Wednesday 11 November 2020

ஓமனப் பெண்ணே.. முதல் பாகம்

November 11, 2020 4

நான் ஓமனா.. கேரளா பொண்ணு.. 24 வயசு... நான் வளர்ந்தது எல்லாம் சென்னை தான். அப்பா வேலை காரணமாக என் குடும்பம் என்னுடைய சிறு வயதில் சென்னைக்கு வந்தது. அதன்பின் நிறைய முறை நான் கேரளாவுக்கு சென்று வந்தாலும் சென்னை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். வீட்டில் மலையாளம் பேசினாலும், வெளியில் நல்லாவே தமிழ் பேசுவேன்.. 

என் அப்பா, அம்மா நான் மூவரும் ரொம்ப நல்லாவே தமிழ் பேசுவோம். என் அப்பா தெற்கு ரயில்வேயில் வேலை செய்கிறார். அதனால் ரயில்வே குவார்ட்டஸில் தான் இருக்கிறோம்.. நான் இப்போது காலேஜ் இரண்டாம் வருசம் படித்து கொண்டு இருக்கிறேன்.. என் காலேஜில் தான் ஹாசினி, ஹரிணி படிக்கிறார்கள். என் காலேஜில் ஹேர் டொனேட் முகாம் ஒன்று நடந்தது. அதில் என்னுடன் படித்தவர்கள் நிறைய பெண்கள் மொட்டை அடித்து தங்கள் தலை முடியை தானமாக தந்தனர். அப்போது எனக்கு ஏனோ மொட்டை அடித்து கொள்வது பிடிக்கவில்லை.

ஆனால் சில நாட்கள் கழித்து ஹாசிணியும், அவள் தங்கை ஹரிணியும் ஒன்றாக மொட்டை அடித்து கொண்டு காலேஜ் வந்ததை பார்த்ததும் எனக்கும் மொட்டை அடித்து கொண்டு என் தலை முடியை கேன்சர் நோயாளிகளுக்கு தானமாக கொடுக்க ஆசை வந்தது.. இது பற்றி நான் பல முறை யோசித்தாலும் ஏதோ ஒரு தயக்கம், பயம் மனதில் இருந்து கொண்டே இருந்தது.


நான் வளர்ந்தது சென்னை என்றாலும், நான் அப்படியே கேரள பெண்களை போலவே இருப்பேன். யாரும் சென்னை தமிழ் பெண் என்று சொன்னால் நம்ப மாட்டார்கள். ஆனால் நான் தமிழில் அவர்களுடன் பேசினால் நம்புவார்கள். வட்டமான முகம். வஞ்சனை இல்லாமல் வளர்ந்த உயரம், அதற்கேற்ற செழிப்பான உடல், என் பின்னழகை தொடும் நீளமான கூந்தல், கூந்தலை விரித்து விட்டு ஓணம் புடவை கட்டி நான் நடந்தால் என்னை எல்லோரும் ஒரு முறை பார்க்காமல் செல்ல மாட்டார்கள்.

அப்பா ரயில்வேயில் TTR ஆக வேலை பார்ப்பதால் அதிகம் வீட்டில் இருக்க மாட்டார். நானும் அம்மாவும் தான் வீட்டில் இருப்போம். அப்பா வேலைக்கு சென்றதும் நான் ஒரு முறை அம்மாவிடம் சென்று என் தலை முடியை மொட்டை அடிப்பது பற்றி கேட்டேன். அம்மாவும் நல்ல விஷயம் என்பதால் மொட்டை அடித்து கொள்ள சம்மதம் சொன்னாள்.

அதன் பின் நான் எப்படி என் தலை முடியை மொட்டை அடித்து கொள்வது என்று பல விதமாக யோசித்தேன். அந்த சமயத்தில் தான் செமஸ்டர் விடுமுறை வர, நான் இந்த காலேஜ் லீவில் மொட்டை அடித்து கொள்ள முடிவு செய்தேன். பின் ஒரு பார்லரில் மொட்டை அடிப்பதை விட, வீட்டிலேயே மொட்டை அடித்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து ஆன்லைனில் மொட்டை அடிக்க பார்பர் ஒருவரை புக் செய்தேன்...
அடுத்த நாள் காலை பதினொரு மணிக்கு பார்பர் என் வீட்டுக்கு வர, நான் ஒரு டைட்டான டி சர்ட்டும், ட்ராக் பேண்ட்டும் அணிந்து கொண்டு இருந்தேன்.

இங்க ஓமனா நீங்க தானே? மொட்டை அடிக்க....

ஆமா, ஆமா வாங்க... நான் தான் ஓமனா... எனக்கு தான் மொட்டை அடிக்கணும்...

ஓகே.. மேடம்..

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. இதோ வர்றேன்...

மேடம்.. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா...

சொல்லுங்க...

இல்ல மேடம், நான் பார்பர் வேலை செய்யல...இது எனக்கு பேஷன்.. உங்க முடியை மொட்டை அடிக்கும் போது நான் அதை வீடியோ எடுத்துக்கலாமா? 



எதுக்கு வீடியோ எடுக்குறீங்க..? அதெல்லாம் வேண்டாம்...

இல்ல, உங்களை மாதிரி யங் கேர்ள்ஸ் மொட்டை அடிப்பதை வீடியோ எடுத்து போட்டா, இன்னும் நிறைய பேர் உங்களை மாதிரி ஹேர் டொனேட் பண்ணனும்னு வருவாங்க.. அதுக்காக தான் வீடியோ எடுக்க கேட்டேன்...

ஓ... அப்படியா... சரி ஓகே எடுத்துக்கோங்க... 

சரி நான் கேமரா ஆங்கிள் ரெடி பண்றேன்... அப்புறம் நீங்க உட்காரலாம்..

ம்ம்ம். சரி...

கேமராவை பார்பர் ஸ்டாண்ட் ஒன்றை போட்டு செட் செய்ய, நான் அதற்க்குள் சில வேலைகளை முடித்து விட்டு வர, பார்பர் என் வீட்டு ஹாலில் ஒரு சேரை எடுத்து போட்டு இருந்தார். பின் என் முடியை மொட்டை அடிப்பதற்க்கு முன் சில போட்டோ எடுக்க, நானும் போஸ் கொடுத்தேன். பின் பார்பர் போட்டு இருந்த சேரில் பார்பர் என்னை உட்கார சொல்ல, நானும் அதில் உட்கார்ந்து கொண்டேன்... 

மொட்டை அடிக்கலாமா?

ம்ம்ம்.. ஆரம்பிங்க...

அதுக்கு முன்னாடி உங்க முடியை சிக்கு இல்லாமல் சீவணும்.. 

சொல்லி விட்டு என் நீளமான முடியை சீப்பால் சீவி விட்டு தடவி பார்த்துக் கொண்டே, சீவி இரண்டு பாகமாக பிரித்து விட்டு, தலையின் இரண்டு பக்கத்துக்கும் ரப்பர் பேண்ட் போட்டு கொண்டையாக போட்டுவிட்டார். நான் அமைதியாக பார்பர் செய்வதை ரசித்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தேன்... 







என்னங்க.. ஒரு மக்கில கொஞ்சம் தண்ணீ கிடைக்குமா? 

ம்ம்ம்... இதோ தர்றேன்.. அம்மா கொஞ்சம் அந்த மக்குல தண்ணி கொடும்மா....

அம்மா ஒரு சின்ன கப்பில் தண்ணீரை கொண்டு வந்து தரவும், அதை வாங்கிய பார்பர், கொஞ்சமாக கைகளில் அள்ளி என் தலையின் முன் நெற்றியில் மட்டும் தெளித்து விட்டு, அதை தடவி விட்டார். பின் ரேசரை எடுத்து மெதுவாக நனைத்து இருந்த இடத்தில் ஒரு சின்ன கோடு போல சிரைக்க, அந்த இடத்தில் என் மொட்டை சிறிது போல வெளிப்பட்டது... 

எவ்ளோ நாளா ஹேர் கட் பண்ணாம இருக்கீங்க?

ஒரு மூணு மாசமா ஹேர் கட் பண்ணல...

ம்ம்ம்.. இதுக்கு முன்னாடி மொட்டை அடிச்சு இருக்கீங்களா?

இல்லண்ணா... ரொம்ப சின்ன வயசுல மொட்டை அடிச்சது... நினைவு தெரிஞ்சு இதான் முதல் மொட்டை....

உங்கள பார்த்தா தமிழ் பொண்ணு மாதிரி இல்லயே... கேரளாவா...?

ஆமா.. பூர்வீகம் கேரளா... வளர்ந்தது எல்லாம் சென்னை தான்.. தமிழ் ரொம்ப நல்லாவே பேசுவேன்...

ஓ சரி.... ஹேர் வாஷ் எப்போ பண்ணீங்க? 

இன்னிக்கு காலைல தான் தலைக்கு குளிச்சேன்.. ஹேர் ஆயில் போட்டு கொஞ்சம் பிசுபிசுப்பா இருந்துச்சு அதான்...

ம்ம்ம்.. உங்க முடி ரொம்ப நல்லா சில்க்கியா இருக்கு... எப்படி?

அது எங்க கேரளா ஸ்டைல்ல ப்யூர் தேங்காய் எண்ணெய், அப்புறம் எங்க அம்மா செய்யுற மூலிகை எண்ணெய் ரெண்டையும் போடுவோம்... அதான் பட்டு மாதிரி இருக்கும்...

ம்ம்ம்.. அதே மாதிரி ரொம்ப அடர்த்தியாவும் இருக்கு... வித விதமா ஹேர் ஸ்டைல் வச்சுப்பீங்களா...

இல்லங்க... போனி டெய்ல் தான் மேக்ஸிமம் வைப்பேன்... அப்படி இல்லன்னா ப்ரெண்டல பப் வச்சு சீவுவேன்...

மொட்டை அடிக்க எவ்ளோ நாளா ஐடியா... 

ஒரு மூணு வருஷம் முன்னாடி என் அண்ணன் பொண்ணுக்கு மொட்டை போட்டாங்க... அப்போ இருந்து மொட்டை அடிக்க ஆசை தான்.. ரீசண்ட்டா என் காலேஜ்ல ஹேர் டொனேட் பத்தி ஒரு ஈவெண்ட் பண்ணாங்க...! அதிலிருந்து ரொம்ப தீவிரமா யோசிச்சு பிளான் பண்ணேன்...



ம்ம்ம்.. உங்க வட்ட முகத்துக்கு மொட்டை ரொம்ப அழகாவே இருக்கும்.. பயப்படாதீங்க... 

ம்ம்ம்ம்...

என்னுடைய முன் நெற்றியில் இருந்து இடது பக்கமாக மேல் நோக்கி மெதுவாக சிறு சிறு பேட்ச்சாக சிரைத்துக் கொண்டே என்னுடைய பதட்டத்தை குறைக்க என்னுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே என் தலையை மொட்டை அடித்து கொண்டு இருந்தார் பார்பர்...
நான் அவர் கேட்பதற்கு பதில் சொல்லிக் கொண்டு இருந்தாலும், பார்பர் என் தலை முடியை சிரைக்கும் போது வரும் சத்தத்தை ரசித்துக் கேட்டுக் கொண்டு தான் இருந்தேன்...

சிறிது நேரத்தில் பார்பர் பேச்சை நிறுத்திக் கொண்டு முடியை மழிப்பதில் கவனமாக இருக்க, நான் ஏதோ ஒரு பயத்தில் என் கண்ணை இறுக்கமாக மூடிக் கொண்டு, முடியை சிரைக்கும் சத்தத்தை மட்டும் கேட்டுக் கொண்டு உட்கார்ந்து இருக்க, பார்பர் என் மழிக்கப்பட்ட மொட்டை தலையை தடவிக் கொண்டே இருப்பது போல நான் உணர்ந்தேன்...

======================================================================

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். தீபாவளி ஸ்பெஷலாக உங்களுக்கு இந்த ஓமனப் பெண்ணே கதையை கொடுக்கிறேன். இந்த தீபாவளிக்கு கொரோனாவினால் எந்த புதிய திரைப்படங்களும் வெளியாகாது என்ற நிலையில் என்னால் முடிந்த அளவு உங்களுக்கு ஒரு சிறிய எண்டர்டெயின்மெண்ட் கொடுக்க நினைக்கிறேன். இதன் அடுத்த பாகம் தீபாவளிக்கு அடுத்த நாள் வெளியாகும். குடும்பத்துடன் பாதுகாப்பாக, இந்த 
தீபாவளியை கொண்டாடுங்கள்..!










Young model long to short pixie Boy cut | Celebrity Makeover

November 11, 2020 1

 

Young model long to short pixie Boy cut | Celebrity Makeover 

























Young Indian NRI Couple Head shaving photos

November 11, 2020 0

 

Young Indian NRI Couple Head shaving photos