Thursday, 6 October 2022

வுமன்ஸ் டே ஹேர்கட்

21 வயதான ஸ்வேதா அவர்கள் வீட்டிற்கு எதிரே உள்ள சலூன்  கடைக்குள் வந்தாள். அவளது நடுமுதுகு வரை இருந்த  நீளமான முடி அனைத்தும் கலைந்து இருந்தது, அவள் உடை கூட மாற்றாமல் அவள் வீட்டில் அணிந்திருந்த அதே சல்வாரை அணிந்து வந்தாள். மூன்று வாடிக்கையாளர்கள்  காத்து இருப்பதைக் கவனித்த அவள், அதில் தன் தம்பியும்   இருப்பதை பார்த்து விட்டு, அந்த வரிசையில் அமர்ந்தாள். பின்னால் சாய்ந்து சௌகரியமாக உட்கார தன் தலைமுடி அனைத்தையும் முன் கொண்டு வந்ததால், அவள் அங்கு இருந்த அனைவரும் பார்க்கும்படி ஆகிவிட்டாள், ஆனால் அவள் எதையும் கவனிக்கவில்லை.

 

அவளுடைய தலைமுடி ஜெட் கருப்பாகவும், அடர்த்தியாகவும் இருந்தது. அவள்  சற்று நிதானமாகி, பார்பர்  தன் வாடிக்கையாளருக்கு ஹேர்கட் செய்வதைப் பார்க்க ஆரம்பித்தாள். அவளுடைய கண்கள் மூன்று வயதுக்கு குறைவான அவளது தம்பியை நோக்கி நகர்ந்தன, அவள் கண்களை மூடினாள்.

 

நாள் தொடங்கியபோது, ​​மதியம் தான் தன் வீட்டின் எதிரில் இருக்கும் சலூன் கடைக்கு செல்வேன் என்று அவள் நினைக்கவே இல்லை, உண்மையில் அவள் 16 வயதில் பார்லர் செல்ல தொடங்கிய பிறகு, அவள் மீண்டும் சலூன் கடைக்கு செல்ல வேண்டிய நிலைமை வரும் என்று நினைத்து கூட பார்த்ததில்லை. ஆனால் இந்த நாள் வித்தியாசமானது. 

 

கொண்டாடப்பட்ட பெண்கள் தினத்திற்கு ஒரு பெண் ஒவ்வொரு நாளும் சந்திக்கும் பிரச்னைகளை பற்றி பேசுவதில் இருந்து இந்த ஹேர் கட் சவால் தொடங்கியது. அவள் தலைமுடியை குறைந்தது 2 அங்குலமாவது ட்ரிம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவளுடைய அம்மா அவளுக்கு ஆதரவளித்தாள், அதற்கு ஸ்வேதா ஒப்புக்கொண்டாள்.

 

அவள் தம்பி தன் தலைமுடியை வெட்டச் சொல்லும் வரை எல்லாம் சரியாக இருந்தது. அவள் தம்பி முதலில் எதிர்த்தான், பின் முடியை வெட்ட ஒத்துக் கொண்டான், ஆனால் அவன்  ஸ்வேதாவிடம் ஒரு வார்த்தை கூறினான், அது அவளை காயப்படுத்தியது, "தேங்க்ஸ் டி, யூ கெட் எ டிரிம், ஐ கேட் தெ buzz கட்" என்று அவளை தன் முடிய வெட்டும் தண்டனைக்காக அவளை குற்றம் சாட்டினான்.


 அவள் எதுவும் பேசவில்லை, ஆனால் அவன் தொடர்ந்தான், "முட்டாள் பெண்களின் தினம் இது, நீங்கள் எல்லா பெண்களும் சமத்துவத்திற்காகவும் எல்லாவற்றுக்காகவும் கத்துகிறீர்கள், ஆனால் நீங்கள் பார்லருக்குச் செல்லுங்கள்... எல்லாமும் சமம் என்றால் பார்லர் எதற்கு? உங்களுக்கு மட்டுமே அது உள்ளது ..."

 

ஸ்வேதா தன்னை கட்டுப்படுத்த முயன்றாள், பின் “ஏய்...சாரிடா, அம்மா உன்னை முடி வெட்டச் சொல்வாள் என்று எனக்குத் தெரியாது…அது இல்லாம, சலூன்ல பொண்ணுகளுக்கு முடி வெட்ட மாட்டாங்க... அதனால நீ பேசாம வாயை மூடிட்டு இரு என்று கோபமாக சொன்னாள் 

ஸ்வேதா.  

 

"உண்மையில் நீ சலூன்கடையில் முயற்சி செய்ததில்லை, சலூன்கடையில் உன் தலைமுடியை வெட்டவில்லை என்றால், சலூன் கடை இல்லை என்றால் அதற்கு சம உரிமையை நீ ஏன் முயற்சி செய்ய கூடாது?" என்று கூறி விட்டு ஸ்வேதாவின் தம்பி வீட்டை விட்டு வெளியேறினான்.

 

சில நிமிடங்களுக்குப் பிறகு, அவன் முடி வெட்டுவதற்காகக் காத்திருக்கும் வீட்டின் அருகில் இருந்த சலூன் கடையில் தன் தம்பிக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கிறாள் ஸ்வேதா.

 

கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. அவள் தம்பி பார்பர் சேரில் அமர்ந்து பாதி முடி வெட்டி முடிந்ததை அவள் கவனிக்கவில்லை. மற்ற ஆட்களின் வேலை முடிந்து ஸ்வேதா தன் முறைக்காக அழைக்கப்பட்டாள்.

 

அவள் மெதுவாக பார்பர் நாற்காலிக்கு சென்றாள், பார்பர் நாற்காலியில் அமர்ந்தாள், அவளுடைய உயரத்திற்கு அது மிகவும் பெரியது.

 

பார்பர் ஒரு நடுத்தர வயது மனிதன், மெதுவாக அவளது முடி அனைத்தையும் சீவி கொத்தாக சேகரித்தான், அவன் ஒரு வெள்ளைத் துணியை மூடியபடி அவள் முடியை அவள் தலைக்கு மேல்  உயர்த்தினான். பின்னர் முடியின்  பிடியை தளர்த்தினார். பிறகு ஒரு சீப்பை எடுத்துக்கொண்டு ஸ்வேதாவிடம் கேட்டார்.

 

"என்ன செய்வது ஸ்வேதா அம்மா?"

 

அதற்கு ஸ்வேதா, “உம்ம்...எனக்கும் என் தம்பிக்கு எப்படி ஹேர்கட் பண்ணி இருக்கீங்களோ அதே ஹேர்கட் பண்ண வேண்டும்” என்று தன் சகோதரனைக் காட்டி பதிலளித்தாள்.

 

பார்பரும் குழம்பிப்போய், “நிஜமாவா ஸ்வேதா அம்மா? உன் தம்பி சம்மர் ஹேர்கட் பண்ணி இருக்கான்… அது ரொம்ப ஷார்ட் பாய்கட் அப்படின்னு உனக்கே தெரியும்... அது உன்னை மாதிரி இளம்பெண்களுக்கு மோசமாக இருக்கும்”

 

அதற்கு ஸ்வேதா, "ஆமாம், எனக்கு அந்த ஹேர்கட் தான் பண்ணனும்... என் தலைமுடியால் தான் நான் பெண் என்று நம்புகிறீர்களா?"

 

பார்பர் தடுமாறி, "இல்லை... ஆனால், பெண்ணுக்கு நீண்ட முடி தானே இருக்கணும், அது தான் பொது..."

 

பார்பர் பேசும் முன் குறுக்கிட்ட ஸ்வேதா, “ஆண்களுக்கு அந்த ஹேர்கட் நல்ல இருக்கும்னா, எனக்கும் நல்லாவே இருக்கும் பண்ணுங்க” என்று சொல்ல பார்பர்  ஸ்வேதாவிடம் அதிகமாக வாதிடவில்லை. ஒரு கத்தரிக்கோலை கையில் எடுத்து கொண்டு  அவள் தலைமுடியை கடைசியாக ஒரு முறை சீவினான்.

 

பின்னர் கத்தரிக்கோலை அவள் கழுத்தில் வைத்து, மெதுவாக அவள் தலையை முன்னோக்கி வளைத்தான். கச்ச்ச்ச், கச்ச்ச்ச், கச்ச்ச்ச்,என்று ஸ்வேதாவின் முடியை வெட்டினான் பார்பர். அவள் முடி அவள் கழுத்தின் அருகில் மொத்தமாக துண்டிக்கப்படும் வரை அவன் வெட்டிக் கொண்டே இருந்தான். ஸ்வேதா தன் கழுத்தின் அருகில்  உலோகக் கத்திகள் படும் பொது ஏற்படும் ஒரு விதமான ஜில்லென்ற உணர்வுகள்  அனைத்தையும் உணர்ந்தாள்.

 

ஸ்வேதா தலையை மேலே தூக்கி பார்க்க, அவளுடைய தலைமுடி இப்போது கழுத்து வரை மட்டுமே இருந்தது. அவள் அதைத் தொட முயன்றாள், ஆனால் அவளது கைகள் அவளை சுற்றி போர்த்தி இருந்த துணிக்குள்  கேப்பிற்குள் முடியவில்லை.

 

பின்னர் பார்பர் ஒரு கிளிப்பர் எடுத்து அதை பிளக்கில் சொருகினார். கிளிப்பர் மூலம் முடியை இன்னும் ஷார்ட்டாக வெட்டி விட்டு சீப்பை எடுத்தார். அவள் தலையைச் சுற்றிலும் அவள் தலைமுடியை விரித்து, அவளுக்கு பாப் ஹேர் இருப்பது போன்ற தோற்றத்தைக் கொடுத்தான் பார்பர். பின்னர் கத்தரிக்கோலால் அவளது தலைமுடியின் நீளமான முடிகளை வெட்ட ஆரம்பித்தான். அவன் அவளது முடியை சீப்பால் சீவி அளவு பார்த்து ஒரே சீராக கத்தரியில் நறுக்குவான்.

 

பின் உச்சியில் இருந்து பெரிய தலைமுடியை முன்னால் பிடித்து இழுத்தான். அவள் தலை முன்னோக்கி நகர்ந்தது. பின்னர் Kaachchchch ... chchch… chchch வேகமாக நெற்றியில் இருந்த முடியை வெட்ட, எல்லா முடிகளும் நுண்ணிய துகளாக ஸ்வேதாவின் மடியில் விழுந்ததும் ஸ்வேதா கண்களை மூடினாள். சில நுண்ணிய துகள்கள் அவள் முகத்தில் ஒட்டிக்கொண்டன.

 

பின்னர் கத்தரிக்கோலை வைத்து கிளிப்பரை எடுத்தான் பார்பர். அவன் அதை முன்னால் இருந்து தொட்டு மெதுவாக அவள் தலையின் மையத்தை நோக்கி ஓட்டினான். அவள் மடியில் முடி மழையாக பொழிந்தது. இப்போது அவர் கிளிப்பரை மாற்றி மீண்டும் அதையே செய்தார்.

 

பின்னர் பார்பர் ஸ்வேதாவின் வலது பக்கம் நகர்ந்து, அவளை வலது பக்கம் திருப்பி சைடில் இருந்த முடியின் மேல் கிளிப்பரை இயக்கினான். இடதுபுறத்திலும் அவ்வாறே செய்தான். ஸ்வேதாவின் தலையில் இப்போது குளிர்ந்த காற்றை உணர முடிந்தது. அவளுடைய தலை இப்போது கறுப்புக்கு பதிலாக சாம்பல் நிறமாகத் தெரிகிறது. கிளிப்பர் அவள் தலையில் தீவிரமாக வேலை செய்ய... அவளது முடி  தரை மேல் விழுந்து அந்த இடம் முழுவதும் மூடப்பட்டு இருந்தது.

 

ஸ்வேதாவின்  பின் தலையில்  முடி மட்டும் எஞ்சியிருந்தது. அவள் தலையை முன்னோக்கி வளைத்து அவள் பின் முடியை கிளிப்பரை ஓட்டினான். கடைசியாக மீதமுள்ள முடி வெட்டப்பட்டது. பார்பர் கத்திரிக்கோலை எடுத்து அவளது முதுகு மற்றும் பக்கங்களில் முடியை அழகாக வெட்ட தொடங்கினான். 

 

பிறகு அவள் பின்கழுத்து மற்றும் பக்கவாட்டில் தண்ணீர் தெளித்து விட்டு, ஒரு ரேஸரை எடுத்தான். ரேஸரில் பிளேடு மாற்றி விட்டு ரேசரை அவள் முதுகில் வைத்து நகர வேண்டாம் என்று எச்சரித்தான். 

 

ஸ்வேதா கொஞ்சம் கூச்சத்துடன் உட்கார்ந்து இருக்க... பார்பர் அவளுடைய பின் கழுத்தில் துருத்திக் கொண்டு இருந்த முடிய அழகாக ரேஸரால் ஷேவ் செய்து விட,  ஸ்வேதாவிற்கு கொஞ்சம் வலி மற்றும் ஒரு விதமான உற்சாகமான உணர்வு இருந்தது. ரேசர் அவள் கழுத்தின் பின்பகுதியில் இயங்கும் சத்தத்தை தன் காதுகளில் மீண்டும் உணர்ந்தாள். அவள் பின்கழுத்து பகுதியை முடித்ததும் பார்பர் ஸ்வேதாவின் இரு பக்கவாட்டிலும் இருந்த முடியை ஷேவிங் செய்தார்.

 

பார்பர் ஷேவ் செய்த முடித்த பிறகு, அவள் தன்னைப் பார்க்க தலையை உயர்த்தினாள். அவளால் தன்னை அடையாளம் காண முடியவில்லை. அவளது அடர்த்தியான இடுப்பு வரை இருந்த நீளமான தலைமுடி போய்விட்டது. அவளுடைய தலை மிகவும் சிறியதாகத் தோன்றியது. தன் தம்பியின் முடியை பார்க்க, பக்கத்தில் இருந்த நாற்காலியை சரிபார்த்தாள். ஆனால் அங்கு 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் அமர்ந்திருந்தார்.

 

பார்பர்அவளை ஒரு துணியால் உதறி விட்டு கேப்பை மெதுவாக திறந்தான். ஸ்வேதா சேரில் இருந்து எழ, அவன் மீண்டும் ரேசரை எடுத்து அவளை அப்படியே உட்கார வைத்தான். அவன் அவளை மெதுவாக முன்னோக்கி தள்ளி அவள் முதுகில் தொட்டு அவளை முன்னால் தள்ளினான். பின் சல்வாரில் இருந்து வெளிப்பட்ட அவளது முதுகில் சிறிது வளர்ந்து இருந்த முடியை நீக்கினான்.

 

ஸ்வேதா கொஞ்சம் வெட்கப்பட்டாள் ஆனால் எதிர்க்கவில்லை. பின் நாற்காலியில் இருந்து எழுந்து தன் பின்கழுத்தில் ஷேவ் செய்து இருந்த பகுதியை தொட ஆரம்பித்தாள். அவளுடைய தம்பி இருவருக்கும் முடி வெட்டியதற்கு  பணம் கொடுத்தான், ஸ்வேதாவும், அவள் தம்பியும் ஒன்றாக கடையை விட்டு வெளியேறினார்கள்.

அவள் தன் தலையையும் பின்னர் தன் தம்பியின் முடியையும் தொட்டு பார்த்து விட்டு... அவனிடம் கெத்தாக, “ஆணும் பெண்ணும் சமம்” என்றாள்.


No comments:

Post a Comment