Tuesday 14 September 2021

திவ்யாவின் மொட்டை - முதல் பாகம்

Divya

திவ்யா சென்னையில் வசிக்கிறாள் அவளுடைய வீட்டில் மொத்தம் 3 பேர் அம்மா, அப்பா, அவள். திவ்யாவுக்கு மொட்டை மீது ஒரு பயம். எல்லா பெண்களுக்கும் மொட்டை அடித்தால் மற்றவர்கள் மொட்டை, மொட்டை என்று  கிண்டல் பண்ணுவாங்களே என்று  வரும் அதே பயம்தான். அவள் கடைசியாக 3ஆம் வகுப்பு படிக்கும்போது வல்லநாட்டில் உள்ள குலதெய்வம் கோவிலில் மொட்டை அடித்தது. அப்போது அவளுடைய உறவினர்கள் அனைவரும் வந்திருந்தனர். 



திவ்யாவுக்கே அன்று தெரியாது அவளுடைய முடியை மொட்டை அடிக்கப் போகிறார்கள் என்று. திவ்யாவின் மாமா போய் எங்கிருந்தோ ஒரு பார்பர்ரை கூப்பிட்டு வந்தார். திவ்யா விளையாடிக் கொண்டு இருந்தபோது கூப்பிட்டு உக்கார சொல்லி மொட்டை அடித்து விட்டனர். அப்போது அவளைச் சுற்றி அவளது உறவினர்கள் சூழ, ஒரே கிண்டலும் கேலியுமாக அவள் மொட்டை அடித்துக் கொண்டாள். மொட்டை அடித்ததும் எல்லாரும் அவள் மொட்டையை தடவி தடவி கிண்டல் பண்ணிக்கிட்டே இருக்க, அவள் ரசித்துக்கொண்டிருந்தாள். அதன் பின் அவளுடைய அப்பாவும் மொட்டை அடித்துக் கொண்டார். ஸ்கூலுக்கு போனால் அவளுடைய தோழிகள்  எல்லாரும் அவளை மொட்டை மொட்டை னு கிண்டல் பண்ண, அவளுக்கு ஒரே வெட்கமாக இருந்தது. அதன் பிறகு அவள் மொட்டையே அடிக்கவில்லை.



அப்படியே வருடங்கள் ஓடின.  இப்போது திவ்யா 10வது எழுதி முடித்து இருந்தாள். அவளுக்கு நல்ல நீளமான அடர்த்தியான முடி. மொட்டை மீது இருந்த பயம் காரணமாகத் திவ்யா தன்னுடைய முடியை இத்தனை வருடங்களாக வெட்டக் கூட இல்லை.

பள்ளி விடுமுறையில் இருந்தபோது திவ்யாவுக்கு அடிக்கடி உடம்பு சரி இல்லாம போக, என்ன மருத்துவம் பார்த்தும் உடம்பு சரி ஆகவில்லை. அப்போது அவளோட அப்பா அவளுடைய ஜாதகத்தை பார்க்க, ஜோசியர் ஜாதகத்தை பாத்துவிட்டு  திவ்யா ஜாதகத்தில் தோஷம் இருக்கு என்றும், அதனால் அவளுக்கு ஒரு நேர்த்திக்கடனாக  மொட்டை அடிக்கமால் விட்டதனால் தான் இத்தனை பிரச்சனையும் என்று சொல்லி விட்டு, திவ்யாவின் நேர்த்திக் கடனை முறையாக நடத்திவிட்டால் எல்லாம் சரியாகும் என்று சொன்னார் ஜோசியர். 

ஜோசியர் சொன்னதற்கு திவ்யாவின் அப்பாவும் சம்மதம் சொல்லிவிட்டு, ஜோசியர்  சொன்னதை திவ்யாவின் அம்மாவிடம்  சொன்னார். அவங்க அம்மாவும் சரி சம்மதம் சொன்னாள். ஆனால் திவ்யாவுக்கு தெரிந்தால்  மொட்டை அடிக்க, சம்மதிக்க மாட்டாள் என்று திவ்யாவிடம்  சொல்லாமல் கோவிலுக்குக் கூட்டி போய் மொட்டை அடிக்கலாம் என்று முடிவு செய்தார்கள். 

ஒரு நல்ல நாள் பார்த்து போகலாம் என்று பேசி முடித்து விட்டு திவ்யா உடல்நிலை சரியானால் அவளுக்கு மொட்டை அடிப்பதாக  வேண்டுதல் வைக்க, வேண்டுதல் வைத்த 2 நாளில் திவ்யாவுக்கு உடல்நிலை சரியானது. அதனால் அவர்கள் முடிவு செய்த நல்ல நாளில் திவ்யாவுக்கு மொட்டை அடிப்பதாக முடிவு செய்தனர் அவளின் பெற்றோர்.  திவ்யாவிடம் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை குலதெய்வ கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு வரலாம் என்று மட்டும் சொன்னார்கள். திவ்யாவும் சந்தோசமாக, உண்மை தெரியாமல் சம்மதம் சொல்ல, அவளுடைய அப்பா அவருடைய அண்ணனுக்கு போன் செய்து, திவ்யாவுக்கு வேண்டுதல் வைத்திருப்பதாகவும், வரும் வெள்ளிக்கிழமை அவளுக்கு நம்முடைய குல தெய்வ கோவிலில் மொட்டை அடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தகவல் சொன்னார்.

திவ்யாவின் பெரியப்பாவுக்கு மூன்று பெண்கள். பெரியவளுக்கு 24வயது. திருமணம் ஆகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. அடுத்தவள் 19 வயது. கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். கடைக்குட்டி 17 வயது.

பெரியப்பாவுக்கு மொத்தம் 3 பொண்ணுங்க ஒருத்திக்கு வயசு24 கல்யாணம் ஆகி ஒரு 3 வயசு கொழந்த இருக்கு.இன்னொருதிக்கு வயசு 19 ,இன்னொருதிக்கு வயசு 17 ,பெரியப்பகு கால் பண்ணி இப்படின்னு விஷயத்தை சொன்னாங்க அவரும் சரினு சொன்னாரு மோனியோட அப்பா பிள்ளைங்க கிட்டயும் சொல்ல வேணாம் அப்புறோம் திவ்யாக்கு சொன்னங்கா அவ பெரியப்பவும் சரினு சொன்னாங்க 


அடுத்து திவ்யாவின் சித்தப்பாவிற்கு போன் செய்து விஷயத்தைச் சொல்ல, அவரும் சரி என்று சம்மதம் சொன்னார். சித்தப்பாவிற்கு ஒரு பையன், இரண்டு பெண்கள். பையனுக்கு வயது 24, பெரியவளுக்கு வயது 19, சின்னவளுக்கு வயது 17. அடுத்து திவ்யாவின் தாய் மாமாவுக்குப் போன் செய்து சொல்ல, அவரும் சந்தோசமாகச் சம்மதம் சொன்னார். திவ்யாவின் மாமாவிற்கு பதினோரு வயதில் ஒரு பெண்ணும், 15 வயதில் ஒரு பையனும் இருக்கிறார்கள். திவ்யாவிற்கு தெரியாமலேயே அவளுக்கு மொட்டை அடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது. திவ்யாவின் அம்மா அவளைக் கடைக்குக் கூட்டி சென்று புதிய ஆடைகள் 2 எடுத்துத் தந்தார்கள்.

தனக்கு தெரியாமல் அவளுடைய அம்மாவும், அப்பாவும் ஏதோ செய்கிறார்கள் என்ற சந்தேகம் திவ்யாவுக்கு இருந்தது. ஆனால் என்னவென்று அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்த வியாழன் அவளுடைய பெற்றோர் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் எல்லாம் வந்தனர். அவளது உறவினர்கள் அனைவரும் அன்று மாலை அவள் வீட்டுக்கு வர, அனைவரையும் பார்த்த சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் இருந்தாள் திவ்யா.

அடுத்த நாள் காலை எல்லோரும் அவள் அப்பா ஏற்பாடு செய்து இருந்த பஸ்ஸில் கிளம்பி குலதெய்வ கோவிலுக்கு சென்றனர். பஸ்ஸில் எல்லோரும் ஜாலியாக விளையாடிக் கொண்டு சென்றனர். அடுத்த நாள் காலை கோவிலை அடைந்தனர். அவளுடைய குலதெய்வ கோவில் ஒரு ஆற்றங்கரையில் அமைந்து இருந்தது.

எல்லோரும் அந்த ஆற்றில் குளித்து விட்டு ரெடியாக, திவ்யாவும் குளித்து விட்டு, மஞ்சள் கலரில் பாவாடை, சிவப்பு கலரில் தாவணி என அழகாக ரெடியானாள். திவ்யாவின் அம்மா அவளுடைய அடர்த்தியான முடியை லூஸ் ஹேர் விட்டு, நாலு முழம் மல்லிகையையும், ஒரு ரோஜாவையும் வைத்து விட்டாள். திவ்யா அவள் அம்மாவிடம் எதுக்கு இவ்ளோ பூ என்று கேட்க, சும்மா வச்சுக்கோ என்று மழுப்ப, திவ்யாவும் சரி என்று தலையாட்டினாள். பின் திவ்யாவின் சமையல் செய்ய போக, அவளுடைய குடும்ப பெண்கள் எல்லோரும் சமைக்க, எல்லோரும் காலை உணவு சாப்பிட்ட, திவ்யாவின் அம்மா பொங்கல் வைக்க ஏற்பாடு செய்தாள்.

திவ்யாவுக்கு அப்போது தான் சிறு வயதில் பொங்கல் வைத்து முடிந்ததும் அவளுக்கு மொட்டை அடித்து விட்டது நினைவு வர, சந்தேகத்துடன் அவள் அப்பாவைக் கேட்க, அவர் அப்புறம் சொல்றேன் என்று சொல்லி விட்டு அவளுடைய தாய் மாமனுடன் அந்த கிராமத்தில் இருக்கும் நாவிதனை கூப்பிட போக, திவ்யா அது தெரியாமல் அவர்கள் போகும் திசையயே பார்த்துக் கொண்டு நின்றாள்.


திவ்யாவின் அப்பாவும், மாமாவும் கிராமத்தில் விசாரிக்க, நாசுவன் வெளியூர் போய் இரு நாட்கள் ஆகிவிட்டது என்றும், அவருடைய மகன் தான் இப்போது இருக்கிறான் என்றும், அவனுடைய செல்போன் நம்பரை கொடுக்க, அதை வாங்கிக் கொண்டு வந்தனர். அவனுக்கு கால் செய்தார் திவ்யாவின் அப்பா.

ஹலோ யாருங்க பேசுறது?

ஏனப்பா, நீ இந்த பார்பரோட மகன் தானே?

ஆமாங்க... நீங்க?

நாங்க இந்த ஊரு தான் வெளியூர்ல இருக்கோம். எங்க அம்மன் கோவில் வேண்டுதலுக்காக வந்தோம்... ஒரு மொட்டை அடிக்கணும்... கொஞ்சம் கோவிலுக்கு வர்றியா?

சரிங்க, நான் பக்கத்துல தான் கிரிக்கெட் விளையாடிட்டு இருக்கேன்... ஒரு பத்து நிமிஷத்தில வந்துடுறேன்...

சரிப்பா, அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், நீ பார்பர்னு யாருக்கும் தெரியக்கூடாது? நான் சொல்ற போது டக்குனு மொட்டை அடிக்கணும் என்ன? 

சரிங்க பண்ணிடலாம் என்று சொல்லி விட்டு அவன் கட் பண்ண இவர்கள் இருவரும் கோவிலுக்கு வந்தனர். சில நிமிடங்களில் சொன்னது போல வந்துவிட்டான் குமார். அவன் தான் பார்பர். வந்தவன் சகஜமாக எல்லோரிடமும் பேசிக் கொண்டு இருக்க, அப்போது திவ்யா அங்கு வந்து உட்கார்ந்தாள்.

அப்போ அவன் திவ்யாகிட்ட போய் என் பேரு குமார் னு சொன்னான் அவ ள் தன் பெயர்  திவ்யானு சொன்னா .அவன் காலேஜ் first year படிக்கிறதா சொன்னான் . திவ்யா10த் ஸ்டாண்டர்ட் படிக்கிறேன் னு சொன்னா. ஆனால் இருவரும் யாரென்று தெரியாமல் பேசிக் கொண்டு இருக்க, அப்டியே எல்லாரும் கொஞ்சம் நேரம் விளையாட, குமாரும் திவ்யாவும்  மட்டும் பேசிக்கிட்டு இருந்தாங்க. இருவரும் facebook id யா ஷேர் பண்ணிக்கிட்டங்கா. 



அந்த சமயத்தில் திவ்யாவின் அம்மா பொங்கல் வச்சி முடிக்க, திவ்யாவின் அப்பா  குமாரிடம் நீ போய் ரெடி பன்னுனு சொல்ல, குமார் எதுவும் பேசாமல் எழுந்து போனான். அவன் போனதும் திவ்யாவின் அப்பாவும் அம்மாவும் திவ்யா அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு அவளிடம் கொஞ்சம் நேரம் சிரிச்சு பேச, அப்போது குமார் அவன் பைக் ல இருந்து ஒரு கவரும் ஒரு துணியும்   எடுத்து வந்தான்.

 அதை பார்த்த திவ்யா என்ன எடுத்துட்டு போறாங்க,  என்று அவள்  கேட்க, நேர்த்தி கடனுக்காக மொட்டை அடிக்க கத்தி எடுத்துட்டு போறான்மா என்று சொல்ல, திவ்யா யாருக்கு மொட்டை என்று கேட்க, அவர்  அதை அப்புறம் சொல்றேன்னு சொன்னாங்க. 

அப்பா திவ்யாவிடம் நான் உனக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவேன் . நீ அப்பாக்காக ஒன்னு பண்ணுவியானு கேட்டு அவ தலையை தடவ, அவளும் சொல்லுங்க நான் முடிஞ்சா செய்றேன்னு சொன்னா, அதுக்கு முன்னாடி தலைல இருந்து கைய எடுங்க ஹேர்ஸ்டைல் ஆ களைச்சிரதீங்கன்னு சொன்னா, திவ்யாவின் அம்மா அப்போ அவ கிட்ட நீ மொட்டை அடிக்கணும் னு சொன்னாங்க,  அவ அம்மா சும்மா சொல்றாங்கன்னு நெனச்சு சிரிச்சா. பின் நம்பிக்கை இல்லாமல் திவ்யா அவள் அப்பாவிடம் கேட்க, அவரும் விஷயத்தை பொறுமையாக சொல்ல,  திவ்யா கண்ணில் இருந்து கண்ணீர் தாரைத்தாரையாக கொட்டியது. அவளுடைய அப்பாவும் அம்மாவும் சேர்ந்து திவ்யாவின் கண்ணீரை  துடைத்து விட,  எங்களுக்காக மொட்டை அடிச்சுக்கோ திவ்யா என்று அவள் அம்மா கெஞ்சுதலாக சொல்ல, திவ்யா என்னால முடியாது, என் முடி வேற நீளமா இருக்கு, மொட்டை அடிச்சா அசிங்கமா இருக்கும்,  எல்லாரும் என்னை மொட்டை, மொட்டச்சினு கிண்டல் பண்ணுவாங்க. எனக்கு பயமா இருக்குனு என்று சொல்லி அழுதாள்.


அவளை எப்படி சம்மதிக்க வைப்பது என்று தெரியாமல் இருவரும் விழிக்க, அப்போது அவளுடைய அப்பா நீ மொட்டை அடிச்சலும் அழகு தாண்டா செல்லம், அப்பாக்காக மொட்டை அடிச்சிக்கோ திவ்யா, நாம  மத்தவங்களுக்காக ஏன்டா வாழணும்,  நாம நமக்காக வாழ்வோம், யார் கிண்டல் பண்ணாலும் நான் ஏன் அப்பக்காக மொட்டை அடிச்சேன்னு தைரியமா உன்னை கிண்டல் பண்றவங்ககிட்ட சொல்லுன்னு சொல்ல, திவ்யா அவளுடைய அப்பாவையே பார்த்தாள்.

திவ்யா இன்னமும் குழப்பத்துடன் தான் இருந்தாள்.

**********



ப்ரெண்ட்ஸ் என்னுடைய முழு நேர வேலை கதை எழுதுவது அல்ல. என்னுடைய வாழ்வாதாரத்துக்காக நான் என் நேரத்தை அதிகமாக செலவு செய்ய வேண்டி இருக்கிறது. லாக்டவுனுக்கு பின் அலுவலகத்தில் ஆட்கள் குறைப்பு, சம்பள பிரச்சனை, அதிக வேலைப்பளு என ஏகப்பட்ட பிரசர்கள். கதை எழுதுவது சாதாரண வேலை அல்ல. நல்ல மனநிலையுடன் எழுதினால் தான் சிறப்பாக இருக்கும்.

இந்த கதை வேறு ஒருவரின் கதை. அதை இம்ப்ரூவ் செய்யும் விதமாக தான் நம் வில்லேஜ் பார்பர் ஸ்டொரிஸில் போடுகிறேன். கதையின் உரிமை ஒரிஜினல் ரைட்டருக்கே சொந்தம். நன்றி.

2 comments:

  1. நண்பா உங்களின் கடினமான உழைப்பு மற்றும் கடினமான மனநிலைக்கு நடுவில் இந்த அழகான பதிவை நீங்கள் கொடுத்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள் மட்டும் பாராட்டுக்கள் இந்த கதை மிக அழகாக உள்ளது

    ReplyDelete