Sunday 7 November 2021

மொட்டை அடிப்பது ஒரு நம்பிக்கை

மொட்டை அடிப்பது ஒரு நம்பிக்கை

மொட்டை அடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு நாள் காலையில் எடுத்த முடிவோ அல்லது எழும் யோசனையோ அல்ல. திருப்பதியில் மொட்டை அடிக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட முடிவு.


என்றாவது ஒரு நாள் நான் திருப்பதி கோவிலுக்கு சென்றால் என்னுடைய முடியை மொட்டை அடிக்க வேண்டும் என்ற வேண்டுதல் தான். நம் அனைவரிடமும் இருக்கும் நல்ல குணங்களுள் ஒன்று தியாகமும், தானம் செய்வதும் தான் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

அதனால் என்னுடைய முடியை மொட்டை அடிக்க எனக்கு பயம் ஒன்றும் இல்லை. எனக்கு மிகவும் பிடித்தமான விருப்பம் என்னுடைய முடி தான்.


2016 ல் புற்றுநோய் சிகிச்சைக்காக என்னுடைய முடியை வெட்டிய போதும், இப்போது திருப்பதி கோவிலுக்கு சென்று மொட்டை அடித்த போதும் எனக்கு எதிர் மறையான சிந்தனைகள் வந்தது இல்லை. நானும் அப்படியே.


மொட்டை தலையுடன் இருப்பது தங்கள் சுய அடையாளத்தை இழப்பதாகவோ, அல்லது மொட்டை தலையில் அசிங்கமாக இருப்பதாகவோ நினைக்கிறார்கள். ஆனால் என்னுடைய அனுபவத்தில் நான் உணர்ந்து கொண்டது என்னவென்றால் உண்மையில் மொட்டை அடிப்பது நம்முடைய நம்பிக்கையை அதிகரிக்கிறது.

சீதாலட்சுமி. கேரளா.




No comments:

Post a Comment