Tuesday 27 July 2021

என் முடி என் உரிமை! - மூன்றாம் பாகம்

மெதுவாக நடந்து வந்து தன்னுடைய தெருவுக்கு வர, அங்கு அவள் எப்போதும் வாடிக்கையாக மாளிகைப் பொருட்கள் வாங்கும் அண்ணாச்சி கடையைத் தாண்டும்போது, மொட்டைத் தலைக்குச் சந்தனம் தடவலாம் என்று நினைத்துக் கடைக்குப் போனாள்.

வாம்மா, என்ன திடீர்னு மொட்டை?

சும்மா ஒரு வேண்டுதல் அண்ணாச்சி... சரி சரி சந்தனம் கொடுங்க... என்று கேட்க, அண்ணாச்சி சந்தன டப்பாவை எடுத்துக் கொடுத்து விட்டு, எந்த கோவில் மொட்டை வாணி என்று கேட்க, வாணிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

தன் பிறந்த வீட்டு குல தெய்வம் அங்களா அம்மன் நினைவு வர, அந்த அம்மன் பெயரைச் சொல்லி விட்டு, அண்ணாச்சி மேலும் எதாவது கேள்விகள் கேட்கும் முன் காசைக் கொடுத்து விட்டுக் கிளம்பினாள்அதன்பின் வாணி வீட்டிற்கு வர, அவள் தெருவில் இருக்கும் பெண்கள் எல்லோரும் ஆச்சர்யமாகவும், சில பெண்கள் வாணியின் அடர்த்தியான முடி போன சந்தோஷத்திலும் பார்த்தனர்.

 

 

வீட்டுக்குப் போய்க் குளித்து விட்டு, வழக்கம்போலத் தன்னுடைய நீளமான முடியை வெயிலில் உலர்த்த மாடிக்குப் படியேறியவள், தன் மொட்டைத் தலையைதலையைஉணர்ந்து கொண்டு தலையில் அடித்துக் கொண்டு, தனக்குள்ளே சிரித்துக் கொண்டு கீழே இறங்கினாள். அண்ணாச்சி கடையில் வாங்கி வந்த சந்தனத்தை குழைத்து தடவ, அவளுடைய மொட்டைத் தலை ஜில்லென்று கூலாக இருந்தது. பின் சமைத்து சாப்பிட்டு விட்டு, பெட் ரூம் வந்து படுத்துக் கொண்டுகொண்டுதன்னுடைய மொட்டைத் தலையை ஆசையா தடவிக் கொண்டே தூங்கி விட்டாள்.

மணி நாலு ஆனதும் அகல்யாவின் ஸ்கூல் வேன் ஹார்ன் அடிக்க, வேகமாக எழுந்து வெளியே சென்றாள் வாணி. அகல்யா வேனிலிருந்து இறங்கும் போதே தன் அம்மா மொட்டைத் தலையுடன் இருப்பதை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.



உன் முடி எங்கம்மா?

அது சாமிக்குக் கொடுத்தாச்சு அகல்!??  அம்மா இப்போ எப்படி இருக்கேன்? 

சூப்பரா இருக்கீங்க அம்மா!!

அகல்யா வாணியின் மொட்டைத் தலையை ஆசையாகத் தடவி பார்த்து விட்டு, கிஸ் பண்ணினாள்.

அம்மா குத்துது ம்மா!

அப்படியா... சரி கண்ணம்மா நாளைக்கு அதைச் சரி பண்ணிடலாம்...

அப்போது வாணியின் செல்போன் அடிக்க, பிரகாஷ் தான் கால் செய்தான். 

என்னங்க?

ஸாரி வாணி... நான் ஆபீஸ் டென்சன்ல உங்கிட்ட கோபமா பேசிட்டேன்... வெரி ஸாரி...

பரவாயில்லைங்க...

நீ உன் முடியை எந்த ஸ்டைல்ல வேணா கட் பண்ணிக்கோ... நான் எதுவும் சொல்லமாட்டேன்...

எவ்ளோ ஷார்ட்டா வேணும்னாலும் கட் பண்ணிக்கவா?

ம்ம்ம் பண்ணிக்கோ...

அப்போ பாய் கட் பண்ணிக்கவா...

பண்ணிக்கோ வாணி...

அப்புறம் நைட் வந்து பார்த்துட்டு கோப படக் கூடாது...


அப்போ நீ ஏற்கனவே கட் பண்ணிட்டியா?

ஆமா... 

என்ன ஹேர் ஸ்டைல் கட் பண்ணி இருக்க...

சீவவே தேவை இல்ல... அந்த மாதிரி ஸ்டைல்... நீங்க நேர்ல வந்து பாருங்க... சர்ப்ரைஸ் இருக்கு

ம்ம்ம்… சரி... வச்சுடவா...

ம்ம்ம்... சரி ஆனா இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் வரப் பாருங்க...

பிரகாஷ் காலைக் கட் பண்ண, வாணி அகல்யாவை சாப்பிட வைத்து ஹோம் ஒர்க் செய்ய உதவி செய்தாள். இரவு ஏழு மணிக்குப் பிரகாஷ் வந்து காலிங் பெல் அடிக்க, வாணி அகல்யாவை கதவைத் திறக்கச் சொல்லி விட்டுப் பெட் ரூம் சென்று ஒரு துண்டு எடுத்து மொட்டைத் தலையை மறைத்துக் கட்டிக் கொண்டாள்.

பிரகாஷ் அகல்யாவை கொஞ்சி விட்டு, அவளுக்கு வாங்கி வந்த ஸ்னாக்ஸை கொடுத்து விட்டு, ஆசையாக வாணியின் புது ஹேர் ஸ்டைலை பார்க்க அவளைத் தேடினான்.

                                             

வாணி, எங்க இருக்க?

கிட்சன்ல?

என்னடி பண்ற? ஒண்ணும் சமைக்க வேணாம்! வா வெளியே ஹோட்டலுக்கு போய் டின்னர் சாப்பிடலாம் என்று சொல்லிக் கொண்டே கிச்சன் வர, வாணி ஒரு துண்டைத் தலையில் கட்டிக் கொண்டு இருந்ததை பார்க்க, வாணியும் பிரகாஷை பார்க்க, பிரகாஷ் தன் கையில் வாழை இலையில் கட்டிய ஒரு முழம் மல்லிகை பூவை வைத்துக் கொண்டு நிற்பதை பார்த்தாள்.

வாழை இலையில் மல்லிகை பூவைக் கட்டிக் கொண்டு வந்து இருந்ததை பார்த்து, வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள் வாணி.

என்ன வாணி சிரிக்கிற? முதல்ல தலைல கட்டி இருக்க துணியை எடு, என்ன ஸ்டைலில் ஹேர்கட் பண்ணி இருக்கேன்னு பார்க்கலாம்.

நான் எப்பவும் என் புருஷன் பேச்சை மதிக்கிறவ, அதனால் நீங்கச் சொன்ன மாதிரி நான் ஹேர்கட் பண்ணவே இல்ல,

 சூப்பர் வாணி, அப்போ ஏன் தலையில துணியைக் கட்டி இருக்க,

இருங்க, என்ன அவசரம், நான் சொல்றதை முழுசா கேளுங்க... நான் நீங்கச் சொன்னீங்கன்னு ஹேர்கட் பண்ணாம, முழுசா மழிச்சு மொட்டை அடிச்சுட்டேன் என்று சொல்லிக் கொண்டே தலையில் கட்டி இருந்த துணியை அவிழ்த்தாள் வாணி.

பிரகாஷுக்கு வாணியின் மொட்டைத் தலையைப் பார்த்ததும் செம கோபம் வர, ஆனால் அவள் விருப்பத்துக்குத் தான் தடை சொல்லமாட்டேன் என்று மதியம் சொன்னது நினைவு வர, அவன் எதுவும் பேசவில்லை.

 எப்படி இருக்கேன் மொட்டைத் தலையில...

ம்ம்ம்... நல்லா தான் இருக்கு, என்ன நான் ஆசைப்பட்ட முடி போச்சு... அது மாதிரி வளர ரெண்டு வருஷமாவது ஆகும்ல...

ஆமாங்க... ஆனா நான் இனிமேல் ரொம்ப நீளமா முடி வளர்க்க போறது இல்ல, இனிமே பாய்கட், பாப்கட்னு விதவிதமா ஹேர் ஸ்டைல் ட்ரை பண்ணி பார்க்கலாம்னு இருக்கேன்... அப்புறம் அப்பப்போ மொட்டையும் அடிக்கலாம்னு இருக்கேன்... நீங்கச் சொன்னது தான் பிரகாஷ் கரெக்ட்... என் முடி என் உரிமை!!!

வாணி பேசுவதைக் கேட்ட பிரகாஷ் தன் சொன்னதே தனக்கு ஆப்பாக வந்ததை எண்ணி நொந்து கொண்டான். ஆனாலும் வாணியை மொட்டைத் தலையில்தலையில்பார்ப்பதும் அவனுக்கு ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ணியது.


அப்போ இந்த பூவை என்ன பண்ண?

 அதுக்கு என்ன அகிலாவுக்கு வச்சுக்கலாம் என்று மல்லிகை பூவை வாங்கி ஆசையாக ஒரு முறை பார்த்து விட்டு அகிலாவுக்கு தலை சீவி பூ வைத்துவிட்டாள். பின் குடும்பமாக மூவரும் ஒரு பெரிய ரெஷ்டாரெண்டுக்கு கிளம்பினார்கள்.

வாணி தன்னுடைய மொட்டைத் தலையை மறைக்காமல் கெத்தாக இருக்க, அங்கு இருந்த ஆண்கள், பெண்கள் எல்லோரின் பார்வையும் வாணியின் மொட்டைத் தலை மேலே இருந்தது. வாணிக்கும் அது தெரிந்தாலும் கண்டு கொள்ளாமல் இருக்க, அகிலா எல்லோரும் தன் அம்மாவின் தலையைப் பார்ப்பதை பார்த்து. அம்மாவின் மொட்டைத் தலையை எல்லோரும் பார்ப்பதால் அகிலாவும் தன் அம்மாவைப் போலத் தன் முடியை மொட்டை அடித்துக் கொள்ளலாம் என்று கேட்டாள்.

அகிலா கேட்பதை அதிர்ச்சியாகப் பார்த்த பிரகாஷ், வாணி என்ன சொல்லப் போகிறாளோ என்று நினைக்க, வாணியும் அகிலா மொட்டை அடிக்கச் சரி என்று சம்மதம் சொன்னாள். சாப்பிட்டு விட்டு எல்லோரும் வீட்டுக்கு வந்தனர். 

நான்காம் பாகம் வேண்டுமா? கமெண்டில் பதில் அளியுங்கள்..! 

 




4 comments:

  1. yes bro, kandipa venum 4th part

    ReplyDelete
  2. bro vanitha aunty story continue pannunga bro please

    ReplyDelete
  3. வணக்கம் நண்பா முதலில் நான் ஒரு மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன் உங்களின் கடந்த பதிவையும் இப்பொழுது நீங்கள் எழுதிய இந்தப் பதிவையும் நான் இப்பொழுது தான் படித்தேன் கண்டிப்பாக நான்காவது பதிவு வேண்டும்

    ReplyDelete
  4. Yes antha hair enna achu nu story

    ReplyDelete