Friday 30 April 2021

பதிலுக்கு பதில் - இரண்டாம் பாகம்


நானும் சரணும், கோவிலிலிருந்து ரொம்ப லேட்டாக வந்ததால், அப்படியே எங்கள் ரூமுக்கு சென்று தூங்கிவிட்டோம். அடுத்த நாள் காலை நான் சீக்கிரமே எழுந்து விட, அப்பா வாக்கிங் சென்று இருக்க என் அம்மா மட்டும் கிட்சனில் பிசியாக இருந்தாள். நான் ப்ரெஷ் அப் ஆகி வர, அம்மா சமையல் வேலையை முடித்து விட்டு, குளிக்கச் செல்ல, வெளியில் சென்று இருந்த அப்பாவும் வந்தார்.


குட் மார்னிங் அனு... நைட் எப்போ வந்தீங்க…?

குட் மார்னிங் டாட்... நைட் லெவன் ஆயிடுச்சு... அப்படியே தூங்கிட்டோம்… 

ம்ம்ம்… ஓகே டா... சரண் இன்னும் எழலையா?

இல்ல டாட்... இனிமேல் தான் வருவான்…

 சரி அனு,  அப்பாவுக்கு ஆபீஸ் லேட் ஆச்சு,  நான் கிளம்புறேன்...  நீங்க ரெண்டு பேரும் சண்டை பிடிக்காமல்  இருங்க...  என்று சொல்லிவிட்டு அப்பா ஆபீஸ் கிளம்ப,  அவரிடமிருந்து  நான் தப்பித்த நிம்மதியில் அம்மாவை எப்படி சமாளிப்பது என்று யோசித்தேன்.  அதற்குள் அம்மா குளித்துவிட்டு  வந்தாள்.

அனு  சரண் எழுந்துவிட்டானா? 

 அம்மா அவன் இன்னும் எழும்பல,  இன்னும் நேரமாகும்...  நீங்க ஆபீஸ் கிளம்புங்க...  அவனை நான் பார்த்துக்கிறேன்...

அம்மா நான் சொன்னதைக் கேட்டுக் கோபத்துடன் சரணின் ரூமுக்குள் சென்றாள்.  அங்கு அவன் இழுத்துப் போர்த்தி தூங்கிக்கொண்டு இருக்க அம்மா அவனை அடித்து எழுப்பினாள்.


 டேய் சரண்,  இவ்வளவு நேரம் தூங்கக் கூடாது...  எழுந்திரு...  என்று சொல்லிவிட்டு போர்வை பிடித்து அம்மா வலுக்கட்டாயமாக இழுக்க...  சரண் போர்வைக்குள் நேற்று போட்டு  இருந்த மஞ்சள் நிற சுடிதாருடன் மொட்டை அடித்த ஒரு பெண்ணைப் போல இருந்தான்.  அந்தக் கோலத்தில் அவனைப் பார்த்த அம்மா,  அதிர்ச்சியில் என்னடா இது கோலம் என்று அவனைக் கேட்டாள்.


 எல்லாம் உங்க செல்ல மகளைக் கேளுங்க?  அவள்தான் என்னுடைய இந்த நிலைமைக்குக் காரணம்...   நீங்க என்னைப் பனிஷ் பண்ண சொல்ல,  அனு அக்கா அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு,  என்னை அம்மன் கோவிலில்   மொட்டையடித்த பெண்ணைப் போலச் சாமி முன் ஊர்வலமாக வர வைத்துவிட்டாள்... 

அம்மா அதைக் கேட்டு என்னைக் கோபமாகப் பார்த்தாள். அனு இது ரொம்ப தப்பு... நீ அவனை இப்படி பனிஸ் பண்ணியிருக்க கூடாது... அவன்கிட்ட சாரி கேளு... அம்மா அவன் என்னை டீஸ் பண்ணியது தப்பு... அதுக்குத்தான் இந்தப் பனிஷ்மென்ட்... சோ நான் அவனிடம் சாரி கேட்கமாட்டேன்... அனு அம்மா சொன்னா கேட்கணும்... அவன்கிட்ட சாரி கேளு... நோ மா என்னால சாரி கேட்க முடியாது...


அப்போ நம்ம வீட்டு வழக்கப்படி சரணை ஹர்ட் பண்ணியதற்காக அவன் சொல்வதை நீ கேட்க வேண்டும்!!!



அதெல்லாம் முடியாது மா, நான் அவன் சொல்வதை கேட்கமாட்டேன்...


அப்போ இந்த மாத பாக்கெட் மணி கட் பண்ணிடலாம்..! ஓகேவா?


அம்மா, இதெல்லாம் ஓவர், கொஞ்சம் கூட நல்லா இல்லை? அவன் என்னை டீஸ் பண்ணியதால, அதுவும் உங்க பர்மிஷனோட தான் நான் அவனுக்கு மொட்டை அடிச்சு விட்டேன்...

அப்படி பண்ண சொல்லி நான் சொன்னேனா?

----------------

சொல்லு அனு, நானும் அப்பாவும், சரணை இந்த அளவுக்கு டீஸ் பண்ண சொன்னோமா?

இல்லம்மா? அனு தன் தவறை ஒப்புக் கொண்டதை போலக் குரல் கம்ம சொன்னாள்.

சரி, அதனால நீ அவன் சொன்னதை கேட்டே ஆகணும்? இல்லனா இந்த மாதம் உன்னோட பாக்கெட் மணி கட் பண்ணிடுவேன்...

சரிம்மா... நான் அவன் சொல்றதை கேட்குறேன்...

பின் இருவரையும் சமாதானப்படுத்தி விட்டு அம்மா ஆபிஸ் செல்ல, சரண் அனுவை முறைத்துக் கொண்டே குளிக்கச் சென்றான். அனுவும் குளித்து ப்ரெஷ் ஆகி வர, இருவரும் ஒன்றாகச் சாப்பிட்டனர்.

அனுவுக்கு உள்ளுக்குள் தன் தம்பி பதிலுக்குப் பதில் மொட்டை அடிக்கச் சொல்வானோ என்று பயமாக இருந்தாலும், வெளியில் கெத்தாகக் காட்டிக் கொண்டாள்.

அனு ஒரு டீ-சர்ட் அன்ட் ட்ராக் பேண்ட் போட்டுக் கொண்டு டிவி பார்க்க, சரண் அவன் ரூமிலிருந்து வந்தான்.

அக்கா, கொஞ்சம் வெளியே போகணும்... 


சரிடா போய்ட்டு வா...


நீயும் வரணும்… உனக்குத் தான் வேலை இருக்கு... வாடி போலாம்...


எங்கடா?


அதெல்லாம் உனக்கெதுக்கு... அம்மா சொன்னாங்கள்ல... கிளம்பு...


சரி நட... இருவரும் வீட்டைப் பூட்டிக் கொண்டு, சரணின் பைக்கில் கிளம்பினர். அனு டீ-சர்ட் பேண்டில் பார்க்க, நல்ல நீளமான முடி வைத்த பையனைப் போல இருந்தாள். ஏன்னா, அவளுக்குக் கிரிக்கெட் கிரவுண்ட் மாதிரியான சின்ன மனசு... புரிஞ்சவன் புரிஞ்சுக்க... புரியாதவன் கேட்டுத் தெரிஞ்சுக்க (RIP VIVEK SIR)...

சரண் அவர்களின் ஊரை விட்டுக் கொஞ்சம் வெளியே அவன் ரெகுலராக ஹேர் கட் பண்ணும் சலூனுக்கு சென்றான்... அது ஊரை விட்டுக் கொஞ்சம் தள்ளி ஒதுக்குப்புறமாக இருக்கும் சலூன். அதனால் பெரிய கூட்டம் இருக்காது. அதே போல அந்தச் சலூனை நடத்தும் பார்பர் சரணை விட 2 வயது தான் பெரியவனாக இருப்பான். அவன் பெயர் கதிர்… சரண் அவனைப் பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவுக்கு நல்ல பழக்கம்.


வாடா, சரண்... என்னடா இது மொட்டை?


அதுவா கோவில் வேண்டுதல்டா... அப்புறம் எப்படி இருக்க? வேலை எல்லாம் இருக்கா?


எங்கடா? கொரொனா மறுபடியும் பரவ ஆரம்பிசிருச்சு... பெருசா வேலை இல்ல… சும்மா தான் கடையைத் திறந்து வச்சுட்டு இருக்கேன்... அது சரி… இவங்க?


என் அக்கா தாண்டா... நாங்க ரெண்டு பேரும் ட்வின்ஸ்... என் அக்காக்கு என்ன ஹேர் கட் பண்ணனும்... அதான் கூட்டி வந்தேன்...


இல்ல சரண், எனக்கு லேடீஸ் ஹேர் கட் பண்ண தெரியாது... நீ அவங்களை டவுன்ல இருக்க பார்லருக்கு கூட்டி போயேன்...


டேய்... நீ எனக்குக் கட் பண்ற மாதிரி ஷார்ட்டா பாய் கட் பண்ணா போதும்...


அனு வேகமாக... டேய் சரண் அதெல்லாம் என்னால இங்க ஹேர் கட் பண்ண முடியாது... நோ வே...


அப்படியா... அப்போ அம்மாக்கு கால் பண்ணி உன் பாக்கெட் மணியே கட் பண்ண சொல்லிடவா... நீ சொல்லும்போது நான் ஒரு வார்த்தை கூடப் பேசாம சொன்னதை கேட்டேன்ல… 


அதுக்கு... 


நீயும் நான் சொன்னதை கேளு... 


என்னடா இப்படி பண்ற சரண்...


போய்ச் சேர்ல உட்காரு அனு... என்று சொல்லி அவளைப் பிடித்துக் கொண்டு போய் உட்கார வைக்க, கதிர் பாவமாக அனுவை பார்த்துக் கொண்டு இருந்தான்...


டேய், கதிர்.... நீ இப்போ என் அக்காக்கு ஹேர் கட் பண்ண போற அதுவும் நான் சொல்ற மாதிரி... என்று சொல்லித் தன்னுடைய செல்போனில் இருந்த ஒரு போட்டோவைக் காட்டினான்... கதிர் அந்த மாடல் போட்டோவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான்...


என்னடா இது... இப்படி கட் பண்ணா உன் அக்கா பையன் மாதிரி இருப்பாங்கடா…


அனு அதைக் கேட்டு இன்னும் கோபமானாள். ஆனால் அவளுக்கு இதிலிருந்து தப்பிக்க வழியில்லை. அதை ஆரம்பித்தது அவள் தான். அதனால் சரண் சொல்வதை கேட்பது என்று முடிவு செய்தாள்.



1 comment:

  1. மே 1 இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் நண்பா உங்களின் நேரத்தை ஒதுக்கி எங்களுக்காக கதை எழுதும் உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள் அதேமாதிரி உங்களின் இந்த கதையும் சூப்பர் இந்த கதையை நீங்கள் கொண்டு செல்லும் விதம் சூப்பர் தொடருங்கள்

    ReplyDelete