Thursday 31 March 2022

ஸ்ருதியின் மறுமுகம் - ஒன்பதாம் பாகம்

ஓகே கேர்ள்ஸ், ரூமை சுத்தம் செய்வோம் என்று சொல்ல,

நிவேதா வெயிட் ஸ்ருதி, இன்னும் முடியவில்லை என்றாள்.

என்ன நிவேதா என்று ஸ்ருதி அவளை கேட்க,

நாங்கள் எங்கள் தலை முடியை தானம் செய்துவிட்டோம், ஆனால் உன்னுடைய முடியையும் மொட்டை அடிக்க வேண்டுமே என்று சொல்ல,

ஸ்ருதி, ஆனால் நான் தான் பந்தயத்தில் வென்றேன்... அதனால் நான் ஏன் மொட்டை அடிக்க வேண்டும் என்றாள்.

ஆமாம் ஸ்ருதி, ஆனால் இது தானம் கொடுக்க மொட்டை அடித்தது,  அதனால் அனைவரும் தானம் செய்ய வேண்டும் என்று சவிதா சொல்ல, அதற்கு ஸ்ருதி, சரி ஆனால் நான் என் முடியை மொட்டை அடிக்காமல், பாய் கட் போல வெட்டிக் கொள்ளலாம் என்றாள்.

ஆனால் சவிதா அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஸ்ருதி தானம் கொடுப்பது என்றால் முழுமையாக கொடுக்க வேண்டும், அதனால் மொட்டை தான் அடிக்க வேண்டும், முழு மனதுடன் உன் முடியை ஷேவ் செய்து  தானமாக கொடு  என்று சவிதா சொல்ல,


நிவேதாவும், ஆமாம் ஸ்ருதி அது ஒரு முடி தான், அது சீக்கிரமே வளரும் என்று ஸ்ருதியை தன் பங்குக்கு போர்ஸ் பண்ண, பின் ஸ்ருதி தன் தலை முடியை மொட்டையடிக்க சம்மதிக்கிறாள். 

ஸ்ருதி நாற்காலியில் அமர்ந்தாள். நிவேதா ஸ்ருதியின் தலை முடியை சீவி இரண்டு போனி டெயில்களை பின்னி விட, சவிதா ரேஸருடன் வந்து ஸ்ருதியின் இடது பக்க முடியை ஷேவ் செய்ய ஆரம்பித்தாள். scrkk scrkk scrkk scrkk scrkk ஸ்ருதியின் இடது பக்கம் போனி டெயில் கீழே விழுந்தது. சவிதா  எடுத்து கட்டிலில் வைத்தாள்.

சவிதா இப்போது உன் முறை நிவேதா, இதோ ரேஸர் என்று அவளிடம் ரேசரை கொடுக்க, நிவேதா ரேசரை வாங்கி கொண்டு ஸ்ருதியின் தலையை மொட்டை அடிக்க, ஸ்ருதி, இரண்டு பெண்கள் என் தலையை மொட்டை அடிக்கிறார்கள் என்று சொல்ல, நிவேதா ஸ்ருதியின் தலையை ஷேவ் செய்ய ஆரம்பித்தாள். 

சில நிமிடங்களில் ஸ்ருதியின் முடி மொட்டையடிக்கப்படுகிறது. நிவேதா அதனை எடுத்து அவர்களின் முடியுடன் கட்டிலில் வைத்தாள். அவர்கள் 3 பேரும் கண்ணாடி முன் நின்று தங்கள் மொட்டைத் தலையைத் தொட்டு ரசித்து சிரிக்க, அப்போது திடீரென்று ஹாஸ்ட்டல் வார்டன் கதவைத் திறந்தார்.



அந்த அறையில் பெண்கள் மூவரும் மொட்டை தலையுடன் இருந்த அவர்களைப் பார்த்து வார்டன் அதிர்ச்சியடைந்தார். வார்டன் அவர்களிடம் கேட்டதற்கு, எங்கள் முடியை கேன்சர் நோயாளிகளுக்கு தானமாக கொடுக்க மொட்டை அடித்தோம் என்று சொல்ல, வார்டன் அதனை கல்லூரி முதல்வரிடம் சொல்ல,  

முதல்வர் அம்மா யோசனை செய்து, 6 மாதங்களுக்கு ஒரு முறை நம்முடைய கல்லூரியில் முடி தான முகாம் நடத்தலாம் என்றும், விருப்பம் உள்ளவர்கள் தங்கள் முடிகளை தானம் செய்யலாம் என சுற்றறிக்கை தருவதாகத் தெரிவித்தார். 3 பேரும் சிரித்துக் கொண்டே, முடி தான முகாமில் இருந்து முடி சேகரிக்க வந்தவரிடம் முடியைக் கொடுக்கச் சென்றனர்.

சில வாரங்களுக்குப் பிறகு அவர்களின் முதல் செமஸ்டர் முடிந்து மூவரும் தங்கள் வீட்டிற்குச் சென்றனர். நிவேதாவும், சவிதாவும் தங்கள் வீட்டிற்கு மகிழ்ச்சியுடன் சென்றனர். அவர்கள் புற்று நோயாளிகளுக்கு முடி தானம் செய்வதைக் கேள்விப்பட்டவுடன் அவர்களின் தாயார் அவர்களை வரவேற்றார்.



ஆனால் ஸ்ருதி தன் பெற்றோரை எதிர் கொள்ள பயந்தாள். ஸ்ருதியின் அப்பாவும், அம்மாவும் வந்து கதவைத் திறந்தனர், மொட்டைத் தலையுடன் ஸ்ருதியைப் பார்த்ததும் சினேகா கோபப்பட்டு ஸ்ருதியை அடித்து விட்டு உள்ளே செல்ல, ஆனால் ஸ்ருதியின் அப்பா அவளைக் கட்டிப் பிடித்து அவளது மொட்டைத் தலையில் முத்தமிட்டார். ஸ்ருதி மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையுடனும் சினேகாவுடன் பேச உள்ளே சென்றாள்.

ஸ்ருதி, சினேகாவிடம் அம்மா ஜஸ்ட் முடி, அது சீக்கிரம் வளரும்.

சினேகா, அது எனக்கு தெரியும். ஆனால் நீ ஒரு டீனேஜ் பெண், உன்னை கிண்டல் செய்யும் சமூகத்தை எப்படி எதிர் கொள்வாய் என்று கேட்க, யார் கிண்டல் செய்தாலும் பரவாயில்லை, ஆனால் நான் என் தலை முடியை புற்று நோயாளிகளுக்கு தானம் செய்ததில்  மகிழ்ச்சி அடைகிறேன் என்று சொன்னாள்.

சரி, ஆனால் இனி உன் திருமணம் ஆகும் வரை உன் தலை முடியை வெட்டவோ அல்லது மொட்டை அடிக்கவோ மாட்டாய் என்று எனக்கு இங்கே சத்தியம் செய் என்று கேட்க,

சரி, அம்மா நான் உனக்கு சத்தியம் செய்கிறேன் என்று சத்தியம் செய்தாள்.

சினேகா சந்தோஷப்பட்டு அவளை அணைத்துக் கொண்டாள். ஸ்ருதியும் சந்தோஷமாக இருக்க, சினேகா ஸ்ருதியின் மொட்டைத் தலையைத் தொட்டுத் தடவினாள்.


சிறிது நேரம் கழித்து ஸ்ருதி அவளது மொட்டை தலையில் இருந்த படங்களை fb மற்றும், அவளது மெசஞ்சர் குழுவில் பதிவு செய்தாள். அவளது போட்டோவுக்கு, ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் வர, ஆனால் ஸ்ருதி எப்படி மொட்டை அடித்தாள் என்று எல்லோரும் கமெண்டில் கேட்க, அவர்களுக்கு ஸ்ருதி அனைத்து அனுபவங்களையும் விளக்கினாள்.

அடுத்த சில நாட்கள் ஸ்ருதி மொட்டை தலையுடன் வீட்டில் வலம் வர, ஸ்ருதியின் அப்பாவுக்கு எதுவும் வித்தியாசமாக தெரியவில்லை. ஆனால் சினேகா தன் மகள் இப்படி மொட்டை தலையுடன் இருப்பது அவளுக்கு ரொம்பவே மன வேதனையாக இருந்தது. தனிமையில் தன் சோகத்தை அழுது தீர்க்க, அப்போது ஸ்ருதி தன் அம்மா சினேகா அழுவதை பார்த்து பதறி போய் அவளிடம் வந்தாள்.

என்னம்மா... என்னாச்சு...எதுக்கு இப்போ அழுதுட்டு இருக்க, 

ஒண்ணும் இல்லை...

சொல்லும்மா, உடம்புக்கு எதும் முடியலையா...

இல்ல... 

அப்போ என்னன்னு சொல்லு... சொன்னா தானே தெரியும்...

ஒண்ணும் இல்ல... என்னை கொஞ்சம் தனியா விடேன்... 

சரி... நீ நான் சொன்னா கேக்க மாட்ட... இப்போவே அப்பாவுக்கு போன் பண்ணி வர சொல்றேன்...

ஸ்ருதி... சொன்னா கேளு... அப்பாக்கு போன் பண்ண வேண்டாம்...

சரி... என்ன பிரச்சனை உனக்கு...

எனக்கு என்ன பிரச்சனை...உன்னை நினச்சா தான் பயமா இருக்கு... அதான் அழறேன்...



என்னம்மா உளர்ற... என்னை நினைச்சு உனக்கு என்ன பயம்? 

இந்த வயசுல எதுக்குடி உன் முடியை மொட்டை அடிச்ச? இனி எப்படி உன்னை கல்யாணம் பண்ணிக் குடுப்பேன்...

லூசா அம்மா நீ... இப்போ என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்... இப்போ தானே பர்ஸ்ட் இயர் முடிச்சு இருக்கேன்... இன்னும் டூ இயர்ஸ் ஆகும் படிச்சு முடிக்கவே...

அதாண்டி... நானும் சொல்றேன்... பர்ஸ்ட் இயர்லயே இப்படி மொட்டை அடிச்சுட்டு வந்து நிக்குற... இந்த படிப்பு முடியறதுக்குள்ள இன்னும் என்ன எல்லாம் பண்ண போறியோ...

அம்மா... நான் ஒண்ணும் தப்பு பண்ணல... என் முடியை தானமா தான் குடுத்து இருக்கேன்... நீ என் கூட வா... ஈவ்னிங் ஒரு இடத்திற்கு உன்னை கூட்டி போறேன்...

அத்துடன் அவர்களின் சண்டை கொஞ்சம் ஓய... மாலை ஸ்ருதி சினேகாவை டவுனில் இருந்த ஒரு பிரபலமான ஹாஸ்பிடலுக்கு கூட்டி சென்றாள். அந்த ஹாஸ்பிடல் அந்த சிட்டியிலேயே ரொம்ப பெரிய மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல். 



======================================================================================

கதை ரொம்பவே நீண்டு கொண்டு செல்கிறது. அதே சமயம் கதைக்கு போதிய வரவேற்பும் இல்லை. உங்களின் கருத்துக்கள் தான் என்னை மேலும் எழுத ஊக்கப்படுத்தும். இந்த கதை இங்கிலீஷில் படித்தால் உணர்வு பூர்வமாக இருக்குமா என்றால் இல்லை. அதனால் எனக்கு தெரிந்த அளவு மொழி மாற்றம் செய்து எழுத முயற்சி செய்தேன். இந்த கதை அடுத்த பாகத்தில் முடிந்து விடும்.

No comments:

Post a Comment