோஜனம்... 

இல்ல மதன்... நான் உன்னை ஏமாத்தணும்னு இதை பண்ணல... நான் உன் மேல வச்சு இருந்த காதல் உண்மை... அதை நீ புரிஞ்சுக்கணும்.. மத்த பொண்ணுக மாதிரி பழகிட்டு உன்னை ஏமாத்திட்டன்னு நினைப்பன்னு எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு... மதன்...

ஏய்... என்ன பேசற... நான் உன்னை புரிஞ்சுகிட்ட அளவுக்கு நீ  என்னை புரிஞ்சுக்கலயா.... என் காயத்ரியும் மத்த பொண்ணுகளும் ஒண்ணா? நான் உன்னை எப்படி தப்பா நினைப்பேன்...?  நீ எப்பவும் என் மனசுல இருப்ப... அதை அழிக்க என்னால முடியாது...

ரொம்ப தேங்க்ஸ் மதன்... என்று என் கைகளை பிடித்துக் கொண்டாள் காயத்ரி...

என் மாமாக்கு நான் உன்னை லவ் பண்ணின விஷயம் தெரியும்.. கல்யாணத்துக்கு முன்னாடியே நான் அவர்கிட்ட இதை பத்தி சொல்லிட்டேன்... அப்பா, அம்மா சம்மதத்தோட ரெண்டு பேரும் லவ் பண்ணதை சொல்லிட்டு தான் கல்யாணம் பண்ணேன்.. ஆனா இந்த கல்யாணத்துல உன்னை மீட் பண்ணுவேன்னு நான் நினைக்கவே இல்ல.... 

ம்ம்ம்.. நானும் தான்... இந்த ஸ்ருதி தான் அதுக்கு காரணம்... 

ஆமா மதன்... சரி நைட் டின்னர் என்ன பண்ணட்டும்... உனக்கு பிடிச்ச மாதிரி பண்ணி குடுக்குறேன்.. இங்க வந்து நான் நல்லாவே சமைக்க கத்துகிட்டேன்.. 

ம்ம்... சரி உன் இஷ்டம் போல ஏதாவது செய்.... என்று சொல்லி விட்டு தோட்டத்தை சுற்றி பார்த்து விட்டு வந்தேன்... அப்போது காயத்ரியின் கணவரும் வந்து இருந்தார். ஒரு பையில் கள்ளை கொண்டு வந்து இருந்தார்... அதை இருவரும் வீட்டின் பின்புறம் உட்கார்ந்து குடித்துக் கொண்டு ஜாலியாக பேசிக் கொண்டு இருந்தோம்.... 

என்ன மதன் எப்போ கல்யாணம் பண்றதா இருக்கீங்க?

என்ன சார்... இப்போ அவசரம்... கொஞ்ச நாள் போகட்டும்... 

ஏன் இன்னும் காயத்ரியை மறக்க முடியலயா?

அய்யோ அப்படி இல்ல சார்.... நான் அதை மறந்து ரொம்ப நாள் ஆச்சு சார்... ஆனா வரபோற பொண்ணுக்கு எப்படி துரோகம் பண்ண முடியும்...

அப்போ காயத்ரி, உனக்கும் எனக்கும் துரோகம் பண்ணிட்டானு சொல்ற.... 

இல்லங்க அப்படி இல்ல... 

எப்படி இல்ல... உன்னை லவ் பண்ணவ என்னை கட்டிக்கிட்டா... அது துரோகம் இல்லையா... 

நான் என்ன சொல்றதுன்னு தெரியல சார்...

ம்ம்ம்.. நான் சொல்றதை புரிஞ்சுக்க மதன்... எல்லார் மனசுலயும் காதல் வரும்... ஆனா பல பேர் அந்த காதலை சொல்ல மாட்டாங்க.. அப்படி சொன்னாலும் அந்த பொண்ணு வேண்டான்னு சொல்வா.. சில பேருக்கு தான் அந்த பொண்ணும் விரும்புறது நடக்கும்... அப்படி ரெண்டு பேரும் லவ் பண்ணியும் அந்த காதல் கை கூடாம போய் இருக்கு... அதுக்கு காரணம்.. அவங்களா இருக்க முடியாது... சூழ்நிலை தான் காரணம்ம்... எங்க ஆத்தா சொன்னப்போ எனக்கும் கஷ்டமாத்தான் இருந்தது....

................

சின்ன வயசுல நானும் காயத்ரியும் ஒண்ணா விளையாடி இருக்கா.. அவளை என் பொண்டாட்டியா நினைச்சு பார்த்தது இல்லை... அப்போ தான் காயத்ரி எங்கிட்ட வந்து உன்னையும், உங்க காதலை பத்தியும் சொன்னா... பாட்டிக்காக அவ உன்னை விட்டு விலகி என்னை கல்யாணம் பண்ணிக்க போறதா சொன்னா... சின்ன பொண்ணு அவளோட மனசுக்கு அவளை நான் நல்லா பார்த்துக்கணுன்னு நினைச்சேன்...

இப்ப வரை அவளை நான் குழந்தை மாதிரி பார்த்துட்டு இருக்கேன்... அவளும் எனக்கு பிடிச்ச மாதிரி தன்னை கொஞ்சம் கொஞ்சமா மாத்திகிட்டா....

ம்ம்ம்ம் சரி சார்..

சரி மதன்... நாங்க உன்னை பத்தி நிறைய பேசி இருக்கோம்... ஆமா காயத்ரிக்கு நீ மொட்டை அடிச்சு விட்டியாமே... 


அதெல்லாமா சொல்லி இருக்கா.. அது ஒரு தடவை திருப்பதில மொட்டை அடிக்க ஆள் இல்லாம நானே அடிச்சு விட்டேன்... 

நான் அதை சொல்லல... அவ ரூம்ல வச்சு மொட்டை அடிச்சியாமே... அப்புறம் திவ்யாவும் மொட்டை அடிச்சாலாம்... 

ஆமாங்க... எனக்கு அது பிடிச்ச விஷயம்...பொண்ணோட முடியை மொட்டை அடிக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும்... 

ம்ம்ம்... இப்போ உன்னால ஒரு பொண்ணுக்கு மொட்டை அடிக்க முடியுமா... 

என்ன சார் சொல்றீங்க.... 

ஆமா மதன்... நம்ம பண்ணைல ஒரு பொண்ணு இருக்க அவளுக்கு தான் மொட்டை அடிக்கணும்.. பிரச்சனை எதுவும் வராது...

சரிங்க சார் பண்ணிடலாம்...

பின் நான் மாடியில் சென்று என் பேக்கில் இருந்த ஒரு கவரை எடுத்து வர, இருவரும் பண்ணைக்குள் சிறிது தூரம் நடந்து சென்றோம்... ஒரு வாழை தோப்பிற்க்குள் சிறிய ரூம் மோட்டார் ரூம் ஒன்று இருந்தது... அதை நோக்கி இருவரும் நடந்து சென்றோம்ம்... அந்த மோட்டார் ரூம் கதவு திறந்து கிடக்க, அங்கு ஓரமாக இருந்த ஒரு சின்ன கயிற்றுக் கட்டிலில் ஒரு பெண் உட்கார்ந்து கொண்டு இருந்தாள்... மோட்டார் ரூம் இருட்டாக இருந்ததால் அவள் முகம் சரியாக தெரியவில்லை....


ஆனால் ஒரு சாதாரண காட்டன் சேலையை கிராமத்து டைப்பில் கட்டி இருந்தாள்... நாட்டாமை படத்தில் குஷ்பு கட்டி இருப்பாளே அந்த மாதிரி கட்டி இருந்தாள் அந்த பெண்... அவள் எங்களுக்கு முதுகு காட்டி உட்கார்ந்து இருக்க, அவளுடைய முடி நல்ல அடர்த்தியாக கட்டை முடி போல இருந்தது....

என்ன மதன்... பொண்ணு எப்படி... அவளோட முடியை மொட்டை அடிக்கலாமா?

சரி சார்... அவங்க ஒத்துப்பாங்களா?

அதுக்காக தானே ரொம்ப நாளா அவ காத்துக்கிட்டு இருக்கா?

என்ன சொல்றீங்க புரியல எனக்கு?

ஒண்ணும் புரிய வேண்டாம்... மொட்டை அடிக்க சரியான இடம் எதுன்னு பாருங்க... அப்புறம்... தண்ணீ வேணும்ல... தோ அந்த தொட்டில தண்ணி இருக்கு போய் எடுத்துட்டு வா மதன்... நான் அவளை சரியான இடம் பார்த்து உட்கார வைக்கிறேன்...


சரி சார் சொல்லி விட்டு நான் கொஞ்ச தூரத்தில் இருந்த தொட்டிக்கு சென்று தண்ணீரை எடுத்து வரும் போது, அந்த பெண் அங்கு இருந்த ஒரு சிறு கல்லில் தன் அடர்த்தியான தலை முடியை விரித்து விட்டு கொண்டு உட்கார்ந்து இருந்தாள்.. அவள் பின்னால் நின்று கொண்டு இருந்த காயத்ரியின் புருஷன் அவளுடைய முகத்தில் விழுந்து இருந்த முடியை ஒதுக்கி விட, முடி கற்றைகளில் இருந்து அவள் முகம் தெளிவாக தெரிய நான் அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டேன்....

அந்த கல்லில் உட்கார்ந்து கொண்டு இருந்தது காயத்ரி...

தொடரும்....





Kannada actress Amrutha Suresh Bob Cut

September 22, 2020 0

 

Kannada actress Amrutha Suresh Long to Nape Length Bob Cut 












































"Aama" Nepali Movie fame Surakshya Panda Latest Images

September 22, 2020 0

 "Aama" Nepali Movie fame Surakshya Panda Latest Images | She shave her silky long hair for the Nepali Movie "Aama" For more Images : 



























































































Long to bob cut hair style

September 22, 2020 0

 

Long to bob cut hair style  | Stylist : Creative Stylist Pavithra