Friday 18 November 2022

காதல் பரிசு - முதலாம் பாகம்

நான் லிசி. மலையாளி. ஸ்கூல் படிச்சது எல்லாம் கேரளாவுல. இப்போ காலேஜ் பெங்களூர்ல படிக்க வந்து இருக்கேன். நான் நல்ல சிவந்த நிறம். நீளமான அடர்த்தியான முடி. ஸ்போர்ட்ஸ்ல இன்ட்ரஸ்ட் உண்டு. வாலிபாலில் டிஸ்டிரிக்ட் லெவல் பிளேயர். அந்த அளவுக்கு நல்ல உயரமாவும் இருப்பேன்.

கேரளாவில் நான் படிச்சது எல்லாமே கோ எட் தான். ஸ்கூல்லயே ஒரு லவ். நிறைய பசங்க என் உயரத்தை பார்த்து பேச மாட்டாங்க. அப்புறம் யாரு என்னை சைட் அடிப்பா... லவ் பண்ணுவா? 

ஆனா +1 வரும் போது ஒருத்தன் வந்தான். என்னை விட ரெண்டு இஞ்ச் ஹைட். அவன் பேரு பிருத்வி. ரொம்ப ஹேண்ட்ஸம். அவனும் கிரிக்கெட்ல நல்ல பிளேயர். கொஞ்ச நாளில் நல்லா பழகி... ஒரு நாள் எங்கிட்ட புரொபோஸ் பண்ணான். எனக்கும் அவனை பிடிச்சி இருந்துச்சு.

 

நானும் அக்சப்ட் பண்ண, வாழ்க்கை ரொம்ப ஜாலியா இருந்துச்சு... ஆனால் சில மாதங்களில் அவனின் செயல்கள் என்னை ஏதாவது ஒரு வகையில் காயப் படுத்துவதாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக இருவருக்கும் இடையில் இடைவெளி வர, அவன் வாழ்க்கையிலும் வேறு ஒருத்தி வர, இருவரும் பிரிந்தோம்.


      லிசி


பள்ளி இறுதி ஆண்டில் எல்லாவற்றையும் மறந்து ஒதுக்கி வைத்து விட்டு, நன்றாக படித்து நல்ல மார்க்கில் தேர்வு ஆனேன். அதன் பலன் தான் பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற கல்லூரியில் எனக்கு சுலபமாக இடம் கிடைத்தது. காலேஜிக்கு சொந்தமான ஹாஸ்டல் ஒன்றில் ரூம் கிடைக்க, அதில் தமிழ் நாட்டை சேர்ந்த பெண் ஒருத்தி என்னுடைய ரூம் மேட்டாக வந்தாள். அவள் பெயர் மித்ரா.

அவள் ரொம்ப அழகு. என்னை விட உயரம் குறைவு. அவளுடைய முடி என் முடியை போல நல்ல அடர்த்தியாக இருந்தது. அவள் ஒரு கிராமத்தில் இருந்து ரொம்ப கஷ்டப்பட்டு படித்து, நல்ல மார்க் எடுத்ததால் மட்டுமே இந்த காலேஜில் சீட் கிடைத்தது. நானும் நல்ல மார்க் எடுத்தாலும், ஒரு பெரிய அமவுண்ட் கொடுத்து தான் இங்கு படிக்க வந்தேன். ஆனால் அவள் அப்படி இல்லை.

                                    மித்ரா


சில நாட்களில் இருவரும் நன்றாக பழகிவிட்டோம். மித்ரா ரொம்ப வெகுளி. யதார்த்தமானவள். கொஞ்சம் பயந்த சுபாவம். காலேஜில் என்னுடன் மட்டும் தான் அவளுக்கு நட்பு. மற்ற யாருடனும் அவள் அதிகம் பேசியதில்லை. சில சமயம் சீனியர்ஸ் ராக்கிங் செய்யும் போது அழுது விடுவாள். பின் அவர்களே சமாதானம் செய்து விடுவார்கள்.

எனக்கு இந்த காலேஜிலும் ஒரு வாலிபால் டீம் செட்டாக, நான் மாலை நேரங்களில் விளையாடும் போது மித்ரா என்னுடன் தான் இருப்பாள். கேலரியில் உட்கார்ந்து கொண்டு நாங்கள் விளையாடுவதை வேடிக்கை பார்ப்பாள். அப்போது அவள் யாருடனும் உட்காராமல் தனியாக தான் இருப்பாள். 
அவள் என்னை தவிர யாருடனும் அதிகமாக பேசுவது கூட இல்லை.

அதன் காரணமாகவே எனக்கும் அவளை பிடித்து இருந்தது. நானும் அவளுடைய நட்புக்கு மரியாதை கொடுத்து அவளுடன் பழகினேன். சீனியர்ஸ் ராக் செய்யும் போது அவள் என் பின்னால் தான் நிற்பாள். நான் தான் அவளுக்காக பேச வேண்டும். நாளாக நாளாக எங்களின் நட்பு இன்னும் நெருக்கமானது.


ஒரு நாள் எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போக, மித்ராவும் கிளாஸ்க்கு போகாமல், என்னை டாக்டரிடம் கூட்டி சென்று வந்தாள். அன்று முழுவதும் என்னை கவனமாக பார்த்து கொண்டாள். அவளின் மேல் இருந்த நட்பு இன்னும் என்னுள் அதிகமானது.

அன்று மாலை கிளாச் முடிந்து, நான் வாலிபால் விளையாடிக் கொண்டு இருக்க, மித்ரா வழக்கம்போல வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள். பிரேக்கில் நான் மித்ராவிடம் கேண்டீன் போய் ஸ்னாக்ஸ்  வாங்கி வர சொல்ல, மித்ரா தனியாக போக முடியாது என்றும், என்னையும் கூட வர சொல்ல, நான் அவளை வற்புறுத்தி போக சொல்ல, அவளும் சரி என்று கிளம்பினாள்.

சிறிது நேரம் கழித்து நாங்கள் விளையாடிக் கொண்டு இருக்க, மித்ரா "லிசி" என்று கதறி அழுது கொண்டு ஓடி வந்தாள். நான் அவளின் கதறல் கேட்டு அவளை தேடி ஓடினேன். மித்ரா அப்போது வேகமாக என்னை நோக்கி ஓடி வந்து என்னை கட்டிக் கொண்டு அழுதாள். எனக்கு அவள் எதற்கு அழுகிறாள் என்று புரியாமல் அவளை கட்டி பிடித்து ஆறுதல் சொல்ல, அவளின் முதுகு பகுதியில் இருந்த சுடிதார் கிழிக்கப்பட்டு அவளது பிரா வெளியே தெரிய, அதன் கூக்கும் பிய்த்து எரிய பட்டு இருந்தது.

எனக்கு அதை பார்த்ததும் ஏதோ விபரீதம் நடந்து இருக்கிறது என்று புரிய, நான் அவள் ஷால் எடுத்து பின்னால் கிழிந்து இருட் துணியை மறைத்து விட, மித்ரா இன்னும் கதறிக் கொண்டு இருந்தாள்.

அப்போது என் கிளாஸ் பெண்கள் சில பேர் எங்களை நோக்கி வர, அதில் ஒருத்தி என்னிடம் சொன்னாள்.

லிசி, சீனியர்ஸ் ஜாலியா ராக் பண்ணிட்டு இருந்தாங்க... இவளை ராக் பண்ணும் போது இவ எதுவுமே பேசாம அமைதியா இருந்தா... அது சீனியர் ரோகித்தை கோப படுத்த, அவன் இவளை திட்ட, மித்ரா தான் அங்க இருந்து ஓட பார்த்த, அப்போ ரோகித் இவளை பிடிக்க சுடிதாரை பிடித்து இழுக்க, அதனால் தான் கிழிந்து விட்டது என்று சொன்னாள்.


அப்போது மித்ரா இன்னும் சத்தமாக அழுது கொண்டு, "லிசி, அவன் என்னை போர்ஸ் பண்ணான், என் மேல கை வச்சான், நான் அவனுக்கு கிஸ் பண்ணனும்னு சொன்னான், நான் முடியாதுன்னு சொல்ல, அவன் என்னை கிஸ் பண்ண வந்தான், நான் அவனை அடிச்சிட்டேன்... அதனால அவன் என் ட்ரஸ்ஸை கிழிச்சுட்டான், என்று மித்ரா சொல்லி அழ, எனக்கு அதை கேட்டதும் இன்னும் கோபமானது.

ரோகித், ஒரு பணக்கார பையன். பெங்களூர் தான். அதனால் அவன் கொஞ்சம் திமிராக தான் எல்லோரிடமும் நடந்து கொள்வான். மித்ரா அழுது கொண்டு இருப்பதை பார்க்க, பார்க்க எனக்கு கோபம் வந்தது. நான் மித்ராவை இழுத்து கொண்டு ரோகித் இருக்கும் இடத்திற்கு செல்ல, அங்கு ரோகித் இன்னும் சில சீனியர்ஸ் ஜாலியாக ராக் செய்து கொண்டு இருந்தனர்.

டேய், ரோகித் மித்ராவை ராக் பண்ணாதேன்னு அன்னிக்கே சொன்னேன்ல...
ஏய், போடி... நீ சொல்லி நான் கேக்கணுமா... அவளை என்ன பண்ண போறேன்னு பாரு...


என்று சொன்ன ரோகித் மித்ராவை நெருங்க... நான் அவளை மறித்து நின்றேன்.நான் 5.11 உயரம், இருக்க ரோகித் என்னை விட கொஞ்சம் உயரம் குறைவாக தான் இருப்பான், நான் அவன் முன் எதிர்த்து நிற்க, ரோகித் என்னை தள்ளி விட, நான் அவனை பிடித்து தள்ளி விட்டு அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டேன். ரோகித் கோபம் கொண்டு என்னை சரமாரியாக தாக்க, மித்ரா பயந்து போய் இடையில் புகுந்து ரோகித்தை தடுக்க, அவன் இப்போது மித்ராவின் தலை முடியை பிடித்து இழுத்து, மீண்டும் அவள் துப்பட்டாவில் கை வைக்க, மித்ரா பதறினாள்.

ரோகித் மித்ராவை ஏதாவது செய்து விடுவான் என்று பயந்த நான், வேகமாக எழுந்து என் ஷூ காலால் அவன் கால்களுக்கு நடுவில், முக்கியமான பகுதியில் ஒரு உதை விட, அவன் சுருண்டு விழுந்தான். சுற்றி இருந்த எல்லோரும் பதற, நான்  மித்ராவை கூட்டிக் கொண்டு ஹாஸ்டல் வந்தேன். அதற்குள் ரோகித்தை அவன் நண்பர்கள் ஹாஸ்பிடல் தூக்கி சென்றனர்..


4 comments:

  1. நல்ல ஆரம்பம் தான் நண்பா ஆனால் இதில் எங்களுக்கு ஒரு பரிசு இருந்திருந்தால் மிக நன்றாக இருக்கும்

    ReplyDelete
  2. காதல் பரிசு 2

    ReplyDelete