Monday 5 July 2021

ஆண்கள் தங்கள் நெஞ்சில் உள்ள முடியை எடுக்க காரணம் என்ன?


பெண்ணுக்கு அழகு நீளமான, அடர்த்தியான முடி. அதுபோல ஆண்களுக்கும் கம்பீரத்தை தருவது முடி தான் என்றால் ஒத்துக் கொள்வீர்களா? ஆம் உண்மை அது தான்.



நல்ல அடர்த்தியான மீசை இருந்தால் தான் அவன் ஆண் பிள்ளை என்று இருந்தது ஒரு காலம். ஆனால் இப்போது நாட்டில் உள்ள பல பேர் ஹிந்தி நடிகர்போல மீசையை மழித்து மொழு மொழு முகத்துடன் இருக்கிறார்கள்.  அந்த அளவுக்கு மீசை இல்லாமல் இருப்பது ஒரு பேஷனாகி விட்டது. 






ஆனால் எந்த ஒரு ஆணும் தன் நெஞ்சில் உள்ள முடியை எடுக்கமாட்டார்கள். நெஞ்சில் உள்ள முடியை எடுக்கும் ஆண்களை அவன் பெண்மை தன்மை உடையவன் என்று கேலி செய்வார்கள். 

இப்போது அதுவும் பேஷன் ஆகிவிட்டது. சல்மான்கான், சூர்யா போலச் சில நடிகர்கள் தங்கள் உடல் பலத்தை காண்பிக்க, தங்கள் முடியை நீக்கி விடுகிறார்கள். நடிகர்கள், மாடலிங் உலகை சேர்ந்த ஆண்கள் தங்கள் உடல் அழகை காட்டிக் கொள்வதற்காக அப்படி தங்கள் முடியை நீக்கி விடுகிறார்கள். 

அவர்கள் கோடிகளில் சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். சில ஆண்கள் ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்து இருப்பார்கள்.

நாம் இவ்வளவு பயிற்சி செய்து உடலை வைத்து இருந்தால், இந்த முடி நெஞ்சில் அதிகமாக வளர்ந்து அதை மறைக்கிறது என்று கவலைப்பட்டு முடியை மழித்து விடுகிறார்கள்.

சிலருக்கு உடலில் இருதய அறுவை சிகிச்சை, அல்லது மற்ற அறுவை சிகிச்சைக்காக ஆபரேஷன் செய்யும் முன் நெஞ்சில் அல்லது உடலில் மேற்புறத்தில் உள்ள முடி அனைத்தும் எடுத்து விடுவார்கள். ஒரு முறை எடுத்து விட்டால் மீண்டும் அடர்த்தியாக அந்த பகுதியில் முடி வளரும். 

அப்படி வளரும் முடி அசிங்கமாக, முள், முள்ளாக இருக்கிறது என்று தொடர்ந்து நீக்கி விடுகிறார்கள்.


தன்‌ துணையின் விருப்பத்திற்கு ஏற்ப இன்றைய நவ நாகரீக ஆண்கள் தங்கள் முடியை எடுக்கிறார்கள். நீங்கள் நெஞ்சில் உள்ள முடியை எடுத்து இருந்தால் ஒரு பொதுவான இடத்தில்‌ பத்து பேர் முன்னிலையில் நீங்கள் சட்டையைக் கழட்டினால் அனைவரின் பார்வையும் உங்கள்மேல் தான் இருக்கும்.


மொத்ததில் உடலில் உள்ள ரோமத்தை நீக்குவது அவரவர் தனிப்பட்ட விருப்பம். இருந்தாலும் பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் அடர்த்தியான முடி தான் அழகு. கம்பீரம் எல்லாமே...

எதற்காக இந்த கதை என்று எனக்கே தெரியவில்லை. நான் சொல்ல நினைத்ததும் வார்த்தைகளில் வரவில்லை... அடுத்து கொரோனா வைரஸ் கதையின் மூன்றாம் பாகம் வெளிவரும். காத்திருங்கள்.





No comments:

Post a Comment