Monday, 8 December 2025

புதிய அனுபவம் - பத்தாம் பாகம்

December 08, 2025 0

பிருந்தாவின் பார்வையில்…

பாலா வந்ததில் இருந்து என்னுடைய வீடு எனக்கே வித்தியாசமாக இருக்கிறது. காலை நான் எழுந்து என் அறையை விட்டு வெளியே வந்து வீட்டு வேலைகள் செய்ய ஆரம்பிக்கும் போது, பாலாவும் என் சத்தம் கேட்டு அறையில் இருந்து வந்து விடுகிறான். எனக்கு ஏதாவது உதவி வேணுமா எனக்கேட்டு செய்து கொடுக்கிறான். அவனுக்கான வேலை எதுவும் இல்லாத நேரத்திலும் என் அருகில் இருந்து ஏதாவது பேச்சு கொடுத்துக் கொண்டே இருக்கிறான். ஆனால் அவனுடன் பேசிக்கொண்டே என்னுடைய வேலைகளை செய்வது எனக்கும் பிடித்து இருந்தது. அவ்வப்போது அவனுடைய பார்வை என்னை நோக்கியே இருப்பது போல தெரியும். அது என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறதா, இல்லை என்னுடைய தலைமுடியை பார்த்துக் கொண்டிருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை.

பாலா பேருந்தில் என்னுடைய ஜடையை பிடித்துப் பார்த்ததை இப்போது நினைத்தாலும், எனக்குள் ஒரு சிலிர்ப்பு வருகிறது. பலமுறை என்னுடைய தலை முடியை புகழ்ந்து பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். என்னுடைய தலைமுடி நீளமாக இருப்பதில் எனக்கு எப்போது ஒரு பெருமை உண்டு. யாராவது என்னுடைய முடியை பற்றி பேசும் போது என் மனதிற்குள் ஒரு குளிச்சி இருக்கும். ஏதோ ஒரு பெரிய விருது வாங்கிய சந்தோஷம் கிடைக்கும். ஆனால், பாலா இதுவரை என்னுடைய முடியை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பேருந்தில் என்னுடைய தலைமுடிக்கு கிடைத்த சில நிமிட அவனுடைய ஸ்பரிசம் எனக்கு அவ்வளவு சந்தோஷத்தை கொடுக்கிறது. மீண்டும் ஒருமுறையாவது என்னுடைய முடியை அவன் கையால் பிடித்து பார்க்க மாட்டானா என உள்ளம் தவிக்கிறது. அவன் வார்த்தைகளில் என்னுடைய முடியை பற்றி எதுவும் சொல்ல மாட்டானா என நான் ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.

                                         

பாலா என்னுடைய முடியை பற்றி பேச வேண்டும், என்னுடைய முடியை அவள் கையில் எடுத்து பிடிக்கவேண்டும் என நான் ஏன் சஞ்சலப்படுகிறேன் என எனக்கே தெரியவில்லை. என் மகன் சூரஜ் எனக்கு உதவ வேண்டும் என மனதிற்குள் நான் நினைத்ததை எல்லாம் தானாகவே பாலா செய்யும்போது எனக்கு அவன்மீது ஒரு ஈர்ப்பு வந்து விடுகிறது. தவிர, என்னுடைய அலுவலகம், வீடு, குடும்பம் என பழகிவிட்ட எனக்கு, என் விருப்பங்களை பேசும் ஒரு தோழமை பாலாவிடம் கிடைக்க வேண்டும் என்கிற ஆசையோ என தெரியவில்லை. என்னை விட வயதில் சிறியவன், என் மகன் போன்றவன் என்ற விஷயங்கள் எனக்கு நினைவில் இருந்தாலும், அவனிடம் மேலும் என்னுடைய தலைமுடி பற்றி ஏதாவது ஒரு எதிர் பார்ப்பு எழுந்து கொண்டே இருக்கிறது.

ஒருநாள் அலுவலகத்திற்கு சென்ற நான் சற்று சோர்வாக இருந்ததால் மதியம் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தேன். பாலா இன்னும் வரவில்லை. நான் சூரஜ் அறைக்கு சென்றேன். அறையை மிக சுத்தமாக வைத்திருந்தான். இதுபோல அறையை சுத்தமாக வைத்துக்கொள்ள பலமுறை நான் சூரஜ்ஜிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால், நான் சொல்லாமலே அதை பாலா செய்கிறான். அவன் பயன்படுத்தும் மேஜை மேல் சில புத்தகங்களும், நோட்டுகளும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

அதில் ஒரு நோட்டு மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அது என்னவென்று எடுத்துப்பார்த்தேன். அது பாலாவின் டைரி என எனக்குப்புரிந்தது. தான் தினமும் எழுதும் டைரியை எடுத்து வர மறந்து விட்டதால், இங்கு இருக்கும் வரை எழுத இந்த நோட்டை பயன்படுத்துவதாக எழுதியிருந்தான்.

அடுத்தவர் டைரியை எடுத்து படிப்பது தவறு என எனக்குத் தெரியும். ஆனாலும் என்னைப்பற்றி ஏதாவது எழுதியிருக்கிறானா என தெரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு வந்தது. இப்போதைக்கு பாலா வரப்போவது இல்லை என நினைத்துக் கொண்டு அதை படித்தேன். பெரும்பாலும், அன்றைய நிகழ்வுகள் தான் இருந்தது. தன்னுடைய அம்மாவை எந்த அளவிற்கு miss பண்ணுகிறேன் என எழுதியிருந்தான். அகல்யாவை நினைக்கும்போது எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருந்தது. அப்போதுதான் ஒரு பக்கத்தில் நான் எதிர்பார்த்தது இருந்தது. பாலா என்னுடைய முடியை பற்றி ஏதோ எழுதியிருந்தான். டைரியில் இருந்த அவனுடைய வரிகள் இதோ.

“பேருந்தில் வரும்போது பிருந்தா Aunty தனக்கு Motion sickness இருப்பதாக கூறினார். நான் என்னுடைய மடியில் படுத்துக்கொள்ள சொன்ன போது ஏனோ மறுத்து விட்டாள். ஒருவேளை என்மேல் நம்பிக்கையில்லாமல் இருந்திருக்கலாம். பெரிதும் பழக்கமில்லாத ஒருவரிடம் வேண்டாம் என நினைக்கும் அவர்களின் பார்வையும் நியாயமானதே. நான் மேற்கொண்டு நிர்பந்திக்கவில்லை. ஆனால், எதிர் பாரத விதமாக அவர்கள் நடக்கக்கூடாது என நினைத்தது நடந்து விட்டது. பாவம் Aunty மிகவும் சிரமப்பட்டார்கள். மீண்டும் பேருந்தில் ஏறியபோது என் மடியில் இருந்த பையில் தலை வைத்து படுத்துக் கொண்டார்கள்.

அப்போது தன்னுடைய ஜடையை கையில் பிடித்துக்கொண்டே படுக்க சிரமப்படுவதை பார்த்த நான் பிருந்தா Aunty யின் ஜடையை வாங்கி என் பக்கமாக போட்டேன். அப்போது தான் அவர்களின் முடியை முதல் தடவையாக தொட்டுப்பார்த்தேன். ஏற்கனவே என் வீட்டிற்கு வந்த போது பிருந்தா Aunty யின் நீளமான தலைமுடி எனக்கு அழகாக தெரிந்தது. அந்த முடியை என் கையால் தொட்டபோது இனம்புரியாத சந்தோஷம் வந்தது. பிருந்தா Aunty என் மடியில் படுத்திருக்கும்போது என்ன செய்வது என தெரியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அவர்களின் தலைமுடி மிகவும் அருகில் என்னை உரசிக்கொண்டிருப்பது கொஞ்சம் Tempting ஆக இருந்தது.



ஒருவர் சம்மதம் இல்லாமல் அவர்களின் தலைமுடியை தொடுவது தவறுதான். இருந்தாலும், மெல்ல பிருந்தா Aunty யின் ஜடையை தடவிப்பார்த்தேன். மெல்ல அவர்களின் ஜடையை என் கையால் பிடித்தேன். பிருந்தா Aunty யின் ஜடை நல்ல அடர்த்தியாக இருந்தது. அவர்களின் ஜடையை என் கைகளில் இருந்து விடுவதற்கு எனக்கு மனதே இல்லை. மெல்ல அவர்களின் ஜடையை தடவிக் கொண்டே மேல்நோக்கி சென்றேன். மேலே செல்ல செல்ல பிருந்தா Aunty யின் ஜடை இன்னும் அடர்த்தியாக இருப்பது போல எனக்கு தோன்றியது.

அவர்களுடைய ஜடையை கழுத்தருகில் பிடித்தபோது ஏதோ பெரிய விஷயத்தை செய்த உணர்வு கிடைத்தது. சில நிமிடங்கள் பிருந்தா Auntyயின் அழகான ஜடையை என்னுடைய கையில் பிடித்துப் பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. மெல்ல அவர்களுடைய ஜடைப் பின்னல்களை தடவிப் பார்த்தேன். பார்க்க மிகவும் முரட்டுத்தனமான முடி போல இருந்தாலும், என் விரல்களுக்கு அவர்களின் தலைமுடி மிகவும் மிருதுவாக இருந்தது. இவ்வளவு அழகான, நீளமான தலைமுடியை வைத்திருக்கும் பிருந்தா Aunty மிகவும் கொடுத்து வைத்தவள்.

இதுவரை பிருந்தா Aunty அவர்களின் முடியை தொட்டுப்பார்த்ததையும், எனக்கு அவர்களின் தலைமுடி பிடிக்கும் என்பதையும் சொல்லவில்லை. ஒருவேளை சொல்ல முயன்றால், என்னை தவறாக எடுத்துக் கொள்ள நேரும் என கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. பிருந்தா Aunty யின் தலைமுடி பற்றி இதற்கு மேல் என்னுடைய எண்ண ஒட்டங்களை விவரித்து எழுதுவது ஏற்புடையததாக இருக்காது. மீண்டும் அவர்களின் தலைமுடியை ஸ்பரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தால், அது எனக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம்“


பாலாவின் டைரியை படித்து முடித்த போது, அவன் வார்த்தைகளில் என்னுடைய முடியை பற்றி எழுதியிருப்பதை பார்க்க எனக்குள் பெரிய சந்தோஷம் வந்தது. பாலாவிற்கு என்னுடைய தலைமுடி மீது ஒரு ஈர்ப்பு இருக்கிறது என்று புரிந்துகொண்டேன். நான் என்னுடைய தலைமுடியை பாலா எடுத்து தடவிப்பார்க்க வேண்டும் என மனதிற்குள் ஆசைப்படுவதுபோல அவனுக்கும் என்னுடைய முடியை தொட்டுப் பார்க்கும் ஆசை இருக்கிறது.

ஆனால், இப்போது அவன் தனிப்பட்ட டைரியில் என்னைப் பற்றி எழுதியதை நான் தெரிந்து கொண்டதாக காட்டிக் கொள்ளவும் முடியாது. அதே நேரத்தில் அவனாக வந்து என்னுடைய முடியை பற்றி என்னுடன் பேசுவான் என காத்திருக்கவும் என்னால் முடியவில்லை. நான் எடுத்த அந்த டைரியை மீண்டும் எடுத்த இடத்தில் வைத்துவிட்டு என் அறைக்கு வந்தேன்.