Saturday 24 July 2021

என் முடி என் உரிமை! - இரண்டாம் பாகம்

 இப்போ வாணிக்கு என்ன பண்றதுன்னு தெரியல? வேற ஒரு லேடீஸ் பியூட்டி பார்லர் போகணும்னா ரொம்ப தூரம் போகணும், வண்டியும் எடுத்து வரல, சோ என்ன பண்றதுன்னு யோசிச்சா வாணி... இன்னிக்கு வேலை முடிஞ்சு பிரகாஷ் வீட்டுக்கு வரதுக்குள்ள எப்படியாவது தன்னோட நீளமான முடியை வெட்டியே ஆகணும்னு நினைச்சா வாணி.

வேற வழி இல்லைன்னு பக்கத்துல இருக்க சலூனுக்கு போக, அங்க கடைல ரெண்டு பேர் உட்கார்ந்து நாட்டு நடப்பைப் பேசிட்டு இருக்க, வாணி உள்ள போக, அவளைப் பார்த்து ஒருவன் மட்டும் எழுந்து நிற்க, 

என்னங்க லேடீஸ்க்கு முடி வெட்ட முடியுமா?




இல்ல மேடம், இது ஆம்பளைகளுக்கான கடை... அது இல்லாம எனக்கு உங்களுக்கு ஹேர் கட் பண்ண தெரியாது மேடம் என்று சொல்ல, வாணி எதுவும் பேசாமல் கோபமாக வந்தாள்.

பின் கடைக்குச் சில அடிகள் தள்ளி வந்து நின்று கொண்டு என்ன செய்து தன்னுடைய முடியை வெட்டுவது என்று யோசித்தாள் வாணி. 


அப்போ தான் பியூட்டிஷியன் பார்கவி சொன்னது நினைவு வந்தது. பேஷன், அழகு என்பது எல்லாம் நாமே கிரியேட் பண்றது தான்... என்னோட அழகு வெறும் முடி மட்டும் தானா? என்று நினைத்த வாணி, ஏதோ ஒரு முடிவு எடுத்தவள் போல வேகமாக மீண்டும் சலூனுக்கு போனாள்.

இப்போ சலூனில் பார்பர் ஒரு ஆணுக்கு முகச்சவரம் செய்து கொண்டு இருக்க, மீண்டும் சலூனுக்குள் கோபமாக வரும் வாணியை பார்த்துப் பயந்தான் பார்பர்.

அட்லீஸ்ட் மொட்டையாவது அடிக்க முடியுமா? என்று வாணி கேட்க, அந்த பார்பர் ஷாக் ஆகி என்ன மேடம் சொல்றீங்க? இவ்ளோ நீளமான முடியை நீங்க எதுக்காக மொட்டை அடிக்கணும்? 

அதெல்லாம் உனக்கு எதுக்கு? மொட்டை அடிக்க முடியுமா? முடியாதா? 

நான் இதுவரைக்கும் சின்னப் பசங்க, ஆம்பளைகளுக்கு தான் மொட்டை அடிச்சு இருக்கேன்... பொம்பளைகளுக்கு மொட்டை அடிச்சது இல்ல, எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை, உங்களுக்குப் பரவாயில்லைன்னா என்று பார்பர் இழுக்க, 

சரி பரவாயில்லை... எனக்கு மொட்டை அடின்னு சொன்னா வாணி...

சரி மேடம், இந்த ஒரு ஷேவிங் மட்டும் முடிச்சிடறேன்... கொஞ்சம் ஒரு பத்து நிமிஷம் மட்டும் வெயிட் பண்ணுங்க? என்று பார்பர் சொல்ல, வாணி எதுவும் சொல்லாமல் பின்னால் இருந்த ஒரு நீளமான மர பெஞ்சில் பொய் உட்கார்ந்தாள்.


வாணி பிரகாஷ் மேல் உள்ள கோபத்தில் தான் ஆத்திரப்பட்டுச் செய்வது சரியா என்று நினைக்க, இன்னொரு மனம் காலேஜில் இவளோடு வேலை செய்யும் இன்னொரு பெண்ணுக்கும் இவள் வயது தான், வாணியை விட நல்ல அழகி... அவளே மொட்டை அடிச்சுட்டு அந்த மொட்டையை ஸ்கார்ப், கேப் போட்டு மறைக்காமல் வரும்போது தனக்கு என்ன என்று முடிவு செய்தாள் வாணி.




யாரவது தன்னிடம் கேட்டால் வேண்டுதல் மொட்டை என்று சொல்லிக் கொள்ளலாம் என்றும், பிரகாஷ் தான் ரொம்பவே கோபப்படுவான், அவனை எப்படியாவது சமாளித்து கொள்ளலாம் என்றும் நினைத்தாள் வாணி. வாணி யோசித்துக் கொண்டு இருக்க, அப்போது மேலும் இரு ஆண்கள் சலூனுக்கு வர, அங்கு உட்கார்ந்து இருந்த வாணியை பார்த்து ஆச்சரியப்பட்டனர். எல்லோரின் பார்வையும் வாணியின் மீதே இருந்தது. 

அப்போது பார்பர் வாணியை கூப்பிட வாணி எழுந்து சேரில் ஏறி உட்கார, எல்லோரும் வாணியையே பார்க்க, கொஞ்சம் கூச்சத்துடன் வாணி தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்தாள்.

வாணி சேரில் உட்கார்ந்ததுமே பார்பருக்கு கொஞ்சம் பதட்டம் தொற்றிக் கொண்டது. ஒரு பெண்ணுக்கு, அதுவும் வாணி போன்ற ஒரு அழகான பெண்ணுக்குத் தன்னுடைய சலூனில் முதல் முறையாக மொட்டை அடிப்பதால் கொஞ்சம் பதட்டமாக இருந்தான். பார்பர் தனியாக வைத்து இருந்த ஒரு சுத்தமான வெள்ளை வேட்டியை எடுத்து அவள் கழுத்துக்கு கீழ் போர்த்தி விட்டு, தண்ணீரை ஸ்பிரேயர் பி=மூலம் தலை முடி முழுவதும் பீய்ச்சி அடித்தான். 



வாணி போட்டு இருந்த ஜடையை அவிழ்க்காமல் அப்படியே மொட்டை அடித்தால், முடி மொத்தமும் சிந்தாமல், சிதறாமல் இருக்கும் என்று நினைத்த பார்பர் ஒரு புதிய ரேஸரில் பிளேடை உடைத்து பாதி பிளேடை போட்டு விட்டு, சலூனுக்குள் ஓடும் பேன் காற்றில் மொட்டை அடிக்க ஆரம்பித்தான். பர்ஸ்ட் ஸ்ட்ரோக் வாணியின் தலையில் பட்டதும், ஈரமான தலையில் பேன் காற்று பட, அவள் உடலெங்கும் சிலிர்க்க, அந்த புது உணர்வை ரசித்தாள் வாணி.

வாணி கண்ணை மூடித் தன்னை அறியாமல் அந்த புத்தம் புது உணர்ச்சியை அணுஅணுவாக ரசிக்க, பார்பர் அவன் வேலையே கண்ணாக வாணியின் முடியைச் சிரைத்துக் கொண்டு இருந்தான். பாவம் அவனு நம்மைப் போல முடி ரசிகன் இல்லை போல... அப்படி இருந்திருந்தால் வாணியின் நீளமான முடியை மொட்டை அடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை வீணாக்கி இருக்க மாட்டான்.
ஒரு சில நிமிடங்களில் வாணியின் பாதி தலை மொட்டை அடிக்கப்பட்டு இருந்தது. வாணியின் அடர்த்தியான முடியை மழித்த பிளேடு பாதி தலை முடிக்கே தன்னுடைய பலத்தை இழக்க, பார்பர் மீதம் இருந்த ஒரு பாதி பிளேடை மாற்றினான்.

பிளேடு மாற்றி விட்டு, இன்னும் கொஞ்சம் தண்ணீரை முடி இருக்கும் பகுதியில் பீய்ச்சி அடிக்க, அந்த தண்ணீர் மொட்டை அடிக்கப்பட்ட பகுதியிலும் பட, வாணிக்கு அவள் தலை குளிர, அந்த ஜில்லென்ற உணர்வை ரசித்தாள். உடனே தன்னுடைய மொட்டைத் தலையைத் தொட்டு பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட வாணி, வேட்டியிலிருந்து கையை உயர்த்தி, தன மொட்டை அடிக்கப்பட்ட பகுதியைத் தொட்டு தடவி பார்க்க, வேற லெவலில் தன்னுடைய மொட்டைத் தலையை உணர்ந்தாள். 

இவ்ளோ நாளா இந்த மாதிரியான த்ரில்லான உணர்வுகளை மிஸ் பண்ணிவிட்டோமே என்று நினைத்தாள் வாணி. இருந்தாலும் தன்னுடைய மொட்டைத் தலை மொழு மொழுவென இல்லாமல் அரைகுறையாகச் சிரைக்கப்பட்டு, கொஞ்சம் சொரசொரப்பாக இருப்பதையும் உணர்ந்தாள் வாணி.

தலை மொட்டை அடித்த இரு இடங்களில் வெட்டு பட்டுச் சிறு காயமும் ஆகி இருந்தது. தண்ணீர் பட்ட அந்த இடம் கொஞ்சம் எரிச்சல் இருப்பதையும் உணர்ந்தாள் வாணி. தன் முன்னாடி இருந்த கண்ணாடியில் அரை மொட்டைத் தலையில் தன்னை பார்த்த வாணிக்கு சிரிப்பு வர, தன்னுடைய போனை எடுத்து அரை மொட்டைத் தலையில் ஒரு செல்பி எடுத்துக் கொண்டாள்.

அப்போது பிரகாஷ் தன்னுடைய நீளமான முடியை எந்த அளவுக்கு விரும்புவான் என்று நினைப்பு வர, வாட்சப்பில் அவனுக்கு ஸாரி என்று மெசேஜ் மட்டும் செய்து விட்டுப் போனை லாக் செய்து வைத்தாள்.




பார்பர் அவள் செய்வதை எல்லாம் பார்த்துக் கொண்டு நிற்க, வாணி போனை வைத்ததும் மீண்டும் மீதம் இருந்த முடியைச் சிரைக்க ஆரம்பித்தான். ஈரம் ஊறிப் பொய் இருந்த வாணியின் முடி இப்போது சுலபமாக மழித்து எடுக்கப்பட, சில நிமிடங்களில் முழுவதும் மொட்டை அடிக்கப்பட்டு இருக்க, வாணி தன்னுடைய மொட்டைத் தலை முழுவதையும் ஒரு முறை இரு கைகளாலும் தடவிப் பார்க்க, பல இடங்களில் ஒழுங்காகச் சிரைக்காமல் இருப்பதை உணர்ந்தாள். 

இருந்தாலும் இப்போதைக்கு இதுவே போதும் என்று நினைத்த வாணி சேரிலிருந்து இறங்கி எவ்ளோ பணம் மொட்டை அடித்ததற்கு என்று பார்ப்பரை கேட்க, நான் ஒழுங்கா வேலை செய்யல மேடம் மன்னிச்சுக்கோங்க... இருந்தாலும் நீங்க விருப்பப்பட்டா ஐம்பது ரூபா  மட்டும் கொடுங்க என்றான். 

வாணி தன் ஹேண்ட் பேக்கிலிருந்து ஐம்பது ரூபா எடுத்துக் கொடுத்து விட்டு, மீண்டும் ஒரு முறை தன்னுடைய மொட்டைத் தலையைக் கண்ணாடியில் பார்க்க, பின்னால் பெஞ்சில் உட்கார்ந்து இருந்த ஆண்கள் எல்லோரும் வாணியின் மொட்டைத் தலையையே பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்த வாணி அவளையும் மீறி வெட்கத்தில் சிரித்து விட்டாள். 



எல்லோரும் சிரிக்க, வாணி வெட்கத்தில் வேகமாகக் கிளம்ப, பார்பர் கொஞ்சம் இருங்க மேடம் என்று சொல்ல, வாணி என்னவென்று அவனைப் பார்க்க, பார்பர் டேபிளில் இருந்த படிகாரக் கல்லைத் தண்ணீரில் நனைத்து வாணியின் மொட்டைத் தலையில் தடவி விட்டான்.படிகாரக் கல்லைத் தடவ தடவ வாணியின் தலை செம கூலாக இருந்தது. 

பின் வாணி சலூனிலிருந்து கிளம்பினாள். மத்தியான வெயிலில் புத்தம் புதிய ப்ரெஷான மொட்டைத் தலையுடன் வாணி நடந்து வருவதை தெருவில் போவோர் வருவோர் எல்லோரும் பார்க்க, வாணி தன்னுடைய துப்பட்டாவை மறந்து வந்ததை நினைத்து வருந்தினாள். துப்பட்டா இருந்து இருந்தால் தன்னுடைய மொட்டைத் தலையை மறைத்து இருக்கலாமே என்று நினைக்க, தன்னுடைய நீளமான முடியை மொட்டை அடித்தது இந்த அழகான மொட்டைத் தலையை மறைக்கவா என்று இன்னொரு மனம் சொல்ல, வாணி இப்போது கூச்சப்படாமல் மொட்டைத் தலையில் கெத்தாக நடந்தாள்.



தன் கணவன் பிரகாஷை எப்படி சமாளிக்க போகிறாள் வாணி?
மூன்றாம் பாகம் விரைவில் காத்திருங்கள் 





No comments:

Post a Comment