Wednesday 4 May 2022

பவித்ராவின் முடி காணிக்கை - முதலாம் பாகம்

பவித்ரா காலேஜ் படிக்கும் ரொம்ப அழகான 18 வயது பொண்ணு. பவித்ராவின் சொந்த ஊர்கள்ளக்குறிச்சி பக்கம் சிறு கிராமம்.

அப்பா இல்லை. அம்மா அங்கு இருந்த ஸ்கூலில் ஆசிரியையாக வேலை செய்கிறாள். பவித்ரா ஒரே பொண்ணு தான். உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை. பவித்ரா இப்போது சென்னையில் இருக்கும்  காலேஜில் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். அவளுடைய இடுப்பு வரை முடி இருக்கும்.

பவித்ரா எப்பொழுதும் நடு வகிடு எடுத்து, தலையை சீவி ஒற்றை ஜடை போட்டு மல்லிகை பூ வைத்துக் கொண்டுதான் காலேஜ் போவாள்.  அவளுடைய முடி அவளுக்கு பெரிய பிளஸ். சின்ன வயதில் இருந்து தன்னுடைய முடியை நீளமாக வளர்ப்பது அவளுக்கு ரொம்ப பிடிக்கும். நடு உச்சி எடுத்து பழகி பழகி முடி கலைந்தாலும், அந்த உச்சி மட்டும் கலையாமல் இருக்கும்..


கருகருவென இருக்கும் பவித்ராவின் முடியை பார்க்கும் யாருக்குமே அதை தொட்டு பார்க்க தோணும்... அப்போது பவித்ரா காலேஜ் செமஸ்ட்டர் லீவில் தன் சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு வந்து இருந்தாள். அன்று இரவு சாப்பிட்டு விட்டு தூங்கும் போது அவளுடைய அம்மா அவளிடம் முக்கியமான விஷயமாக பேசினாள்.

எக்ஸாம்ல நல்லா பண்ணி இருக்கேன்னு சொன்ன, எவ்ளோ பர்சென்டேஜ் எதிர்பார்க்கலாம் பவி?

அதுல தெரியலம்மா, ஆனா 80%க்கு மேல வந்துரும்...

சரி, எத்தன நாள் காலேஜ் லீவு?

12 நாள் லீவு இருக்கு அம்மா,

சரி, 2 நாள் கழிச்சு நம்ம பழனிக்கு போவோமா?

என்னம்மா திதிர்னு?

ஆமா டி.. உங்க அப்பா போனதுக்கு அப்புறம் நம்ம எந்த கோவிலுக்கும் போகல. நீயும் உன் படிப்பு, அது இதுன்னு பிசியா இருந்த.. அதான் இப்போ போகலாம்னு சொல்றேன்...

நம்ம மட்டும் போறோமா?

ஆமா டி.. வேற யார் வருவா?

சரி மா. போகலாம்.

நீ எதாச்சும் வேண்டிக்கணும்னா வேண்டிக்கோடி.

என்ன வேண்டணும்?

நீ நல்ல காலேஜ்ல  சேர்ந்தா நான் பழனி முருகனுக்கு மொட்டை போடுறேனு வேண்டிகிட்டேன். அது  நல்லபடியா நடந்துருச்சு.. அதான் நான் மொட்டை போடப்போறேன்... அது மாதிரி நல்லபடியா நீ காலேஜ் முடிச்சு வேலைக்கு சேர்ந்துட்டா மொட்டை போட்டுக்குறேன்னு வேண்டிக்கோடி.

என்னமா சொல்றா? நீ மொட்டை அடிக்கிறதே எனக்கு பெரிய அதிர்ச்சி. இதுல நானும் மொட்டை போடணும்னு சொல்றா? பொண்ணா பிறந்து எனக்கு பிடிச்ச மாதிரி நீளமா முடிய வளர்த்தது மொட்டை அடிக்கவா? அப்புறம் இப்படி ஒரே அடியா மழிச்சுட்டா அப்புறம் வளரவே செய்யாதே... இன்னும் எனக்கு என் முடியை ரொம்ப பிடிக்கும்.. இப்படி சொல்றியே அம்மா...

அடியே, சாமி விஷயத்துல விளையாடாத.. உனக்கு எது சரின்னு எனக்கு தெரியும்.. நீ வேண்டிக்கோ.. இல்லன்னா நான் உனக்கு மொட்டை அடிக்கிறேன்னு வேண்டுவேன்.. இன்னும் 2 வருஷம் கழிச்சு உனக்கு வேலை கிடைச்சதும், நம்ம மறுபடியும் பழனி போவோம். அப்போ உனக்கும் எனக்கும் மொட்டை போடலாம்.. இப்போ நான் மட்டும் மொட்டை போடுறேன்.. இப்ப தூங்கு... என்று அம்மா சொல்ல 

அன்று இரவு முழுவதும் பவித்ராவுக்கு தூக்கமே வரல.. மணி 3 ஆச்சு. எழுந்து கண்ணாடி முன் நின்று தன் முடியை தடவி பார்த்தாள். 

சீப்பு எடுத்து தலையை நடு உச்சி வகிடு எடுத்து சீவி, பின்னால் இருந்த முடியையும் அழகாக சீவி கொண்டை போட்டுக் கொண்டாள் பவித்ரா.

அவள் தன் முடியை கண்ணாடியில் பார்க்க, முடி அமுக்கி வைத்தது போல இருக்க, தன் முடியை கையை வைத்து மறைத்துக் கொண்டு முடி இல்லாமல் மொட்டையில் தன் முகம் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தாள் பவித்ரா.

அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சரி இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து பார்த்துக் கொள்ளலாம் என்று தூங்கினாள். 2 நாள் கழித்து பவித்ராவும், அவள் அம்மாவும் பழனிக்கு கிளம்பினார்கள்.

பழனியில் இறங்கியதும், பவியின் அம்மா அவளை கூட்டிக் கொண்டு மொட்டை அடிக்கும் சண்முகநதி ஹாலிற்க்கு கூட்டி சென்றாள்.


பவி, இந்தா இந்த ரூபாயை கொண்டு போய் ஒரு மொட்டை டோக்கனும், பூ முடி டோக்கனும் வாங்கிட்டு வா...


அம்மா எதுக்கும்மா ரெண்டு டோக்கன்...


ஆமா பவி... நான் நல்லா யோசிச்சு தான் சொல்றேன்... என் வேண்டுதல் படி நான் மொட்டை அடிச்சிக்கிறேன்... நீ இப்பொ பூ முடி மட்டும் குடு... சாமி நம்ம குடும்பத்துக்கு நல்லது பண்ணும்...


சரிம்மா, நீ சொன்னா கேட்க மாட்ட... நான் போய் டோக்கன் வாங்கிட்டு வர்றேன்...


பவித்ரா அவள் அம்மா சொன்னது போல டோக்கன் வாங்கி வர, இருவரும் வரிசையில் நிற்க, அங்கு பவிக்கு முன்னால் ஒரு பதினெட்டு வயது பெண் ஒருத்தி நின்று கொண்டு இருந்தாள். அவள் ஒரு ஜீன்ஸிம், மஞ்சள் கலரில் லாங் டாப்பும் போட்டுக் கொண்டு இருந்தாள். பின் அந்த பெண் திரும்பி பவியை பார்க்க, இருவரும் சினேகமாக சிரித்துக் கொண்டு பேச ஆரம்பித்தனர்.


ஹாய் இது பழனி முதல் முறையா? என்று அந்த பெண் கேட்க,


இல்ல, சின்ன வயசுல வந்துருக்கேன்.. ஆனா நினைவு தெரிஞ்சு இது முதல் முறை.


உங்களுக்கு? என்று பவி கேட்டாள்.


நாங்க தமிழ்நாடு தான்...   ஆனா இப்போ பெங்களூரில் இருக்கோம், பழனிக்கு

இதான் முதல் முறை...  குடும்பம் ஓட வந்துருக்கோம்.


ஓஹோ. அப்டியா? என்ன வேண்டுதல்?


அப்பா , தம்பி மொட்டை போடுறாங்க.. நா, அம்மா பூ முடி குடுக்குறோம்


ன் நீங்க மொட்டை போடலையா?



என்னங்க சொல்றீங்க? பொண்ணுங்க எல்லாம்மொட்டை போட மாட்டாங்க?


நீங்க மொட்டை போடுறீங்களா என்ன?


இல்ல, நானும் பூ முடி தான்.. என் அம்மா பின்னாடி நிக்குறாங்க..

அவங்க மொட்டை போடுறாங்க


ஓ அப்படியா... சரி


அந்த பெண் பூ முடி கொடுக்கும் நேரம் வர, டோக்கன் குடுத்துட்டு திரும்பி உக்காந்து பூ வெச்சுகிட்டா.. பார்பர் அவளோட முடியை நுனி வரை சீவி விட்டு, மூன்று கொத்து கட் பண்ணி விட, அடுத்து பவித்ரா பார்பர் உக்காந்தா...


அவளுக்கும் பூ வெச்சு அவளுடைய நீளமான முடியை சீவி விட்டு, கட் பண்ணி விட்டார் பார்பர்... அடுத்து பவித்ராவின் அம்மா உக்காந்தாங்க..


இந்தாங்க டோக்கன், மொட்டை போடணும்.


உக்காருங்க.. தலை முடியை நல்லா பிரிச்சு விரிச்சு விடுங்க...


பார்பர் சொன்ன மாதிரி முடியை நல்லா விரிச்சு விட்டு உக்காந்தாங்க பவியின் அம்மா. தண்ணீர் எடுத்து பார்பர் அவளுடைய தலையில் தெளித்து மசாஜ் பண்ணி விட்டார்.. அப்புறம் பிளேடு எடுத்து கத்தியில சொருகி உச்சியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமா மழிக்க தொடங்கினார்.

 

சில நிமிடங்களில் பவியின் அம்மா மொட்டை தலையுடன் எழ, பவித்ரா தன் அம்மாவின் தலை முடி முழுவதையும் மொட்டை அடிக்கப்படுவதை முழுமையாக நின்று கொண்டு பொறுமையாக பார்த்தாள்.


பவித்ரா மனதில் அவளை அறியாமலே அவள் மனதில் ஒரு இனம் புரியாத சந்தோஷம், பதட்டம்...


மொட்டை அடிப்பதை பார்க்க அவளுக்கு ரொம்ப ஒரு ஆர்வமாக இருந்தது. பவித்ராவின் அம்மா மொட்டை போட்டு முடிந்ததும் எழுந்து தன் தலையை தடவி தடவி பார்த்து விட்டு இருந்தாள்...


அப்புறம் சந்தனம் வாங்கி பவித்ராவின் அம்மா மொட்டை தலையில் தடவி விட்டாள்... அவளுக்கு அந்த மொட்டை தலையை  தொடுவதற்கு ரொம்பவே  சந்தோஷமாக இருந்தது.


பின் இருவரும் மலை மேல் ஏறி முருகனை தரிசித்து விட்டு ஊருக்கு திரும்ப வந்தார்கள்... அப்போது பவித்ரா மனதில் முழுமையாக மொட்டை மேல் ஒரு ஆர்வம் வந்தது. பின் பவித்ரா சென்னை காலேஜ்க்கு வந்து விட, அவள் நினைவு முழுவதும் மொட்டை பற்றியே இருந்தது. பவித்ரா அவளை அறியாமல் ஒரு முடிவு செய்தாள்.


நான்கு வருட  படிப்பு முடிந்ததும், மொட்டை அடிக்கும் வரை, தன் முடியை இனிமேல் வெட்டக்கூடாது என்று முடிவு செய்தாள் பவித்ரா.



*********************************************************************

அலுவல் வேலை காரணமாக முன்னை போல கதைகள் வேகமாக எழுத முடியவில்லை, உங்களின் கருத்துக்களே என்னை ஊக்கப்படுத்தும்... அடுத்த பாகம் சனிக்கிழமை வெளியாகும்... உங்கள் கருத்துக்களை அறிய ஆவலுடன் வில்லேஜ் பார்பர்!!!

3 comments: