Thursday 2 July 2020

சலூன், பார்லரில் என்ன கவனிக்க வேண்டும்?


நம் வாழ்க்கையை புரட்டி போட்டு இருக்கிறது கொரோனா வைரஸ். அன்றாடம் வரும் செய்தியால் உலகமே விதமான பீதியில் இருக்கிரது. இந்தியாவில் ஐந்து கட்டமாக பல கட்டுப்பாடுகளுடன் லாக் நடந்து, தற்போது பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் மட்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடு இருக்கிறது.



என்னதான் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு பல நோய் தடுப்பு முறைகளையும்,  சிகிச்சைகளையும் கொடுத்தாலும் கொரோனாவை பொறுத்தவரை வரும் முன் காப்பதே சிறந்தது. அமெரிக்காவில் கொரானா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அதற்க்கு அங்கு மக்கள் சலூனில் சுகாதாரத்தை கடைபிடிக்காததே முக்கிய காரணம் என அங்கு இருந்து வரும் செய்திகள் மூலம் அறிந்து கொள்ளலாம். அதனால் நாமும் பல நாட்கள் சலூன் போகாமல் தவிர்க்க முடியாது. அப்படி சலூன் போகும் நேரத்தில் சில விஷயங்களில் நீங்கள் முன் எச்சரிக்கையாக இருந்து உங்களை கொரோனாவில் இருந்து காத்துக் கொள்ளலாம்.




1) நீங்கள் சலூன் போகும் பொது கண்டிப்பாக மாஸ்க், கைகளுக்கு கிளவுஸ் அணிந்து செல்லவும். முடிந்தால் உங்களுக்கு என்று தனியாக ரேசர், கத்தரி  மற்றும் பிளேடு வாங்கி கொள்ளுங்கள். ஹேர் டை அடிப்பவர் என்றால் அதையும் இன்னும் சில மாதங்களுக்கு நீங்களே வாங்கி சென்றுவிடுங்கள்.

2) முக்கியமாக சலூனில் தான் ஆழ்ந்து நியூஸ் பேப்பர் படிப்பார்கள். அதை முடிந்தவரை படிக்காமல் தவிர்க்கலாம். அல்லது உங்கள் மேல் படாமல் வைத்து படிக்கலாம்.

3)குழந்தைகளை கூட்டி செல்பவர்கள் முடி வெட்டும் நேரத்தில் மட்டும் சலூனுக்குள் கூட்டி செல்லலாம். சலூனில் சிறுவர் சிறுமியர்களை முடிந்தவரை குறைவான நேரம் மட்டுமே அனுமதிக்கலாம். அல்லது நீங்கள் உங்கள் கை வண்ணத்தை அவர்களுக்கு காண்பிக்கலாம்.


4)பார்லர்கள் முறையாக சானிடைசர் செய்து உள்ளார்களா என்று கவனியுங்கள்.

5)பார்லரில் நுழையும் போதே, கைகளுக்கு கிளவுஸ், மற்றும் மாஸ்க் கொடுக்கப்பட வேண்டும்.

6)டிஸ்போஸபிள் எப்ரான்களை பயன்படுத்துங்கள்.

7)அப்பாயின்மென்ட் வாங்கி கொண்டு அந்த நேரத்திற்கு சரியாக சென்று விடலாம்.




8)மீசை, தாடியை ட்ரிம் செய்யும் போது பியூட்டிஷியன் உங்கள் முகத்தின் அருகில் இருந்து கொஞ்சம் தள்ளி நின்று செய்ய சொல்லுங்கள்.

9)கத்தரி, ரேசர் போன்ற உபகரணங்கள் முறையாக சானிடைசர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டு உள்ளதா என்று கவனித்து கொள்ளுங்கள்.



10) முக்கியமாக ஒரு முறை சலூனுக்கு சென்றால், உங்களுக்கு தேவையான அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு வாருங்கள். கட்டிங் ஒரு முறை, ஷேவிங் ஒரு முறை என்று செல்லாமல் ஒரு முறை சென்றால் எல்லாமும் ஒரே நேரத்தில் செய்து விட்டு, வேறு எங்கும் செல்லாமல் நேராக வீட்டுக்கு சென்று குளித்து விட்டு மற்ற வேலைகளை பார்க்கவும். இதனால் உங்களுக்கு தொற்று பரவாமல் உங்களை கொரோனாவில் இருந்து காத்துக் கொள்ள முடியும்.







1 comment: