Tuesday 1 June 2021

அன்புக்கு அபிதா - முதலாம் பாகம்

 

"மிக்க நன்றி நண்பா உங்களின் இந்த பதிவுக்கு உங்களின் இந்த பதிவை படித்தவுடன் எனக்கு சிறிது நம்பிக்கை வந்தது என்னால் முடியாத காரியம் உங்களால் முடியும் என்று ஆகையால் எனது கதையின் சிறு கருவை மட்டும் உங்களிடம் கூறுகிறேன் என்னுடைய இந்தக் கதை ஒரு காதல் கதை சாபம் பெற்ற குடும்பத்திலிருந்து வரக்கூடிய ஒரு பையனுக்கும் கல்லூரியில் படிக்கும் கூந்தல் அழகி பட்டம் பெற்ற பெண்ணுக்கும் நடக்கக்கூடிய காதல் கதையாகும் இது ஒரு பெண் தன் காதலுக்காக வாழ்நாள் முழுவதும் எதையெல்லாம் விட்டுக் கொடுப்பாள் என்று சொல்லக்கூடிய கதையாக இருக்கும் பின்குறிப்பு நண்பா நீங்கள் எனது இந்த கதையை ஒரு பதிவாக போட்டாலும் சரி அல்லது பல பதிவுகளாக பிடித்து போட்டாலும் சரி அது எனக்கு சந்தோஷமே நீங்கள் போடுவீர்கள் என்று நம்புகிறேன்"
நம் நண்பர் ரசிகனின் கருத்துக்காக இந்தக் கதை...



அபிதா அந்தக் காலேஜின் கனவுக்கன்னி. 20 வயது இளம் மொட்டு. ஆனால் அவள் கண்களில் கொஞ்சம் திமிர் தெரியும். உடலமைப்போ ஐயர் பெண்ணைப் போல. ஆனால் அவள் ஐயர் பெண் அல்ல. ஒரு பெரிய நகைக் கடை ஓனரின் மகள். அவளின் தாத்தா காஞ்சிபுரம் பக்கத்தில் நகை செய்யும் தொழிலில் புகழ்பெற்றவர். 



இப்போது அபிதாவின் அப்பா சென்னையில் பெரிய நகை கடைகள் மூன்று வைத்து இருக்கிறார். நீங்கள் கூட அந்தக் கடை விளம்பரங்களைப் பார்த்து இருக்கலாம். அவ்வளவு பெரிய கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த அபிதாவுக்கு இயல்பிலேயே கொஞ்சம் திமிர் ஜாஸ்தி. தன் அழகை நினைத்துப் பெருமைபடுபவள். அதைவிட அதைப் பராமரிப்பதில் அதிக கவனம் எடுத்துக் கொள்வாள். அதற்காகவே ஒரு பியூட்டிஷியனிடம் காண்ட்ராக்ட் போட்டு வைத்து இருக்கிறாள்.

என்ன தான் பார்லரில் தன்னை அழகுபடுத்திக் கொண்டாலும், தன்னுடைய நீளமான முடியை எப்போதும் ஷார்ட்டாக வெட்டியதில்லை அபிதா. ஜஸ்ட் ட்ரிம் மட்டும் தான் செய்வாள். மாடர்ன் ட்ரெஸ் அத்தனையும் அவளுக்குப் பொருத்தமாக இருந்தாலும், அவளுடைய நீளமான முடி சில சமயங்களில் அவள் அணியும் ஆடைக்குப் பொருத்தமாக இருக்காது. இருந்தாலும் அபிதா அதைக் கண்டு கொள்வதில்லை.

காலேஜிக்கு காரில் தான் வருவாள். காலையில் ட்ரைவர் ட்ராப் செய்து விட்டு, மாலை வந்து பிக்கப் செய்து கொள்வான். உடன் படிக்கும் எவருடனும் அதிகம் பேசமாட்டாள். காலேஜில் தோழிகளும் இல்லை. அபிதா சிறு வயதில் இருந்தே இப்படி தான். தன் வீட்டில் வேலை செய்யும் ஆட்களிடம் கூட மரியாதையாகப் பேசமாட்டாள். அவளுடைய பெற்றோரும் அவளை ஒரு இளவரசியை போல நடத்தினார்கள்.காலேஜிலும் அப்படியே நடந்து கொண்டாள் அபிதா. 
 
அபிதாவின் அழகுக்காக அவள் பின்னால் சுற்றும் வாலிபர்கள் ஏராளம். காலேஜிலேயே அவள் பின்னால் சுற்றாத, அவளிடம் வழியாத பசங்களே இல்லை. காலேஜில் படிக்கும் எல்லோருமே பணக்கார வீட்டு பசங்க தான். ஆனால் ஜெகன் மட்டும் நல்ல மார்க் வாங்கியதால் அந்தப் பெரிய காலேஜில் சீட் கிடைத்து வந்தவன். அவன் சொந்த ஊர் கோவை பக்கதில் ஒரு சின்னக் கிராமம். அம்மா மட்டும் தான். அப்பா ஜெகனின் சிறு வயதிலேயே இறந்துவிட்டார்.


அம்மா அனுப்பும் பணத்திலும், காலேஜ் முடிந்து ரோட்டோர பாஸ்புட் கடையில் வேலை செய்து கொண்டே படித்து வந்தான். காலேஜில் நல்லா படிக்கும் மாணவனும் கூட. முதல் நாளே அபிதாவின் அழகில் மயங்கி விட்டான் ஜெகன். ஆனால் அவனுக்கு நிதர்சனம் புரிய, அபிதாவின் அழகுக்கும், வசதிக்கும் தான் சரியானவன் அல்ல என்று புரிந்து கொண்டு படிப்பில் கவனம் செலுத்தினான் ஜெகன்.

ஆனால் அபிதாவை எங்குப் பார்த்தாலும் அவள் அழகை ரசிப்பதை நிறுத்தவில்லை. அபிதாவின் அழகான முகம், அவளின் சிரிப்பு, நீண்ட அடர்த்தியான முடி, எல்லாவற்றையும் விட அபிதாவின் திமிரும் பிடிக்க ஆரம்பித்தது ஜெகனுக்கு. ஆனால் ஜெகனை மதிக்கக்கூட மாட்டாள் அபிதா. 



ஒரு நாள் காலை வழக்கம்போலக் காலேஜில் ட்ரைவர் அவளை ட்ராப் செய்து விட்டுப் போய்விட, அவள் தன் கிளாஸ் ரூமுக்கு வந்தாள். அப்போது ஜெகனும் வந்து கொண்டு இருந்தான். பின்னால் வரும் ஜெகனை முறைத்துக் கொண்டே சென்றாள் அபிதா. கிளாஸில் செமஸ்டர் பீஸ் கட்ட அன்று தான் கடைசி நாள். எல்லோரும் பணம் கட்ட, அபிதா தன்னுடைய பேக்கை எடுத்துப் பர்ஸை தேட அதில் அவளுடைய பர்ஸ் இல்லை. உடனே பதட்டமடைந்த அபிதா தன் பேக்கை முழுமையாகச் செக் பண்ணியும் பர்ஸ் கிடைக்கவில்லை. 

அபிதா தன்னுடைய பர்ஸை யாரோ திருடிவிட்டார்கள் என்று சந்தேகம் வர, யாராக இருக்கும் என்று யோசித்தாள். அப்போது எல்லோரும் பணம் எண்ணிக் கொண்டு இருக்க, ஜெகனிடம் மட்டும் 2000 ரூபாய் நோட்டு இருக்க, மற்ற எல்லோரும் 500 ரூபாய் நோட்டை வைத்து இருந்தார்கள். அபிதாவின் அப்பா அவளுக்கு எப்போதும் 2000 ரூபாய் நோட்டை தான் தருவார். அதனால் ஜெகன் தான் தன்னுடைய பர்ஸை திருடிவிட்டான் என்று நினைத்தாள்.


அவனை எல்லோர் முன்பும் சட்டையைப் பிடித்துக் கன்னத்தில் அறைந்தால் அபிதா. ஜெகனுக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் அவளைத் தடுக்க, அதற்குள் நான்கைந்து அறை கன்னத்தில் கொடுத்து விட்டாள் அபிதா. உடன் இருந்தவர்கள் அவளைப் பிடித்து விலக்கிவிட்டனர்.

நாயே... என்ன தைரியம் இருந்தா என்னோட பர்ஸை திருடி இருப்ப?

என்ன சொல்ற அபிதா? நா உன்னோட பர்ஸை திருடினேனா?

ஆமாடா நாயே... சும்மா நடிக்காதே... பீஸ் கட்ட பணமில்லன்னு கேட்டு இருந்தா நானே கொடுத்துருப்பேன். உன்னை மாதிரி சோத்துக்கு வழி இல்லாதவன இந்த மாதிரி காலேஜ்ல சேர்த்தா இப்படித்தான் நடக்கும்.

அபிதா ப்ளீஸ் புரிஞ்சிகோங்க... நான் உங்க பணத்தை திருடல, இது நான் பார்ட் டைம் வேலை செஞ்சி சம்பாதிச்ச பணம்... என் அம்மா ஊர்ல இருந்து அனுப்பிய பணம் எல்லாம் சேர்ந்து தானிருக்கு...

ஜெகன் என்ன சொல்லியும் அவனை யாரும் நம்பவில்லை. அபிதா HOD யிடம் புகார் செய்ய, பிரச்சனை பெரிதாக, அபிதா காலேஜிலிருந்து  தன் அப்பாவுக்குப் போன் செய்து தான் வைத்து இருந்த நோட்டுகள் அனைத்தும் 2000 ரூபாய் நோட்டு தான் என்று ப்ரூப் பண்ண, ஜெகனால் அப்போது எதுவும் செய்ய முடியவில்லை. அதன் பின் ஜெகனிடம் இருந்த பணத்தை வாங்கி அபிதாவுக்கு பீஸ் கட்டி விட்டு, ஜெகன் நன்றாகப் படிக்கும் மாணவன் என்பதால் அவனை மன்னித்துச் சில நாட்கள் டைமும் கொடுத்தனர். 

ஆனால் ஜெகனை யாருமே நம்பவில்லை. அவன் அபிதாவின் பணத்தை திருடிவிட்டான் என்றே நினைத்தார்கள். அவனுடன் யாரும் பேசவும் இல்லை. அடுத்த சில நாட்கள் அப்படியே செல்ல, அபிதா காலேஜிக்கு காரில் வந்து கொண்டு இருக்க, காதில் ஹெட்போன் போட்டுப் பாட்டு கேட்டுக் கொண்டு வந்தாள்.


காலேஜ் வந்ததும் அபிதா காரிலிருந்து இறங்க, அப்போது அபிதாவின் ஹைஹீல்ஸ் செருப்பு காருக்குள் எதிலோ மாட்டிவிட, தடுமாறி காரின் டோரை பிடித்துக் கொண்டு நின்றாள். செருப்பில் மாட்டியது என்ன என்று காருக்குள் ட்ரைவர் பார்க்க, அது அபிதாவின் தொலைந்து போன பர்ஸின் வார் தான். அதைப் பிடித்து இழுத்து ட்ரைவர் அந்தப் பர்ஸை எடுத்துக் கொடுக்க, அபிதா அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள்.

அபிதா ஜெகன் திருடிவிட்டதாக நினைத்த பர்ஸ் அபிதாவின் காருக்குள் விழுந்து கிடக்க, அபிதா ஜெகனை அவசரப்பட்டு அடித்து அவமானப்படுத்திவிட்டாள். அபிதா பர்ஸை திறந்து பார்க்க, அதில் அவளுடைய பணமும் அப்படியே இருந்தது.

என்ன செய்யப் போகிறாள் அபிதா? தவறை ஒப்புக் கொள்வளா? அல்லது யாருக்கும் தெரியாமல் மறைத்து விடுவாளா?




3 comments:

  1. மிக மிக மிக நன்றி நண்பா நான் நினைத்ததுபோலவே நீங்கள் உருவாக்கிய இந்த கதை மிக அழகாக வந்திருக்கிறது எனது எண்ணம் போலவே வந்து இருக்கிறது இதற்கு நான் உங்களுக்கு கோடான கோடி நன்றி சொல்கிறேன் அதேபோல் உங்களின் மற்ற கதைகளும் மிக அற்புதமாக உள்ளது

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கள் என்னை மேலும் மேலும் எழுத தூண்டுகிறது. இந்த கதை ஆறு பாகம் எழுதி முடித்து விட்டேன். அப்டேட் வந்து கொண்டே இருக்கும். நன்றி!

      Delete
  2. Super bro. Waiting for next part

    ReplyDelete