Monday 21 November 2022

காதல் பரிசு - இரண்டாம் பாகம்

 மித்ரா பயந்து கொண்டே இருந்தாள். நான் அவளை சமாதான படுத்த, அவள் என்னை கட்டி பிடித்து கொண்டாள். நான் அவளை ஆறுதல் சொல்லி சாப்பிட. வைத்து, தூங்க சொல்ல, நடு இரவில் ஏதோ கனவு கண்டு பயந்து எழுந்தாள். நானும் அவள் மனதை புரிந்து கொண்டு ஆறுதல் சொல்ல, அவள் பயத்துடன் என்னுடைய பெட்டில் என்னை கட்டி பிடித்து கொண்டு தூங்கினாள். 


அவளுடைய முகம் என் கழுத்தில் புதைந்து இருக்க, மித்ராவின் ஒரு கை என் இடுப்பை பற்றி இருக்க, ஒரு காலை என் மேல் போட்டுக் கொண்டு என்னை இறுக்க கட்டி இருந்தாள். நான் அவளை தட்டி விட்டுக் கொண்டே தூங்கிவிட்டேன். அடுத்த சில மாதங்கள் மித்ராவை நான் தனியாகவே விடவில்லை. ரோகித் என்னிடம் அடி வாங்கியதில் இருந்து அவனை யாரும் மதிப்பதில்லை. அவனுக்கு பயப்படவும் இல்லை. அதனால் அவனின் ஆட்டம் காலேஜில் குறைந்தது.



நான் மித்ரா. லிசி என்னை பற்றி நிறைய சொல்லி இருப்பாள். தெரியாத சில விஷயங்கள் நான் சொல்கிறேன். எனக்கு அம்மா மட்டும் தான், அப்பா என் சிறு வயதிலேயே இறந்து விட, என் அம்மா தான் என்னை கஷ்டப் பட்டு படிக்க வைத்தாள். நாங்கள் ஒரு கிராமத்தில் இருந்தோம். புருஷன் இல்லாத பெண்ணை சுற்றி எத்தனை கழுகள் சுற்றும் என்று எனக்கு தெரியும்.



எங்கள் வாழ்க்கையை கெடுக்க, எத்தனை பேர் காத்து இருந்தார்கள் என்று எனக்கு தெரியும். ஊரில் இருப்பவர்கள் மட்டுமில்லை, என் உறவில் இருந்த சில ஆண்களே எங்கள் வாழ்க்கையை கெடுக்க நினைத்தனர். அதனால் நான் ஆண்கள் யாரிடமும் பேசுவதில்லை. 

ஆண்கள் யாரும் நல்லவர்கள் இல்லை என்ற எண்ணம் என் மனதில் இருந்தது. எப்போதும் என் அம்மாவுடன் தான் இருப்பேன். என் அம்மா தான் எனக்கு உலகம். அவள் சொல்வது தான் எனக்கு வேதவாக்கு. என் அம்மாவுக்கு நான் எந்த ஒரு கெட்ட பெயரையும் ஏற்படுத்த விரும்பவில்லை. அதனால் எனக்கு நானே நிறைய கட்டுபாடுகளை வைத்து கொண்டேன்.

ஸ்கூல் படித்து முடித்து, நல்ல மார்க் வாங்கியதும், என்னுடைய டீச்சர் தான் பெங்களூரில் இருந்த காலேஜில் சேர்ந்தால் நல்ல எதிர்காலம் இருக்கும் என்று எனக்கு ஆலோசனை சொல்ல, என் அம்மாவும் எங்களுக்கு இருந்த நாலு ஏக்கர் காட்டை அடமானம் வைத்து என்னை சேர்த்து விட்டாள்.

முதல் முதலாக என் அம்மாவை விட்டு, வேறு ஒரு இடத்தில் இருக்க போகிறேன். இவ்வளவு பெரிய நகரத்தில் எனக்கு யாரையும் தெரியாது. என் அம்மாவும் என் உடன் இல்லை. வரும் நாட்களை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் ஹாஸ்டல் ரூமில் அழுது கொண்டு இருக்க, அப்போது வந்தாள் லிசி.


அவளை பார்க்கும் போது எனக்குள் ஒரு நிம்மதி வந்தது. இவள் தான் என் துணை என்று என் மனதில் தோன்ற, நான் அவளிடம் நட்பு வைத்து கொண்டேன். லிசி தான் என்னை இந்த காலேஜில் எல்லா இடங்களுக்கும் கூட்டி சென்றாள். நான் அவள் கையை பிடித்து கொண்டு தான் செல்வேன். 

அன்று ரோகித் என்னிடம் தவறாக நடக்கும் போது, லிசி எனக்காக அவனை எதிர்த்தாள். லிசி மேல் நான் வைத்து இருந்த அன்பு இன்னும் அதிகமானது. லிசி எனக்கானவள் என்று நினைத்தேன். லிசி வேறு யாருடனும் பேசினாலும் எனக்கு கோபம் வந்தது. 



லிசி என் கோபத்தை பார்த்து சிரிப்பாள். அவள் வாலிபால் விளையாடுவதை ரசிப்பேன். அவள் என்னை விட உயரம். அவள் உயரத்தில் சில மாணவர்களே எங்கள் காலேஜில் இருக்க, யாரும் அவளுக்கு புரொபோஸ் பண்ணவில்லை. அவளும் காதல் பற்றி அதிக அக்கறை கொள்ளவில்லை.

ரோகித் சம்பவத்திற்கு பிறகு, நான் லிசியுடன் தான் தூங்கினேன். லிசியை கட்டி பிடித்து கொண்டு தூங்குவது எனக்கு பிடித்து இருந்தது. அவள் மேல் இன்னும் நட்பு அதிகமானது. அந்த சமயத்தில் தான் செமஸ்டர் விடுமுறை வர,எல்லோரும் அவரவர் ஊருக்கு சென்றோம். நான் லிசியை பிரிந்த உணர்வை அன்று தான் உணர்ந்தேன். தினமும் மணிக்கணக்கில் போனில் பேசிக் கொண்டோம்.





விடுமுறை முடிந்து காலேஜ் போய் லிசியை எப்போது பார்ப்போம் என்று எனக்கு இருந்தது. என்ன தான் மணிக்கணக்கில் போனில் பேசினாலும் அவள் என்னருகில் இல்லாதது எனக்கு வெறுமையாக உணர்ந்தது. அன்று தான் நான் லிசியின் மேல் வைத்திருப்பது நட்பு மட்டும் அல்ல என்று உணர்ந்து கொண்டேன்.

அடுத்த வாரத்தில் ஒரு நாள் காலேஜ் திறக்க, இருவரும் ஹாஸ்டலில் சந்தித்தோம். நான் லிசியை பார்த்தவுடன், அவளை கட்டி பிடித்து அவள் இரு கன்னங்களிலும் முத்தமிட்டேன். பின் அவள் கண்களை பார்த்துக் கொண்டே இருக்க, அவளும் என்னை பார்த்துக் கொண்டு இருந்தாள். 

என்னடி மித்து, அப்படி பார்க்கிற... 

ரொம்ப நாள் கழிச்சு பாக்குறேன்ல... அதான்...

ஏண்டி, தினமும் வீடியோ கால் பண்ணி பார்த்துட்டு தானே இருந்த...



இருந்தாலும்... அது வீடியோ கால்...

அவள் என்னை பார்த்து சிரிக்க, நான் வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டேன். ஆனால் என் மனதில் உள்ள காதலை லிசியிடம் சொல்லி விட வேண்டும் என்று என் மனது துடித்தது. அடுத்த நாள் மாலை லிசி வாலிபால் விளையாட போக, நான் அவளை விட்டு விட்டு, ஹாஸ்டல் ரூமுக்கு வந்து, குளித்து விட்டு, சின்னதாக மேக்கப் செய்து கொண்டேன். இதுவரை நான் ஹாஸ்டலில் சேலை கட்டியது இல்லை. இந்த முறை வீட்டில் இருந்து லிசிக்கு பிடித்த கலரில் எடுத்து வந்து இருந்த சேலையை கட்டிக் கொண்டேன். எங்கள் ரூமில் மெழுகுவர்த்தி ஏத்தி சின்னதாக மூட் க்ரியேட் செய்து வைத்தேன்.

ஏழு மணி வாக்கில் லிசி வாலிபால் விளையாடி விட்டு, வியர்வையுடன் ரூமுக்கு வர, அவள் என்னை பார்த்து ஆச்சர்யப்பட்டாள். பின் லிசி குளித்து விட்டு, டீசர்ட், ட்ராக் பேண்ட் அணிந்து வர, நான் லிசியிடம் சென்றேன். லிசி என்னை பார்க்க, நான் அவள் அருகில் சென்று, கொஞ்சம் எட்டி அவள் முகம் அருகே என் முகத்தை கொண்டு சென்று மெல்லிய குரலில் சொன்னேன்.

லிசி... ஐ லவ் யூ...

என்னது...

ஐ லவ் யூ லிசி... நீ எனக்கு மட்டும் சொந்தமா இருக்கணும்... நான் உனக்கு மட்டும் தான்... ஐ லவ் யூ லிசி...

லிசி என்னை கட்டி பிடித்து கொண்டாள். நான் லிசியின் தோளை பிடித்து கொண்டு இருக்க, லிசி குனிந்து என் நெற்றியில் முத்தமிட்டாள். என் கண்கள், கன்னத்தில் முத்தமிட்டு, இறுதியில் என் கண்களை பார்த்துக் கொண்டே என் உதட்டில் முத்தமிட்டாள். அன்றிலிருந்து எங்கள் அன்பு இன்னும் அதிகமானது.



நான் லிசி. படிப்பு முடியும் வரை எங்கள் காதல் இன்னும் அதிகமானது. படிப்பு முடிந்து பெங்களூரிலேயே வேலையும் கிடைக்க, இருவரும் ஒரு அபார்ட்மென்ட் வாடகைக்கு எடுத்தோம். இருவருக்கும் ஒரே இடத்தில் வேலையும் கிடைத்தது.

நான் எங்கள் வீட்டில் மித்ராவின் மேல் இருந்த காதலை எப்படி சொல்வது என்று தயங்கிக் கொண்டு இருந்த வேளையில், மித்ரா தன் அம்மாவிடம் எங்கள் இருவரின் காதலை பற்றி சொல்லி, புரிய வைத்து அவளுடைய அம்மாவின் சம்மதத்தையும் பெற்றாள். நாங்கள் இருவரும் மித்ராவின் வீட்டிற்க்கு சென்று விட்டு வந்தோம். மித்ராவை நான் நன்றாக பார்த்துக் கொள்வேன் என்று அவள் அம்மாவிடம் சொன்னேன்.



நான் மித்ராவை காதலிக்க ஆரம்பித்ததும், அதிகமாக மாடர்ன் உடைகளை அணிய ஆரம்பித்தேன். அதுவும் மித்ராவின் விருப்பபடி. அவள் தான் எனக்கான உடைகளை செலக்ட் செய்ய ஆரம்பத்தாள். பெரும்பாலும் மாடர்ன் உடைகள் தான் எடுத்தாள். ஒருமுறை ஒயிட் கலர் சர்ட்டும், பேண்ட்டும் எடுத்தாள். என்னுடைய உயரத்திற்கும்,ஸ்லிம் பாடிக்கும் பேண்ட், சர்ட் சூட்டாக, மித்ரா இனிமேல் நான் பேண்ட் சர்ட் தான் அணிய வேண்டும் என்றாள். அதனால் பேண்ட் சர்ட் தான் அதிகமாக போட ஆரம்பித்தேன்.


நான் வேலை பார்க்கும் ஆபிஸில் நாங்கள் இருவரும்  காதலர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.  அதனால் ஆண்கள் யாரும் எங்களுக்கு புரொபோஸ் செய்யவில்லை. நானும் மித்ராவும் எங்களின் காதல் வாழ்க்கையை அனுபவித்தோம். மித்ரா என்னை அவளுடைய காதலனாகவே நினைத்தாள். என்னை உருகி உருகி காதலித்தாள். நானும் அவளை மிகவும் விரும்பினேன். ஆனால் அவள் எனக்கு கொடுப்பதை விட, நான் அவளுக்கு பெரிதாக எதுவும் கொடுத்தது இல்லை. அதனால் அவளுக்கு நான் ஒரு பெரிய சர்ப்ரைஸ் ஒன்றை கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். 






1 comment: