Thursday 22 July 2021

என் முடி என் உரிமை! - முதலாம் பாகம்

July 22, 2021 1

 ப்ரெண்ட்ஸ், இந்த கதை என்னோட பேஸ்புக் பிரென்ட் மொட்டைப் பாரதி எழுதியது. எனக்கு ரொம்ப பிடிச்ச கதையும் கூட. ரொம்ப நாளைக்கு முன்னால் பேஸ்புக்ல தங்கிலீஷிலே போட்டு இருந்தாங்க. நான் அதைத் தமிழில் சில மாற்றங்களுடன் மாற்றி எழுதி இருக்கிறேன். தேங்ஸ் மொட்டைப் பாரதி.


பிரகாஷ் வாணி நல்ல மனமொத்த காதல் தம்பதியர்கள். அவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு பெண்ணும் இருக்கிறது. அவள் பெயர் அகல்யா.

வாணியின் அழகில் மயங்கி அவளைத் திருமணம் செய்து கொண்டான் பிரகாஷ். வாணியின் அழகே அவளது அடர்த்தியான முடி தான். நல்ல அடர்த்தியாகவும், அவளது பின்னழகை தாண்டிப் பின்னல் தொங்கிக் கொண்டு இருக்கும். முடியின் அடர்த்தி மேலிருந்து அடி நுனி வரை ஒரே அளவில் இருக்கும். வாணி ஒரு பிரைவேட் காலேஜில் லெக்சரர். அது பெண்களுக்கான கல்லூரி. காலேஜ் முழுவதும் வாணியின் அடர்த்தியான நீளமான முடி ரொம்பவே பிரபலம். காலேஜில் படிக்கும் அத்தனை மாணவிகளும் வாணியின் முடியைப் பார்த்து ரசிப்பார்கள். வாணிக்கு இப்போது 27 வயது. ஆனால் அவளைப் பார்ப்பவர்கள் அப்படி சொல்லமாட்டார்கள். 
வாணி அடிக்கடி பார்லர் சென்று தன்னுடைய நீளமான முடியை ட்ரிம் செய்து கொண்டு, சில மேக்கப் விஷயங்களையும் செய்து கொள்வாள். வாணி பல வருடமாக ஒரே பார்லருக்கு செல்வதால் அவள் அந்த பியூட்டிஷியனுக்கு நல்ல பிரெண்ட் ஆகி விட்டாள். அந்த பியூட்டிஷியன் பெயர் பார்கவி. 

பார்கவியும் நல்ல அழகி. பார்லரில் வேலை செய்வதால் அவள் தன்னை நன்றாகவே அலங்கரித்துக் கொள்வாள். பார்கவி வயது 22 தான். அவளுடைய குடும்பம் கிராமத்தில் இருக்க, அவள் மட்டும் தனியாக இருந்தாள். பார்கவிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

பார்கவிக்கு போன் செய்து புக் பண்ணி விட்டு, பார்லருக்கு சென்றாள் வாணி. அவள் போன நேரம் பார்லரில் யாரும் இல்லை. சில நிமிடங்கள் நலம் விசாரித்து விட்டு வாணி சேரில் உட்கார, பார்கவி வழக்கம்போல வாணியின் முடியை நுனியை நேராக வெட்டி ட்ரிம் செய்து விட்டாள். பின்னர் வாணியின் முகத்தில் பேசியல் செய்து கொண்டே கதை பேசிக் கொண்டு இருக்க, 

என்ன வாணி மேடம், நீங்க எப்பவும் முடியை ட்ரிம் மட்டும் பண்றீங்க... மெயின்டெயின் பண்ண சிரமம் இல்லியா?

ரொம்ப கஷ்டமா இருக்கு பார்கவி, ஆனா முடியைக் கட் பண்ணின பின்னாடி அந்த லுக் நல்லா இல்லைன்னா என்ன பண்றது... அதான் பயம்... தவிர என் ஹப்பி இந்த லாங் ஹேர்க்கு அடிமை... சில சமயம் அவரே எனக்கு ஜடை பின்னி விடுவார்.

                                   

என்ன மேடம், கேர்ள்ஸ் காலேஜ் லெக்சரரா இருந்துட்டு ஹேர்கட் பண்ண பயமா?

இது என்ன லாஜிக்? அப்போ கோ எட் ஆ இருந்தா தான் பயப்படணுமா?

அப்படி இல்ல மேடம், கேர்ள்ஸ் காலேஜ்ல கேர்ள்ஸ் மட்டும் தான், கோ எட்ல பசங்களும் இருப்பாங்க! அவங்க ஏதாவது கமெண்ட் அடிப்பாங்கன்னு பயம் இருக்கும்...

ம்ம்ம் அதுவும் சரி தான்... என் கூட வேலை பாக்குற ஒரு மேடம் மொட்டையே அடிச்சிட்டு வந்தாங்க...

இதான் மேடம் கேர்ள்ஸ் காலேஜ் அட்வாண்டேஜ்... பொண்ணுக பார்த்துப் பொறாமை படுவாங்க... பட் கிண்டல் பண்ண மாட்டாங்க...

அப்போ என்னோட முடியைக் கட் பண்ணியே ஆகணும்னு இருக்க...

அப்படி இல்ல மேடம்...சரி ஓகே... எவ்ளோ ஷார்ட்டா கட் பண்ணலாம்?

நீங்க ஷோல்டர் லெந்த் பாப் கட் பண்ணினா செமயா இருப்பீங்க மேடம்...

அய்யோ என் ஹப்பி என்னை டைவோர்ஸ் பண்ணிடுவாரு... சரி ஓகே நான் எதுக்கும் அவர்கிட்ட ஒரு தடவை கேட்டுட்டு சொல்றேன்...

ஓகே மேடம்...

பின் மற்ற வேலைகளை முடித்து விட்டு, வாணி வீட்டுக்குப் போக, சிறிது நேரம் கழித்து பிரகாஷ் வேலை முடிந்து டென்சனாக வந்தான். அவனுக்குக் காபி கொடுத்து விட்டுப் பொறுமையாகப் பேச்சுக் கொடுத்தாள் வாணி.

என்னங்க, காலேஜ் செம் லீவ் விட்டு இருக்காங்க, 15 டேஸ் லீவ்... இந்த டைம்ல என் முடியைக் கட் பண்ணிக்கவா? இவ்ளோ லெந்த் வச்சுட்டு டெய்லி ரெடியாகச் சிரமமா இருக்கு...

அதெல்லாம் எதுக்குடி... இது தான் உனக்கு நல்லா இருக்கு...

என்னங்க ஷோல்டர் லெந்த் கட் பண்ணிக்கவா?

அதெல்லாம் வேண்டாம்... கொன்னுடுவேன்… என்று சொல்லி விட்டு எழுந்து போய்விட்டான். அவன் கோபப் பட்டதும் வாணிக்கு செம கோபம் வந்தது. 

                            

இவர் என்ன என் முடியைக் கட் பண்ண பர்மிஷன் கொடுக்கிறது? நான் என் இஷ்டப்படி என்ன வேணும்னாலும் செய்வேன்... பாப் கட் இல்ல மொட்டைக் கூட அடிச்சிப்பேன்... என்று நினைத்துக் கொண்டு போய்ப் படுத்துவிட்டாள். அவனும் எதுவும் பேசாமல் தூங்க, காலையில் இருவரும் பேசிக் கொள்ளாமல் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு, பிரகாஷ் வாணியிடம் சொல்லாமல் கிளம்பி விட்டான்.

அதுவும் வாணியை மிகவும் கோபப்படுத்தியது. சரி பிரகாஷ் வேலை முடிந்து வருவதற்க்குள் இன்னிக்கு என் முடியைக் கட் பண்ண வேண்டும் என்று முடிவு செய்தாள் வாணி. ஒரு ஸ்கை ப்ளூ டாப்ஸ், ஒயிட் லெக்கின்ஸ் உடன் கிளம்பி சென்றாள் வாணி.
காலையில் வேலைகளை முடித்து விட்டு, வாணி 10.30 மணிக்குப் பார்லர் செல்லப் பார்லர் மூடி இருந்தது. உடனே பார்கவிக்கு கால் பண்ணாள் வாணி. 

ஹே பார்கவி, நான் வாணி பேசுறேன்

சொல்லுங்க மேடம்...

என்னடி பார்லர் இன்னிக்கு லீவா?

என்ன மேடம் பார்லர் வந்து இருக்கீங்களா? ஸாரி மேடம் நான் என் குடும்பத்தோடு திருப்பதி வந்து இருக்கேன்...

என்னடி தீடிர்னு திருப்பதி?

ஒரு வேண்டுதல் மேடம்... அதான் குடும்பத்தோடு எல்லோரும் திருப்பதி வந்து இருக்கோம்...

ஓ... அப்படியா! சரிடி யாருக்கு வேண்டுதல், மொட்டையா?

ஆமா மேடம் எனக்குத் தான்... 

ஹே... என்ன சொல்ற பார்கவி, மொட்டை அடிக்கப் போறியா?

ஆமா மேடம்... அம்மா விடாம ஒரே டார்ச்சர்.... அதான்....

உனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகல... சின்னப் பொண்ணு எப்படிடி மொட்டைத் தலையோட இங்க வேலை பார்ப்ப...

                                       

இதில என்ன மேடம் இருக்கு... மொட்டைத் தானே... அதுவும் இப்போ மொட்டை அடிக்கிறது எல்லாம் பேஷன் ஆயிடுச்சு... எங்களை மாதிரி யூத் முடிவு பண்றது தான் எப்பவும் பேஷன்...

அதுவும் கரெக்ட் தான்... சரி சரி நல்லபடியா சாமி கும்பிட்டு மறக்காம லட்டு வாங்கிட்டு வா!!?ஓகே மேடம், கண்டிப்பா மொட்டைத் தலையோட மீட் பண்ணலாம். 

சரிடி பை... சொல்லிப் போனை கட் பண்ணினாள் வாணி. இப்போது பார்கவி இல்லாததால் என்ன பண்ணுவது என்று வாணிக்கு தெரியவில்லை. பக்கத்தில் வேற பார்லர் எங்கே இருக்கு என்றும் தெரியவில்லை. ஆனால் பிரகாஷ் வேலை முடிந்து வருவதற்க்குள் இன்னிக்கு தன் முடியை வெட்டி ஆக வேண்டும் என்று நினைத்தாள் வாணி.

பிரகாஷ் மேல இருக்க கோபத்தில் என்ன பண்ண போறா வாணி?
இரண்டாம் பாகம் விரைவில் காத்திருங்கள் 


Long hair spiritual hair cut | Temple Hair cut | Poo Mudi Kanikkai

July 22, 2021 0

 Long hair spiritual hair cut | Temple Hair cut | Poo Mudi Kanikkai 

Long layer brown hair coloring transformation

July 22, 2021 0

 Long layer brown hair coloring transformation 


Long to short classical bob cut hair style

July 22, 2021 0

 Long to short classical bob cut hair style 
Punjabi girl's traditional wedding reception makeup

July 22, 2021 0

 Punjabi girl's traditional wedding reception makeup Bollywood Glamorous Queen Nora Fatehi latest hair style

July 22, 2021 0

 Bollywood Glamorous Queen Nora Fatehi latest hair style 
Bollywood Fame Geetanjali Mishra latest hair style

July 22, 2021 0

 Bollywood Fame Geetanjali Mishra latest hair style