Friday 3 May 2024

நன்றிக்கடன்

இந்த கதை நண்பர் விக்னேஷ் தமிழ் அவர்களுடையது. நண்பர் விக்னேஷ் அவர்களின் ஒப்புதலுடன் நம்முடைய தளத்தில் பதிவு செய்கிறேன்.


அந்த வீட்டின் முன்பகுதியில் ஒரு சிவப்பு நிற ஸ்கார்பீயோ நின்றது. ட்ரைவர் சீட்டில் இருந்து சேது இறங்கினான். யாரேனும் அவனை கவனிக்கிறார்களா என நோட்டமிட்டான். பின்னர் நகர்ந்து சென்று வீட்டின் கதவை திறந்தான்.

கதவை திறந்து விட்டு மறுபடி காரை நோக்கி வந்தான். அப்போது காரில் இருந்து ஒரு பெண் கையில் பையுடன் இறங்கினாள். யாரும் பார்ப்பதற்க்கு முன்னால் அவசரமாக தலையில் முக்காடு போட்டு அந்த வீட்டிற்குள் நுழைந்தாள்.

அவள் பின்னால் வீட்டிற்குள் நுழைந்த சேது கதவை மூடினான்

அந்த பெண்ணிற்கு 35 வயது இருக்கலாம். மாநிறம். அளவான உயரம். இலட்சணமான முகம். கொஞ்சம் பூசினார்போல உடல்வாகு. சேது அவளையே கவனித்துக் கொண்டிருந்தான். அவள் தன்னுடைய தலையை மூடி இருந்த முக்காடை கழட்டினாள். அவளுடைய அழகிய கூந்தல் கண்ணில் பட்டது. அவளுடைய அடர்த்தியான ஜடை அவள் தொடை வரை நீளமாக தொங்கியது. அவள் ஜடையின் அழகை கண்டவுடன் சேது தன்னுடைய உணர்ச்சிகளை அடக்க கஷ்டப்பட்டான். அவள் அருகில் வந்து அந்த ஜடையை எடுத்து தடவிக்கொடுக்க ஆரம்பித்தான்.




                 

சேது இவ்வளவு விரைவாக வந்து ஆளுடைய ஜடையை பிடிப்பான் என அவள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவள் ஒன்றும் சொல்லாமல் இருந்தாள். மீண்டும் தன்னிலைக்கு வந்தவனாய் அவளிடம் சாப்பிட எதுவும் வேணுமா? எனக் கேட்டான். அவள் வேண்டாம் என்பது போல தலையை அசைத்தாள். சேது மாடியிலிருக்கும் அறையை காட்டி, அவன் இன்னும் நிமிடங்களில் வருவதாக சொல்லி அவளை அங்கு போக சொன்னான். அவள் மாடியில் உள்ள அறைக்கு சென்றாள்.மாடியில் உள்ள அந்த அறைக்குள் நுழைந்தபோது சற்றே வியந்துபோனாள். அவளின் வருகையை உணர்ந்து அங்கு அனைத்தும் அவளுக்காக தயாராக இருந்தது. கையில் இருந்த பையை அருகிலிருந்த ஒரு மேஜையில் வைத்து விட்டு அங்கிருந்த கண்ணாடியில் தன்னை கவனித்தாள். தன்னுடைய ஜடையை எடுத்து முன்னாடி போட்டாள். அவளுடைய ஜடையின் அழகை ரசித்துக்கொண்டிருந்தாள். கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பினாள். சேது அந்த அறைக்குள் நுழைந்தான்.


அவள் அவனை பார்த்ததும் வந்து அமைதியாக அங்கிருந்த ஒரு சேரில் அமர்ந்தாள். சேது அவள் முன்னால் ஒரு வீடியோ காமிராவை வைத்து ஆன் செய்தான். அதில் அவள் முதலில் பேசியது இதுதான் “இங்கு நடப்பது எல்லாம் என்னுடைய சம்மதத்துடன், என் விருப்பத்திற்கு உட்பட்டு நடக்கிறது. யாருடைய தூண்டுதலும் இல்லை” என புன்னகையுடன் சொன்னாள். அவள் பேசி முடித்தவுடன் சேது அவளருகில் வந்தான். அந்த அறையில் மொத்தம் ஐந்து வீடியோ காமிராக்கள் ரெக்கார்ட் ஆகிக்கொண்டிருந்தது.நான்கு காமிராக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சைடில் இருந்து ரெக்கார்ட் செய்தது. ஒரு காமிரா மட்டும் அவர்களுக்கு முன்னால் இருந்து ரெக்கார்ட் செய்தது. அவள் பின்பக்கம் போய் நின்று அவளுடைய தலையில் தன்னுடைய இரு கைகளையும் வைத்துஅவள் தலைமுடியை தடவிப்பார்த்தான்.


காலையில் தான் தலைக்கு குளித்து இருந்ததால் அவளுடைய தலைமுடி மிருதுவாக இருந்தது. மெல்ல அவளுடைய ஜடையை கைகளில் அள்ளினான். அவளுடைய ஜடை கனமாக இருந்தது. அவள் ஜடையில் முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். முன்பின்தெரியாத ஒருவர் தன்னுடைய தலைமுடியை அள்ளி‌ எடுத்து முத்தம் கொடுப்பது அவளுக்கு சற்று சங்கடமாக இருந்தது. ஆனால் சேது அவளைப்பற்றி கவலைப்படாமல் அவளுடைய தலைமுடிக்கு முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தான்.

பின்னர் மெல்ல அவளுடைய ஜடையை அவிழ்க்க ஆரம்பித்தான். அவளின் அடர்த்தியான முடி ஜடையிலிருந்து விடுபட ஆரம்பித்தது. சேது அவளுடைய தலைமுடியை முழுவதுமாக அவிழ்த்துவிட்டான். அவளின் விரிந்த கூந்தல் அவள் அமர்ந்திருந்த நாற்காலியை விட நீளமாக தொங்கியது. சேது அவள் தலைமுடியில் இருந்து கைகளை எடுத்துவிட்டு அருகிலிருந்த மேஜையின் மேல் இருந்த ஒரு பெட்டியை திறந்தான். அவள் பார்வை அந்த பெட்டியின் மேல் விழுந்தது. அந்த பெட்டிக்குள் நிறைய கத்தரிக்கோல் மற்றும் சவரக்கத்திகள் இருந்தது. அவற்றை பார்த்த போது ஒருகணம் அவளுடைய மனம் சற்று படபடத்தது. தான் ஆசையாக வளர்த்த தலைமுடியை இழக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது எனப் புரிந்து கொண்டாள். அவள் கண்களில் நீர் எட்டிப் பார்த்தது. ஆனாலும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு சேதுவைப்‌ பார்த்து சிரித்தாள்.



சேது பெட்டியில் இருந்து ஒரு சவரக்கத்தியை எடுத்து அவள் கண் முன்னால் விரித்தான். கேமராவின் முன் நின்று அந்த சவர கத்தியில் ஒரு புதிய பிளேடை எடுத்து சொருகினான். பின்னர் அவள் அருகில் வந்து அவளுடைய உச்சந்தலையில் கை வைத்தான். சேது இவளுக்கு தலையில் தண்ணீர் ஊற்றாமல் அப்படியே மொட்டை அடிக்க வேண்டும் என்று நினைத்தான். ஈரமில்லாத அவளுடைய தலை முடி மொட்டை அடிக்கும்‌ போது வழிந்து விழுவதை பார்க்க அவனுக்கு ஆசையாக இருந்தது. தலையில் தண்ணீர் ஊற்றாமல் மொட்டை அடித்தால் மிகவும் எரிச்சலாக இருக்கும். பிளேடு கீறிவிடும் வாய்ப்பு அதிகம். ஆனால் தண்ணீர் ஊற்றாமல் மொட்டை அடிக்கும் நிபந்தனையுடன் தான் அவள் மொட்டை அடிக்க சம்மதம் தெரிவித்தாள். சேது அவள் தலைமுடியை நன்றாக விரித்து விட்டான். 


பின்னர் சவரக்கத்தியை அவளுடைய நெற்றியின் வகிடில் வைத்து சிறைக்க ஆரம்பித்தான். சேதுவின் கத்தி அவளுடைய தலைக்கும் அவளின் நீளமான தலைமுடிக்கும் உள்ள உறவை அறுக்க ஆரம்பித்தது. அவள் தலைமுடியிலிருந்து முதல் கற்றை முடி வழிந்து வந்து கீழே விழுந்தது. அவளுடைய தலைமுடி வழிந்து தரையில் போய் விழுகும்‌ வரை சேது ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.



மீண்டும் கத்தியை எடுத்து அவளுடைய வகிடில் வைத்து மொட்டை அடிக்க ஆரம்பித்தான். தண்ணீர் இல்லாமல் அவளுடைய நீளமான முடியை மொட்டை அடிப்பது சற்று கடினமாக இருந்தது. ஆனாலும் கவனமாக அவளுடைய தலையில் கீறல் விழாமல் மொட்டை அடித்துக்கொண்டிருந்தான். சேது மொட்டை அடிக்கும் போது அவளுடைய பட்டு கூந்தல் கற்றை‌ கற்றையாக வழிந்து வந்து விழுந்தது. அவள் சேதுவை பார்த்தபோது அவன் ஆர்வமாக அவளுக்கு மொட்டை அடித்துக்கொண்டிருந்தான். மிகவும் நல்ல மனம் படைத்த இவனுக்குள் ஒரு பெண்ணுக்கு மொட்டை அடிக்கும் எண்ணம் எப்படி வந்தது என மனத்திற்குள் நினைத்துக் கொண்டாள். அவள் ஒன்றும் பேசாமல் அமைதியாக தன்னுடைய தலையை அவனிடம் அர்ப்பணித்தவாறு குனிந்து இருந்தாள்.

சேதுவின் கைகளில் இருந்த சவரக்கத்தி அவள் தலையை மொழு மொழுவென்று சிரைத்துக் கொண்டு இருந்தது. பெண்ணின் அடையாளமாக இருக்கும் அழகிய தலைமுடியை அவள் இழந்து கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் சேது அவள் தலையை முழுவதுமாக மொட்டை அடித்து முடித்தான். பின்னர் சேது அவளை சுற்றியிருந்த முடிகளை அகற்றினான். பின்னர் கீழே படர்ந்து கிடந்த அவளுடைய தலைமுடியை அள்ளினான். மொத்தமாக எடுத்து அடுக்கி ஒரு ரப்பர் பாண்ட் போட்டு கட்டினான். அந்த தலைமுடியை தூக்கிப் பார்த்த போது நல்லா கனமாகவும் நீளமாகவும் இருந்தது. பின்னர் இரு கைகளையும் கூப்பி அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு சேரில் இருந்து எழுந்தாள். சேது இப்போது அனைத்து வீடியோ கேமிராக்களையும் அணைத்தான். பின்னர் அவளுக்கு அறையிலிருந்த பாத்ரூமை காட்டி குளிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு சொல்லி விட்டு அங்கிருந்து  வெளியேறினான்.

அவள் மெல்ல அந்த பாத்ரூமிற்குள் நுழைந்தாள். நல்ல விசாலமாக இருந்தது. அருகில் ஒரு பெரிய கண்ணாடி இருந்தது. கண்ணாடியில் தன்னை தலைமுடியில்லாமல் மொட்டை தலையுடன் பார்த்தாள். அவளையும் மீறி கண்ணீர் பீறிட்டு வந்தது. கண்ணாடி முன் நின்று அழுதாள். பின்னர் கண்களை துடைத்துவிட்டு குளித்து முடித்தாள். தலை துவட்ட துண்டை தலையில் வைத்த போது தான், தன்னுடைய தலை மொட்டை அடிக்கப்பட்டுவிட்டது நினைவிற்கு வந்தது. பின்னர் தான் பையிலிருந்து மாற்று துணிகளை எடுத்து மாற்றிக் கொண்டு வெளியே வந்தாள். மாடியிலிருந்து கீழே வந்த போது சேது தயாராக இருந்தான். மீண்டும் சிவப்பு நிற ஸ்கார்பீயோவில் ஏறி இருவரும் புறப்பட்டனர்.



அவள் மெல்ல தான் நினைவுகளை அசை போட்டாள். மூன்று நாட்களுக்கு முன் காலை தலைவாரி ஜடை போட்டு விட்டு திரும்பிய போது அருகிலிருந்த அவள் கணவன் நிலை குலைந்து கீழே சரிந்தான். அவசரமாக அவனை ஆட்டோவில் ஏற்றி அருகிலிருந்த ஒரு மருத்துவமனையில் சேர்த்தாள். அவனுக்கு “அப்பன்டிசைட்டிஸ்” ஆப்ரேசன் உடனடியாக செய்ய வேண்டும் என கூறினார்கள். கையில் பணமில்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த போது, அங்குள்ள ஒரு வயதான தம்பதிக்கு பண உதவி செய்வதை பார்த்தாள். அங்குள்ள ஒரு நர்ஸ் சேதுவை பற்றி அவளிடம் கூறினாள். பெற்றோர் இல்லாத பணக்காரன் சேது அவ்வப்போது இந்த மருத்துவமனைக்கு வந்து நிறைய பேருக்கு பண உதவி செய்திருப்பதை தெரிந்து கொண்டாள். அவனிடம் உதவி கேட்கலாம் என நினைத்து அவனிடம் சென்றாள்.

அவள் உதவி கேட்ட போது அவன் அங்குள்ள நர்ஸிடம் அவள் கூறுவது உண்மையா  எனக்‌ கேட்டான். அவர்கள் அந்த ‌பெண்ணின் கணவனுக்கு சர்ஜரி பண்ண வேண்டிய உண்மையை எடுத்து சொன்ன போது அவன் அவளுக்கு உதவுவது என முடிவு செய்தான். அவள் கணவனின் ஆபரேசனுக்கு பணம் செலுத்தி விட்டு மறுநாள் ஆப்பரேசன் செய்வதென்று முடிவானது. அவள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். முதலில் கவனிக்காத சேது இப்போது‌தான் அவளுடைய அடர்த்தியான தொடைக்கு கீழ் தொங்கும் தலைமுடியை கவனித்தான். நல்ல அடர்த்தியான நீளமான தலைமுடி. மிகவும் நேர்த்தியாக ஜடை பின்னியிருந்தாள்.



அவள் கண்கள் வழிய சேதுவுக்கு நன்றி சொன்னாள். அவன் அவளிடம் ஏதும் கேட்கவில்லை புன்னகையுடன் அவள் கணவனை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றான். மறுநாள் அவள் சற்று நிம்மதியான முகத்துடன் இருந்தாள். காலையில் அவள் கணவனின் ஆபரேசன் முடிந்து இன்னும் மயக்கத்தில் இருந்தான். தற்செயலாக வெளியே வந்த போது அங்கே சேது வேறு யாரோ ஒருவருக்கு உதவி செய்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் அவனிடம் நன்றி சொல்ல அவனை நோக்கி நடந்தாள்.

அவள்: தம்பி… ரொம்ப நன்றி… நேத்து நீங்க உதவி செய்யலைனா.. என்னோட புருசனை காப்பாத்த முடியாம கஷ்டப்பட்டு இருப்பேன்.

சேது: அதெல்லாம் ஒண்ணும் இல்ல… கண்டிப்பா நான் இல்லைனா வேற ஏதாவது ஒரு விதத்துல கடவுள் உங்களுக்கு உதவியிருப்பார்.

அவள்: ஆனாலும் இந்தமாதிரி ஒரு அவசரத்துல உதவி செய்யுறது ரொம்ப புண்ணியம்.

சேது: என்கிட்ட பணம் நிறைய இருக்கு.. ஆனால் இந்த மாதிரி தேவைப்படுறவங்களுக்கு போய் சேரும்போதுதான் நிம்மதி. உங்க வீட்டுக்காரர் எப்படி இருக்கார்.

அவள்: நல்ல இருக்கார். இன்னும் மயக்கத்துல தான் இருக்கார். இன்னும் ரெண்டு மணி நேரத்துல கண் முழிப்பார்னு சொல்லி இருக்காங்க.

சேது: அப்போ வாங்க.. ஒரு காப்பி குடிச்சுக்கிட்டே பேசலாம்.

இருவரும் காப்பி எடுத்துக் கொண்டு ஒரு மேஜையின் சேரில் அமர்ந்தனர். உட்காரும் போது அவள் தன்னுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டுக் கொண்டே அமர்ந்தாள். சேதுவின் கண்கள் அவள் ஜடையை நோட்டமிட்டது. அவளுடைய நீளமான ஜடை அவள் கைகளில் லாவகமாக வந்து அவள் மடியில் அமர்ந்தது. சேது அவள் தலை முடியை கவனிப்பதை அவளும் கவனித்தாள். மற்றவர்கள் அவள் தலைமுடியை கவனிப்பது அவளுக்கு பெருமையான நிமிடங்கள். அவள் ஜடையை பார்த்துவிட்டு நிமிர்ந்து சேது அவள் கண்களை பார்த்தான்.

சேது: உங்ககிட்ட ஒண்ணு சொல்லலாமா?

அவள்: சொல்லுங்க தம்பி.

சேது: உங்களோட தலைமுடி நீளமா அழகா இருக்கு.

அவள்: நன்றி தம்பி…. கடவுள் எனக்கு நிறைய காசுபணம் கொடுக்கல… ஆனா இந்த அழகான தலைமுடியை கொடுத்திருக்கார்.

சேது: உண்மைதான். கடவுள் யாருக்கு என்ன வேணுமோ அதை நேரடியா கொடுக்கிறது இல்ல. நமக்கு வேணும்னு நினைக்கிறது நமக்கு எதிர்ல இருக்கிறவங்ககிட்ட கொடுத்திருப்பார். ஆனால் நம்மதான் அவங்களுக்கு என்ன வேணும்னு பார்த்து கொடுத்து உதவனும்.

அவள்: சரியா சொன்னீங்க தம்பி. ஆனா தன்னால கொடுக்க முடியும்னாலும் அதைக் கொடுக்க நல்ல மனசு வேணும்.

சேது: இருக்கிறதை‌தான கொடுத்தேன்… அதுல என்ன இருக்கு.

அவள்: அப்படியில்ல தம்பி…. அன்னைக்கு இங்க வந்து ஆபரேசன்னு சொன்னதும் எனக்கு மூச்சே இல்ல… என் புருசனை காப்பாத்துனு கடவுளை கும்பிடுறதுக்கு முன்னாடியே எனக்கு தேவைப்பட்ட உதவியை நீங்க செஞ்சுட்டிங்க…


சேது: அதுக்கு நீங்க கடவுளுக்குதான் நன்றி சொல்லணும்.

அவள்: கண்டிப்பா… பழனிக்கு வந்து முருகனை பார்க்கிறேன்னு வேண்டி இருக்கேன். கண்டிப்பா போகணும். அப்படியே என்ன முடிஞ்ச எதையாவது முருகனுக்கு காணிக்கையா கொடுக்கணும்.

சேது: ஹாஹா…. என்ன காணிக்கையா கொடுக்கப்போறீங்க.

அவள்: என்கிட்ட பணம் காசு இல்ல தம்பி.. ஆனாலும் என்ன முடிஞ்ச அளவுக்கு கண்டிப்பா காணிக்கை செலுத்துவேன் தம்பி.

சேது: “கடவுள் எனக்கு நிறைய காசு பணம் கொடுக்கல… ஆனா இந்த அழகான தலைமுடியை கொடுத்திருக்கார்” னு சொன்னீங்களே… அப்போ உங்களோட தலை முடியை காணிக்கையா கொடுப்பீங்களா?

அவள்: என்ன தம்பி இப்படி சொல்றிங்க…. கடவுளுக்கு முடியை காணிக்கையா கொடுக்கிறதுல என்ன இருக்கு. இந்த தலைமயிரு எனக்கு கடவுள் கொடுத்தது தான….

சேது: ஓ.. அப்போ கண்டிப்பா உங்க முடியை காணிக்கையா கேட்டா கொடுப்பீங்களா?

அவள்: கண்டிப்பா.. என் புருசனோட உயிரை காப்பாதிக் கொடுத்த கடவுளுக்கு கண்டிப்பா என்னோட தலைமுடியை கொடுப்பேன்.

சேது: அது உங்களோட இஷ்டம்…. உங்களுக்கு என்ன காணிக்கையா கொடுக்கணும்னு தோணுதோ அதையே கொடுங்க.



அவள்: கடவுளுக்கு கொடுக்கிறது இருக்கட்டும் தம்பி… உங்களுக்கு ஏதாவது என்னால செய்யமுடியும்னா சொல்லுங்க.. நான் கண்டிப்பா செய்யுறேன்.

சேது: எனக்கு எதுவும் வேணாம்.

அவள்: அப்படி சொல்லாதீங்க தம்பி..”கடவுள் யாருக்கு என்ன வேணுமோ அதை நேரடியா கொடுக்கிறது இல்ல. நமக்கு வேணும்னு நினைக்கிறது நமக்கு எதிர்ல இருக்கிறவங்ககிட்ட கொடுத்திருப்பார். ஆனால் நம்மதான் அவங்களுக்கு என்ன வேணும்னு பார்த்து கொடுத்து உதவனும்” னு நீங்கதான சொன்னீங்க…. கடவுள் நீங்க எதிர்பார்க்கிற எதையாவது உங்களுக்கு தராம என்கிட்ட கொடுத்திருந்தா சொல்லுங்க.. நான் கண்டிப்பா தரேன்.

சேது: என்னோட அடிமனசு ஆசைப்படுற ஒரு பொருள் உங்ககிட்ட இருக்கு…. ஒருவேளை நீங்க அதை இன்னும் கடவுள்ளு கொடுக்கிறதா வேண்டிக்கலைனா… அதை எனக்கு கொடுக்க முடியுமானு சொல்லுங்க.

அவள்: என்ன தம்பி.. எதை சொல்றிங்க?

சேது: உங்களோட இந்த அழகான தலைமுடி.

அவள்: (அதிர்ச்சியுடன்) தம்பி.. என்ன சொல்றிங்க… என்னோட தலைமுடி வேணுமா?

சேது: ஆமா… நான் ஒரு Hair Fetish.

அவள்: அப்படினா என்ன?


சேது: எனக்கு இந்தமாதிரி நீளமான தலைமுடி ரொம்ப பிடிக்கும். இந்த மாதிரி நீளமான தலைமுடி உள்ள பொண்ணுக்கு மொட்டை அடிக்கணும்னு ஆசை இருக்கு…உங்களால முடியும்னா எனக்கு உங்களோட தலைமுடியை கொடுங்க. உங்க தலையை நான் என்னோட கையாள மொட்டை அடிக்கணும். அதுதான் என்னோட ஆசை.

அவள்: (சிறிது தயக்கத்துடன்) உதவி பண்ண கடவுளுக்கு தலைமுடியை காணிக்கையா கொடுக்கிறது தப்பில்லைனு சொன்னேன். அதே மாதிரி எனக்கு நேர்ல உதவி பண்ண உங்களுக்கு என்னோட தலைமுடியை கொடுக்கிறதும் தப்பில்லை.

சேது: அப்போ எனக்காக நீங்க மொட்டை அடிச்சு உங்களோட தலைமுடியை கொடுக்கப்போறீங்களா?

அவள்: உதவி செஞ்சுட்டு கைமாறா என்னோட தலைமுடியை நீங்க கேட்கலை… நானா வந்து உங்களை கேட்டதுக்கு அப்புறம் தானே நீங்க  என்னோட முடியை கேட்குறீங்க….. என்னால கொடுக்க முடிஞ்ச ஒரு பொருளை கேட்டால் அதை நான் கொடுக்கிறது தான் முறை. கண்டிப்பா நான்  என்னோட முடியை உங்களுக்கு கொடுக்கிறேன்.

சேது: சரி எப்போனு சொல்லுங்க.

அவள்: உங்களுக்கு எப்போ வேணும்னு சொல்லுங்க தம்பி… நான் என்னோட தலையை கொடுக்கிறேன்.

சேது: சரி.. நான் என்னோட வீட்டிலே வேண்டிய ஏற்பாடு பண்ணிட்டு நாளைக்கு வந்து உங்களை அழைச்சுட்டுப் போறேன்

அவள்: சரி தம்பி….. இன்னொரு உதவி வேணும் தம்பி… இங்கிருந்து பழநி பக்கம் தான…. மொட்டை அடிச்சதுக்கு அப்புறம் என்னை அங்கே கொண்டுவிட முடியுமா?

சேது: இங்கிருந்து போகும் போது பழனி தாண்டி தான் என்னோட பங்களாவுக்கு போகணும்… கண்டிப்பா உங்களை மொட்டை அடிச்சதுக்கு அப்புறம் பழநியில இறக்கி விடுறேன்.

அவள்: ரொம்ப நன்றி தம்பி… அப்போ நாளைக்கு காலைல நான் தயாரா இருப்பேன்.



அவள் தான் நினைவுகளில் இருந்து மீண்டபோது சேது பழநி பேருந்து நிலையத்தின் வாயிலில் வண்டியை நிறுத்தி இருந்தான். அவள் தன்னுடைய தலையை முந்தானையால் மூடியவாறு இறங்கினாள். சேது அவள் கையில் மேலும் ஒரு பத்தாயிரம் ரூபாய் கொடுத்தான். அவள் வேண்டாமென்று மறுத்தாள். கண்டிப்பாக மீண்டும் மருத்துவ உதவிக்கு பயன்படும் எனக் கூறி அவளிடம் பணத்தைக் கொடுத்தான். அவள் சிறிய புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள். சேதுவின் ஸ்கார்பீயோ அங்கிருந்து புறப்பட்டது. அவள் அருகிலிருந்த ஒரு கடையில் சந்தனம் வாங்கி தன்னுடைய மொட்டை தலையில் தடவ ஆரம்பித்தாள்.


அருகிலிருந்தவர்கள் இவ்வளவு அழகான பெண் மொட்டைத் தலையுடன் இருப்பதை வித்தியாசமாக பார்த்தார்கள். சந்தனத்தை பூசியபின் மலையேறி முருகனை தரிசிக்க சென்றாள். கண்களில் நீர் ததும்ப முருகனுக்கு நன்றி சொல்லிவிட்டு கையிலிருந்த பத்தாயிரம் ரூபாய்யை உண்டியலில் போட்டுவிட்டு மகிழ்ச்சியோடு இறங்கினாள். மீண்டும் பேருந்து நிலையம் வந்து பஸ் ஏறும் முன் கணவனுக்கு போன் செய்தாள். அவன் மருத்துவமனையிலிருந்து புறப்பட தயாராக இருப்பதா கூறினான். அவனிடம் உதவி செய்த கடவுளுக்கு நன்றிக்கடனாக தன்னுடைய தலைமுடியை கொடுத்துவிட்டதாக கூறிவிட்டு போனை ஆஃப் செய்தாள். அவள் கண்களில் நன்றியும் கண்ணீரும் கலந்தே வெளிப்பட்டது. சந்தனம் தடவிய தன்னுடைய  மொட்டை தலையில் குளிர்ந்த காற்று உரசிக் கொண்டிருக்க, தன் அருகிலிருந்த ஒரு பெண் இவளுடைய மொட்டை தலையை ஏளனமாக பார்த்துவிட்டு  தன்னுடைய நீளமான ஜடையை எடுத்து முன்னால் போடுவதை வேடிக்கையாக பார்த்துக் கொண்டே பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தாள்







No comments:

Post a Comment