Tuesday, 18 October 2022

சலூன் மது - இரண்டாம் பாகம்

சில மாதங்கள் கழிந்து இருக்க, விமலா அன்று காலை வேலைக்கு செல்ல ரெடியாகி கொண்டு இருந்தாள். ட்ரஸிங் டேபிள் முன் நின்று தன்னை அலங்கரித்து கொண்டு இருந்தவள், பாய்கட் பண்ணிய தன்னுடைய முடி... இப்போது அவளுடைய தோள்களை தொடும் அளவிற்கு வளர்ந்து இருந்தது. மீண்டும் ஹேர்கட் பண்ண வேண்டும் என்று நினைத்தாள் விமலா.

அன்று போல மதுவின் சலூனில் அந்த சேரில் மீண்டும் அமர்ந்து அதன் த்ரில்லை ரசித்து அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தாள் விமலா. விமலா அந்த சேரில் குனிந்து உட்கார்ந்து இருக்க, தன் பின் கழுத்தில் ரேசர் மழிக்கும் போது வரும் சத்தத்தையும், அதன் உரசலையும் மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினாள் விமலா,


விமலா தன் வார விடுமுறை செவ்வாய் கிழமை என்பதால் அன்று காலை பதினோரு மணிக்கு மதுவின் சலூனுக்கு சென்றாள். விமலா நினைத்தது போலவே மதுவின் சலூன் காலியாக இருந்தது.

 

“குட் மார்னிங் மேடம்...வாங்க” என்று கிசுகிசுத்தபடியே விமலாவை பார்த்து சலூனுள் அழைத்தான் மது. சிரித்துக் கொண்டே உள்ளே நடந்தாள் விமலா,...

 "என்ன மேடம்... உங்க முடி ரொம்ப சீக்கிரமா வளர்ந்துடுச்சு போல"

"ஹாஹா.. அதான் உன்னிடம் வந்து இருக்கேன்..." கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள்.

"நல்லா வளர்ந்திருக்கு மேடம்...ஹேர்கட் பண்ணலாமா? என்று நாற்காலியை தன் பக்கம் நகர்த்தியபடி கேட்டான் மது…

 "இல்லை மது...எனக்கு பாய்கட் தான் பிடிக்கும்... அதனால போன முறை கட் பண்ண ஹேர் ஸ்டைல்லேயே  இந்த முறையும் செய்.."

“சரி மேடம்” என்றான் மது... விமலாவின் தோளில் துணியை போர்த்தி மறைத்து, அவளுடைய தலைமுடியை சீப்பால் வருடி சீவினான். பிறகு வாட்டர் ஸ்பிரேயரை எடுத்து தலைமுடியை நனைத்தான்... மீண்டும் சீப்பால் சீவினான். தலைமுடியை சீவி விட்டு முடியை வெட்ட ஆரம்பித்தான்.


 "கச்சக்... கச்சக்..சக்..சக்.''... கையில் கத்தரிக்கோல் ஒரு ரித்ததில் விமலாவின் தலையில் நகர்கிறது... விமலாவின் தன் முன் இருந்த கண்ணாடியைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்... சில நிமிடங்களில் அவளது கூந்தல் ஒரு பாய்கட் ஹேர் ஸ்டைலில்  மாறியது...

"மேடம்... போதுமா? இல்லை முடியின் அளவை குறைக்கவா?"

“சரி... இன்னும் கொஞ்சம் குறைச்சுக்கோ” என்று விமலா சொல்ல... மது மீண்டும் கத்தரியை எடுத்து மெதுவாக விமலாவின் முடியை வெட்ட ஆரம்பித்தான். ஐந்து நிமிடத்தில் அவள் தலைமுடி இன்னும் குட்டையாக வெட்டப்பட்டது... 

பின் மது கத்தரிக்கோலை ஓரமாக வைத்துவிட்டு, சீப்பால் சீவி விட்டு , ஸ்ட்ரெய்ட் ரேசரை எடுத்தான்... விமலா அதற்காகக் தான்  காத்திருந்தாள்... மது ரேசரைச் சுத்தமாகத் துடைத்துவிட்டு, அதில் ஒரு புதிய ஹாஃப் பிளேட்டைப் போட்டான்... அவள் பின் கழுத்தில் ஸ்ப்ரேயர் தெளித்து ஏற்கனவே ஈரமாக இருந்தது...

“மெதுவாக தலையை கொஞ்சம் குனியுங்க மேடம்..” மது விமலாவின் பின்னால் நிற்க... விமலா தலை குனிந்தாள்.

“சர்சர்சர்சர்..” என சவரக்கத்தி அவள் கழுத்தில் இருந்த நுண்ணிய முடிகளை எடுத்துவிட... அவளது முதுகெலும்பில் இருந்து மின்னோட்டம் பாய்வதை உணர்ந்தாள் விமலா... அவள் கண்களை மூடி தலையை சாய்த்தாள்.... மதுவின் கழுத்து ஒரு கணம் நின்றது... அவள் உடல் அதிர ஆரம்பித்தது... அவளது கழுத்து இப்போது மென்மையாக இருந்தது. அவ்வளவுதான்!!!  


நேப் ஷேவ் என்றால் விமலாவுக்கு ரொம்ப பிடிக்கும் என்று மது தெரிந்து கொண்டான். அதனால் ஷேவ் செய்து கொண்டு இருந்த வேகத்தை அப்படியே அவன் குறைக்க ஆரம்பித்தான்... விமலா தன் பின் கழுத்தில் கூர்மையான ரேஸர் அசைந்து கொண்டிருந்தால் சொர்க்கத்தில் இருந்தாள்... சில நிமிடங்களில் நேப் ஷேவிங் முடிய  மது மீண்டும் தலைமுடியை வருடி க்ரோப்பை செட் செய்தான்... 


"எப்படி இருக்கு மேடம்?" என்று மது விமலாவை கண்ணாடி வழியாக பார்த்து கேட்க...


"ரொம்ப நல்லா இருக்கு மது... என்ற விமலா தன் கையால் தன்னுடைய ஷேவ் செய்த பின் கழுத்தை தடவி பார்த்தாள். பின்கழுத்து மிக மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருந்தது.

 


“இனிமேல் மாதாமாதம் உன் சலூனுக்கு வருவேன் மது" என்றாள் விமலா.

"கண்டிப்பா மேடம்..." என்று சிரித்துக்கொண்டே சொன்னான் மது சொன்னாள்....விமலா பணத்தை கொடுத்து விட்டு சந்தோஷமாக வெளியே நடந்தாள்...

"குட் மார்னிங் மேடம், பிரசாதம் எடுதுக்கோங்க"... என்ற வார்த்தைகளைக் கேட்டு தலையை உயர்த்தினாள் விமலா... அவள் முன் நின்றிருந்த கிரெடிட் ஆபீசர் மாலதி... அவள் கையில் திருப்பதி லட்டு... தலையில் மொட்டை. அவளைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள் விமலா... 

விமலா பிரசாதம் எடுத்துக் கொண்டு.. "என்ன ஆச்சரியம்... வேண்டுதலா?" என்று கேட்டாள்.


“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை மேடம்... பேமிலியா போனோம். என் கணவர் பையன் ரெண்டு பேரும் மொட்டை... ரெண்டு மொட்டை ஒரு குடும்பத்தில் ஆகாது. அதனால நீயும் மொட்டை அடிச்சுக்கோன்னு ஹஸ்பண்ட் சொன்னார்.. சரி இனிமேல் வெயில் காலம் தானே? அதான் நானும் மொட்டை அடிச்சிட்டேன்..." என்றாள் மாலதி.


விமலா சிரித்துக்கொண்டே "குட் டெசிஷன்" என்றாள்... மாலதியும் சிரித்துக்கொண்டே தன் இருக்கைக்கு சென்றாள்...


மாலதி நன்றாக மொழுமொழுவென மொட்டை அடித்திருக்கிறாள்... மொட்டை அடித்ததால் விமலாவை விட மாலதி அழகாக இருக்கிறாள்... வீட்டுக்குப் போனாலும் மாலதியின் மொட்டையடித்த தலை விமலாவின் கண்களிலேயே இருந்தது.


அடுத்த ஞாயிற்றுக்கிழமை விமலாவின் கணவரும் வெயில் காரணமாக சலூனுக்குச் சென்று மொட்டை அடித்துக் கொண்டார்... வெயிலில் இருந்து, அதனால் வரும் வியர்வையில் இருந்து தன்னை காத்துக் கொள்ள மொட்டை அடித்ததாக சொன்னார்...


தன்னை சுற்றி நடப்பதை பார்த்த விமலா தானும் நன்றாக மொட்டை அடித்துக் கொள்ள விரும்பினாள் ... அவள் முடி வெட்டி கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கடந்து விட்டது... முடி தோள்பட்டை வளர்ந்து இருந்தது. விமலா அவளது யோசனையை கணவனிடம் கூறினாள்... அவன் எதிர்க்கவில்லை...


“உனக்கு  ஓகேன்னா எனக்கு ஓகே என்றான் விமலாவின் கணவன்.


செவ்வாய் கிழமை விமலாவுக்கு வார விடுமுறை வர... அன்று காலை விமலாவின் கணவர் அலுவலகத்திற்கு செல்ல, விமலா மதுவின் சலூனுக்கு சென்றாள். மதுவும் வழக்கம் போல வேலை இல்லாமல் இருக்க... விமலா சலூனைப் பார்க்கிறாள். யாரும் இல்லை..மது மட்டும் இருக்கிறான்.


"குட் மார்னிங் மேடம்... வாங்க..." விமலா மதுவின் சலூன் உள்ளே வந்தாள்...

"ரொம்ப நாளா வரவே இல்லையே மேடம்... முடி கூட கொஞ்சம் அதிகமா வளர்ந்துடுச்சு... இந்த முறையும் பாய்கட் பண்ணிடலாமா?  மது அடக்கமாக கேட்டான்...


"இல்லை மது.... இந்த முறை என் தலையை க்ளீன் ஷேவ் பண்ணு" என்று சொன்னாள் நாற்காலியில் அமர்ந்திருந்த விமலா...


மது "என்ன மேடம்!" என்று அவள் சொன்னதை சரியாக புரிந்து கொள்ள மறுபடியும்  கேட்டான்...


"ஆமாம் மது... நான் சொன்னது சரியா கேட்கலையா? இந்த முறை என் தலை முடியை மொட்டை அடி" என்றாள் விமலா. விமலா சொன்னதை கேட்டு மதுவின் இதயம் துடித்தது. 


"என்ன மது... நீ என்ன நினைக்கிறாய்... மொட்டை தலையில் என் லுக் நல்லா இருக்குமா? நான் பார்க்க அழகா இருப்பேனா?"
“ஆமாம் மேடம்... நல்லா மொழு மொழுன்னு அழகா இருப்பீங்க மேடம்... என்று மது அவனுக்கு நடக்க போகும் புதிய அனுபவத்தை நினைத்து கொண்டே சொல்ல...


"சரி... என் தலை முடியை மொட்டை அடிக்கிறியா?.." சிரித்துக்கொண்டே கேட்டாள் விமலா. மதுவும் சிரித்துவிட்டு தலையை ஆட்டினாள். பின் மது 

உடனே வெள்ளை துணி ஒன்றை அவளை சுற்றிக் போர்த்திவிட அவளும் நன்றாக சுற்றிக் கொண்டாள். விமலா தன் முன் இருந்த கண்ணாடியில் பார்த்தாள். கடைசியாக கூந்தலை விரல்களால் தேய்த்த விமலா மிகவும் சுகமாக தன் முடியை ரசித்தாள். 


மது விமலாவின் முடியில் தண்ணீரை ஸ்ப்ரே செய்து நன்றாக நனைத்து விட்டு, மூன்று நிமிடம் மசாஜ் செய்து விட்டு  ரேஸரை எடுத்தான். ஆனால் விமலா அந்த மசாஜ்ஜினை இன்னும் அனுபவிக்க நினைத்தாள். அதனால் அவள் மதுவிடம் 


"இன்னும் கொஞ்ச நேரம் செய் மது" என்றாள் விமலா.


மது  தலைமுடியை மீண்டும் ஒருமுறை நனைத்துவிட்டு மீண்டும் மசாஜ் செய்ய ஆரம்பித்தான்... விமலாவின் தலைமுடி அவளது பாய் கட் ஹேர் கட்டிங்கில் மிகவும் இறுக்கமாக வளர்ந்து இருந்தது.


இன்னும் மூன்று நிமிடங்கள் மசாஜ் செய்த மது விமலாவிடம் திருப்தியா மேடம் என்று கேட்டான். அவள் சம்மதமாக தலையை அசைக்க மது சவர கத்தியில் ஒரு அரை பிளேடை உடைத்து சொருகினான்.


என்ன மேடம் நிஜமாவே மொட்டை அடிச்சிடலாம்ல... என்று மறுபடியும் ஒரு முறை கேட்டான். 


“அடிக்கலாம் மது... திருப்பதில அடிக்கிற மாதிரி ஒரு பீல் எனக்கு வேணும் என்று சொல்ல... மது கொஞ்சம் யோசித்தான். பின் விமலாவை சேரில் இருந்து எழுந்து கொள்ள சொல்லி விட்டு... சலூனின் ஒரு முலையில் ஒரு சின்ன டேபிளை போட்டு விட்டு... ஒரு பாயை தரையில் விரித்தான் மது. பின் விமலாவை அந்த பாயில் உட்கார சொல்ல... அவளும் புரியாமல் உட்கார்ந்தாள்.


பின் மது விமலாவின் முன் இருந்த சின்ன டேபிளில் உட்கார்ந்து கொண்டான்.


"என்னம்மா பூ முடியா... மொட்டையா?" என்று விமலாவை பார்த்து மது கேட்க 


"என்ன .. ??" என்று விமலா  அர்த்தம் புரியாமல்  கேட்டாள்.


"பூ முடியா... மொட்டையா?" என்று மறுபடியும் கேட்க, விமலா வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே மொட்டை என்றாள்.

 


பின் மது மீண்டும் ஒரு முறை தண்ணீரை ஸ்ப்ரே செய்து விமலாவின் தலையில் மசாஜ் செய்து விட்டு... சவர கத்தியை எடுத்து கொண்டு, விமலாவின் தலையை பிடித்து குனிய வைத்து மழிக்க ஆரம்பித்தான். மது மழமழவென மழிக்க, விமலாவுக்கு அவளுடைய முடி அவள் தலையில் இருந்து வேகமாக கீழே விழுவது தெரிந்தது. 


பின் மெதுவாக வேகத்தை குறைத்த மது... "இப்போ எப்படி இருக்கு மேடம்" என்று கேட்க 


"நீ வேகத்தைக் குறைக்கிறாய்... அப்படியே வேகமாக செய் மது" என்றாள் விமலா. மது சவர கத்தியில் மீண்டும் வேகமாக மழிக்க... 


“சர்.... சர்.... சர்.... சர்....” என்று மதுவின் கையிலிருந்த கத்தி விமலாவின் புருவத்திலிருந்து மேல் நோக்கி நகர்ந்தது... மது மிக மிருதுவாக கத்தியை நகர்த்திக் கொண்டிருந்தான்... விமலாவின் தலைமுடி கொஞ்சம் கொஞ்சமாக வழுக்கி விழுந்து கொண்டிருந்தது. விமலாவின் முடி நன்றாக நனைந்து இருக்க, மது அவளுடைய முடியை மழித்து சுகமாக இருந்தது. 


விமலா தன் முடியை மழிப்பதை நன்றாகவே ரசிக்கிறாள்... சிறிது நேரம் தலை மேலே தூக்கியே இருக்க மதுவின் கை அவளுடைய தலையில் விளையாடி கொண்டு இருந்தது... இப்போது விமலாவிற்கு  கன்னத்திலும் கழுத்திலும்மட்டுமே  முடி இருந்தது... 


மொட்டை அடிப்பதை நிறுத்தி விட்டு மது, விமலாவை பார்க்க, 

விமலா இப்போது பார்க்க அழகாகவே இருந்தாள்.


"ஆனால் மது... ஏதோ ஒன்று குறைகிறது... அதனால் இன்னும் ஒரு முறை என் தலையை ஸ்மூத்தாக ஷேவ் செய்து விடு" என்று விமலா சொல்ல மது மீண்டும் அவள் தலையை ஸ்மூத்தாக ஷேவ் செய்ய ஆரம்பித்தான்... சில நிமிடங்களில் ஷேவிங் முடிய... ஆர்வமாக விமலா தன்னுடைய மொட்டை தலையை தடவி பார்த்தாள். நல்ல மொழுமொழுவென இருக்க அவள் மேலும் ஆசையுடன் மொட்டை தலையை தடவினாள்.


“மது... ரொம்ப நல்லா இருக்கு.. நீ ஷேவ் செய்வதில், அதை அனுபவிப்பதில் சொர்க்கம் இருக்கு...” என்று விமலா தோள்களை குலுக்கினாள்... மது இன்னும் உற்சாகமாக இருந்தான்... பின் மது எழுந்து ஆண்களுக்கு பயன்படுத்தும் ஆப்ட்டர் ஷேவ் லோஷனை எடுத்து இரு கைகளிலும் அள்ளி, விமலாவின் மொட்டை தலையில் தடவ... அந்த ஜில்ல்நெஸ் அவள் உடல் முழுவதும் படர... விமலாவின் தொண்டை போதையில் அடைத்துக் கொள்ள ... மது தன் இடது கையால் அவள் தலையை பிடித்து மெதுவாக தடவ... முதன்முறையாக ஒரு பெண்ணின் மொட்டை அவனை ஏதோ செய்தது. அவனுக்கு தான் ஏதோ மேகத்தில் மிதப்பது போல  தெரிகிறது..... அவன் தொடர்ந்து அவளுடைய மொட்டை தலையை தடவிக் கொண்டே இருக்க... விமலா 


"இது போதுமா?" என்று மதுவை கேட்டாள்.


“இருங்க மேடம்...” என்ற மது ஷேவிங் கிரீமை எடுத்து அவளுடைய மொட்டை தலை, முகம் முழுவதும் பூசிவிட்டு, சவர கத்தியால் ஷேவ் செய்தான். விமலா தன் முகத்தை ஷேவிங் கிரீம் பூசி ஷேவ் செய்வது அவளுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. விமலா எதுவும் பேசாமல் ரசிக்கிறாள்...


கால் மணி நேரம் நன்றாக ஷேவ் செய்தான் மது. பொறுமையாக அவன் செய்வதற்கு ஒத்துழைத்தாள் விமலா...


2 comments: