Saturday 10 December 2022

பார்லர் மாற்றம் - முதலாம் பாகம்

நான் சிறிது நேரம் அந்த பெரிய மாலில் அர்த்தமில்லாமல் நடந்து கொண்டிருந்தேன். நான் அந்த பெரிய மாலுக்கு வந்து ஏறக்குறைய ஒரு மணி நேரம் ஆகியிருந்தது, ஆனால் நான் என்னுடைய இந்த முடிவுக்கு ஏற்றாற்போல என் மனதை உறுதி செய்து கொண்டேனா என்று எனக்குத் தெரியவில்லை. உண்மை என்னவென்றால், இந்த குறிப்பிட்ட பார்லருக்கு போகலாமா? வேண்டாமா?  என்று நான் குழம்பிக் கொண்டிருந்தேன். அந்த பார்லர் மாலின் அமைதியான  கார்னர் ஒன்றில் அமைந்திருந்தது, ஆனால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவாக இல்லை, எந்த நேரத்திலும் அந்த பார்லரில் ஹேர் ஸ்டைலிஸ்ட் பிசியாக இருப்பதை நான் அடிக்கடி கவனித்து இருக்கிறேன்.

நான் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என்னுடைய முடியை குறிப்பிட்ட அளவிற்கு மேல் வளர விடாமல் ஹேர் கட் செய்து வருகிறேன், மேலும் நீண்ட முடி உண்மையில் எனது அடையாளம் அல்ல என்று தோன்றியது. என்னுடைய முடி, நடு முதுகை தாண்டி ஒரு சில அங்குலம் மட்டுமே நீளமானது, ஆனால் அதை சரியாக பராமரிக்காததன் காரணமாக கிட்டத்தட்ட எனது கட்டுப்பாட்டை இழந்து விட்டது. சுருள் முடி என்பதால் சிக்கலும் வெடிப்புகளும் ஏராளமாக இருந்தன, மேலும் என் பாதிக்கப்பட்ட தலைமுடியுடன் அதிக நாட்கள் நான் வைத்திருக்க முடியாது என்று உணர்ந்தேன்.

 

நான் முதன் முதலில் இந்த முடிவுக்கு வந்த போது, நான் செய்த முதல் விஷயம் இணையத்தில் அதற்கான தீர்வை தேடியது தான். , இந்த பிரச்சனையை தீர்க்க எனக்காக, என்னை காப்பாற்றக்கூடிய ஒருவரைக் கண்டுபிடிப்பதுதான்.  அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பெண்களுக்கு என்று இருக்கும் பல ஹேர் ஸ்டைல் பற்றிய பதிவுகளை வழங்கிய ஒரு இணையதளம் இருந்தது, அதன் பெயர் வில்லேஜ் பார்பர் ஸ்டொரீஸ்.  அது அடிக்கடி இணையத்தில் என் கண்ணில் பட்டது.



 

பெரும்பாலும் ஹேர் ஸ்டைல் பற்றிய பதிவுகளே இருக்க, சில கதைகளும் அதில் இருந்தது. ஆனால் எனக்கு இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. எப்போதுமே இணையத்தில் பார்க்கும் படங்கள் நம் மனதில் அதிகமாக பதிந்துவிடும்.  அதனால் அந்த வெப்சைட்டில் பார்த்த ஒரு ஹேர் ஸ்டைல் நான் நிஜமாகவே எனக்கு முயற்சி செய்து பார்க்க விரும்பினேன்,

 

அதனால் தான், நான் பல முறை அந்த பார்லரை கடந்து சென்று கொண்டிருந்தேன், அங்கு என்ன நடக்கிறது என்பது பற்றிய தெளிவான பார்வை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்,  யாருக்காகவோ காத்திருப்பது போல நடந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் நான் அந்த பார்லரை கடந்து செல்கிறேன். நான் அவ்வாறு அந்த பார்லரை கடந்து செல்லும் போது என்னை மற்றவர்கள் கவனிக்காமல் இருக்க முயற்சிக்கிறேன், மேலும் அந்த பார்லரை சேர்ந்த யாரும் என்னை கவனிக்கவில்லை என்று நம்புகிறேன்.

அந்த பார்லர் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது., இரண்டு முடி வெட்டும் சேர்களுடன், பின்பக்கம் வரிசையாக சோபாக்கள், நான்கு பேர் காத்திருக்கும் அளவிலான இடம். ஒவ்வொரு சேர்களுடன் ஓரியண்டல் தோற்றமுடைய செவ்வகக் கண்ணாடி மற்றும் வட்டமான மேஜைகள் மற்றும் சிவப்பு ரிஷப்ஷன் கேபின் ஆகியவற்றின் கலவையாக இருந்தது. மொத்தம் ஐந்து சேர்கள் இருந்தன,  நான் கடைசியாக எட்டிப் பார்த்த போது இரண்டு சேர்களை வாடிக்கையாளர்கள் ஆக்கிரமித்திருக்க, இறுதியாக, ஒரு முதிர்ந்த தோற்றமுடைய பெண்மணி கடையின் நுழைவாயிலுக்கு அருகில் அமர்ந்திருக்க, நான் அந்த பார்லரை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன். 

பல பார்வைகளுக்குப் பிறகு, மேலும் காத்திருப்பது சரியில்லை என்று முடிவு செய்தேன். நான்அந்த பார்லருக்கு போக போகிறேன், மேலும் எனக்கான சிறந்த ஒரு ஹேர் கட்டை எதிர்பார்த்துபோக போகிறேன், எல்லாவற்றிற்கும் மேலாக, நான் கவனித்த வரையில் வாடிக்கையாளர்கள் ஏராளமாக இருப்பதால், இது என்னுடைய தவறான முடிவாக இருக்க வாய்ப்பில்லை. நான் ஒரு ஆழமாக மூச்சை இழுத்து என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு , கவுண்டரை நோக்கி நடந்தேன். எதிர்பார்த்தபடி, கவுண்டருக்குப் பின்னால் இருந்த பெண்மணி என்னை வரவேற்றார்.

 அந்த பெண்மணி ‘உங்களுக்கு அப்பாயின்ட்மென்ட் இருக்கிறதா?’ என்று கேட்டாள். நான் இல்லை என்று பதிலளித்தேன், இருந்தாலும் அவள் முகத்தில் புன்னகை மாறவில்லை. ஏனெனில் ஒரு பெரிய நகரத்தில் உள்ள பெரிய பார்லர் ஒரு வாக்-இன் வாடிக்கையாளரை இழக்க விரும்புவதில்லை. காலியாக உள்ள சேர் ஒன்றிற்கு என்னை அழைத்துச் சென்று, விரைவில் எனக்கு வேலை செய்ய ஒரு ஸ்டைலிஸ்ட் வருவார் என்று எனக்கு சொன்னாள் அந்த பெண்மணி.

 

நான் காத்திருக்கும் போது, ​​அவள் எனக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுத்துவிட்டு, படிக்க சில ஆல்பம் கொடுத்தாள்,  நான் சில நிமிடங்கள் அதிலிருந்த ஹேர் ஸ்டைல்களை  பார்ப்பதில் மிகவும் மூழ்கியிருந்தேன். என்னை தவிர மீதமுள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆண்கள் என்பதை நான் உட்கார்ந்த பிறகுதான் கவனித்தேன். இது முழு சுற்றுப்புறத்தையும் தனிப்பட்ட முறையில் கொஞ்சம் சங்கடமாக்கியது, ஆனால் ஒரு இளைஞன் திடீரென்று என் பின்னால் வந்து என் தலைமுடியை தொட்டு பார்க்க என்னுடைய அசவுகரியம் விரைவில் கலைக்கப்பட்டது.

 

 

ஸ்டைலிஸ்ட் என்னிடம் என் முடியை தண்ணீரில் நனைத்து ஷாம்பு போட்டு அலச வேண்டும் என்று சொல்ல நான் அதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் அது தான் சரியான முறை என்று என்னிடம் விளக்கமாக கூறவும், என்னால் மறுக்க முடியவில்லை. பின்னர் என் தலைமுடி முழுவதும் ஈரமாகவும் சுத்தமாகவும் இருக்க என்னை வாஷிங் பேசினுக்கு அழைத்துச் சென்றார். எனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் அவர் முறையாக, சரியாக தனது வேலையை செய்தார்,

 

நான் சலூன் நாற்காலியில் திரும்பி உட்கார்ந்தேன், அவர் ஒரு வெள்ளை ஹேர் டிரஸ்ஸிங் கேப்பை வெளியே எடுத்து, அதை என் மேல் போர்த்தி, அதை என் கழுத்தில் இறுக்கமாக கட்டினார். அப்போது, ​​அவர் ஸ்டைலிஸ்ட்களில் ஒருவரைப் பார்த்தார், அடர் சிவப்பு நிற பிளேஸர் மற்றும் ஒல்லியான ஜீன்ஸ் அணிந்த ஒரு பெண், இப்போது முன் வந்து நின்றாள். என் கழுத்தில் ஹேர்கட்டிங் காலரை போட வேண்டுமா என்று கேட்க... அவள் இல்லை என்று சாதாரணமாகப் பதிலளித்தாள்,

 

இப்போது ஒல்லியான பெண்,என்னிடம் வந்து, புன்னகையுடன் இன்று நான் உங்களுக்கு எப்படி உதவுவது?’ என்று கேட்டாள். நான் ஒரு புதிய ஸ்டைலிஸ்ட்க்கு மாறும்போது நான் பொதுவாக கொஞ்சம் வெட்கப்படுவேன், ஆனால் அவளுடைய இனிமையான புன்னகை எப்படியோ சில நொடிகளில் என் மனதில் இருந்த கூச்சம் அனைத்தையும் கலைத்தது. நான் உடனடியாக அவளிடம் பதிலளித்தேன். ‘எனது முடிகள் அனைத்தும் மிகவும் உடைந்து, பொலிவற்று இருக்கிறது.  எனக்கு ஏற்ற ஒரு நல்ல ஹேர் ஸ்டைல்  நீங்கள் பண்ண வேண்டும் என்று சொல்ல, புரிந்துகொண்ட அவள், அவளது பையில் இருந்து சீப்பைப் பயன்படுத்தி எனது தற்போதைய முடியின் அமைப்பையும் நீளத்தையும் ஆராய்ந்தாள்.


 

‘உங்களுக்கு இயற்கையிலேயே சுருள் முடி இருக்கிறது, அது அதிகமாக வளர்ந்தால்... பக்கமும் பின்புறமும் ஒட்டிக்கொள்ளும். அதனால் நான் இரு பக்கவாட்டு மற்றும் பின்புறத்தில் உள்ள முடியை  ஸ்கின் பேட்  ஸ்டைலிங் செய்ய முடியும், ஆனால் மேல் பகுதியை நீளமாக விட வேண்டும்.., அதனால் ஸ்டைலிங் செய்வதில் நீங்கள் புதிய தோற்றத்தை பெறலாம் என்று சொன்னாள்.

ஆனால் நான் சிறிது நீளம் இருக்குமாறு வேண்டும்என்று எதிர்பார்த்தேன், ஆனால் என் சைடு மற்றும் பின்புறம் உள்ள முடிகள் மொத்தமாக இழப்பதை பற்றி ஒருபோதும் நினைத்து பார்க்கவில்லை. என் உச்சந்தலையின் ஒரு பகுதி முடியை மட்டும் வெளிப்படுத்துவைத்து சரியாக இருக்குமா எனக்கு அவ்வளவு உறுதியாக தெரியவில்லை, ஆனால் அவள் மிகவும் விளக்கமாக சொன்னதும், நான் அவள் சொல்வதை கேட்பது என்று முடிவு செய்தென். நான் அவளுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்து, அவளுடைய ஆலோசனைக்கு உட்பட்டேன்.

===================================================================

 நண்பர்களே... வழக்கம் போல கொஞ்சம் வேலை அதிகம் ஆகிவிட்டது. அது மட்டுமில்லாமல் சில குடும்ப விழாக்களும் தொடர்ச்சியாக வர கதை எழுத நேரம் கிடைக்கவில்லை. இதன் அடுத்த பாகம் விரைவில் கொடுக்க முயற்சி செய்கிறேன். அடுத்து நம்முடைய கதைகளை YouTube ல் வீடியோவாகவும் பார்க்கலாம்.




No comments:

Post a Comment