Saturday, 15 October 2022

சலூன் மது - முதலாம் பாகம்

 மதுசூதனன். சுருக்கமாக மது. தமிழகத்தின் தென் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு பிழைக்க வந்தவன். ஏதேதோ வேலைகள் செய்து கடைசியில் ஒரு சலூனில் தொழில் கற்றுக் கொண்டான். சொந்தமாக ஒரு சலூன் வைக்க வேண்டும் என்று ஒரு ஆசை அவனுக்கு இருந்தது.

ஒரு சலூனுக்கு சொந்தக்காரனாகி விட்டு தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தான் மது. சென்னையின் முக்கியமான வளர்ந்து வரும் ஒரு ஏரியாவில் பெரிய அடுக்கு மாடி கட்டிடத்தின் அருகில் கடைக்கு இடமும் பார்த்து விட்டான். கடைக்கு அட்வான்ஸ் கொடுக்கவும், கடையை அலங்கரிக்கவும் காசு தேவை என்று தான் அக்கவுண்ட் வைத்து இருந்த பேங்கில் கடன் கேட்டான் மது.

அந்த பேங்கில் இருந்த ஆபிசர் தான் விமலா. ஆரம்பத்தில் அவனது லோன் மேல் ஆர்வம் காட்டாமல் இருந்த விமலா, மதுவின் தொடர் முயற்சி, அவனது பணிவான குணம் கண்டு அவனுக்கு உதவ நினைத்தாள் விமலா.

 

விமலாவும் மதுவின் சலூன் இருந்த ஏரியாவை பார்க்க செல்ல, அவன் கடைக்கு அருகில் இருந்த அடுக்கு மாடி குடி இருப்பில் தான் விமலா இருந்தாள். அதனால் அந்த ஏரியாவை பற்றி விமலாவுக்கு தெரியும். நல்ல சலூன் ஒன்று அந்த இடத்தில் இருந்தால் அதன் மூலம் நல்ல வருமானம் வரும் என்ற நம்பிக்கையில் விமலா மதுவிற்க்கு லோன் அப்ரூவல் செய்து கொடுத்தாள். 

அடுத்த சில வாரங்களில் மது அந்த ஏரியாவில் தன்னுடைய புதிய சலூனை திறந்துவிட்டான். சில மாதங்களில் மதுவின் சலூன் அந்த ஏரியாவில் நல்ல பாப்புலர் ஆனது. நல்ல வருமானமும் வந்தது. லோனையும் சரியாக கட்டி வர, மதுவின் மேல் விமலாவிற்கு நம்பிக்கை வந்தது. லோன் கட்ட செல்லும் போது எல்லாம் விமலாவிற்க்கு வணக்கம் வைத்து வருவான் மது. 

தினமும் விமலா பேங்க் போகும் போதும், வரும் போதும் சலூனை கடந்து செல்லும் போது விமலாவிற்க்கு வணக்கம் வைப்பான் மது. விமலாவும் அவனுக்கு சில சின்ன சின்ன வேலைகளை செய்து தர சொல்ல, அவனும் செய்து தருவான்.

இப்படியே நாட்கள் செல்ல, சில நாட்கள் விமலா பேங்கிற்க்கு வரவில்லை. ஒரு பத்து நாட்கள் கழித்து தான் விமலா பேங்க் வந்தாள்.

அன்று செவ்வாய்கிழமை. காலை பதினோரு மணி. மதுவிற்கு பார்லரில் யாரும் இல்லாமல் போர் அடிக்க, அந்த நேரம் பார்த்து பார்லர் முன் ஒரு ஸ்கூட்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது. மது எழுந்து யாரென்று பார்க்க, விமலா ஸ்கூட்டியை சைடு ஸ்டெண்ட் போட்டு நிறுத்திக் கொண்டு இருந்தாள்.

மது ... "குட் மார்னிங் விமலா மேடம்... எப்படி இருக்கீங்க? என்ன ரொம்ப நாளா பார்க்க முடியல? என்று கேட்க... 


விமலா "ஒண்ணுமில்ல மது... நான் விடுமுறையில் என் ஊருக்கு போய் இருந்தேன்... இப்போ சும்மா உன்னை பார்க்க  வந்தேன். அப்புறம் உன் வேலை எப்படி இருக்கிறது?" என்று கேட்க... 


"உங்க தயவுல எல்லாம் நல்லா இருக்கு மேடம்... லோன் கூட மூணாவது டியூ கட்டிட்டேன் மேடம்" என்றாள் மது.


"அப்படியா வெரி குட்" என்ற விமலா சலூனைப் பார்த்தாள்... அப்போது மதுவை பார்த்த விமலா "மது எனக்கு பாய்கட் பண்ணா எப்படி இருக்கும்?" என்று கேட்க... 

மது ஆச்சர்யமாக விமலாவை பார்த்தாள். "என்ன மேடம் இப்படி கேட்கிறீங்க?" என்று ஆச்சர்யமாக கேட்க... 


"ஒண்ணுமில்ல...அடிக்கடி எனக்கு பாய்கட் நல்லா இருக்கும்னு சொல்வாங்க என் ப்ரெண்ட்ஸ்... ஆனா நான் அதை ஒத்துக்கவே இல்ல.... ஆனா இப்போ வரை அது சரியா இருக்குமான்னு எனக்கு நிச்சயமா தெரியல." என்றாள் விமலா.


மேடம்... அது ஒரு தடவை நீங்க பண்ணி பார்த்துட்டா என்ன?


ஆமா மது... என் புது பேங்க் மேனேஜர் ஸ்மிதா ராவும் பாய்கட் தான் வச்சு இருக்கா... அந்த ஹேர்கட்ல அவளுக்கு ரொம்ப அழகா இருக்கு... அதனால நீ எனக்கு பாய்கட் ஹேர் ஸ்டைல் கட் பண்ணி விடணும்...  அப்புறம் ஹேர் கலரிங் பண்ணனும்... இதெல்லாம் பண்ணனும்னு நான் முடிவு பண்ணி இருக்கேன்...


மது அவள் முகத்தை பார்த்தான்,  "என்ன மது... யோசிக்கிற?"


“மேடம்... நானா உங்களுக்கு ஹேர்கட் பண்றது...?” என்று கேட்டாள்.


"ஆமாம்... உன்னால பண்ண முடியாதா?" விமலா கேட்க…


"சரி மேடம். நீங்க பிளாட்டுக்கு போங்க... நான் அங்கே வர்றேன்" என்று சொன்னான் மது...


"இல்லை மது, நான் இங்கே  இந்த நாற்காலியில் உட்கார்ந்து ஹேர்கட் பண்ணனும்னு ஆசையா இருக்கு..."


"உங்கள் விருப்பப்படி மேடம்... இன்று யாரும் இங்கு வரவில்லை... நீங்கள் விரும்பினால் நான் உங்களுக்கு இங்கேயே ஹேர்கட் பண்ணி விடுறேன்."

"அப்போ இப்போவே ஹேர்கட் பண்ணலாமா?" என்று ஆர்வத்துடன் கேட்டாள் விமலா..

 

விமலா சலூனின் முன் வாசலில் நிற்க, இதற்கிடையில் விமலாவிற்கு சலூன் கடையின் பார்பர் சேரில்  உட்கார வேண்டும் என்ற ஆசை அதிகமாகி விட்டது...  

மது சலூன் கண்ணாடி கதவை மூடி திரையை இழுத்து விட்டு... நாற்காலியின் உயரத்தை சரி செய்து கொண்டு "ப்ளீஸ் கம் மேடம்.." என்றான்.


விமலா எழுந்து அந்த நாற்காலியில் அமர்ந்தாள்... அவள் மிகவும் கவர்ச்சியாக இருப்பாள்... விமலாவின் தலைமுடி இடுப்பு வரை மிகவும் இறுக்கமாக இருந்தது. மது  ஹேர் கிளிப்பை கழற்றி ஸ்டாண்டின் எதிர் பக்கத்தில் வைத்தான்.

மதுவுக்கும் அந்த அனுபவம் புதிது. ஆனால் விமலா தன் தலைமுடியை ஒரேயடியாக வெட்டுவது அவனுக்குப் பிடிக்கவில்லை... அதனால் அவன் விமலாவிடம்  


"மேடம்..யூ ஹேவ் பெட்டர் ஹேர்... இந்த முடியை எப்படி  கட் பண்ணுவது....ஒரு சின்ன ரிக்வஸ்ட் மேடம்..."


“சொல்லு மது..” என்று விமலா கேட்டாள்.


"இல்லை மேடம்.... முடியை யூ ஷேப்பில் கட் பண்ணி விட்டு அப்புறம் முன்பக்கம் மட்டும் பிரிங்ஸ் ஹேர்கட் பண்ணலாம் மேடம்... " என்றான் மது மெல்லிய குரலில்.

விமலா சிரித்தாள்... "நீ நல்லா பண்ணினா எனக்கு எந்த மாதிரியான ஹேர் கட்டும் ஓகே மது"


மதுவுக்கு பெண்களுக்கு ஹேர்கட் செய்ய நிறைய ஆசையும், ஸ்டைலும் இருக்கிறது... இப்படி வெரைட்டியாக முடி வெட்டுவது அவனுக்குப் பிடிக்கும்... ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. மது செய்யும் வேலையை விமலா முன் கண்ணாடியில் பார்க்கிறாள்.


மது விமலாவின் இடது பக்கம் நின்றிருந்தான்...


“கச்சக்..கச்சக்..கச்சக்..” கத்தரிக்கோல் விமலாவின் தலைமுடியை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டுகிறது... நடுவில் சீப்பினால் விமலாவின் தலையை வருடி முடியை நல்ல யு ஷேப்பில் கட் செய்தான் மது...


"இது எப்படி இவ்வளவு அழகா கட் பண்ற?" என்று விமலா கண்ணாடி வழியாக பார்த்துக் கேட்டாள்.


“மேடம்..இப்ப பாப் கட் பண்ண போறேன்” என்ற மது விமலாவின் தோள்பட்டை அருகே கத்தரிக்கோல் போட ஆரம்பித்தான். விமலாவின் தலைமுடி பெரிய பெரிய கொத்தாக கீழே விழுகின்றன... பல வருடங்களாக இருந்த சிறிது நேரம் கழித்து, விமலாவின் தலைமுடி இப்போது பாப் கட் அளவில் இருந்தது. 


“வாவ்....ரொம்ப நல்லா இருக்கு மது...” என்றவள் தலையை ஆட்டி அவளது முடியின் அழகை கண்டாள்.


“நன்றி மேடம்... பாப்கட் உங்களுக்கு நன்றாக இருக்கிறது...” என்றான் மது...

"ஒரு நிமிஷம் மது... இது நல்லா இருக்கு... ஆனா எனக்கு பாய்கட் கிராப் தான் வேணும்" என்று விமலா சொல்ல... 


"சரி மேடம் மறுபடியும் கட் பண்ணலாம்"... என்று சொன்ன மது  தன் கையில் கத்தரிக்கோலை எடுத்துக் கொண்டான்... விமலாவின் தலைமுடியை சீப்பில் சீவி விட்டு, ஆணுக்கு செய்வது போல் வெட்ட ஆரம்பித்தான்... விமலாவின் ஹேர் ஸ்டைல் மாறிவிட்டது... அதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தாள் விமலா. 


“ரொம்ப நல்லாயிருக்கு மது... தேங்க்ஸ்..” என்று மதுவின் கையில் இருநூறு ரூபாயை கொடுத்துக்கொண்டு வெளியே நடந்தாள் விமலா.========================================================

இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரும். நேரம் கிடைக்காத காரணத்தால் சிறு கதைகள் மட்டும் எழுதி வருகிறேன். நண்பர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும்

2 comments:

 1. 👏👏👏Saloon mottai innum varaity katunga bro
  1.unfortunate mottai
  2.aasa katti (love panra paiyanuku mottai pidikumnu teen girlku mottai)
  3.changeover mottai
  4. Haircut try panni set aagamalast ah mottai
  Ipdi neraiya eluthunga bro unga veri thanamana fan nanu ❤

  ReplyDelete