Wednesday 10 January 2024

சலூன் கடையில் சிந்து

சிந்து 29 வயது திருமணமான இளம் மனைவி. தன் வீட்டின் அருகில் இருந்த ஒரு சலூன்  கடையின் மர நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறாள். சிந்து மஞ்சள் வண்ண குர்தா அணிந்து இருக்க, அந்த மர நாற்காலியின் பின்புறம் தொங்கவிடப்பட்ட அவளது நடுத்தர அளவிலான அடர்த்தியான முடி அவளது மார்பகங்களுக்கு கீழே தொங்குகிறது. அவளது அடர்த்தியான கருப்பு முடியினூடே தன் விரல்களை விட்டு, அதை இழுத்து கோதிக் கொண்டு தன் பின்னால் நின்று கொண்டு இருந்த  கணவனை நிமிர்ந்து பார்க்கிறாள். மர நாற்காலியின் அருகில் ஒரு வயதான அந்த கடையின் பார்பர் கையில் கத்தரிக்கோலுடன் நிற்கிறார், அவர் சிந்துவின் முடியை வெட்டத் தயாராக இருக்கிறார்.



 

சிந்துவின் கணவன் பிரபு அவளிடம் தயங்கி கொண்டே கேட்கிறான், “நீ உன் முடிய வெட்ட வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறாயா சிந்து? இப்போதைக்கு நீ உன் முடியை வெட்ட வேண்டியதில்லை."

 

"இது ரொம்ப அவசியம். என் முடி மிகவும் மோசமாக உள்ளது உங்களுக்குத் தெரியும், நான் என் தலைமுடியை இப்போது கண்டிப்பாக வெட்ட வேண்டும்"

 

"நாம் கல்லூரியில் படிக்கும் போதில் இருந்தே உனக்கு முடி நீளமாக இருந்தது, நீ மீண்டும் ஒரு முறை யோசித்துப் பார்"

 

சிந்து சிறிது நேரம் கழித்து,

 

"2 முதல் 3 வருடங்கள் கழித்து அதை மீண்டும் வளர்த்து விடுகிறேன்"

 

"சரி, எதுவாக இருந்தாலும் சரி."

 

பின்னர் பிரபு பார்பரிடம் திரும்பி "அவளுக்கு அவள் சொன்னது போல ஒரு அழகான, ஷார்ட் ஹேர்கட் கொடுங்க, அவள் தன் முடியை சீப்பு வைத்து சில வாரங்களுக்கு சீவ முடியாத அளவிற்கு வெட்டி விடுங்கள், அதனால் அவள் அடிக்கடி கடைக்கு வர வேண்டிய வேலை இருக்க கூடாது,"  என்று சொல்லி விட்டு பின்னால் இருந்த பெஞ்சில் போய் மனைவியின் முடி வெட்டுவதைப் பார்க்க அமர்ந்தான்.

 

சிந்து ​​மெதுவாக வசதியாக உட்கார்ந்து கொண்டாள். பார்பர் சிந்துவின் பிரித்து விட்டு இருந்த முடியை சீப்பை வைத்து சீவி, ஒரு  நடுத்தர அளவிலான கொண்டையை போட்டு விட்டான். பின் பார்பர் ஒரு டிராயரில் இருந்து ஒரு சிவப்பு துணியை எடுத்து சிந்துவை சுற்றி போர்த்தினார். சிந்து கூச்சத்தில் அவள் கண்களை மூடினாள். அதன் பிறகு, அவளது தலைமுடி முடி வெட்ட தயாராக உள்ளது.

 

ஆனால் சிந்துவின் கணவன் பிரபு ​​வருத்தமாக இருக்கிறான். தான் படித்த கல்லூரியில் பேட்ச்மேட்டாக இருந்த சிந்துவிடம் பிரபு அவளது நீளமான, அடர்த்தியான, ஜெட் கருப்பு நிறத்திலான முடியின் அழகை பார்த்து அவளது அழகில் மயங்கி அவளிடம் காதலை சொன்னான்அவனுக்கு முதலில் சிந்துவின் முடி பிடித்திருந்தது. பிறகு அவளையும் விரும்ப ஆரம்பித்தான். இருவரும் கல்லூரி முடித்து வேலையில் அமர்ந்து கொண்டு  26 வயதில் திருமணம் செய்து கொண்டனர்,

 



ஆனால் சிந்து  திருமணத்தின் போது தோள்பட்டை வரை அவளுடைய முடியை வெட்டினாள். அப்போது அவள் மீதான பிரபுவின்  காதல் அவள் தலைமுடியின் மீதான காதலை முறியடித்தது, ஆனால் அவள் தலைமுடியின் மீதான காதல் அவன் மனதில் அப்படியே இருந்தது. பின் பிரபு ஒரு மாதத்திற்குப் பிறகு சிந்துவின் தலைமுடியை மீண்டும் நீளமாக வளர்க்க சொல்ல, சிந்துவும் தன் கணவனுக்காக தன் முடியை பார்த்து பார்த்து பராமரித்தாள்.

 

இரண்டு வருடங்களாக அதை வளர்க்க ஆரம்பித்தாள். ஆனால் சிந்துவின் முடி முன்பு இருந்த அதன் அழகை இழந்துவிட்டது, சிந்துவின் முடி அவளது முதுகின் நடுப்பகுதி வளர்ந்து இருக்க, சில நாட்களுக்கு முன்பு எல்லாம் மாறிவிட்டது. பிரபு சிந்துவின்  பொறுப்பில் தங்களுக்கு சொந்தமான பழைய கடையை விட்டுவிட்டு அந்த சிறு நகரத்தின் மையத்தில் ஒரு புதிய கடையைத் திறந்தான். சிந்து தொடர்ந்து கடைக்கு வந்ததால், முடியை சரியாகக் பராமரிக்க நேரம் இல்லாததால்  முடி முன்பு இருந்த அதன் அழகை இழந்துவிட்டது. அதனால் சிந்து தனது முடியை மீண்டும் ஒரு முறை வெட்ட வேண்டும் என்று நினைத்தாள்.

 

முடி வெட்டுவதற்கு முன் சிந்து தன் அம்மாவின் யோசனையை கேட்க, அவளது அம்மாவோ சிந்துவின் முடியை முடிந்தவரை குட்டையாக வெட்ட சொன்னாள். சிந்து தனது முடியின் நீளத்த்தை குறைத்து கொள்வது நல்லது, அப்படி இருந்தால் அவளது முடி மீண்டும் வளரும் போது நல்ல அடர்த்தியுடன் வளரும். ஆனால் சிந்து அப்போதும் அதை மோசமாகப் பராமரித்தால், அவள் தன் முடியின் ஆரோக்கியத்தை முழுவதுமாக இழக்க நேரிடும் என்று சொல்ல, சிந்து தனது முடியை வெட்ட துணிந்தாள்.

 

சிந்துவின் தலைமுடி எல்லாம் சீவப்பட்டு இருக்க, பார்பர் சிந்துவின் தலையை சற்று முன்னோக்கி சாய்த்தார், இதனால் அவளது கன்னம் அவளது மார்பைத் தொட்டபடி இருக்க, சிந்து அந்த நிலையிலும் கண்ணாடி வழியாக தன் முடியை வெட்டுவதை பார்க்க முயற்சி செய்தாள். பார்பர்அவளது தலைமுடியை எல்லாம் தோள்களுக்கு அருகில் ஒன்றாக சேர்த்து, தன் கைகளால் அவளது முடியை போனி டெயில் போல வைத்து பிடித்துக் கொண்டு கத்தரிக்கோலை சிந்துவின் கழுத்தில் வைக்கிறான்.

 

அந்த முக்கியமான தருணம் வந்துவிட்டது. கத்தரிக்கோல்கள் வேலை செய்கின்றன, சீப்பைத் தோண்டி அவள் தலையில் இருந்து முடிகளை கத்தரிக்கோல் துண்டிக்க, சிந்துவின் போனி டெயில் வெட்ட முடியாத அளவுக்கு தடிமனாக இருந்ததால், பார்பர்  கத்தரிக்கோலை வெவ்வேறு திசைகளிலிருந்து செருகி, அவளது முடியை வெட்ட முயன்றார். ஒவ்வொரு வெட்டும் அவளது முடியில் வு=விழும் போது, ​​​​அவளுடைய கூந்தல் போனிடெயிலிலிருந்து விடுபட்டு, கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. பல வெட்டுகளுக்குப் பிறகு, முடி உதிர்ந்தது. பார்பரின் முகம் புன்னகையில் இருக்க, சிந்துவின் முகம் குழப்பத்தில் இருக்க, ஆனால் பிரபு மனச்சோர்வடைந்து வருத்தத்தில் இருந்தான். சிந்துவின் தலைமுடியின் நீளம் அவளது தோள்பட்டை வரை மட்டுமே இருந்தது



 

பார்பர் சிந்துவின் முடியை அவரது மேசை டிராயரில் வைத்து விட்டு, ஒரு சீப்பை எடுக்க, அதற்குள் சிந்து அவளது தலைமுடியை பின்னால் தொட்டு, அழுத்தி, தலையைத் திருப்பி, அவள் பின்புறத்தை கண்ணாடி வழியாக சற்று எட்டிப் பார்க்க முயல, அதற்குள் பார்பர் சிந்துவின்  தலையை மீண்டும் முன்பு போல குனிய வைத்து அழுத்தி பிடித்துக் கொண்டான்.

 

பின் பார்பர் பிரபுவிடம்பின் கழுத்தில் முடியை குறைக்கவா? கத்தரி வைத்து வெட்டவா, அல்லது க்ளிப்பர் வைத்து செய்யவாஎன்று கேட்க, அப்போது சிந்து குறுக்கிட்டு, “க்ளிப்பர் வைத்து செய், எனக்கு பின் கழுத்தில் முடி குறைவாக இருக்க வேண்டும். அதே போல இரு பக்கமும் சுருக்கப்பட வேண்டும்என்று சிந்து சொல்ல, பார்பர் மீண்டும் பிரபுவிடம் கேட்க, அதற்கு பிரபுஅவள் சொல்வது போல் செய், அவள் விரும்பினால் க்ளிப்பரை நம்பர் ஒன் அல்லது பூஜ்ஜியத்தில் வைத்து அவளது முடியை ஓட்ட வெட்டுங்கள்என்று சொல்ல, பார்பர் "நான் பூஜ்ஜியத்தில் வைத்து  செய்கிறேன்" என்றான்.

 

கிளிப்பர் அவள் தலையின் பின்புறத்தில் தடவ, முடி இழைகள் தரையில் விழுந்தன. பார்பர் சிந்துவின் தலையில் தொடர்ந்து க்ளிப்பரை இயக்கசிந்துவின் முகத்தின் முன்னாள் முன்னால் அதிக முடி மழை போல பொழிந்தது. சிந்து அந்த தருணத்தை அனுபவித்துக்கொண்டிருந்தாள். கிளிப்பரை சில முறை சுழற்றிய பிறகு, பார்பர் நாற்காலியை தனது வலது பக்கம் கண்ணாடியை தெரியுமாறு திருப்பினார். அவர் சிந்துவின் தலையின் மறுபக்கத்திலும் அதையே செய்ய, சிந்துவின் தலைமுடி பின்கழுத்து மற்றும் பக்கவாட்டில் குட்டையாக இருந்தது.

 

சிந்து சொன்னது போல அவளது பின்கழுத்து மற்றும் பக்கவாட்டில் சுத்தமாக இல்லை. பார்பர் பக்கங்களையும் பின்புறத்தையும் முடித்து, பின்னர் கிளிப்பரை மூடுகிறார், ஆனால் பார்பர் அத்தோடு நிறுத்தவில்லை. பார்பர் தான் கிளிப் செய்த பகுதிகளை தண்ணீரால்  நனைத்து விட்டு பின்னர் ஷேவிங் கிரீம் தடவத் தொடங்குகிறார். சிந்துவும் பார்பர் செய்வதற்கு ​​எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, பார்பர் ஒரு ரேஸரை எடுத்து, தலையின் மேற்பகுதியிலிருந்து பின்புறம் மற்றும் பக்கவாட்டில் இருந்த சிறு முடியை ஷேவ் செய்து, முன் முடியை மட்டும் விட்டு விடுகிறார். முதல் ஷேவ் சிந்துவின் பின்கழுத்து பகுதியை அழகாக வெளிப்படுத்துகிறது, பிரபு  கல்லூரியில் சிந்துவை முதன்முதலில் சந்தித்தபோது அவன் தங்கள் வாழ்க்கையில் இப்படி எல்லாம் நடக்கும் என்று நினைக்கவில்லை.

 

அப்போது பிரபு, "என்ன சிந்து, உன் தலையை மொட்டை அடித்து கொள்ள போகிறாயா?" என்று கேட்க, சிந்து பதில் சொல்லவில்லை. பார்பர் அந்த சிறு முடிகளை ஷேவ் செய்து முடித்த பிறகு, மீதமுள்ள முடியை அழகாக சீவி விட்டார்.

 

பிரபு, “இன்னைக்கு இது போதும், அவளுக்கு இந்த பாய்கட் ஹேர் ஸ்டைலே நன்றாக இருக்கிறது, அடுத்த முறை அவளது முடி நன்றாக வளரவில்லை என்றால் அவள் தலையை மொட்டையடிப்பாள்என்று பிரபு கேலியாக சொல்ல, சிந்து  ஷேவ் செய்த காரணத்தினால் எரிச்சலால் ஆழ்ந்த மூச்சு எடுத்தாள்.

 

பார்பர் மீண்டும் ஒரு முறை அவளது தலைமுடியை தலையின் இடது பக்கத்தில் பிரித்து, அதை இரண்டு பகுதிகளாகப் பிரித்தார். அவர் தனது கத்தரிக்கோலை வைத்து இடது பக்கமாக காதுக்கு மேலே வைத்து, அதன் கீழே இருந்ததை வெட்டினார். பார்பர் மீண்டும் வலதுபுறத்திலும் அதையே செய்து விட்டு, பின்னர் சிந்துவின் முன்பக்கத்தில் இருந்த அனைத்து முடிகளையும் கொண்டு வந்து, கண்களுக்கு எட்டிய அளவில் நெற்றியில் வைத்து சில துண்டுகளை வெட்டினான். மடியில் முடி விழுந்ததும் சிந்து தனது கண்களை மூடினாள். பார்பரின் வேலை இப்போது முடிவடைய, பார்பர் மற்றொரு கண்ணாடியை எடுத்துசிந்துவின் பின்னால் சென்று அவளது பின்கழுத்தை காட்டுகிறார்.

 



சிந்து அவளது ஷார்ட் ஹேர்கட்டை ரசிக்க, பிரபு அவளது தலைமுடியை தடவினான். பின் பிரபு சிந்துவிடம் "இன்னும் உன் முடியின் நீளத்தை குறைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று சொல்ல சிந்து அவன் சொன்னதை ஏற்றுக் கொண்டாள். பார்பரும் அவர்கள் சொன்னதை கேட்டு விட்டு "ஆமா, அளவைக் குறைக்கலாம்னு நினைக்கிறேன்" என்று முமீண்டும் ஒரு கத்தரிக்கோலையும் சீப்பையும் எடுத்தான். பின் முடியின் அளவை குறைக்க, பார்பர் வெட்ட தொடங்கினார். பார்பர் தான் திருப்தியாகும் வரை மிக நுண்ணிய அளவில் சிந்துவின் முடியை வெட்டி விட்டு பிரபுவிடம் கேட்க, அவனும் திருப்தி அடைந்தான். பார்பர்சிந்துவின் மீது போர்த்தி இருந்த துணியை எடுத்து விட்டு  ஒரு பெரிய துண்டை வைத்து அவள் மேல் இருந்த முடியை துடைத்து விட்டார். சிந்துவின்  தலைமுடியில் ஏற்கனவே மூடியிருந்த தரை, துணியில் சிக்கியிருந்த முடியின் துகள்கள் தரையில் விழத் துவங்கியதால் மேலும் அந்த தரை கருப்பு முடிகளால் மூடியிருந்தது. பார்பர் சிந்துவின் முகத்தை துடைத்து விட்டு, பார்பர்  சிறிது பவுடர் போட்டு விட்டு  சிந்துவின் தலைமுடியை கடைசியாக ஒரு முறை சீவி விட்டார்.

 

பிறகு சிந்து நாற்காலியை விட்டு எழுந்திருக்க அவளது புதிய  ஹேர்கட் ரசிக்கும்படியாக இருந்தது, அவளது தோற்றமும் முன்பை விட இளமையாக இருந்ததுபிரபு பார்பருக்கு பணத்தை கொடுத்து விட்டு அவருக்கு நன்றி கூறிவிட்டு இருவரும் கடையை விட்டு வெளியேறினார்.

 

10 நிமிடங்கள் கழித்து

 



சிந்து, பிரபு  ​​இருவரும் அவர்களது காரின் முன் இருக்கையில் இருக்கபிரபு ​​"உன்  தலையைச் சுற்றி விரிக்கப்பட்ட நீண்ட கூந்தலுடன் நீ எப்போதும் அழகாக  இருப்பஎன்று நான் நினைத்தேன், ஆனால், இந்த ஷார்ட் ஹேர்க்கட்டும் உனக்கு மிகவும் அழகாக இருக்கிறது என்பதை நான் இன்று கண்டுபிடித்தேன்." என்றான்.






3 comments:

  1. Semma bro aptiye motta potu vitrukalam.

    ReplyDelete
  2. Bro stories lam semaya eruku bro konjam regulara podunga apdia face shave akkul shave lam koranchi eruku pls athelam konjam athigama podunga bro ethu eangaloda sarba ketukren

    ReplyDelete
  3. Bro mom head an face shave stores podunga bro

    ReplyDelete