Monday 19 September 2022

ஸ்ரீனிதாவின் மொட்டை - முதலாம் பாகம்

வணக்கம் நண்பர்களே இது  ஸ்ரீனிதாவின் மொட்டை... ஸ்ரீனிதா 21 வயது பெண். அவள் முடி இடுப்பு வரை இருக்கும். அடர்த்தியான நல்ல கருநிற முடி ஒத்தை ஜடை போட்டாலே இரு கையால் தான் பிடிக்க முடியும். ஸ்ரீனிதா ஒல்லியான உடல்வாகு, மாநிற ஸ்கின் டோனுடன் சூப்பராக இருப்பாள்.

ஸ்ரீனிதாவின் வீட்டில் அவளுடைய அம்மா, அப்பா, தங்கை என்ற சிறிய குடும்பம்.  ஸ்ரீனிதாவின் சகோதரி சுவாதி. சுவாதியும்  ஒல்லியான உடல்வாகு, மாநிற ஸ்கின் டோனுடன் சூப்பராக இருப்பாள்.  சில நாட்களாக ஸ்ரீனிதாவின் உடல்நிலை சரியில்லை. திடீரென்று அவள் உடலில் என்ன நடந்தது என்று அவளுக்குத் தெரியவில்லை. குடும்பத்தினர் அனைவரும் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் அவளது உடல்நிலை என்னவென்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இப்படி இருக்கும்போது ஸ்ரீனிதாவின் அம்மா ரொம்பவே தெய்வ பக்தி உடையவள். ஸ்ரீனிதாவின் அம்மா தனக்கு தெரிந்த ஜோசியரிடம் சென்று ஸ்ரீனிதாவின் ஜாதகத்தை கொடுத்து அவளுடைய உடல்நிலை எதனால் இப்படி ஆனது என்று கேட்டாள்.

அதை பார்த்ததும் ஜோசியர் "அம்மா, இந்த ஜாதகத்தில் தோஷம் உள்ளது. அது என்னவென்று என்னால் அறிய முடியவில்லை. அதற்குத் தீர்வு வேண்டுமானால் என் அப்பாவிடம் கேட்கலாம் என்று தன் வயது முதிர்ந்த அப்பாவிடம் கேட்க, அந்த ஜாதகத்தைப் பார்த்து ஜோஷியரின் அப்பா "அம்மா, இது ஒரு சின்ன தோஷம் தான், உங்கள் மக்கள் அவளை அறியாமல், தெரியாமல் தவறு செய்து இருக்கிறாள். அதன் விளைவுதான் இந்த நோய்க்குக் காரணம். அந்த பெண்ணை அழைத்து வந்தால் உண்மையாக நடந்ததை அவளிடமே கேட்கலாம்." என்கிறார்.

 

இதையெல்லாம் ஸ்ரீனிதாவின் அம்மா தன் கணவனிடம்  சொன்னாள். உடனே அடுத்த நாள் ஸ்ரீனிதாவை ஜோதிடர்களிடம் அழைத்து சென்றார்கள். அவளை பார்த்தவுடனே "ஏம்மா ஸ்ரீனிதா நீ இன்னும் நலமாக இருக்கிறாயா என்று கேட்க, அதற்கு ஸ்ரீனிதா ஆமாம் சுவாமி என்றாள். 

 

பெரியவரின் முகத்தைப் பார்த்ததும் கடந்த காலத்தையெல்லாம் சொன்னாள் ஸ்ரீனிதா. அதைக் கேட்டதும் பெரியவரின் மனதிற்குள் எதையோ யோசித்துக் கொண்டு இருந்தார். ஸ்ரீனிதா அவர் சொல்வதைக் கேட்டால், தன் வாழ்க்கை மாறும் நம்பிக்கைஅவளுக்கு வந்தது.

 

அம்மா, உங்க பொண்ணுக்கு உடல்நிலை சரியில்லாதபோது, ​​நீங்க உங்க குல தெய்வத்திற்கு ஏதாவது வேண்டுதல் வைத்து இருந்து, அதை மறந்து விட்டீர்களா?அந்த வேண்டுதல் என்ன என்று உங்களுக்கு மட்டும் தான் தெரியும்?உங்க பெண்ணின் தலை முடியை அந்த தெய்வத்திற்கு காணிக்கையாக கொடுக்கிறேன் என்று வேண்டி கும்பிட்டு இருந்தீர்களா? 

 

அப்படி எனக்கு எதுவும் நினைவு இல்லை சாமி... 

 

உங்க பொண்ணுக்கு வந்த பிரச்சனையை யாராலும் கண்டு பிடிக்க முடியாது ஏனென்றால் அது கடவுள் மாதிரி யாருக்கும் புரியாது நான் சொல்றதை நீங்க செய்யுங்க... ஸ்ரீநிதா, உனக்கு நம்பிக்கை இல்லை என்று சொன்னாய் சரியா? என்று ஜோதிடர் அவளிடம் கேட்க, அதற்கு ஸ்ரீநிதா ஜோதிடரை வித்தியாசமாக பார்த்தாள்.

ஜோதிடர், ஒரு காரியம் செய்யுங்கள்... உடனே உங்கள் கிராம தெய்வத்தின் கோவிலுக்கு சென்று 24 மணி நேரத்தில் உங்கள் கைகளால் தீபம் ஏற்றி சுவாமியை வேண்டிக்கொள்ளுங்கள், உங்களுக்கு நல்ல வழி கிடைக்கும்...

 

நல்ல வழி கிடைத்தால் உங்கள் வீட்டிலிருந்து நடந்து சென்று தலை முடியை உங்கள் குல தெய்வத்திற்கு மொட்டையடிக்க வேண்டும். அதுவும் ஒரு முறைப்படி நடக்க வேண்டும். என் மனைவி உங்களுக்கு அதை பற்றி விரிவாக விளக்குவார், அப்படிச் செய்யாவிட்டால் உயிருக்கே ஆபத்து என்று கூறினார் ஜோதிடர்.

 

ஜோதிடர் சொன்னதை கேட்டு ஸ்ரீனிதாவின் அம்மாவும் அப்பாவும் மறுநாள் அவளை கோவிலுக்கு அழைத்துச் சென்றார்கள்.

அங்கே ஸ்ரீனிதாவின் கையால் எல்லா பூஜைகளும், அபிஷேகமும் செய்தார்கள். அதன் பிறகு, ஒரு மணி நேரத்தில், ஸ்ரீனிதாவின் உடல் நிலையில் சிறிது மாற்றம் உண்டானது. அதை உணர்ந்த  ஸ்ரீனிதா  ஜோதிடர்களிடம் நம்பிக்கை இல்லாமல் இருந்தது எவ்வளவு பெரிய தவறு என்று உணர்ந்து கொண்டாள்.

 

ஆனால் ஸ்ரீனிதா தன் பெற்றோரிடம் நீங்க சொன்னது உண்மைதான்... ஆனால் அதற்காக நான் மொட்டை அடிக்க மாட்டேன். வேறு ஏதாவது சொல்லுங்கள் என்று கேட்டாள். 

 

ஜோதிடர் சொன்னது போல நீ உன் தலை முடியை மொட்டை அடித்து தான் ஆகவேண்டும், நீ உன்  தலைமுடியை மொட்டை அடிக்க பயப்படுகிறாயா? என்று அவளின் பெற்றோர் கேட்க, ஸ்ரீனிதா வேறு வழியில்லாமல் அமைதியாக இருக்க, வேண்டுதல் என்றால் ஜோதிடர் சொன்னது போல முறையாக செய்ய வேண்டும், அதனால் முதலில் போய் ஜோதிடரின் மனைவியைச் சந்திக்க வேண்டும் என்று கிளம்பினார்கள்.

 

ஸ்ரீனிதாவை காத்திருக் சொல்லிவிட்டு அவளுடைய அம்மா மட்டும் ஜோதிடரின் மனைவியை சந்தித்து, நடந்த விஷயங்களை விளக்கி சொல்ல,  ஜோதிடரின் மனைவி ஸ்ரீனிதாவை அம்மாவை  ஓரமாக அழைத்துச் சென்றாள்.

அங்கே அவளிடம் "நான் சொல்வதைக் கேட்டு வருத்தப்பட வேண்டாம். இது கடவுளின் செயல். எனவே, நீங்கள் இப்படி செய்ய வேண்டும். தவறாக நினைக்காதே என்று ஆரம்பித்து என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக விளக்கி சொன்னாள். சொல்ல ஒரு மணி நேரம் ஆனது.  ஸ்ரீனிதாவின் அம்மா வெளியே வந்து போகலாம் என்றாள். ஆனால் ஸ்ரீனிதா தன் அம்மா என்ன சொல்வாள் என்று ஆவலுடன் காத்திருக்க, பின் பொறுமையிழந்து  அவள் அம்மாவிடம் என்ன சொன்னாள், என்ன சொன்னாள் என்று கேட்டு நச்சரித்தாள்.


ஆனால் ஸ்ரீனிதாவின் அம்மாவிற்கு எப்படி சொல்வது என்று புரியவில்லை. ஏன் என்றால் அது மிகவும் கடினமான வேலை.

ஸ்ரீனிதாவிடம் எதுவும் பேசவில்லை. அவள் அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். வீட்டிற்குச் சென்றனர். வீட்டிற்கு சென்றதும் ஸ்ரீனிதா என்ன சொன்னாள் என்று மீண்டும் கேட்டாள். அப்புறம் இந்த முறை எதுவும் இல்லை. ஊரில் உள்ள கோவிலில் மொட்டை போட வேண்டும் என்றாள். ஸ்ரீனிதாவுக்கு அவள் சொன்னதை கேட்டதும் அதிர்ச்சி ஆனாள். அங்க எப்படி முடியும், எல்லாரும் இருக்காங்க, என்னால அங்கே மொட்டை அடிக்க முடியாது என்று சொல்ல, நீ என்ன சொன்னாலும் மொட்டை அடித்து பரிகாரத்தை செய்து தான் ஆகவேண்டும்... முதலில் கோவிலுக்கு போக தயாராகு என்று சொன்னாள் ஸ்ரீனிதாவின் அம்மா.

 

அதைக் கேட்ட ஸ்ரீநீதா நான் இப்போது சினிமாவுக்கு போக வேண்டும் என்று சொல்ல, அவள் அம்மா அவளை கோபமாக பார்க்க, ஸ்ரீநீதா நான் என் நண்பர்களுடன் சினிமாவுக்குச் செல்ல நீங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து இருக்கிறேன்... என்று சொல்லிவிட்டு அவளுடைய அம்மாவின் பதிலை எதிர்பார்க்காமல் சினிமாவுக்கு செல்ல தயாரானாள்.

 

ஸ்ரீநீதா போனவுடனே ஸ்ரீநீதாவின் அம்மா சென்று ஸ்ரீநீதாவின் அக்கா சுவாதியையும், அவள் கணவனையும் அழைத்து ஜோதிடர் சொன்ன விஷயங்களை எல்லாம் சொன்னாள்.

அம்மா சொல்வதைக் கேட்ட சுவாதி, எப்படி ஸ்ரீநீதாவுக்கு மொட்டை அடிப்பது... அவள் சம்மதிக்க மாட்டாள் என்றாள்.

 

உடனே அவள் அம்மா அதற்கு பயந்து மொட்டை அடிக்காவிட்டால் ஸ்ரீநீதாவின் உயிருக்கே ஆபத்து என்றாள்.

சுவாதி இப்போது என்ன செய்வது என்று தன் கணவரிடம் கேட்டாள். அவர் ஸ்ரீநீதாவின் சம்மதம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. மாலை அவள் வரட்டும், அவளிடமே பேசி முடிவு செய்யலாம் என்று சொன்னார். 

 

மாலையில் ஸ்ரீநீதா வந்ததும் சுவாதி அவளிடம் பேசினாள். ஸ்ரீநீதா, எனக்கு ஒரு வாக்கு கொடுக்கணும், தருவீயா? என்று கேட்டாள் 

 

என்ன அக்கா நீ கேக்க போற? அம்மா சொன்ன மாதிரி நான் என் தலை முடியை மொட்டை அடிக்கணுமா? அது தான் உனக்கும் ஆசையா? என்றாள்.

 

ஆமாம் ஸ்ரீநீதா, எல்லாம் உன் நல்லதுக்கு தான்... நாளைக்கு சாயங்காலம் அம்மா, அப்பா, நம்ம குடும்பம் எல்லோரும் நம்ம சொந்த ஊருக்குப் போய், உன் தலை முடியை மொட்டையடிச்சுட்டு வந்துடலாம்... ஆனா நீ அங்கே 30 நாள் இருக்கணும். நான் சொல்வதைக் கேட்க வேண்டும். சரியா என்று கேட்டாள் சுவாதி. ஸ்ரீநீதா பதில் சொல்லாமல் யோசிக்க, சுவாதி மேலும் அவளிடம் தொடர்ந்து பேசினாள்.

 

நீங்க நான் சொல்றபடி எல்லாவற்றையும் கேட்டால், அனைத்தையும் செய்து முடித்தால், வரும் 23ம் தேதி உன்பிறந்தநாள். இப்போது உன் தலையை மொட்டையடித்தால், நீ புதிய தோற்றத்தில் இருப்பது போலவும் இருக்கும். கொஞ்சம் முடியும் வளர்ந்து இருக்கும் என்று சொல்லி, ஸ்ரீநிதாவை வற்புறுத்த... சரி அக்கா... நீ சொன்னபடியே கேட்கிறேன் என்று சொன்னாள் ஸ்ரீநிதா.

 

ஆனால் ஸ்ரீநிதா அறியாதது என்னவென்றால் அவளுக்குத் தெரியாமல் ஒரு பெரிய வேலையில் கலந்து கொள்ள ஆரம்பித்துவிட்டாள். அதுவே பெரிதானால் இன்னும் 30 நாட்களில் அவள் எப்படி இருப்பாள் என்பது அவளுக்கே தெரியாமல் போய்விடும். இம்முறை வரவிருக்கும் பிறந்தநாள் அவளது வாழ்நாளில் மறக்க முடியாததாக இருக்கும்.....


அன்று இரவு ஸ்ரீநீதா தன் தலை முடியை நினைத்துக் கொண்டே தூங்கினாள். மறுநாள் அவள் அக்கா சுவாதி ஸ்ரீநீதாவை 7 மணிக்கு எழுப்பி விட, ஸ்ரீநீதா கொஞ்சம் தாமதமாக டிரஸ்ஸை எல்லாம் பேக் செய்து கொண்டு தயாராகிவிட்டாள், ஸ்ரீநீதாவின் அப்பா மாலையில் அவளுக்கு காரை அனுப்பி வைத்தார். 

 

ஸ்ரீநீதா அங்கு செல்வதற்குள் அவர்கள் வீட்டில் எல்லாப் பெண்களும் இருப்பார்கள். யார் அது? 5 மைத்துனர்கள், அத்தை, அம்மா, 2 தங்கைகள், 2 அண்ணி, சுவாதி, மொத்த உறவினர்களும் இருக்க, இவர்களை எல்லாம் பார்த்த ஸ்ரீநீதா அதிர்ந்து போனாள். ஏன் என்றால் அங்கு பெண்கள் மட்டும் இல்லை.. அவளின் குடும்பத்து ஆண்களும் இருக்க... என்ன நடக்கிறது என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

 

அந்த நாள் முழுவதும் அனைவரையும் சந்தித்து மகிழ்ச்சியாக கழிந்தது. ஸ்ரீநீதா இரவு உணவு உண்டு விட்டு தூங்கினாள். ஸ்ரீநீதா அடுத்த நாள் அதிகாலை 5 மணிக்கு அவள் அக்கா சுவாதி எழுப்பினாள், அவள் எழுந்தவுடன், என்ன அக்கா இப்போவே எழணுமா?, நான் இன்னும் கொஞ்ச நேரம்  தூங்க வேணும் என்று சொல்ல, சுவாதி கேட்கவில்லை. அவளை எழுப்பினாள்.

 

ஸ்ரீநீதாவை எழுப்பிவிட்டு தன் அன்றாட வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு போய் குளித்துவிட்டு வரச் சொன்னாள். ஸ்ரீநீதா குளித்துவிட்டு வருவதற்குள் வீட்டில் அனைவரும் தயாராக இருந்தனர்.

 

பூஜை எல்லாம் முடிவதற்குள் மணி 7:30 ஆகிவிட்டது. பின் அருகில் இருந்த கோயிலுக்கு காரில் சென்றனர். ஒரு கார் சுவாதி ஓட்ட, மற்றொரு காரை அவளது மூத்த அண்ணி ஓட்ட, mஅங்கு சென்றடைந்தவுடன் ஸ்ரீநீதாவை கோவில் முன் நின்று கும்பிடுமாறு கூறினர்.

 

பின் அருகில் இருந்த ஒரு குளத்திற்கு சென்று குளத்தில் மூன்று முறை மூழ்கி வரச் சொன்னார்கள். ஆனால் ஸ்ரீநீதா முடியாது, எனக்கு பயமாக இருக்கு, நான் வரமாட்டேன் என்று சொல்ல, அவளது மூத்த அண்ணி இனிமே தினமும் மூன்று முறை மூழ்கி  வெளிய வர வேணும் ஸ்ரீநீதா என்று சொல்ல அவள் வேறு வழியில்லாமல்  குளத்தை நோக்கி நடந்தாள்.

 

குளத்தில் குளித்துவிட்டு வந்த ஸ்ரீதாவை கோவிலுக்கு அழைத்துச் சென்று ஈர ஆடையுடன் மூன்று சுற்று சுற்றி வர வைத்தனர். அதைச் செய்துவிட்டு, ஸ்ரீதாவை அழைத்துச் சென்று உடை மாற்றி மலர்களால் அலங்கரித்தனர். அவளது தலை முடி முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.




1 comment: