Sunday 27 November 2022

அம்மாவின் சிக்கனம் - முதலாம் பாகம்

 18 வயது சீமா தன் தலைமுடியை அதிகமாக நேசித்தாள். அவள் பார்க்க மிகவும் அழகாக இருந்தாள், அவளுடைய தலைமுடி நல்ல அடர்த்தியுடன் இடுப்பை தாண்டி வளர்ந்து இருந்தது. சீமாவின் அம்மா தோள்பட்டை வரை தலைமுடியை ட்ரிம் செய்வது மாதாந்திர வழக்கம், ஆனால் கடந்த சில மாதங்களாக அவள் செய்யவில்லை. பார்லர் போக நேரமில்லை என்பதும்... அடிக்கடி செலவு செய்வது சீமாவின் அம்மாவிற்கு பிடிக்காது என்பதும் ஒரு காரணம்.

சீமா அம்மாவிடம் சென்று, "அம்மா, எனக்கு டிரிம் பண்ண வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று மெதுவாகக் கேட்டாள். சீமாவின் அம்மா பதில் சொல்லவில்லை. 

 

சீமா, "அம்மா, நீங்கள் கூட உங்கள் முடியை வெட்ட  மறந்துவிட்டீர்கள், உங்கள் முடி கூட ரொம்பவே நீண்டு  வளர்ந்துள்ளது". என்றாள். 

 

சீமாவின் அம்மாவிற்கு 39 வயது.அவள் பெயர் தாரா. தாராவிற்கு நடு முதுகு வரை நல்ல அடர்த்தியான முடி கொண்ட ஒரு பெண். சீமாவின் அம்மா அவளை  நோக்கி திரும்பி சிரித்தாள்,

"எனக்கு ஞாபகம் இருக்கிறது, என் முடி இப்போது நீளமாக இருப்பது எனக்கு வயசாகி விட்டாது போல இருக்கு... ஆனால் உன் அப்பா உண்மையில் எனக்கு முடி இன்னும் நீளமாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். இருந்தாலும் பரவாயில்லை, நீ இன்று பீரியாக இருந்தால் என் முடியை ட்ரிம் செய்ய வேண்டும், இன்று மதிய உணவுக்குப் பிறகு பார்லர் போகலாம் " என்று அவள் அம்மா சொன்னாள். 

 

சீமா, "ஐயோ, அம்மா நீங்க உங்க முடிய இப்போ கட் பண்ண வேண்டாம், எனக்கும் உங்களுக்கு நீளமான முடி இருந்தால் பிடிக்கும்" என்று சொல்ல ... அவளுடைய அம்மா சிரித்தாள், "ஆனால் கொஞ்சம் டிரிம் செய்ய வேண்டும், நாம இன்னிக்கு மதியத்திற்கு மேல்  பார்லருக்குப் போகலாம்" என்றாள்.

 

சீமா மேலும் உற்சாகமாக, "அப்படியா?வேற ஹேர் ட்ரை ஸ்டைல் ​​பண்ணலாமா?" என்று கேட்க... சீமாவின் 

அம்மா "ஆமாம், உன் அப்பா உனக்கு மட்டும் முடி வெட்ட அனுமதி கொடுத்தார், ஆனால் நீ ரொம்ப மாடர்னாக மாற வேண்டாம்" என்று சொல்லி  சிரித்தாள்.

சில நிமிடங்களுக்குப் பிறகு அவர்கள் பார்லருக்குச் சென்றனர். வழியில், தாரா சீமாவிடம், என்ன ஸ்டைல் ​​உன் மனதில் இருக்கிறது? என்று கேட்க, அதற்கு சீமா "எனக்கு உறுதியாக தெரியவில்லை,?" அவளுடைய அம்மாவிற்கு பதிலளித்தாள், 

"பிக்சி அல்லது பாப் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்" என்று தாரா சொல்ல சீமா உற்சாகமடைந்தாள், "உண்மையா அம்மா? நீ உன் முடியை இவ்வளவு ஷார்ட்டாக வெட்டப் போறீயா?" என்று கேட்க, சீமா சொன்னதை கேட்டு தாரா திடுக்கிட்டாள், 

 

"இல்லை, நான் பார்லரில் ஹேர்கட் செய்யப் போவதில்லை, நான் உனக்கு பிக்சி அல்லது பாப் நன்றாக இருக்கும் என்று தான் சொன்னேன்"

 

அதற்கு சீமா, "ஆனால் அம்மா, நீ இப்போது மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது, உனக்கு வயதாகிறது, உன் தலைமுடி முன்னை போல நல்ல அடர்த்தியாக இல்லை" என்று சொன்னாள்.

 

அவள் அம்மா ஒப்புக்கொண்டு, “ஆமாம்...எனக்குத் தெரியும். நான் ஏற்கனவே கடந்த ஆண்டு நடுப்பகுதி வரை அதை வெட்டினேன். இல்லையா?" என்றாள்.

 

சீமா, “ஆமாம்... ஆனால் உனக்கு பாய் கட் மாதிரி ஏதாவது பண்ணலாம்” என்று தாராவை கேலி செய்ய, தாரா 

அதற்கு பதில் சொல்லவில்லை. பின்னல் போட்டு  இருந்த தலைமுடியைத்  மெதுவாக தொட்டு பார்த்து விட்டு, “அதை அப்புறம் பார்லரில் பார்க்கலாம்” என்றாள்.

 

இருவரும் பார்லர் சென்றனர். ஆனால் அங்கு கேட்ட தொகை மிக அதிகமாக தாராவுக்கு தோன்ற, அது மட்டுமில்லாமல், அப்பாயிண்ட்மெண்ட் புக் செய்து தான் வர வேண்டும் என்று சொல்ல, இருவரும் ஏமாற்றமும் வருத்தமுமாக வீட்டுக்குத் திரும்பி நடக்க ஆரம்பித்தார்கள்.

 

பார்லரில் முடி வெட்ட முடியாது என்று சீமாவுக்குத் தெரியும், அதுவும் விலை தெரிந்த பிறகு அவள் எதையும் விரும்பவில்லை. வரும் ஞாயிற்றுக்கிழமை அவளுக்கு அப்பாயின்ட்மென்ட் புக் செய்வதாகக் கூறி தாரா மழுப்பினாலும், சீமா அதை மறுத்துவிட்டாள்.

 

 

திடீரென்று சீமா, “அம்மா... பார்பர் ஷாப் போகலாமா” என்றாள்.

 

தாரா ஆச்சரியப்பட்டாள், “சலூன் கடையா? நீ சீரியஸாக தான் சொல்றியா சீமா?”

 

சீமா, “பார்பர் ஷாப் போய் அவங்களை வீட்டுக்கு கூப்பிடலாம். அவர்கள் மோசமானவர்கள் அல்ல” என்று சொன்னாள்.

 வீட்டிற்கு அழைக்கும் யோசனைக்கு தாரா ஒப்புக்கொண்டாள். தாரா அந்த கடையின் முன் இருந்த பிளக்ஸ் போர்டைப் படிக்கவில்லை என்றால் அது சலூன் கடை என்று அவளால் கண்டு பிடிக்க முடிந்து இருக்காது. ஏனென்றால் அந்த கடைக்கு கூரை இல்லை. ஒரு மரத்தில் தொங்கவிடப்பட்ட ஒரு கண்ணாடி, அதன் கீழ் ஒரு நாற்காலி வைக்கப்பட்டு இருக்க, அதன் மீது ஒரு நபர் உட்கார்ந்து செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தார்.


இருவரும் தன்னிடம் வருவதைக் கண்டு எழுந்து அவர்களை வரவேற்றார் பார்பர். சீமா, “எங்க வீட்டுக்கு வர முடியுமா? முடி வெட்ட வேண்டும்” என்று அவரிடம் கேட்க...

 

முடி திருத்துபவர் பணிவாக மறுத்து, “நான் எனது கடையில் மட்டுமே வேலை செய்கிறேன். உங்கள் இருவருக்கும்  நான் வேலை செய்வேன்... ஆனால் இங்கே மட்டும்” என்றார்.

 

சீமா சிரித்துக் கொண்டிருந்தாள். தாரா குறுக்கிட்டு, "இல்லை பரவாயில்லை... நாங்கள் வேறு இடம் பார்த்துக்கிறோம் " என்றாள்.

 

சீமா, “அம்மா...இங்கே நல்லா தானே இருக்கு. அது மட்டும்மில்லை...  இப்போது இங்கு யாரும் இல்லை. இங்கேயே  பண்ணலாம்" என்று சொல்ல,

 

தாராவின் முகம் சிவந்தது. அவள், “உனக்கு வேணும்னா வெட்டிக்கோ, ஆனால் நான் இங்கே என் முடியை வெட்ட மாட்டேன்" என்றாள்.

 

சீமா சிரித்துக்கொண்டே, "முடியாது, நீதான் முதலில் உன் முடியை வெட்ட வேண்டும்" என்று சொல்லி தாராவை மெதுவாக நாற்காலியில் தள்ளினாள். தாரா உடல் ரீதியாக எதிர்க்கவில்லை, ஆனால் அவளிடம் கோபமாக முகத்தை காட்டினாள். சீமா பார்பரிடம், “ஹ்ம்ம்...என் அம்மாவுக்கு ஒரு நல்ல ஷார்ட் பிக்சி கட் பண்ணு” என்று கட்டளையிடுவதை போல கத்தினாள்.

 

தாரா அவளுக்கு அடிபணிந்தாலும் எதிர்க்கவில்லை. பார்பர் அவளைச் சுற்றி ஒரு துணியைச் சுற்றியபோது அவள் பார்பருக்கு தன் பின்னலைத் தன் தலைக்கு மேலே உயர்த்தி வசதி செய்தாள்.

 

பிறகு பார்பர் இரண்டு கைகளாலும் பின்னலைப் பிடித்து லேசாக இழுத்து, “இதை நான் துண்டிக்கிறேன்” என்றான்.

 

தாரா பதில் சொல்லாமல் சிரித்தாள்.

 

பார்பர்  தனது பெட்டியிலிருந்து மிகப்பெரிய கத்தரிக்கோலை எடுத்து, பிளேடுகளுக்கு இடையில் பின்னலை செருகினார். சீமா கண்களை அங்கேயே நிலை கொண்டிருக்க, தாரா கண்களை மூடினாள்.

 

பார்பர் கத்திகளை அழுத்தி பிடித்து தாராவின் முடியை வெட்ட முயல, ஆனால் பின்னல் மிகவும் தடிமனாக இருந்தது. சில பின்னல்கள் மட்டும் வெட்டப்பட்டு பின்னல் தெளிவற்ற தோற்றத்தைக் கொடுத்தது.

 

பார்பர் சிரித்துக்கொண்டே, "இவ்வளவு நீளமான முடியை வெட்டி எனக்கு பழக்கமில்லை" என்று கூறிவிட்டு, ஒரு புதிய கத்திக்கோலை  எடுத்தார். இடது கையால் பின்னலைப் பிடித்துக் கொண்டு, முடியை புதிய கத்திக்கோலை வைத்து வெட்ட ஆரம்பித்தான்.

 

தாரா கண்களை மூடிக்கொண்டு இருந்தாள் ஆனால் அவள் தலைமுடி வெட்டப்படுவதை உணர்ந்தாள். சிறிது நொடிகளுக்கு பிறகு, தாராவின் அடர்த்தியான பின்னல் பார்பர் கையில் கொத்தாக இருந்தது. பின்னலை சீமாவிடம் கொடுத்து விட்டு, தாராவின் தலையில் சின்னதாக தொங்கிக் கொண்டு இருந்த முடியை விரிக்க ஆரம்பித்தான்.







2 comments: