Tuesday 10 May 2022

பவித்ராவின் முடி காணிக்கை - இரண்டாம் பாகம்

அதனால் தினமும் இருமுறை தலைக்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் வைத்து, மசாஜ் செய்து, எண்ணெய் முழுவதும் அவளுடைய முடியின் வேர்க்கால்கள் வரை பரவுமாறு செய்து ஒற்றை ஜடை போட்டுக் கொண்டாள்... வார இறுதியில் சிகைக்காய் போட்டு, குளித்து விட்டு, தலை சீவி பூ வைத்து கொண்டாள்.


ஆனால் ஒரு பக்கம் பவித்ராவுக்கு மொட்டை அடிப்பதை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் அதிகமாக, பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என எல்லோரும் மொட்டை போடுவதை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.


காலேஜ் செகண்ட் இயரில் ஸ்ருதி என்று ஒரு பெண் பவித்ராவின் ப்ரெண்ட் ஆனாள். இருவரும் நல்ல தோழிகளாக பழக, எப்போதும் இருவரும் சேர்ந்து தான் இருப்பார்கள்.


ஸ்ருதி சென்னையில் வளர்ந்த மாடர்ன் மங்கை. தோள்ப்பட்டை வரை ஹேர் கட் பண்ணி இருந்தாள். இருவரும் அடிக்கடி ஏதாவது பேசிக் கொண்டே இருப்பார்கள். ஸ்ருதிக்கு பவியின் முடியை பார்த்து ஆச்சர்யமாக இருக்கும். 



என்ன பவி, எதுக்கு இவ்ளோ நீளமா முடி வளர்க்கிற, மெயின்டெயின் பண்ண கஷ்டமா இல்லயா?


எனக்கு என்னோட முடி ரொம்ப பிடிக்கும், இது வரை ட்ரிம் கூட பண்ணியது இல்ல, தினமும் இதுக்காக ஒரு மணி நேரம் செலவு செய்யறேன்...


இதுவும் அழகா தான் இருக்கு, உனக்கு இப்படி நீளமான முடி தான் அழகு... சரி பவி கடைசியா எப்போ முடி வெட்டுன?


நான் என் முடியை வெட்ட மாட்டேன் ஸ்ருதி, ஆனால் கொஞ்சம் ட்ர்ம் மட்டும் பண்ணுவேன்...


சூப்பர் பவி, ஆனா என்னால இப்படி மெயின்டெயின் பண்ண முடியாது, அதான் ரெகுலரா ஹேர்கட் பண்றேன்...


அப்போ நீ நீளமா முடி வச்சிட்டதே இல்லயா? 


இல்லடி, ரொம்ப வருஷமாச்சு... நான் எட்டாவது படிக்கும் போது, லாங் ஹேர் வச்சு இருந்த... ஆனா எனக்கு மாடர்ன் ட்ரஸ் போட ஆசை... அதுக்கு இந்த லாங் ஹேர் ஸ்டைல் செட் ஆகலை... அதான் வீட்ல அம்மாகிட்ட சொல்லி என் முடியை ரெகுலரா ஹேர் கட் பண்ணிப்பேன்...


உன் முடி அப்போ எவ்ளோ நீளம் இருந்தது ஸ்ருதி...


அது இடுப்புக்கு கீழ வரைக்கும் இருந்துச்சு... ரெட்டை ஜடை போட்டா நடு முதுகு வரை இருக்கும், அம்மா முடி வெட்டவே கூடாதுன்னு சொன்னாங்க... ஆனா நான் தான் அடம்பிடிச்சு ஷோல்டர் லெந்த் கட் பண்ணிக்கிட்டேன்... அப்போ இருந்து மூணு மாசத்துக்கு ஒரு முறை ஹேர் கட் பண்ணிப்பேன்...


சூப்பர்டி... ஆனா எனக்கு இந்த அழகு காலேஜ் முடியற வரை தான்...

 


அப்படியா? அப்புறம் ஹேர் கட் பண்ணிப்பியா பவி...


இல்லடி... பழனி முருகனுக்கு வேண்டி இருக்கேன்... காலேஜ் முடிஞ்சு நல்ல வேலை கிடைச்சா, நானும், என் அம்மாவும் மொட்டை அடிக்கிறதா வேண்டி இருக்கோம்...


என்ன பவி சொல்ற... எனக்கு இதை கேக்கவே ரொம்ப ஷாக்கா இருக்கு... எப்படிடி இனிமேல் நீ இவ்ளோ நீளமான முடியை மொட்டை அடிச்சா, மறுபடியும் முடி வளர இன்னும் ரெண்டு வருஷம் ஆகுமே...


என்னடி பண்ண... சாமிக்கு வேண்டியாச்சு... அப்படி வேண்டிட்டா  கண்டிப்பா சாமிக்கு முடியை காணிக்கை குடுக்கணும்...


அருமைடி, இந்த வயசுல யாரும் இப்பிடி மொட்டை போட சம்மதிக்க மாட்டாங்க.. சூப்பர் பவி...


சரிடி... நான் கெளம்புறேன்.


பவித்ரா மைண்ட்ல ரொம்ப சந்தோஷம்.. ஸ்ருதிகிட்ட மொட்டை டாபிக் பத்தி பேசிட்டோம்னு...


அப்டியே டைம் ஓடிருச்சு.. பவித்ரா ஃபைனல் இயர் வந்துட்டா.. கேம்பஸ்ல செலக்ட் ஆகி நல்ல கம்பெனியில வேலையும் கிடைத்தது. செமஸ்டர் தேர்வு முடிஞ்சுருச்சு. நல்லா பண்ணி இருந்தாள்.. கண்டிப்பா 80% மேல மார்க்  வரும்னு நம்பினாள் பவித்ரா. செமஸ்டர் லீவு விட்டதும் தன் ஊருக்கு கிளம்பினாள் பவித்ரா.


அவள் மனது முழுவதும் மொட்டை அடிப்பதை பற்றி தான் யோசித்துக் கொண்டு இருந்தாள். இருந்தாலும் அம்மாக்கிட்ட இது பத்தி பேச தயங்குனாள்... அப்போ ஒரு நாள் அவளும் அவளுடைய அம்மாவும் டிவி பார்த்துட்டு இருந்தாங்க..


டிவில காந்தி பிறந்த மண் படம் ஓடி கொண்டு இருந்தது... அந்த படம் இப்போது தான் பவித்ரா முதல் முறை பார்க்கிறாள்.


அப்போ அந்த படத்தில் ஒரு கிராமத்து பொண்ணுக்கு மொட்டை அடிக்குற தண்டனை குடுப்பாங்க... அந்த காட்சி வந்ததும் பவித்ராவுக்கு ரொம்ப சந்தோஷம்..


அப்படி கண் இமைக்காமல் அந்த சீன் முழுவதும் பார்த்து முடித்தாள் பவித்ரா.


இது தான் அம்மாவிடம் பேச சரியான நேரம்னு  அவளே மொட்டை அடிப்பதை பற்றி ஸ்டார்ட் பண்ணினாள்...


அம்மா இந்த பொண்ணுக்கு மொட்டை அடிக்குறா மாதிரி தான் எனக்கும் மொட்டை போடுவங்களா?


ஆமாடி.. நானே சொல்லணும்னு நினைச்சேன்.உனக்கு மறுபடி காலேஜ் ஒபன் பண்ண மூணு மாசம் ஆகும் தானே... அதனால் இது தான் சரியான நேரம்.. நாளை நைட் நாம ரெண்டு பேரும் பழனிக்கு போய் அங்கே மாமா வீட்ல தங்கிட்டு அப்புறம் அடுத்த நாள் கோவிலுக்கு போய்ட்டு வரலாம்... என்ன சரியா?


நாளைக்கே வா.. ம்ம் சரி அம்மா என்றாள் பவித்ரா.


சிறிது நேரம் கழித்து பவியின் அம்மா பழனில உன் அதை வீட்டுல தங்கிக்கலாம். நா எல்லாம் பேசினேன்.. அனேகமா அத்தையும் சிவாவும் (அத்தை பையன் ) நம்ம கூட வருவாங்கடி என்றாள்.


அப்படியா? அவங்களுக்கும் வேண்டுதல் இருக்கா?



அது தெரியல.. வந்தாலும் வரலாம்.. இல்ல நம்ம மட்டும் கோவிலுக்கு போயிட்டு அப்படியே திரும்பி வீட்டுக்கு வந்துடலாம்...


நானும் மொட்டை போடுறது பத்தி அத்தைகிட்ட சொன்னியா மா?


இல்லடி... பழனிக்கு போறோம்னு தான் சொன்னேன். அதெல்லாம் நேர்ல நாளைக்கு பேசிக்கலாம்


சரி மா என்றாள் பவித்ரா.


அடுத்த நாள் மாலை இருவரும் பழனிக்கு பஸ்ஸில் கிளம்பினார்கள். பவித்ராவின் மாமா வீட்டுக்கு போய்விட்டார்கள். பவித்ராவின் அத்தை, மாமா இருவரையும் வரவேற்றார்கள்.



**************************************************************************************

அடுத்து கோவிலில் மொட்டை தான்? ஆனால் இந்த இரவுக்குள் என்ன நடக்க போகிறதோ?

No comments:

Post a Comment